உயிர் வாழ்வது ஒவ்வொருவரின் உரிமை. உதவி செய்வது அனைவரின் கடமை. இப்படியொரு பேரிடர் காலத்தில் "உழக்கினில் கிழக்கு மேற்கு" பார்க்கும் மனப்பான்மை தவறு. கேட்கும் எல்லோருக்கும் எல்லா மருத்துவ உதவிகளையும் செய்ய முடியாமல், குற்ற உணர்வில் மனம் குமைந்து கொண்டு இருக்கிறோம். கண் முன்னே பல
உயிர்கள் அநியாயமாக போவதைக் கண்டு மனம் சமநிலை இழக்கிறது. தினமும் பல மரணங்களைக் கண்ட பிறகும், துணிந்து பணியாற்றும் மருத்துவர்களையும், பணியாளர்களையும் கடவுளாகக் காணத் தோன்றுகிறது. அவர்கள் முன் வரும் நோயாளிகளில் யாருக்கு மருத்துவம் செய்யணும், செய்யக்கூடாது என அறிவுரை சொல்ல முடியுமா?
நாம் அனைவரும் அறிந்த ஒரு பெண் உயிர் அச்சம் கொண்டு உதவி கேட்கும் போது, நம் அனைவரின் மனங்களும் குவிந்து ஆறுதல் சொல்ல வேண்டாமா? அது மட்டுந்தானே நம்மால் செய்ய இயலும்? இத்தனைக்கும் அவருக்கு அந்த ஆறுதலும், நம்பிக்கையும் மட்டுந்தான் தரப்பட்டது. ஒருவேளை நடுநிசியில் அவர் ஒரு ஆக்சிஜன் வசதி
கேட்டிருந்தால் செய்து தந்திருக்க முடியுமா எனும் ஆழ்மன அச்சம் எனக்கிருந்தது. பலமுறை சொல்லியாச்சு. நவீன உலகம் இதுவரை காணாத பேரிடரில் நடுவே நாம் உள்ளோம். நாம் அனைவரும் ஒருவரின் கரங்களை ஒருவர் இறுகப் பற்றிக் கொண்டால்தான் இந்தப் புயலின் கண்ணைக் கடக்க முடியும். தனித்த மனங்கள் ஒரு
துரும்பைப் போல அடித்துச் சென்றுவிடும்.
திங்களன்று இரவெல்லாம் தூங்காமல் பாடுபட்டு ஒரு நாம்தமிழர் தம்பியைக் காப்பாற்றினோம். பலன், 11 வயது, 7 வயது பெண்பிள்ளைகளுக்கு இப்போது தகப்பன் உயிரோட இருக்கான். அதுதான் முக்கியம். அதைச் செய்யதான் நமக்கு அதிகாரமும், வாய்ப்பும் தரப்பட்டுள்ளது.

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with SKP KARUNA

SKP KARUNA Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @skpkaruna

22 May
#சேலம்விஜய்
நீங்கள் ஜூனியர் விகடனின் அட்டைப்படப் புகைப்படத்துக்காகவே புத்தகம் வாங்கியிருந்தால் அது அநேகமாக தம்பி விஜய் எடுத்தப் படமாகத்தான் இருக்கும். எளிய மக்களின் உணர்வுகளை உறைய வைப்பதில் மன்னன். டெங்கு காய்ச்சலை வெறும் மர்மக்காய்ச்சல் என எடப்பாடி அரசு பதிவு செய்த காலத்தில் Image
தர்மபுரியில் இறந்த குழந்தையை ஒரு தாய் கையில் வைத்துக் கொண்டு கதறி அழும் படத்தை விஜய் எடுத்ததும், அது ஜூனியர் விகடன் அட்டைப்படமாக வந்து, சட்டப்பேரவை அல்லோகலப்பட்டது வரலாறு. அதன்பிறகுதான் சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு டெங்கு கொசுக்கள் ஒழிக்கப்படும் நிலை உருவானது. இதுதான்
புகைப்படத்தின் மேஜிக். இந்த அற்புதத்தை நிகழ்த்தும் கலைஞர்கள் கடைசிவரை நம் கவனத்துக்கு வரவே மாட்டார்கள் என்பதுதான் பெரும் சோகம். சேலம் தாண்டி எந்த ஊருக்குப் போனாலும் அவனுக்கு நான் போன் செய்தாக வேண்டும் என்பது எழுதப்படாத சட்டம். கையில் ஏதேனும் ஒரு உணவோடு பைபாஸ் ரோடில் நிற்பான்.
