எவ்வளவு பெரிய வீடாக இருந்தாலும் கதவு சிறியது தான்.
எவ்வளவு பெரிய கதவாக இருந்தாலும் பூட்டு சிறியது தான்.
எவ்வளவு பெரிய பூட்டாக இருந்தாலும் சாவி சிறியது தான்.
இவ்வளவு சிறிய சாவியை வைத்து அவ்வளவு பெரிய வீட்டை திறந்து செல்கிறோம்.
வாழ்க்கையும் இதே மாதிரி தான்.
நமக்கு வரும் எவ்வளவு பெரிய பிரச்சனையா இருந்தாலும் அதன் தீர்வுக்கு ஒரு சிறிய மாற்றமோ, சிறிய தீர்மானமோ போதும்.
அதுவே அத்தனை பிரச்சினையைத் தீர்க்கும் சாவியாக அமைந்து விடும்.
சாவி இல்லாத பூட்டை மனிதன் உருவாக்குவதில்லை. தீர்வு இல்லாத பிரச்சினைகளை இறைவன் அனுமதிப்பதில்லை.
எந்த சூழ்நிலையிலும் இறைவனுக்கு நன்றி செலுத்திக் கொண்டு இருங்கள்.!
அவன் தான் இறைவன்
பூமியில் உள்ள எல்லா உயிரினங்களுக்கும் உணவு வழங்குகின்றார்.
உலகில் மனிதனாய்ப் பிறந்திட்ட ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான கஷ்டங்கள்.
இறைவன் சிலரை வறுமையால் சோதிக்கின்றார்,
இன்னும் சிலரை நோய் நொடிகளால் சோதிக்கின்றார்,
இன்னும் சிலரைக் கடன் தொல்லைகளால் சோதிக்கின்றார்.
ஆக, ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு விதமான சோதனைகள்.
நாம் நினைத்து கொண்டிருக்கிறோம், நமக்கு மட்டும்தான் இவ்வளவு சோதனைகள் என்று, கொஞ்சம் திரும்பிப் பார்த்தால் புரியவரும் மற்ற மனிதர்களும் நம்மை போன்றோ, நம்மை விட அதிகமாகவோ சோதனைக்குள்ளாக்கப் படுகிறார்கள் என்று.
இறைவனுக்கு நன்றி செலுத்துங்கள்.
நீங்கள் உங்களது குடும்பத்துடன் ஒன்று சேர்ந்து இருக்கின்றீர். எத்தனையோ பேர் தமது உறவுகளை இழந்து தவிக்கின்றனர்.
இறைவனுக்கு நன்றி செலுத்துங்கள்.
நீங்கள் உங்களது தொழிலை நோக்கி செல்கின்றீர். எத்தனையோ பேர் தொழில் இல்லாமல் அலைகின்றனர்.
இறைவனுக்கு நன்றி செலுத்துங்கள்.
நீங்கள் உடல் ஆரோக்கியத்துடன் உலா வருகின்றீர். எத்தனையோ நோயாளிகள் அதைப் பெறுவதற்காக வேண்டி கோடியைக் கொட்டுகின்றனர்".
இறைவனுக்கு நன்றி செலுத்துங்கள்.
நீங்கள் இன்னும் உயிருடன் இருக்கின்றீர். எத்தனையோ மரித்த ஆன்மாக்கள் உலகிற்கு வந்து நல்லறம் புரிய ஏங்குகின்றனர்.
இறைவனுக்கு நன்றி செலுத்துங்கள்.
நீங்கள் நீங்களாக இருக்கின்றீர். எத்தனையோ பேர் அவர்கள் உங்களைப் போல் இருக்க ஆசைப்படுகின்றனர்.
இறைவனுக்கு நன்றி செலுத்துங்கள்.
எந்நேரமும் மகிழ்ச்சியுடன் இருக்க பிறரை மகிழ்வியுங்கள்.!
இறைவனுக்கு நன்றி செலுத்திக்கொண்டே இருங்கள்.!
