18+

மும்பை.

இருள் சூழ்ந்த நேரத்தில் தெருவில் இருக்கும் நியான் விளக்கு மஞ்சள் வெளிச்சத்தை பரப்பிக்கொண்டிருக்கிறது. பரபரப்பான அந்த மாடி வீட்டின் முன் ஒரு கார் வந்து நிற்கிறது. மிகவும் பவ்யத்துடன் ஒருவர் வந்து கதவை திறந்து உள்ளிருந்தவரை அழைத்து செல்கிறார்.
அது ஒரு விபச்சார விடுதி. காரில் இருந்து இறங்கி சென்றவருக்கு மரியாதை தடபுடலாக இருக்கிறது. பெரிய சோபா ஒன்றில் அனந்த சயன நிலையில் படுத்திருக்கிறான். இரு புறமும் அடியாட்கள் நிற்கின்றனர். அவன் முன் நிற்கும் ஐந்து அழகிகளையும் வைத்த கண் எடுக்காமல் பார்க்கிறான்.
இன்று கூடிக்களிக்க ஒருத்தியை தேர்ந்தெடுக்க வேண்டும். பார்வையை தாழ்த்திக்கொள்கிறான். அடியாட்களில் ஒருவன் எல்லோரையும் போக சொல்கிறான். விடுதியின் மனேஜர் போல இருப்பவர், "வழக்கமா இல்லாம, புது பீஸ் வந்திருக்கு. காட்டவா?" என்று கேட்கிறார். அடியாளும் சீக்கிரம் வர சொல்கிறான்.
இரண்டு கை தட்டல்களின் பின் திரை விரிகிறது. மீண்டும் ஐந்து பெண்கள் முன் வந்து நிற்கின்றனர். அவனின் முகத்தில் அதிருப்தியின் சாயல்.
அடியாள், ' அவ்ளோதானா' என்று கேட்கிறான். மேனேஜர் புது பீசும் நல்லா இல்லையா என்று கேட்கிறார். அடியாளும் நல்லலா இல்லை என்று கொஞ்சம் சூடாக பேசுகிறார்.
மனேஜரிடம் ஒருவர் வந்து காதில் ஏதோ சொல்கிறார். மேனேஜரும் 'special கஷ்டமருக்காக இன்னும் இரண்டு பேர் இருக்கிறார்கள். பார்ட் டைம். காலேஜ், வேலைக்கு செல்பவர்கள். எக்ஸ்ட்ராவாக சம்பாதிக்க இரவில் இங்கே வருபவர்கள்' என்கிறார். அடியாள் அவர்களை வர சொல்கிறான்.
அவன் மீண்டும் பார்க்கிறான். அதில் ஒருத்தியை தெரிவு செய்து அழைக்கிறான். அவளும் சென்று அவன் அருகில் அமர்ந்து கொள்கிறாள். அடியாள் மற்றவளை அழைக்கிறான். அவள், 'நான் இவன் கூட எல்லாம் போகமாட்டேன்' என்கிறாள். கடுப்பான அடியாள் கோபத்தில் கத்துகிறான். அவன் முதன் முதலாக பேசுகிறான்.
'ஹெய் அழகுராணி, மார்க்கெட்டுக்கு விலைபோக தானே வந்திருக்க, செக்ஸ் வச்சுக்க துட்டு வாங்கிற இல்லை. அப்போ போக வேண்டியதுதானே ஏன் சீன் போடுற' என்கிறான். 'நீ சொல்லுற மாதிரி நான் செக்ஸ் வச்சுக்க பணம் வாங்குறேன். ஆனா நீ எல்லாம் பணம் குடுத்தாத்தான் உண்டு' என்று அவன் ஈகோவை தூண்டுகிறாள்.
வார்த்தையாலேயே இருவரும் மாறி மாறி சீண்டிக்கொள்கின்றனர். அவன் கூட வேண்டுமானால் வருவதாக சொல்கிறாள். அவன் தெரிவு செய்த முதல் பெண்ணை அடியாள் அழைத்து செல்கிறான். இங்கு இருக்கும் அறைகள் சிறியது, நாற்றம் எடுக்கும் என்று சொல்லி அவனை தனது தனி அறைக்கு போகலாம் என்று அழைத்து செல்கிறாள்.
அவன் போகும் வழியில் நின்ற ஒருவனிடம் ஏதோ சொல்கிறான். இருவரும் வாசலுக்கு வருகிறார்கள். CCTV கமெரா வழியே அவர்களை மூன்று பேர் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அதில் ஒருவன், 'அவர்கள் அறைக்குள் சென்றதும், நாம் போய் சுற்றி வளைத்து பிடிக்கலாம்' என்கிறான்.
வெளியே அவன் முன் அவனது கார் வந்து நிற்கிறது. இங்கு வேண்டாம் எனது அறைக்கே உன்னை கூட்டி செல்கிறேன் என்று அவள் மறுக்க மறுக்க காரில் ஏற்றி செல்கிறான்.
CCTV யில் பார்த்துக்கொண்டிருந்தவர்கள் பதற்றம் அடைகிறார்கள். வெளியே ஓடி வருகிறார்கள். அதற்குள் கார் சென்றுவிடுகிறது.
சில நாட்களுக்கு முன்,
போலீஸ் conference அறையில் target பெயர் சஷேயா என்று முதலில் CCTV யில் கண்காணித்துக்கொண்டிருந்தவர் சொல்கிறார். அவர் Anti Narcotics சிறப்பு பிரிவு போலீஸ் அதிகாரி.
சஷேயா என்ற பெயரில் மூன்று ஆட்கள் இருப்பதாக சொல்கிறார். அதில் அவன் படமும் இருக்கிறது.
Narcotics suppyஇல் பெரிய கைகள்.
அதில் அவன் மேல்தான் சந்தேகம் இருப்பதாக சொல்கிறார்கள். சஷேயாவின் weakness பெண்கள்