Read 8 tweets
30 Apr
#KVAnand
சுமார்15 ஆண்டுகளுக்கு முன், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் தனது மாநில மாநாட்டை திருவண்ணாமலையில் நடத்தியது. அதற்கு வரவேற்புக்குழுத் தலைவராக என்னைத் தேர்ந்தெடுத்து இருந்தனர். அதில் கலந்து கொள்ள பல திரைப்பிரபலங்களை அழைத்திருந்தோம். பாலுமகேந்திரா சார் ஒரு வாரம்
எங்களுடனே தங்கி கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுமாறு நண்பர் பவா செல்லதுரை பலருக்கும் போஸ்ட் கார்ட் அனுப்பி இருந்தார். அது வழக்கமான ஒன்று. யாரும் அதை மதித்து வரப் போவதில்லை. ஆனால், கே.வி.ஆனந்த் வந்தார்.
நிகழ்ச்சி நடந்த எங்கள் டேனிஷ் பள்ளி வாசல் கேட்டில் தோளில்
பையை மாட்டிக் கொண்டு ஒரு கட்டையான உருவம் நின்று கொண்டிருந்ததைக் கண்ட பவா, அவர் அருகில் சென்று யார் சார் நீங்க? யாரை பார்க்கணும்? பாவம்.. ரொம்ப நேரமா நின்னுகிட்டு இருக்கீங்க? என கேட்க, என் பேர் கே.வி. ஆனந்த் சார்., இங்கே பவா செல்லதுரை என்பரை பார்க்கணும்னு கையில் இருந்த தபால்
Read 6 tweets
26 Apr
#Catch22 : அனைத்துக் கட்சிக் கூட்டம் என்பதே ஒரு சதிவலை. காவிரி முதல் கரோனா வரை பலமுறை மக்கள் பிரச்சனைகளுக்காக அனைத்துக்கட்சிக் கூட்டத்தை கூட்ட சொல்லிய போதெல்லாம் அந்தக் கோரிக்கையை இடது கையால் தள்ளிய எடப்பாடி, ஆட்சி முடிய ஆறே நாட்கள் இருக்கும்போது அவரே முன்வந்து அனைத்துக் கட்சிக்
கூட்டம் கூட்டுகிறார் எனில் அதன் உள்நோக்கத்தை யாரும் அறியலாம். இதில் திமுகவின் முக்கியத்துவம் பிரதான எதிர்கட்சி என்பதால் மட்டுமல்ல! சிலநாட்களில் அது ஆளும்கட்சி என்பதும் கூட! இதுவும் வெளிப்படை. கார்ப்பரேட் மூளைகள் பின்னிய இந்த நுட்பமான வலைப்பின்னலில் திமுகவை பங்கெடுக்க வைக்க
நடைபெற்ற இந்த நாடகத்தில் பங்கெடுக்காமல் திமுக விலகிப் போயிருக்கலாம்! அப்படி போயிருந்தால், இந்திய அளவில் திமுகவை தேசவிரோத சக்தியாகவும், அதன் தலைமையிலான தமிழ்நாட்டை, உயிர் வாழ ஆக்ஸிஜனுக்காக ஏங்கும் பலகோடி இந்திய மக்களின் எதிரியாகவும் ஒரு பிம்பம் வலிமையாகக் கட்டமைக்கப்
Read 12 tweets
13 Apr
மின்சார ஊழல் :
கடுமையான மின்வெட்டுக்கு தமிழகத்தை உட்படுத்திச் சென்றுள்ளனர் அடிமை அதிமுக அரசு. அடிக்கடி மின்மிகை மாநிலம் என்பார்களே! அது நமது தேவைக்கும் அதிகமாக உற்பத்தி செய்கிறோம் என்று பொருள் அல்லவாம். தேவைக்கும் அதிகமாக தனியாரிடம் வாங்கிக் கொள்கிறோம் என்றுதான் பொருள். இப்போது
காபந்து அரசு என்பதாலும், அடுத்து திமுகவே ஆட்சிக்கு வரும் என்பதாலும் தனியார்கள் மின்சாரத்தை அளிக்க தயங்குகின்றனராம்! சந்தை விலையை விட அதிக விலை என்பதால் திமுக அரசிடம் பில் வாங்க முடியுமா எனும் அச்சம்தான் காரணமாம்! ஒரு மின் துறை உயர் அதிகாரி இதைவிட அதிர்ச்சியான தகவல்களை சொல்கிறார்.
