இயற்கை எழில் கொஞ்சும் சூழலில் மிகவும் பழமையான தலம்அருள்மிகு #_பால்வண்ணநாதர்_
திருக்கோயில்.
🇮🇳🙏1
மூலவர் : பால்வண்ணநாதர்
உற்சவர் : -
அம்மன்/தாயார் : வேதநாயகி
தல விருட்சம் : வில்வம்
தீர்த்தம் : கொள்ளிடம்
ஆகமம்/பூஜை : -
பழமை : 2000 வருடங்களுக்கு முன்
புராண பெயர் : திருக்கழிப்பாலை, காரைமேடு
ஊர் : திருக்கழிப்பாலை
மாவட்டம் : கடலூர்
மாநிலம் : தமிழ்நாடு
🇮🇳🙏2
பாடியவர்கள்:
அப்பர், சம்பந்தர், சுந்தரர், அருணகிரிநாதர்
தேவாரப்பதிகம்
எங்கேனும் இருந்துன் அடியேன் உனைநினைந்தால் அங்கே வந்து என்னொடும் உடனாகி நின்றருளி இங்கே என்வினையை அறுத்திட்டு எனையாளும் கங்கா நாயகனே கழிப்பாலை மேயானே.
-சுந்தரர்.
🇮🇳🙏3
தேவாரப்பாடல் பெற்ற காவிரி வடகரைத்தலங்களில் இது 4வது தலம்.
இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். குதிரையின் கால் குளம்பு பட்டு பிளந்து போன வெண்ணிற லிங்கத்திற்கு தான் இன்றும் பூஜை நடக்கிறது.
🇮🇳🙏5
லிங்கத்திற்கு பின்னால் சிவனும் பார்வதியும் திருமணக்கோலத்தில் உள்ளனர்.சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 4 வது தேவாரத்தலம் ஆகும்.
திறக்கும் நேரம்:
காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 7.15 மணி வரை திறந்திருக்கும்.
🇮🇳🙏6
பொது தகவல்:
கிழக்கு நோக்கிய 3 நிலை ராஜ கோபுரம். உள்பிரகார நுழைவு வாசலின் இருபுறமும் அதிகார நந்தியர் தமது துணைவியருடன் உள்ளனர். பிரகாரத்தில் விநாயகர், வள்ளி தெய்வானையுடன் சுப்ரமணியர், 🇮🇳🙏7
கஜலட்சுமி, விஷ்ணு, பிரம்மா, அகோர மூர்த்தி, முயலகன் மாறிய நிலையில் தெட்சிணாமூர்த்தி, கிராதமூர்த்தி, நாயன்மார்கள், சதுரா துர்க்கை, புவனேஸ்வரி ஆகியோர் உள்ளனர்.
🇮🇳🙏8
இத்தலம் முன்பு கொள்ளிட ஆற்றின் வடகரையில் கரைமேடு என்னுமிடத்தில் இருந்ததால், இத்தலத்திற்கு கழிப்பாலை என்ற பெயர் இருந்தது.
🇮🇳🙏9
கொள்ளிட ஆற்றின் வெள்ளப்பெருக்கால் கோயில் முழுவதும் சிதலமடைந்து விட்டது. எனவே தற்போது உள்ள இடத்தில் கோயில் கட்டி, அதில் கழிப்பாலை இறைவனையும், இறைவியையும் பிரதிஷ்டை செய்துள்ளார்கள்.
🇮🇳🙏10
பிரார்த்தனை
லிங்கத்திற்கு அபிஷேகம் செய்த பாலை அருந்தினால் குழந்தை பாக்கியம் கிடைக்கும், உஷ்ணம் சம்பந்தப்பட்ட நோய் விலகும் என்பது நம்பிக்கை.
🇮🇳🙏11
நேர்த்திக்கடன்:
எல்லா செயல்களிலும் வெற்றிகிடைக்க இங்குள்ள விஜய விநாயகருக்கு சங்கடஹர சதுர்த்தியில் அபிஷேகம் செய்து வழிபடுவது சிறப்பு.