மேலே நடந்த சம்பவங்கள் எல்லாம் அவனை பிடிக்க நடந்த undercover ஒப்பேரஷன்.
இப்பொழுது சாஷேயா அழைத்து செல்பவள் undercoverஇல் இருக்கும் போலீஸ் கான்ஸ்டபிள்.
சாஷேயா எங்கு அவளை அழைத்து செல்கிறான் என்ற எந்த clue உம் போலீசாரிடம் இல்லை.
அவளை எப்படி மீட்பது என்ற கையறு நிலையில் தவிக்கிறார்கள். இனி என்ன நடக்கப்போகிறது. சஷேயாவை கைது செய்வார்களா? அவளை மீட்பார்களா?
மேலே சொல்லிய கதை, SHE (2020) சீரிசின் முதல் பத்து நிமிடங்கள்தான். இதிலிருந்து சூடு பிடிக்கும் கதை பர பர வென பற்றிக்கொள்கிறது.
( **18+ வசனங்கள், காட்சிகள் சீரிஸில் உள்ளது)

IMDb Rating : 6.5/10
Available in : Netflix

தமிழிலேயும் இருக்கு.
அக்மார்க் 18+ ராவானா கதை. நீங்கள் எதிர்பார்க்காத திருப்பங்களுடன் செல்கிறது. பல இடங்களில் வசனங்கள் எல்லாம் சபாஷ் போட வைக்குது.
இரண்டாவது சீசனுக்கான லீட்லாம் வெறித்தனமாக வைத்திருக்கிறார்கள். இதுவரை எங்கேயும் பார்க்காதது.
#goofymovies

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with மாஸ்டர்🍥

மாஸ்டர்🍥 Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @peru_vaikkala

30 Mar
#goofymovies

"நெஞ்சம் மறப்பதில்லை"

Spoilers ahead

@imkayalsai சொன்ன, "நெஞ்சம் மறப்பதில்லை" பற்றிய சொல்லாத கதைகள்.

Part 2.
படைத்தளபதியின் மகனாக பிறக்கும் பரமேசு எகிப்தின் பத்தொன்பதாவது அரச மரபை தோற்றுவிக்கிறான். அரச பரம்பரையை சேராத பரமேசு, ராம்சே என்னும் பெயரில் எகிப்தை ஆள்கிறான். நாட்டை சுற்றி வரும் ராம்சேக்கு எகிப்தியர்களை விட இஸ்ரேலியர்கள் "பணம், அறிவு, பலம்" இல் உயர்ந்து இருப்பதை காண்கிறார்.
இதனால் எகிப்தியர்களுக்கு ஆபத்து நிகழலாம் என்று நினைத்து இஸ்ரேலியர்களை அடிமையாக்குகிறார். காலம் உருண்டோடுகிறது. மன்னனின் சோதிடர்களில் ஒருவன், குறிப்பிட்ட ஒரு நாளில் இஸ்ரேலியர்களை அடிமைத்தளையில் இருந்து மீட்க ஒருவன் பிறப்பான், அவனால் மன்னன் உயிருக்கு ஆபத்து என எதிர்வு கூறுவான்.
Read 21 tweets
29 Mar
#goofymovies
நெஞ்சம் மறப்பதில்லை (2021)

