தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்கள்: (57) வியாக்ரபுரீஸ்வரர் கோயில்:
மூலவர்: வியாக்ரபுரீஸ்வரர், புலியூர் நாதர்
அம்மன்: சவுந்தரநாயகி, அழகம்மை
தல விருட்சம்: சரக்கொன்றை
தீர்த்தம்: காவிரி, கோயில் தீர்த்தம்
ஊர்: திருப்பெரும்புலியூர், தஞ்சாவூர்
தேவாரம் பாடியவர்கள்: திருஞானசம்பந்தர்
புதர் மண்டிக்கிடந்த இத்தலத்தை மதுரை சுந்தர சுவாமிகள் வெளிஉலகிற்கு தெரியப்படுத்தினார்.
புலிக்கால் முனிவரான வியாக்ரபாதர், தன் தந்தை மாத்தியந்தினரிடம் தில்லை நடராஜரின் பெருமையை கேட்டறிந்து, அங்கு வந்து திருமூலநாதரை வழிபட்டு வந்தார்.
மரங்களில் ஏறி பூ பறிக்க புலிக்கால்களையும், அம்மலர்களை ஆராய்ந்து பார்த்து சிவபூஜை செய்ய நகங்களில் கண்களையும் பெற்றார்.
நடராஜரின் சன்னதிகளில் ஒரு புறம் இவரும், மறுபுறம் பதஞ்சலி மகரிஷியும் உள்ளனர்.
புலிக்கால் முனிவராகிய இவர் வழிபட்ட தலங்கள் பஞ்ச புலியூர்த்தலங்களில் இதுவும் ஒன்று.
அருணகிரிநாதர் இத்தல முருகனை தனது திருப்புகழில் பாடியுள்ளார். லிங்கோத்பவர் அருகில் அர்த்தநாரீஸ்வரர் அருள்பாலிக்கிறார்.
பொதுவாக நவக்கிரகங்கள் அவரவர் திசையில் இருப்பார்கள். ஆனால் இங்கு நவகிரகங்கள் சூரியனைப்பார்த்தபடி உள்ளது சிறப்பாகும்.
தேவாரப் பாடல்:
தோடு உடையார் குழைக் காதில் சூடுபொடியார் அனல் ஆடக்
காடு உடையார் எரி வீசும் கை உடையார் கடல் சூழ்ந்த
நாடு உடையார் பொருள் இன்பம் நல்லவை நாளும் நயந்த
பீடு உடையார் பெருமானார் பெரும்புலியூர் பிரியாரே.
தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்கள்: (58) திருமழபாடி வைத்தியநாதசுவாமி கோயில்:
மூலவர்: வைத்தியநாதசுவாமி
அம்மன்: சுந்தராம்பிகை, பாலாம்பிகை
தல விருட்சம்: பனை மரம்
தீர்த்தம்: கொள்ளிடம், லட்சுமி, சிவகங்கை தீர்த்தம்
புராண பெயர்: மழுவாடி
ஊர்: திருமழபாடி, அரியலூர்
தேவாரம் பாடியவர்கள்: திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர்
மார்க்கண்டேய முனிவருக்காக இங்குள்ள சிவபெருமான் மழு ஏந்தி நடனம் ஆடியதால் மழுவாடி என்று பெயர்.
திருத்தலத்தில் தான் நந்தி தேவர் சிவகணங்களின் தலைமைப் பதவியையும், திருக் கயிலையின்
தலை வாயிலைக் காக்கும் உரிமையையும் பெற்றார்.
‘நந்திக் கல்யாணம் பார்த்தால் முந்திக் கல்யாணம்’ என்று சிறப்பித்துச் சொல்லப்படும் நந்தி தேவரின் திருக்கல்யாணம் நடைபெற்ற தலமும் திருமழபாடி திருத்தலம்தான்.
சுந்தரர் சோழ நாட்டுசிவஸ்தலங்களுக்கு யாத்திரை மேற்கொண்டபோது ஒரு நதியைக் கடந்து
சப்தஸ்தானத்தில் இத்தலம் ஏழாவது தலம். திருவிழா காலத்தில் ஏழூர் பல்லக்குகளையும் ஒரே இடத்தில் கண்டு களிக்கும் சிறப்புடைய தலம், சுந்தரர் வைப்புத்தலமாக பாடியுள்ளார்.
ஆண்டிற்கு 3 முறை திருவையாறிலிருந்து ஐயாறப்பர் இங்கு வருகிறார்.
