லட்ச தீவில் மத்திய அரசின் மாற்றங்களை அப்பகுதி மக்கள் எதிர்க்கவில்லை- ஆட்சியர் பேட்டி
கேரளாவின் கொச்சியில் லட்சதீவு ஆட்சியர் ஆஸ்கர் அலி பேட்டி அளித்தார். லட்சதீவை எதிர்காலத்தில் மொரீஷியஸ், மாலத்தீவுபோல நவீனமயமாக்க மத்திய அரசு இந்த மாற்றங்களை கொண்டுவந்துள்ளது.
இதனை இந்த தீவுகளில் வாழும் குடிமக்கள் யாரும் எதிர்க்கவில்லை. ஆனால் அரசியல் உள்நோக்கத்துடன் சிலர் இதனை எதிர்த்து வருகின்றனர் என்றுள்ளார்.
தாத்ரா மற்றும் நகர் ஹவேலி, டாமன் டையூ யூனியன் பிரதேசத்தின் துணை நிலை கவர்னராக இருப்பவர் பிரபுல் படேல்.
லட்சத்தீவின் நிர்வாக பொறுப்பும் இவருக்கு கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது. அவர் மாட்டிறைச்சிக்கு தடை, மது விடுதிகளுக்கு அனுமதி, வளர்ச்சிக்கு நிலத்தை எடுத்துக்கொள்ளும் வரைவு சட்டம், குண்டர் சட்டம் அமல் போன்ற நடவடிக்கைகளை லட்சத்தீவில் எடுத்தார்.
இது கடும் விமர்சனத்துக்குள்ளாகியிருக்கிறது.
இது குறித்து காங்., எம்.பி., ராகுல், பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது: 'லட்சத்தீவின் நிர்வாகி பிரபுல் படேல் அறிவித்துள்ள மக்கள் விரோத கொள்கைகளால் அத்தீவு மக்களின் எதிர்காலம் அச்சுறுத்தலுக்குள்ளாகியிருக்கிறது.
மக்கள் பிரதிநிதிகளிடமோ அல்லது பொதுமக்களிடமோ முறையாக ஆலோசிக்காமல் பெரும் மாற்றங்களை முன்வைத்துள்ளார். இந்த தன்னிச்சையான நடவடிக்கைகளுக்கு எதிராக லட்சத்தீவு மக்கள் போராடுகின்றனர்.
இரண்டு குழந்தைகளுக்குமேல் பெற்றவர்களை தேர்தலில் தகுதி நீக்கம் செய்யும் பஞ்சாயத்து ஒழுங்குமுறை வரைவில் உள்ள விதி அப்பட்டமான ஜனநாயக விரோதம்.
மேலும் குண்டர் சட்டம், லட்சத்தீவு விலங்குகள் பாதுகாப்பு ஒழுங்குமுறை, மது விற்பனை மீதான கட்டுப்பாடுகளை நீக்குதல் போன்றவை உள்ளூர் சமூகத்தின் கலாச்சார, மத இழை மீதான திட்டமிட்ட தாக்குதல்.
தயவுசெய்து இந்த விஷயத்தில் தலையிட்டு மேற்கூறிய உத்தரவுகள் திரும்பப் பெறப்படுவதை செய்யும்படி உங்களை கேட்டுக்கொள்கிறேன்'. இவ்வாறு ராகுல் பிரதமருக்கு கடிதம் எழுதி இருந்தார்.
இந்நிலையில் தற்போது லட்சதீவு ஆட்சியர் ஆஸ்கர் அலி கேரளாவின் கொச்சியில் இதுகுறித்துப் பத்திரிகையாளர் சந்திப்பில் பேட்டி அளித்தார். திட்டமிட்ட தவறான தகவல்களைப் பரப்பும் பிரசாரத்தை இன்று பலர் தூண்டி வருகின்றனர்.
