#சேலம்விஜய்
நீங்கள் ஜூனியர் விகடனின் அட்டைப்படப் புகைப்படத்துக்காகவே புத்தகம் வாங்கியிருந்தால் அது அநேகமாக தம்பி விஜய் எடுத்தப் படமாகத்தான் இருக்கும். எளிய மக்களின் உணர்வுகளை உறைய வைப்பதில் மன்னன். டெங்கு காய்ச்சலை வெறும் மர்மக்காய்ச்சல் என எடப்பாடி அரசு பதிவு செய்த காலத்தில்
தர்மபுரியில் இறந்த குழந்தையை ஒரு தாய் கையில் வைத்துக் கொண்டு கதறி அழும் படத்தை விஜய் எடுத்ததும், அது ஜூனியர் விகடன் அட்டைப்படமாக வந்து, சட்டப்பேரவை அல்லோகலப்பட்டது வரலாறு. அதன்பிறகுதான் சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு டெங்கு கொசுக்கள் ஒழிக்கப்படும் நிலை உருவானது. இதுதான்
புகைப்படத்தின் மேஜிக். இந்த அற்புதத்தை நிகழ்த்தும் கலைஞர்கள் கடைசிவரை நம் கவனத்துக்கு வரவே மாட்டார்கள் என்பதுதான் பெரும் சோகம். சேலம் தாண்டி எந்த ஊருக்குப் போனாலும் அவனுக்கு நான் போன் செய்தாக வேண்டும் என்பது எழுதப்படாத சட்டம். கையில் ஏதேனும் ஒரு உணவோடு பைபாஸ் ரோடில் நிற்பான்.
பாசக்காரன் என்பது அண்டர்ஸ்டேட்மெண்ட். சில மாதங்களுக்கு முன்பு சேலம் ஸ்டீல் ப்ளாண்ட் ரோடில் நண்பன் புது ஹோட்டல் ஆரம்பிச்சிருக்கார்., பரோட்டா அட்டகாசமாக இருக்கும் என என்னை வலுக்கட்டாயமாக நகருக்கு உள்ளே அழைத்துச் சென்றான். ஹோட்டல் பெயர் "நிலாச்சோறு". நான் சாப்பிட தொடங்கிய போது
எதிரில் அமர்ந்து ஒரு ப்ளேட்லே பரோட்டாவை பிய்த்துப் போட்டு மூன்று விதமான சால்னாவில் அவைகளைத் தனி தனியாக ஊற வச்சான். ரசனைக்காரனாவும் இருக்கானே என நான் நினைத்தவேளையில் அப்படியே அந்த ப்ளேட்டை எனக்கு மாற்றி, இப்போ சாப்பிடுங்கண்ணா.. இப்படிதான் பரோட்டாவை சாப்பிடணும் என்ற விஜய்
நேற்றிரவு கரோனாவுக்கு தனது உயிரை ஒப்படைத்து விட்டான்.
நேற்றைக்கு முந்தைய நாள் மாலை, டிவிட்டரில் நண்பர் @senthazalravi சேலத்தில் ஒரு ஆக்ஸிஜன் படுக்கை உதவி கேட்டபோது அவனைதான் அழைத்தேன். சொல்லுங்கண்ணா என பலவீனமான குரலைக் கேட்டபோதுதான், அவனும் மருத்துவமனையில் இருப்பதே எனக்குத்
தெரிய வந்தது. தைரியம் சொல்லி போனை வைத்தேன். அரைமணி நேரத்தில் மீண்டும் அவனே அழைத்து, நீங்க ஏதோ கேட்க வந்தீங்களே! அதை சொல்லுங்க. நான் பெட்லே இருந்தால் கூட அதைச் செய்ய முடியும் என்றவனை காலம் அழைத்துக் கொண்டது. சேலத்தை சுற்றியுள்ள மலைவாழ் மக்களின் அன்புக்குரியவனாக இருந்தான். அவர்கள்
பிரச்சனைகள் எதுவாக இருந்தாலும் உடனடியாக கலெக்டரிடம் கொண்டு போய் தீர்த்து வைப்பான். @AnandaVikatan அடையாளத்தை சமூகப் பொறுப்போடு பயன்படுத்தியது நான் அறிந்து விஜய் மட்டும்தான். அவனைப் பற்றி பேசவும், எழுதவும் எவ்வளவோ உள்ளது. இப்போதைக்கு அதையெல்லாம் மனசுக்குள் அழுதுத் தீர்க்கிறேன். 🙏