தற்போது 30% மின் தட்டுப்பாடு இருப்பதால் scheduling முறைப்படி பகுதி வாரியாக 4 மணி நேர மின் வெட்டும், பராமரிப்பு எனும் பெயரில் வாரத்துக்கு ஒருநாள் மின்வெட்டும் தற்போது நடைமுறை படுத்தப்பட்டுள்ளதாம். தவிர, 110 KVA டிரான்ஸ்ஃபார்மர்களின் திடீர் பழுதுகள் வழக்கத்தை விட மிக அதிகமாக
Read 7 tweets
10 Apr
ஒரு பழைய்ய்ய்ய கிராமம். அந்த ஊர்லே ஒரு நாட்டாமை கிழவன், கடுமையா உழைச்சு ஊரிலேயே முதல் காரை வீடு கட்டுனான். அந்த பெருசுக்கு நாலஞ்சு பிள்ளைங்க பிறந்தது. அது செழிப்பான ஊர் என்பதால் பஞ்சம் பிழைக்க, வியாபாரம் பண்ண அவ்வப்போது வெளியே இருந்து சிலபேர் வந்து தங்குவாங்க. அவங்க எல்லாம்
இவர்களை காரை வீட்டுக்காரங்க என்று அழைத்தார்கள். அந்த நேரத்திலே உலகம் எங்கிலும் ஓலைக் குடிசைதான் என்பதால் காரை வீடு என்பது பெரிய அடையாளம்தான். அரும்பாடுபட்டு வீடு கட்டிய பெருசும் நாளடைவில் மண்டையைப் போட, வளர்ந்து நின்ன பிள்ளைங்க எல்லாம் தனி அடுப்பு வச்சு பிழைக்கப் போனார்கள்.
மூத்த பிள்ளை மட்டும் பெருசோட கைபட்டு, கால்பட்டு வளர்ந்ததாலே பிடிவாதமா அங்கேயே தங்கிருச்சு. பிழைக்கப் போனவர்கள் எல்லாம் தனி மொழி தேடிகிட்டாலும், அந்த மொழியோட வேர்கள் எல்லாம் பழைய காரை வீட்டிலிருந்தே உருவானது. பிரிந்து போனவர்கள் கட்டின வீடுகளுக்குதான் புது பெயர் தேவைப்பட்டது.
Read 6 tweets
7 Apr
தேர்தல் தொடர்பாக இன்னொரு விஷயம் பேசலாமா?
தேர்தல் அலுவலர்கள் பெரும்பாலும் ஆசிரியர்கள்தான் என்பதால் 65% பெண்கள்தான். நாள் முழுக்க தெரியாத ஊரில் பழகாத மனிதர்களுடன் தங்கி இருந்து பணியாற்ற வேண்டிய சூழல். வெகு சிலருக்கு கணவர் உடன் வந்து வெளியே காத்திருப்பார். மற்றபடி பெரும்பாலும்
தனியேதான் வருவார்கள். இந்த அலுவலர்களின் பயணம், பாதுகாப்பு, உணவு குறித்து மாவட்ட நிர்வாகம் பெரிதாக மெனக்கெடாது. மொத்த அழுத்தத்தையும் சமாளித்தாக வேண்டிய இக்கட்டான பணி இது. பல தேர்தல் அனுபவங்களில் நான் கவனித்தது இவை. பெரும்பாலும் கிராமங்களில் பெண் அலுவலர்கள் வந்து இறங்கியவுடனே ஊர்
அவர்களை தத்தெடுத்துக் கொள்ளும். பல வீடுகளில், இங்கேயே படுத்து தூங்கிட்டு விடிகாலை போம்மா என்பார்கள். வாக்குச்சாவடி அருகில் இருக்கும் வீடுகளின் கழிப்பறை, உடைமாற்றும் அறைகள் இவர்களுக்காக திறந்து விடப்படும். பெரியவர்கள் அத்தனை கரிசனையோடு கவனித்துக் கொள்வார்கள். லோக்கல் அரசியல்வாதி
Read 7 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!

:(