#KVAnand
சுமார்15 ஆண்டுகளுக்கு முன், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் தனது மாநில மாநாட்டை திருவண்ணாமலையில் நடத்தியது. அதற்கு வரவேற்புக்குழுத் தலைவராக என்னைத் தேர்ந்தெடுத்து இருந்தனர். அதில் கலந்து கொள்ள பல திரைப்பிரபலங்களை அழைத்திருந்தோம். பாலுமகேந்திரா சார் ஒரு வாரம்
எங்களுடனே தங்கி கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுமாறு நண்பர் பவா செல்லதுரை பலருக்கும் போஸ்ட் கார்ட் அனுப்பி இருந்தார். அது வழக்கமான ஒன்று. யாரும் அதை மதித்து வரப் போவதில்லை. ஆனால், கே.வி.ஆனந்த் வந்தார்.
நிகழ்ச்சி நடந்த எங்கள் டேனிஷ் பள்ளி வாசல் கேட்டில் தோளில்
பையை மாட்டிக் கொண்டு ஒரு கட்டையான உருவம் நின்று கொண்டிருந்ததைக் கண்ட பவா, அவர் அருகில் சென்று யார் சார் நீங்க? யாரை பார்க்கணும்? பாவம்.. ரொம்ப நேரமா நின்னுகிட்டு இருக்கீங்க? என கேட்க, என் பேர் கே.வி. ஆனந்த் சார்., இங்கே பவா செல்லதுரை என்பரை பார்க்கணும்னு கையில் இருந்த தபால்
அட்டையை நீட்டினார் அப்போதே தேசிய விருது வாங்கி, புகழின் உச்சத்தில் இருந்த கே.வி.ஆனந்த்.
தொலைவில் இருந்து ஓடி சென்று அவரை அழைத்து வந்து பாலுமகேந்திராவுடன் அமர வைத்த அந்தக் கணம் இன்னமும் அப்படியே நினைவுக்கு வருகிறது. அன்று தொடங்கிய நட்பு! எப்போது செய்தி அனுப்பினாலும் உடனே பதில்
அனுப்புவார். எனது ஒரு பிறந்தநாளையும் தவறவிடாமல் வாழ்த்து அனுப்புவார். அவரது படம் பார்த்தால், சின்னதா விமர்சனக் குறிப்பை அனுப்புவேன். உடனே அழைத்து நன்றி சொல்வார். குறைகளை சொன்னாலும் ஏற்றுக் கொள்வார்.
தமிழ் சினிமாவின் க்ளிஷே காட்சிகள், வசனங்களை கிண்டல் செய்து ஓர் இரவு முழுவதும்
சிரித்து மகிழ்ந்தது நினைவுக்கு வருகிறது. நானும், கே.வி.ஆனந்தும், லிங்குசாமியும் சேர்ந்து சினிமா பாரடைசோ எடுக்கப்பட்ட இடங்களைக் காண இத்தாலி போகலாம் என பேசினோம். காலம் அதில் ஒரு கணக்கை சட்டென முடித்து விட்டது.
நினைவஞ்சலிக் குறிப்புகள் எழுதியே எனக்கும் மனசு மரத்துப் போகிறது.