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
இதுக்கு பதில் சொல்லுவோம். 1. சாக்கடை, கக்கூஸ் போன்ற அடிப்படை வசதிகளை மாநிலத் தலைநகரின் மையப் பகுதியில் கூட சரியாக இல்லை. இதைச் செய்ய வேண்டிய மாநகராட்சியை 10 ஆண்டுகளாக நடத்தியது யார்? 2. 10 ஆண்டுகளாக அதிமுக எம்.எல்.ஏக்கள் உள்ள தூத்துக்குடி, சேலம், ஈரோடு மாநகராட்சித் தொகுதிகளில்
சாக்கடை, கக்கூஸ் வசதிகள் அமோகமாக உள்ளனவா? 3. கோவையிலேயே தொண்டாமுத்தூர் தொகுதிக்கு இணையாக பக்கத்தில் உள்ள தொகுதிகளில் வசதிகள் உள்ளனவா? 4. எதிர்கட்சி எம்.எல்.ஏக்களை விட அந்தப் பகுதியின் ஆளும்கட்சி வட்டச் செயலாளருக்கு அதிக அதிகாரம் உண்டு என்பதை ஊர் அறியும்தானே? 4. தொடர்ந்து திமுக
வுக்கு ஓட்டுப் போட்ட சேப்பாக்கம் தொகுதி மக்களுக்கு, இந்த சீர்கேடுகளுக்கான காரணம் அதிமுகதான் என்பது தெரிந்துதானே, மாபெரும் வித்தியாசத்தில் ஒரு புதுமுக வேட்பாளர் @Udhaystalin ஐ வெற்றி பெற வைக்கின்றனர்? 5. பேரிடர் காலத்தில் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள ஒவ்வொருவரும் பாடுபடும்போது
உயிர் வாழ்வது ஒவ்வொருவரின் உரிமை. உதவி செய்வது அனைவரின் கடமை. இப்படியொரு பேரிடர் காலத்தில் "உழக்கினில் கிழக்கு மேற்கு" பார்க்கும் மனப்பான்மை தவறு. கேட்கும் எல்லோருக்கும் எல்லா மருத்துவ உதவிகளையும் செய்ய முடியாமல், குற்ற உணர்வில் மனம் குமைந்து கொண்டு இருக்கிறோம். கண் முன்னே பல
உயிர்கள் அநியாயமாக போவதைக் கண்டு மனம் சமநிலை இழக்கிறது. தினமும் பல மரணங்களைக் கண்ட பிறகும், துணிந்து பணியாற்றும் மருத்துவர்களையும், பணியாளர்களையும் கடவுளாகக் காணத் தோன்றுகிறது. அவர்கள் முன் வரும் நோயாளிகளில் யாருக்கு மருத்துவம் செய்யணும், செய்யக்கூடாது என அறிவுரை சொல்ல முடியுமா?
நாம் அனைவரும் அறிந்த ஒரு பெண் உயிர் அச்சம் கொண்டு உதவி கேட்கும் போது, நம் அனைவரின் மனங்களும் குவிந்து ஆறுதல் சொல்ல வேண்டாமா? அது மட்டுந்தானே நம்மால் செய்ய இயலும்? இத்தனைக்கும் அவருக்கு அந்த ஆறுதலும், நம்பிக்கையும் மட்டுந்தான் தரப்பட்டது. ஒருவேளை நடுநிசியில் அவர் ஒரு ஆக்சிஜன் வசதி
#KVAnand
சுமார்15 ஆண்டுகளுக்கு முன், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் தனது மாநில மாநாட்டை திருவண்ணாமலையில் நடத்தியது. அதற்கு வரவேற்புக்குழுத் தலைவராக என்னைத் தேர்ந்தெடுத்து இருந்தனர். அதில் கலந்து கொள்ள பல திரைப்பிரபலங்களை அழைத்திருந்தோம். பாலுமகேந்திரா சார் ஒரு வாரம்
எங்களுடனே தங்கி கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுமாறு நண்பர் பவா செல்லதுரை பலருக்கும் போஸ்ட் கார்ட் அனுப்பி இருந்தார். அது வழக்கமான ஒன்று. யாரும் அதை மதித்து வரப் போவதில்லை. ஆனால், கே.வி.ஆனந்த் வந்தார்.