யார் யார் எந்தெந்த தெய்வங்களை வணங்குகிறீர்களோ அவரவர்கள் அந்தந்த தெய்வங்களிடம் முழுமையாக சரணடைந்து விடுங்கள்.!
உங்கள் வாழ்க்கை வளமாகி விடும்.!
🇮🇳🙏
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
COVID 19 தடுப்பூசி போட்டால் எனக்கு #கொரோனா_வராதா ? #வரலாம்! வாய்ப்புகள் உண்டு!
அப்புறம் ஏன் சார் நான் ஊசி போடணும் ??
இதை படியுங்கள்!
#கொரோனா பாதிக்கப்பட்ட 10000 நபர்களின் CT ஸ்கேன்ஐ பார்த்த பொழுது, ஏதேனும் ஒரு டோஸ் தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்களுக்கு, எத்தனை இணை நோய் (BP, Diabetes, obesity ) இருப்பினும் அவர்களின் நுரைஈரல் பாதிப்பு அதிக பட்சம் 5 -10 % மட்டுமே.
ஒரு டோஸ் தடுப்பூசி கூட போடாதவர்களே oxygen bed மற்றும் ICU அட்மிஷன் தேவைபடும் அளவிற்கு செல்கிறார்கள். தடுப்பூசி போட்ட ஒருவர் கூட oxygen தேவைபடும் அளவிற்கு பாதிக்கப்படவில்லை. Apollo மருத்துவமணியின் சமீபத்திய ஆய்வும் அதையே சொல்கிறது. நீங்கள் புரிந்து கொள்ள வேண்டியது இதுவே !
முனைவர் கமல.செல்வராஜ், அருமனை, கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: நம் நாட்டில், 34 ஆண்டுகளுக்குப் பின், தேசிய கல்விக் கொள்கையை மத்திய அரசு வகுத்துள்ளது.
நான்கு ஆண்டுகளுக்கு முன், 'இஸ்ரோ' முன்னாள் தலைவர் கஸ்துாரி ரங்கன் தலைமையில், பல்வேறு துறைகளைச் சார்ந்த, 12 பேர் அடங்கிய நிபுணர் குழுவை அமைத்து, மத்திய அரசு அதற்கான பணியைத் துவங்கியது.
அக்குழுவினர், நம் நாட்டில் பெரும் நகரங்கள் முதல், குக்கிராமங்கள் வரை பல்வேறு தரப்பட்ட, 2.50 லட்சம் பேரிடம் கருத்துகளைச் சேகரித்தனர். அதன் பின், அவற்றை கொள்கை முன்வரைவாகத் தயார் செய்து, நாட்டு மக்கள் மற்றும் கல்வியாளர்கள் பார்வைக்கு முன்வைத்தனர்.
ஜாதி பெயரால் திசை திருப்பும் போராளிகள்! கவிஞர் தாமரை சாட்டை
பாலியல் பிரச்னைகளை கூட பிராமண எதிர்ப்பாக திசை திருப்பும் போலி போராளிகளை தோல் உரிக்க வந்துவிட்டார் கவிஞர் தாமரை.
பாலியல் வன்கொடுமைகளும் பக்கம் பார்த்து பேசுதலும்! என்ற தலைப்பில் தாமரை கொட்டித் தீர்த்த குமுறல்களில் இருந்து சில பகுதிகள் இங்கே...
சில நாட்களாக பெண்களின் மீதான பாலியல் சீண்டல் மீண்டும் பேசுபொருள் ஆகியிருக்கிறது.
பாரம்பரியம் மிக்கதாக சமூகத்தில் உயர்படியில் இருப்பதாக தோற்றம் கொண்ட பள்ளி அசிங்கப்பட்டு நிற்கிறது. ராசகோபாலன் சிறையில். எவ்வளவு வேகமான நடவடிக்கை. வரவேற்க வேண்டும். கல்வி அமைச்சருக்கும் காவல் துறைக்கும் பாராட்டுகள். அப்படியே கொஞ்சம் திரும்பி பார்ப்போமா.