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
#Catch22 : அனைத்துக் கட்சிக் கூட்டம் என்பதே ஒரு சதிவலை. காவிரி முதல் கரோனா வரை பலமுறை மக்கள் பிரச்சனைகளுக்காக அனைத்துக்கட்சிக் கூட்டத்தை கூட்ட சொல்லிய போதெல்லாம் அந்தக் கோரிக்கையை இடது கையால் தள்ளிய எடப்பாடி, ஆட்சி முடிய ஆறே நாட்கள் இருக்கும்போது அவரே முன்வந்து அனைத்துக் கட்சிக்
கூட்டம் கூட்டுகிறார் எனில் அதன் உள்நோக்கத்தை யாரும் அறியலாம். இதில் திமுகவின் முக்கியத்துவம் பிரதான எதிர்கட்சி என்பதால் மட்டுமல்ல! சிலநாட்களில் அது ஆளும்கட்சி என்பதும் கூட! இதுவும் வெளிப்படை. கார்ப்பரேட் மூளைகள் பின்னிய இந்த நுட்பமான வலைப்பின்னலில் திமுகவை பங்கெடுக்க வைக்க
நடைபெற்ற இந்த நாடகத்தில் பங்கெடுக்காமல் திமுக விலகிப் போயிருக்கலாம்! அப்படி போயிருந்தால், இந்திய அளவில் திமுகவை தேசவிரோத சக்தியாகவும், அதன் தலைமையிலான தமிழ்நாட்டை, உயிர் வாழ ஆக்ஸிஜனுக்காக ஏங்கும் பலகோடி இந்திய மக்களின் எதிரியாகவும் ஒரு பிம்பம் வலிமையாகக் கட்டமைக்கப்
மின்சார ஊழல் :
கடுமையான மின்வெட்டுக்கு தமிழகத்தை உட்படுத்திச் சென்றுள்ளனர் அடிமை அதிமுக அரசு. அடிக்கடி மின்மிகை மாநிலம் என்பார்களே! அது நமது தேவைக்கும் அதிகமாக உற்பத்தி செய்கிறோம் என்று பொருள் அல்லவாம். தேவைக்கும் அதிகமாக தனியாரிடம் வாங்கிக் கொள்கிறோம் என்றுதான் பொருள். இப்போது
காபந்து அரசு என்பதாலும், அடுத்து திமுகவே ஆட்சிக்கு வரும் என்பதாலும் தனியார்கள் மின்சாரத்தை அளிக்க தயங்குகின்றனராம்! சந்தை விலையை விட அதிக விலை என்பதால் திமுக அரசிடம் பில் வாங்க முடியுமா எனும் அச்சம்தான் காரணமாம்! ஒரு மின் துறை உயர் அதிகாரி இதைவிட அதிர்ச்சியான தகவல்களை சொல்கிறார்.
தற்போது 30% மின் தட்டுப்பாடு இருப்பதால் scheduling முறைப்படி பகுதி வாரியாக 4 மணி நேர மின் வெட்டும், பராமரிப்பு எனும் பெயரில் வாரத்துக்கு ஒருநாள் மின்வெட்டும் தற்போது நடைமுறை படுத்தப்பட்டுள்ளதாம். தவிர, 110 KVA டிரான்ஸ்ஃபார்மர்களின் திடீர் பழுதுகள் வழக்கத்தை விட மிக அதிகமாக
ஒரு பழைய்ய்ய்ய கிராமம். அந்த ஊர்லே ஒரு நாட்டாமை கிழவன், கடுமையா உழைச்சு ஊரிலேயே முதல் காரை வீடு கட்டுனான். அந்த பெருசுக்கு நாலஞ்சு பிள்ளைங்க பிறந்தது. அது செழிப்பான ஊர் என்பதால் பஞ்சம் பிழைக்க, வியாபாரம் பண்ண அவ்வப்போது வெளியே இருந்து சிலபேர் வந்து தங்குவாங்க. அவங்க எல்லாம்
இவர்களை காரை வீட்டுக்காரங்க என்று அழைத்தார்கள். அந்த நேரத்திலே உலகம் எங்கிலும் ஓலைக் குடிசைதான் என்பதால் காரை வீடு என்பது பெரிய அடையாளம்தான். அரும்பாடுபட்டு வீடு கட்டிய பெருசும் நாளடைவில் மண்டையைப் போட, வளர்ந்து நின்ன பிள்ளைங்க எல்லாம் தனி அடுப்பு வச்சு பிழைக்கப் போனார்கள்.
மூத்த பிள்ளை மட்டும் பெருசோட கைபட்டு, கால்பட்டு வளர்ந்ததாலே பிடிவாதமா அங்கேயே தங்கிருச்சு. பிழைக்கப் போனவர்கள் எல்லாம் தனி மொழி தேடிகிட்டாலும், அந்த மொழியோட வேர்கள் எல்லாம் பழைய காரை வீட்டிலிருந்தே உருவானது. பிரிந்து போனவர்கள் கட்டின வீடுகளுக்குதான் புது பெயர் தேவைப்பட்டது.
தேர்தல் தொடர்பாக இன்னொரு விஷயம் பேசலாமா?