நிகழ்ச்சி நடந்த எங்கள் டேனிஷ் பள்ளி வாசல் கேட்டில் தோளில்
பையை மாட்டிக் கொண்டு ஒரு கட்டையான உருவம் நின்று கொண்டிருந்ததைக் கண்ட பவா, அவர் அருகில் சென்று யார் சார் நீங்க? யாரை பார்க்கணும்? பாவம்.. ரொம்ப நேரமா நின்னுகிட்டு இருக்கீங்க? என கேட்க, என் பேர் கே.வி. ஆனந்த் சார்., இங்கே பவா செல்லதுரை என்பரை பார்க்கணும்னு கையில் இருந்த தபால்
#Catch22 : அனைத்துக் கட்சிக் கூட்டம் என்பதே ஒரு சதிவலை. காவிரி முதல் கரோனா வரை பலமுறை மக்கள் பிரச்சனைகளுக்காக அனைத்துக்கட்சிக் கூட்டத்தை கூட்ட சொல்லிய போதெல்லாம் அந்தக் கோரிக்கையை இடது கையால் தள்ளிய எடப்பாடி, ஆட்சி முடிய ஆறே நாட்கள் இருக்கும்போது அவரே முன்வந்து அனைத்துக் கட்சிக்
கூட்டம் கூட்டுகிறார் எனில் அதன் உள்நோக்கத்தை யாரும் அறியலாம். இதில் திமுகவின் முக்கியத்துவம் பிரதான எதிர்கட்சி என்பதால் மட்டுமல்ல! சிலநாட்களில் அது ஆளும்கட்சி என்பதும் கூட! இதுவும் வெளிப்படை. கார்ப்பரேட் மூளைகள் பின்னிய இந்த நுட்பமான வலைப்பின்னலில் திமுகவை பங்கெடுக்க வைக்க
நடைபெற்ற இந்த நாடகத்தில் பங்கெடுக்காமல் திமுக விலகிப் போயிருக்கலாம்! அப்படி போயிருந்தால், இந்திய அளவில் திமுகவை தேசவிரோத சக்தியாகவும், அதன் தலைமையிலான தமிழ்நாட்டை, உயிர் வாழ ஆக்ஸிஜனுக்காக ஏங்கும் பலகோடி இந்திய மக்களின் எதிரியாகவும் ஒரு பிம்பம் வலிமையாகக் கட்டமைக்கப்
மின்சார ஊழல் :
கடுமையான மின்வெட்டுக்கு தமிழகத்தை உட்படுத்திச் சென்றுள்ளனர் அடிமை அதிமுக அரசு. அடிக்கடி மின்மிகை மாநிலம் என்பார்களே! அது நமது தேவைக்கும் அதிகமாக உற்பத்தி செய்கிறோம் என்று பொருள் அல்லவாம். தேவைக்கும் அதிகமாக தனியாரிடம் வாங்கிக் கொள்கிறோம் என்றுதான் பொருள். இப்போது
காபந்து அரசு என்பதாலும், அடுத்து திமுகவே ஆட்சிக்கு வரும் என்பதாலும் தனியார்கள் மின்சாரத்தை அளிக்க தயங்குகின்றனராம்! சந்தை விலையை விட அதிக விலை என்பதால் திமுக அரசிடம் பில் வாங்க முடியுமா எனும் அச்சம்தான் காரணமாம்! ஒரு மின் துறை உயர் அதிகாரி இதைவிட அதிர்ச்சியான தகவல்களை சொல்கிறார்.
தற்போது 30% மின் தட்டுப்பாடு இருப்பதால் scheduling முறைப்படி பகுதி வாரியாக 4 மணி நேர மின் வெட்டும், பராமரிப்பு எனும் பெயரில் வாரத்துக்கு ஒருநாள் மின்வெட்டும் தற்போது நடைமுறை படுத்தப்பட்டுள்ளதாம். தவிர, 110 KVA டிரான்ஸ்ஃபார்மர்களின் திடீர் பழுதுகள் வழக்கத்தை விட மிக அதிகமாக
ஒரு பழைய்ய்ய்ய கிராமம். அந்த ஊர்லே ஒரு நாட்டாமை கிழவன், கடுமையா உழைச்சு ஊரிலேயே முதல் காரை வீடு கட்டுனான். அந்த பெருசுக்கு நாலஞ்சு பிள்ளைங்க பிறந்தது. அது செழிப்பான ஊர் என்பதால் பஞ்சம் பிழைக்க, வியாபாரம் பண்ண அவ்வப்போது வெளியே இருந்து சிலபேர் வந்து தங்குவாங்க. அவங்க எல்லாம்
இவர்களை காரை வீட்டுக்காரங்க என்று அழைத்தார்கள். அந்த நேரத்திலே உலகம் எங்கிலும் ஓலைக் குடிசைதான் என்பதால் காரை வீடு என்பது பெரிய அடையாளம்தான். அரும்பாடுபட்டு வீடு கட்டிய பெருசும் நாளடைவில் மண்டையைப் போட, வளர்ந்து நின்ன பிள்ளைங்க எல்லாம் தனி அடுப்பு வச்சு பிழைக்கப் போனார்கள்.
மூத்த பிள்ளை மட்டும் பெருசோட கைபட்டு, கால்பட்டு வளர்ந்ததாலே பிடிவாதமா அங்கேயே தங்கிருச்சு. பிழைக்கப் போனவர்கள் எல்லாம் தனி மொழி தேடிகிட்டாலும், அந்த மொழியோட வேர்கள் எல்லாம் பழைய காரை வீட்டிலிருந்தே உருவானது. பிரிந்து போனவர்கள் கட்டின வீடுகளுக்குதான் புது பெயர் தேவைப்பட்டது.