காமதேனுவே பசுவாக வந்து பால் சொரிந்து சொரிந்து நெய் ஆன இடத்தை தோண்டி பார்த்த போது, சிவலிங்கம் இருந்தது. சிவபக்தனான மன்னன் இவ்விசயம் அறிந்து, கோயில் கட்டி கும்பாபிஷேகம் செய்து, தினமும் நெய்யினால் அபிஷேகம் செய்ய ஏற்பாடு செய்தான்.
சீர்காழி சட்டை நாதர் கோயில் அமைப்பை போலவே இக்கோயிலும் மலைக்கோயில் அமைப்பில் கட்டப்பட்டுள்ளது. எனவே இத்தலத்தை 'மேலைக்காழி' என்பர்.
கோயிலின் முதல் தளத்தில் உமா மகேஸ்வரரும், இரண்டாவது தளத்தில் சட்டைநாதரும் அருள்பாலிக்கின்றனர்.
ராவணனின் மகன் மேகநாதன் இந்திரனை போரில் வென்றதால் இவனுக்கு இந்திரஜித் என்ற பெயர் ஏற்பட்டது. ஒரு முறை இந்திரஜித் வானத்தில் புஷ்பக விமானம் மூலம் பறந்து கொண்டிருந்தான்.
சிவபெருமான் வீரச்செயல்கள் புரிந்த அட்ட வீரட்டத்தலங்களில் இது காமனை எரித்த தலம். எனவே இறைவன் காமதகன மூர்த்தி என்று அழைக்கப்படுகிறார். காமதகன மூர்த்தி இடக்காலை மடித்து வலக்காலைத் தொங்கவிட்டு வலக்கை அபய முத்திரையுடன் இடக்கையை மடக்கிய கால்
மீது வைத்து அமர்ந்த நிலையில் யோகமூர்த்தியாக வீற்றிருக்கிறார்.
இங்கு சிவன் யோக மூர்த்தியாக இருப்பதால் நினைத்தவுடன் சென்று எளிதாக பார்க்க இயலாது. எப்படியாவது தடங்கல் வந்து விடும் . அதையும் மீறி சுவாமியை தரிசிப்பவர்களுக்கு யோக நிலை கைகூடும்.
சிவனும், பார்வதியும் கைகோர்த்தபடி திருமணக்கோலத்தில் அருள்பாலிப்பது இத்தலத்தின் தனி சிறப்பாகும். திருமணம் வேண்டுவோர்க்கு அருள் புரியும் தலம். மூலஸ்தானத்தில் அம்பாள் தனியாக மணக்கோலத்தில்
மணப்பெண்ணுக்குரிய நாணத்துடன் உள்ளார்.
சிவபெருமானும் உமாதேவியும் கயிலாயத்தில் இருக்கும் போது ஒருநாள் உமை ஈசனை வணங்கி மற்றொரு முறை தங்களை திருமணம் செய்து இன்புற வேண்டும் என்று வரம் கேட்க, தாராளமாக என்றார் ஈசன்.
ஆனால் எப்போது எங்கே என்று ஈசன் சொல்லாமல் இருந்ததால் நாட்கள்
“தமிழன்” என்பவன் இந்து-கடவுள் உணர்வாளன். அவன் அழிக்கப்படும் போது இறை நம்பிக்கை மட்டும் அழிக்கப்படுவதில்லை, தமிழனின் தொன்மையும் அழிக்கப் படுகிறது.
பிறர் அழிக்க தலைப்படும் நம் சைவப் பாரம்பரியங்களில் ஒன்று “திருக்கயிலாய வாத்தியம்”.
எல்லையற்ற பரம்பொருளாகிய சிவபெருமானுக்காக,
சிவனடியார்களால் இசைக்கப் பெறுவது “திருக்கயிலாய வாத்தியம்”. அனைத்து சிவன் கோவில்களிலும் தொன்று தொட்டு இசைக்கப்பட்டு வந்தது.
திருஉடல், பிரம்மதாளம், திருச்சின்னம், எக்காளம், தாரை, நெடுந்தாரை, சங்கு, கொம்பு, கொக்கரை ஆகிய பண்டைய இசைக் கருவிகளைக் கொண்டு
வாசிக்கும் இதை, “பஞ்ச வாத்தியம்” என்றும் கூறுவர்.
இவற்றில் மிகவும் பழமையானது கொக்கரை, சங்கு. “சங்கநாதம்” மங்களகரமானது. தமிழகத்தில் அதை பற்றி, எப்படியோ வேறு பார்வை ஏற்பட்டு விட்டது. திருஞானசம்பந்தர் செல்லும் இடங்களெல்லாம், சங்கநாதம் முழங்கியதாக, பெரியபுராணத்தில் குறிப்பு உள்ளது.