தேர்தல் அலுவலர்கள் பெரும்பாலும் ஆசிரியர்கள்தான் என்பதால் 65% பெண்கள்தான். நாள் முழுக்க தெரியாத ஊரில் பழகாத மனிதர்களுடன் தங்கி இருந்து பணியாற்ற வேண்டிய சூழல். வெகு சிலருக்கு கணவர் உடன் வந்து வெளியே காத்திருப்பார். மற்றபடி பெரும்பாலும்
தனியேதான் வருவார்கள். இந்த அலுவலர்களின் பயணம், பாதுகாப்பு, உணவு குறித்து மாவட்ட நிர்வாகம் பெரிதாக மெனக்கெடாது. மொத்த அழுத்தத்தையும் சமாளித்தாக வேண்டிய இக்கட்டான பணி இது. பல தேர்தல் அனுபவங்களில் நான் கவனித்தது இவை. பெரும்பாலும் கிராமங்களில் பெண் அலுவலர்கள் வந்து இறங்கியவுடனே ஊர்
அவர்களை தத்தெடுத்துக் கொள்ளும். பல வீடுகளில், இங்கேயே படுத்து தூங்கிட்டு விடிகாலை போம்மா என்பார்கள். வாக்குச்சாவடி அருகில் இருக்கும் வீடுகளின் கழிப்பறை, உடைமாற்றும் அறைகள் இவர்களுக்காக திறந்து விடப்படும். பெரியவர்கள் அத்தனை கரிசனையோடு கவனித்துக் கொள்வார்கள். லோக்கல் அரசியல்வாதி
@SeyalveerarDMK ஆவோம்.
நண்பர்களே! தேர்தல் களமிறங்குவோமா?
இது சாதாரணத் தேர்தல் அல்ல! தமிழர் உரிமை மீட்புப் போர். கடந்த 10 ஆண்டுகளில் எத்தனையெத்தனை போராட்டங்களை நடத்த வேண்டி இருந்தது! எத்தனை உயிர்களை பலி தர வேண்டியிருந்தது? எத்தனைப் பெண்களின் கதறல்களைக் கேட்க வேண்டியிருந்தது.
எத்தனை இளைஞர்களின் வேலைகள் வடநாட்டவரிடம் பறி போனது! எத்தனை மிரட்டல்கள், திடீர் தமிழ்ப் பற்றுகள், வேல்யாத்திரை திசைத் திருப்பல்கள், சாதி, மத வெறுப்பு விதைகள், திராவிடப் பெருந்தலைவர்களுக்கு சாதிமுத்திரை இடல், புது கட்சி, நடுநிலை கோஷங்கள்! அத்தனைக்கும் கணக்குத் தீர்க்கும் நேரமிது.
இன்னும் மிகச் சரியாக 30 நாட்கள் மட்டுமே மீதமிருக்கிறது. சமூகவலைதளங்கள் மூலமாகவே நம்மால் பெரிதாக சாதிக்க முடியும்.
உடனடியாக நாம் செய்ய வேண்டிய வேலைகளைப் பட்டியல் இடுகிறேன். நான் தவறவிட்டதை நீங்கள் இணைத்து விடுங்கள். 1. விலகியிருந்த வாட்ஸ்சப் குழுமங்களில் இருந்து (தற்காலிகமாக)
"மோடியா? இந்த லேடியா?" அறைகூவல் நினைவிருக்கா?
மத்தியில் பாஜக ஆட்சி வரவேண்டும், மோடி பிரதமராக வேண்டும் என விருப்பம் கொண்டவர்கள், அதிலும் குறிப்பாக பிராமணர்கள் யாருக்கு ஓட்டு போட்டார்கள் தெரியுமா?
அதிமுகவுக்கு. பாஜகவுக்கு அல்ல! ஏனெனில், தாங்கள் பாஜகவுக்கு போடும் வாக்குகள்
அந்தக் கட்சியை ஜெயிக்க வைக்கப் போதாது என்பது அவர்களுக்குத் தெரியும். அதிமுகவுக்கு வாக்களித்தால்தான் திமுகவை தோற்கடிக்க முடியும் எனும் அரசியல் தெளிவு அவர்களுக்குண்டு.
அதேபோல அதிமுக - பாஜக அணியை தோற்கடிக்க விரும்புபவர்கள் நேரடியாக திமுக கூட்டணிக்கு வாக்களிப்பது மட்டும்தான்
அறிவார்ந்த செயலாக இருக்கும். அப்போதுதான் உங்கள் வாக்கு உங்களது நோக்கத்தை நிறைவேற்றும். நம்முடைய தேர்தல் முறையில் மூன்றாவது, நான்காவது வருபவர்கள் பெறும் வாக்குகளுக்கு "எண்ணிக்கை மதிப்பு" கிடையாது. தங்களது ஆதர்ச நாயகனான மோடியே வந்து ஓட்டு கேட்டும் கூட தாமரைக்குப் போடாமல்