Spoiler ahead

மரியம் : இயேசுவின் அவதாரம்.
ராம்சே : சாத்தான்
கண்ணாடி தாத்தா : ஏஞ்சல்.
கடவுளுக்கும் சாத்தானுக்கும் இடையேயான போராட்டமே நெஞ்சம் மறப்'பதில்'லை திரைப்படம். Title இல் 'பதில்' மட்டும் வேறு நிறத்தில் ஏன்? படத்தில் Title வரும் இடம்.
ஆரம்பத்துல S. J சூர்யா, நந்திதா பெயர்லாம் red lightingல காட்டி இருப்பாங்க. இதுல S. J சூர்யா character சாத்தான் என்றும் நந்திதா, வேலைக்காரர்கள் characters எல்லோரும் சாத்தானின் பிடியில் இருப்பவர்கள் என்றும் எடுத்துப்போம்.
அடுத்து ரெஜினா பெயர் ஜீசஸ் உடனும் மற்றவர்கள் பெயர் ஜீசசை ஆதரிப்பவர்கள் உடனும் வருகிறது. இது தான் மரியம், ஜீசஸ் என்பதுக்கு முதல் குறியீடு.
அடுத்து இயேசுவினை வழிபடுபவர்கள் இயேசுவின் பக்கமும், சாத்தானின் பக்கமும் இருக்கலாம்.
Read 24 tweets
28 Mar
Marketing Genius : A 🔞 awarness thread.
Durex என்றது 'ஆணுறை' தயாரிக்கும் கம்பனி. அவர்களின் சந்தைப்படுத்தல் உத்திகள் புதுமையாகவும், உண்மை நிகழ்வுகளை தொடர்புபடுத்தியும் இருக்கிறது. ஆணுறை : உடலுறவின் மூலம் பரவும் நோய்களையும்,தேவையற்ற கர்பத்தையும் தடுக்கும் சாதனம். கெட்ட வார்தையல்ல.
Read 6 tweets
28 Mar
என்னவெல்லாம் செய்தார் கலைஞர்?

திராவிட பேரரக்கன் கலைஞர்🔥.
Read 5 tweets
27 Mar
நீ ஏன் தண்டமா இருக்கன்னு யாராச்சும் கேட்டிருப்பாங்கதானே?

ஆனா நாம விரும்புற மொழிகளை கற்றுக்கொள்ள 'Tandem'னு ஒரு App இருக்கு.ரொம்ப இலகுவான வழி. முதல் செய்ய வேண்டியது, app ஐ download செய்து நமக்குன்னு ஒரு account create பண்ணனும்.
அதுக்கு பிறகு நாம என்ன மொழியைக் கற்றுக்கொள்ள விரும்புறமோ, அந்த மொழியை தாய் மொழியா கொண்ட ஒருவரோடு நட்பாகலாம். இரண்டு பேருமே மொழி பரிமாற்றம் செய்து கொள்ளலாம். அப்படி எத்தனை பேரொடும் நட்பாக முடியும்.
Texts, Voice notes, Calls என நண்பர்களுக்கு சௌகரியமான முறையில் உரையாடலாம்.
ஒருவர் அனுப்பும் textsஐ correct, comment, translate செய்யலாம்.

தண்டமா நேரத்தை வீணாக்காமல், ஒரு மொழியை கற்றுக்கொள்ள 'Tandem' app இனை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.
Read 4 tweets
25 Mar
#goofymovies
The Tiger: An Old Hunter's Tale (2015)

IMDb Rating : 7.3/10
கொரியா, ஜப்பானின் ஆதிக்கத்தில் இருக்கும் காலகட்டத்தில் நடைபெறும் கதை.
புலிகளை வேட்டையாடி அதன் தோல்களை சேகரிக்கும் ஜப்பானிய கவர்னர், கொரியாவின் கடைசி புலி வரை வேட்டையாடவேண்டும் என்று முயற்சிக்கிறார்.
தன் மகனுக்கு வேட்டையின் சூட்சுமத்தை விளக்கும் கொரியாவின் வேட்டைக்காரர் Chun Man - duk ஒரு புலியை வேட்டையாடுவதில் ஆரம்பிக்கிறது திரைப்படம்.
சில வருடங்களின் பின்னர் மலைகளின் அரசன் என்று அழைக்கப்படும் ஒற்றைகண் புலியை வேட்டையாட முயற்சிக்கிக்கும் பலர் அந்த புலியினால் உயிரிழகின்றனர்.
சில வேட்டைக்காரர்கள் வைக்கும் பொறியில் ஒற்றைகண் புலியின் இரண்டு குட்டிகள் இறந்துவிடுகின்றன. அதன் துணையும் கண்ணியில் சிக்கிக்கொள்கிறது. பின்னர் அதையும் கொன்றுவிடுகின்றனர்.
மலை அரசனை பிடிக்கும் முயற்சிகள் தோல்வியிலேயே முடிகிறது.
Read 10 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!