மத்திய அரசை வேறு மாதிரி சித்தரிக்க முயற்சி நடக்கிறது: ஜெய்சங்கர்
நியூயார்க் : ''மத்திய அரசை வேறு மாதிரியாக சித்தரிக்க அரசியல் ரீதியில் முயற்சி நடக்கிறது,'' என, வெளி விவகாரங்கள் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் காட்டமாகத் தெரிவித்துள்ளார்.
அரசு முறைப் பயணமாக அமெரிக்கா சென்றுள்ள ஜெய்சங்கர், ஹூவர் நிறுவனத்தின் கருத்தரங்கில், முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மெக்மாஸ்டருடன் பங்கேற்றார். அப்போது ஜெய்சங்கர் பேசியதாவது: கொரோனா காரணமாக இந்தியா கடுமையான நெருக்கடியை சந்தித்துள்ளது.
அமெரிக்க மக்கள் தொகையை விட, இரண்டரை மடங்கு அதிகமுள்ள மக்களுக்கு, பாரபட்சமின்றி இலவச உணவுப் பொருட்களும், வங்கிக் கணக்கில் நேரடியாக பணமும் வழங்கப்படுகின்றன. ஆனாலும், மத்திய அரசை வேறு மாதிரியாக சித்தரிக்க அரசியல் ரீதியில் முயற்சி நடக்கின்றன;
இது, மத்திய அரசின் உண்மையான நிர்வாகம் குறித்து மதிப்பீடு செய்யும் போது புலப்படும்.
கடந்த காலத்தில் ஒருவரின் அடையாளம், நம்பிக்கை ஆகியவற்றின் அடிப்படையில் ஓட்டு வங்கி அரசியல் நடந்தது. இப்போது அப்படி அல்ல. அனைத்து மதத்தினரையும் சமமாக மதிக்கிறோம்.
மதசார்பின்மை என்பது, யாருடைய மத நம்பிக்கைக்கும் எதிராக இருக்கக் கூடாது என்பதே. இந்திய மக்கள் ஜனநாயகத்தில் முழு நம்பிக்கை வைத்துள்ளனர். இவ்வாறு அவர் பேசினார்.
தினமலர்
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
COVID 19 தடுப்பூசி போட்டால் எனக்கு #கொரோனா_வராதா ? #வரலாம்! வாய்ப்புகள் உண்டு!
அப்புறம் ஏன் சார் நான் ஊசி போடணும் ??
இதை படியுங்கள்!
#கொரோனா பாதிக்கப்பட்ட 10000 நபர்களின் CT ஸ்கேன்ஐ பார்த்த பொழுது, ஏதேனும் ஒரு டோஸ் தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்களுக்கு, எத்தனை இணை நோய் (BP, Diabetes, obesity ) இருப்பினும் அவர்களின் நுரைஈரல் பாதிப்பு அதிக பட்சம் 5 -10 % மட்டுமே.
ஒரு டோஸ் தடுப்பூசி கூட போடாதவர்களே oxygen bed மற்றும் ICU அட்மிஷன் தேவைபடும் அளவிற்கு செல்கிறார்கள். தடுப்பூசி போட்ட ஒருவர் கூட oxygen தேவைபடும் அளவிற்கு பாதிக்கப்படவில்லை. Apollo மருத்துவமணியின் சமீபத்திய ஆய்வும் அதையே சொல்கிறது. நீங்கள் புரிந்து கொள்ள வேண்டியது இதுவே !
முனைவர் கமல.செல்வராஜ், அருமனை, கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: நம் நாட்டில், 34 ஆண்டுகளுக்குப் பின், தேசிய கல்விக் கொள்கையை மத்திய அரசு வகுத்துள்ளது.
நான்கு ஆண்டுகளுக்கு முன், 'இஸ்ரோ' முன்னாள் தலைவர் கஸ்துாரி ரங்கன் தலைமையில், பல்வேறு துறைகளைச் சார்ந்த, 12 பேர் அடங்கிய நிபுணர் குழுவை அமைத்து, மத்திய அரசு அதற்கான பணியைத் துவங்கியது.
அக்குழுவினர், நம் நாட்டில் பெரும் நகரங்கள் முதல், குக்கிராமங்கள் வரை பல்வேறு தரப்பட்ட, 2.50 லட்சம் பேரிடம் கருத்துகளைச் சேகரித்தனர். அதன் பின், அவற்றை கொள்கை முன்வரைவாகத் தயார் செய்து, நாட்டு மக்கள் மற்றும் கல்வியாளர்கள் பார்வைக்கு முன்வைத்தனர்.
ஜாதி பெயரால் திசை திருப்பும் போராளிகள்! கவிஞர் தாமரை சாட்டை
பாலியல் பிரச்னைகளை கூட பிராமண எதிர்ப்பாக திசை திருப்பும் போலி போராளிகளை தோல் உரிக்க வந்துவிட்டார் கவிஞர் தாமரை.
பாலியல் வன்கொடுமைகளும் பக்கம் பார்த்து பேசுதலும்! என்ற தலைப்பில் தாமரை கொட்டித் தீர்த்த குமுறல்களில் இருந்து சில பகுதிகள் இங்கே...
சில நாட்களாக பெண்களின் மீதான பாலியல் சீண்டல் மீண்டும் பேசுபொருள் ஆகியிருக்கிறது.
பாரம்பரியம் மிக்கதாக சமூகத்தில் உயர்படியில் இருப்பதாக தோற்றம் கொண்ட பள்ளி அசிங்கப்பட்டு நிற்கிறது. ராசகோபாலன் சிறையில். எவ்வளவு வேகமான நடவடிக்கை. வரவேற்க வேண்டும். கல்வி அமைச்சருக்கும் காவல் துறைக்கும் பாராட்டுகள். அப்படியே கொஞ்சம் திரும்பி பார்ப்போமா.