🇮🇳🙏12
தலபெருமை:
இங்குள்ள பைரவர் காசியில் உள்ளது போல நாய் வாகனம் இல்லாமல், 27 மண்டை ஓட்டுடன், பூணூல் அணிந்து, சர்ப்பத்தை அரைஞான அணிந்து, ஜடாமுடி, சிங்கப்பல்லுடன் தனிக்கோயிலில் அருளுகிறார். காசியில் பைரவரை வடிவமைத்த சிற்பியே இங்குள்ள பைரவரையும் வடிவமைத்ததாக கூறப்படுகிறது.🇮🇳🙏13
இத்தல பைரவரை வணங்கினால் காசி பைரவரை வணங்கிய பலன் கிடைக்கும் என புராணங்கள் கூறுகின்றன. எனவே இப்பகுதி மக்கள் இத்தலத்தை பைரவர் கோயில் என்றே அழைக்கின்றனர். தேய்பிறை அஷ்டமி இங்கு சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
🇮🇳🙏14
அகத்தியருக்கு காட்சி தந்த தலங்களில் இதுவும் ஒன்று. வால்மீகி முனிவர் இங்கு வழிபாடு செய்துள்ளதாக புராணங்கள் கூறுகின்றன. அருணகிரிநாதர் இத்தல முருகன் மீது திருப்புகழ் பாடியுள்ளார்.
🇮🇳🙏15
இங்குள்ள நடராஜரின் சடைமுடி அள்ளிமுடிந்த கோலத்தில் உள்ளது. அருகில் சிவகாமியம்மன், தன் தோழிகளான விஜயா, சரஸ்வதியுடன் உள்ளது தனி சிறப்பாகும்.
🇮🇳🙏16
தல வரலாறு:
கபிலமுனிவர் ஒவ்வொரு சிவத்தலங்களாக தரிசித்து வரும் போது, வில்வ வனமாக இருந்த இப்பகுதியில் தங்கி சிவபூஜை செய்ய நினைத்தார். இப்பகுதியில் பசுக்கள் தானாக பால்சுரந்து வந்த காரணத்தினால் மணல் முழுவதும் வெண்ணிறமாக காட்சியளித்தது.
🇮🇳🙏17
முனிவர் இந்த வெண்ணிற மணலை எடுத்து லிங்கம் அமைத்து வழிபாடு செய்தார். ஒருமுறை அந்த வழியாக வந்த மன்னனது குதிரையின் கால் குளம்பு, மணல் லிங்கத்தின்மீது பட்டு லிங்கம் பிளந்து விடுகிறது.
🇮🇳🙏18
வருந்திய முனிவர் பிளவுபட்ட லிங்கத்தை எடுத்துவிட்டு வேறு லிங்கம் பிரதிஷ்டை செய்ய நினைத்த போது, இறைவன் பார்வதி சமேதராக காட்சி தந்து,""முனிவரே! பசுவின் பால் கலந்த வெண்ணிற மணலில் செய்த லிங்கம் பிளவு பட்டிருந்தாலும் அதை அப்படியே பிரதிஷ்டை செய்து விடுங்கள்.
🇮🇳🙏19
காமதேனுவே பசுவடிவில் இங்கு வந்து பால்சொறிந்துள்ளது. எனவே இந்த லிங்கத்தை வழிபடுபவர்கள் சகல செல்வங்களும் அடைவார்கள்,'என்றார்.
🇮🇳🙏20
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்: இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். குதிரையின் கால் குளம்பு பட்டு பிளந்து போன வெண்ணிற லிங்கத்திற்கு தான் இன்றும் பூஜை நடக்கிறது. லிங்கத்திற்கு பின்னால் சிவனும் பார்வதியும் திருமணக்கோலத்தில் உள்ளனர்.
🇮🇳🙏21
இருப்பிடம் :
சிதம்பரத்திலிருந்து, கவரப்பட்டு செல்லும் வழியில் 3 கி.மீ. தூரத்தில் உள்ள சிவபுரிக்கு அடுத்து திருக்கழிப்பாலை உள்ளது. பைரவர் கோயில் என்றால் தான் அனைவருக்கும் தெரியும்.