லட்சதீவை எதிர்காலத்தில் மொரீஷியஸ், மாலத்தீவுபோல நவீனமயமாக்க மத்திய அரசு இந்த மாற்றங்களை கொண்டுவந்துள்ளது. இதனை இந்த தீவுகளில் வாழும் குடிமக்கள் யாரும் எதிர்க்கவில்லை. ஆனால் அரசியல் உள்நோக்கத்துடன் சிலர் இதனை எதிர்த்து வருகின்றனர் என்றுள்ளார்.
தினமலர்
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
COVID 19 தடுப்பூசி போட்டால் எனக்கு #கொரோனா_வராதா ? #வரலாம்! வாய்ப்புகள் உண்டு!
அப்புறம் ஏன் சார் நான் ஊசி போடணும் ??
இதை படியுங்கள்!
#கொரோனா பாதிக்கப்பட்ட 10000 நபர்களின் CT ஸ்கேன்ஐ பார்த்த பொழுது, ஏதேனும் ஒரு டோஸ் தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்களுக்கு, எத்தனை இணை நோய் (BP, Diabetes, obesity ) இருப்பினும் அவர்களின் நுரைஈரல் பாதிப்பு அதிக பட்சம் 5 -10 % மட்டுமே.
ஒரு டோஸ் தடுப்பூசி கூட போடாதவர்களே oxygen bed மற்றும் ICU அட்மிஷன் தேவைபடும் அளவிற்கு செல்கிறார்கள். தடுப்பூசி போட்ட ஒருவர் கூட oxygen தேவைபடும் அளவிற்கு பாதிக்கப்படவில்லை. Apollo மருத்துவமணியின் சமீபத்திய ஆய்வும் அதையே சொல்கிறது. நீங்கள் புரிந்து கொள்ள வேண்டியது இதுவே !
முனைவர் கமல.செல்வராஜ், அருமனை, கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: நம் நாட்டில், 34 ஆண்டுகளுக்குப் பின், தேசிய கல்விக் கொள்கையை மத்திய அரசு வகுத்துள்ளது.
நான்கு ஆண்டுகளுக்கு முன், 'இஸ்ரோ' முன்னாள் தலைவர் கஸ்துாரி ரங்கன் தலைமையில், பல்வேறு துறைகளைச் சார்ந்த, 12 பேர் அடங்கிய நிபுணர் குழுவை அமைத்து, மத்திய அரசு அதற்கான பணியைத் துவங்கியது.
அக்குழுவினர், நம் நாட்டில் பெரும் நகரங்கள் முதல், குக்கிராமங்கள் வரை பல்வேறு தரப்பட்ட, 2.50 லட்சம் பேரிடம் கருத்துகளைச் சேகரித்தனர். அதன் பின், அவற்றை கொள்கை முன்வரைவாகத் தயார் செய்து, நாட்டு மக்கள் மற்றும் கல்வியாளர்கள் பார்வைக்கு முன்வைத்தனர்.
ஜாதி பெயரால் திசை திருப்பும் போராளிகள்! கவிஞர் தாமரை சாட்டை
பாலியல் பிரச்னைகளை கூட பிராமண எதிர்ப்பாக திசை திருப்பும் போலி போராளிகளை தோல் உரிக்க வந்துவிட்டார் கவிஞர் தாமரை.
பாலியல் வன்கொடுமைகளும் பக்கம் பார்த்து பேசுதலும்! என்ற தலைப்பில் தாமரை கொட்டித் தீர்த்த குமுறல்களில் இருந்து சில பகுதிகள் இங்கே...
சில நாட்களாக பெண்களின் மீதான பாலியல் சீண்டல் மீண்டும் பேசுபொருள் ஆகியிருக்கிறது.
பாரம்பரியம் மிக்கதாக சமூகத்தில் உயர்படியில் இருப்பதாக தோற்றம் கொண்ட பள்ளி அசிங்கப்பட்டு நிற்கிறது. ராசகோபாலன் சிறையில். எவ்வளவு வேகமான நடவடிக்கை. வரவேற்க வேண்டும். கல்வி அமைச்சருக்கும் காவல் துறைக்கும் பாராட்டுகள். அப்படியே கொஞ்சம் திரும்பி பார்ப்போமா.