வாழ்க பாரதம் 🇮🇳🙏
வளர்க பாரதம் 🇮🇳🙏🇮🇳
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
COVID 19 தடுப்பூசி போட்டால் எனக்கு #கொரோனா_வராதா ? #வரலாம்! வாய்ப்புகள் உண்டு!
அப்புறம் ஏன் சார் நான் ஊசி போடணும் ??
இதை படியுங்கள்!
#கொரோனா பாதிக்கப்பட்ட 10000 நபர்களின் CT ஸ்கேன்ஐ பார்த்த பொழுது, ஏதேனும் ஒரு டோஸ் தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்களுக்கு, எத்தனை இணை நோய் (BP, Diabetes, obesity ) இருப்பினும் அவர்களின் நுரைஈரல் பாதிப்பு அதிக பட்சம் 5 -10 % மட்டுமே.
ஒரு டோஸ் தடுப்பூசி கூட போடாதவர்களே oxygen bed மற்றும் ICU அட்மிஷன் தேவைபடும் அளவிற்கு செல்கிறார்கள். தடுப்பூசி போட்ட ஒருவர் கூட oxygen தேவைபடும் அளவிற்கு பாதிக்கப்படவில்லை. Apollo மருத்துவமணியின் சமீபத்திய ஆய்வும் அதையே சொல்கிறது. நீங்கள் புரிந்து கொள்ள வேண்டியது இதுவே !
முனைவர் கமல.செல்வராஜ், அருமனை, கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: நம் நாட்டில், 34 ஆண்டுகளுக்குப் பின், தேசிய கல்விக் கொள்கையை மத்திய அரசு வகுத்துள்ளது.
நான்கு ஆண்டுகளுக்கு முன், 'இஸ்ரோ' முன்னாள் தலைவர் கஸ்துாரி ரங்கன் தலைமையில், பல்வேறு துறைகளைச் சார்ந்த, 12 பேர் அடங்கிய நிபுணர் குழுவை அமைத்து, மத்திய அரசு அதற்கான பணியைத் துவங்கியது.
அக்குழுவினர், நம் நாட்டில் பெரும் நகரங்கள் முதல், குக்கிராமங்கள் வரை பல்வேறு தரப்பட்ட, 2.50 லட்சம் பேரிடம் கருத்துகளைச் சேகரித்தனர். அதன் பின், அவற்றை கொள்கை முன்வரைவாகத் தயார் செய்து, நாட்டு மக்கள் மற்றும் கல்வியாளர்கள் பார்வைக்கு முன்வைத்தனர்.
ஜாதி பெயரால் திசை திருப்பும் போராளிகள்! கவிஞர் தாமரை சாட்டை
பாலியல் பிரச்னைகளை கூட பிராமண எதிர்ப்பாக திசை திருப்பும் போலி போராளிகளை தோல் உரிக்க வந்துவிட்டார் கவிஞர் தாமரை.
பாலியல் வன்கொடுமைகளும் பக்கம் பார்த்து பேசுதலும்! என்ற தலைப்பில் தாமரை கொட்டித் தீர்த்த குமுறல்களில் இருந்து சில பகுதிகள் இங்கே...
சில நாட்களாக பெண்களின் மீதான பாலியல் சீண்டல் மீண்டும் பேசுபொருள் ஆகியிருக்கிறது.
பாரம்பரியம் மிக்கதாக சமூகத்தில் உயர்படியில் இருப்பதாக தோற்றம் கொண்ட பள்ளி அசிங்கப்பட்டு நிற்கிறது. ராசகோபாலன் சிறையில். எவ்வளவு வேகமான நடவடிக்கை. வரவேற்க வேண்டும். கல்வி அமைச்சருக்கும் காவல் துறைக்கும் பாராட்டுகள். அப்படியே கொஞ்சம் திரும்பி பார்ப்போமா.