#பரிவு
முதல் அலையின் போது நண்பர் ஒருவர் ஸ்டான்லி #COVID பிரிவில் அனுமதிக்கப் பட்டிருந்தார். தனிமை, மவேற்று மனிதர்கள், கவச உடை அணிந்த பணியாளர்கள் என புதியச் சூழலைக் கண்டு கடுமையாக பதட்டமாகி ரத்த அழுத்தம் அதிகமாகி விட்டது. தலைமை டாக்டர், நண்பரின் உறவினர் யாரையாவது உள்ளே சென்று
உடன் இருந்து தைரியம் சொல்லச் சொன்னார். PPE kit கூட தருவதாக சொல்லி இருக்கிறார். தாய், தந்தை வயதானவர்கள் என்பதால் அவர்களுக்கு அனுமதி இல்லை. சகோதரன் ஏதோ காரணம் சொல்லி விட்டான். மனைவியை உள்ளே செல்ல அவரது பெற்றோர்கள் அனுமதிக்கவில்லை. நண்பர்கள் சிலர் துணிந்தபோதும் முயற்சி கைகூடவில்லை.
இறுதியில் யாருமே நேரில் சென்று பாராமலேயே, தனிமையில் அவன் இறந்து விட்டான்.
இன்று தொலைக்காட்சியில் முதல்வர் @mkstalin PPE Kit அணிந்து கொண்டு #COVID வார்டுக்கு செல்லும் காட்சியைப் பார்த்த நண்பன் இந்த நிகழ்வை நினைவுபடுத்தி குறுஞ்செய்தி அனுப்பி இருந்தான்.
முதல்வர் ஸ்டாலினுக்கு 69
வயது. அவருக்கும் மனைவி, மகன், மகள், பேரன்,பேத்திகள் என அன்பான குடும்பம் உண்டு. அதுபோக ரத்த உறவில்லாத எங்களைப் போன்ற பல லட்சம் சொந்தங்கள் உண்டு. நீண்ட நெடுங்காலம் உழைத்துப் பெற்ற முதலமைச்சர் எனும் பொறுப்பு கிடைத்து 23 நாட்கள்தான் ஆகிறது. ஆனாலும், இன்று மருத்துவமனையில் அவர் காட்டிய
அக்கறை, எடுத்த ரிஸ்க்கை நண்பன் 'தீரம்' என்றான். நான் அதை பரிவு என்பேன்.
மேயர் ஆன காலத்தில் இருந்தே, யார் உயிருக்காக போராடினாலும் அவர் பதறிப் போய் உதவிகள் செய்வார். யார் மரணம் அடைந்தாலும் தவறாமல் நேரில் சென்று ஆறுதல் சொல்வார். அவரது அரசியல் எதிரிகள் கூட பாராட்டும் சிறப்பான பண்பு
அது. இன்று முதலமைச்சர் ஆனபிறகும் அந்தப் பண்புநலன் மாறாமல் கூடுதல் அக்கறையோடு, மேலும் பரிவோடு நடந்து கொண்டதைக் கண்டு நெகிழ்ந்தேன்.
வாழ்க்கைப் பாதை என்பது நமது முன்னோடிகள் நடந்து சென்ற கால்தடமே! இன்று அந்தப் பாதையில் நான் ஓர் அற்புதமான நிழல்மரத்தைக் கண்டேன். பெருமிதமாக உள்ளது. 🙏
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
திரியின் இரண்டாவது, மூன்றாவது ட்வீட்லேயே ராஜகோபாலனை ரிலீஸ் பண்ணிட்டாங்க. அவர் குற்றம் செய்திருந்தால் நிச்சயம் தண்டனை பெறுவார் எனும் நம்பிக்கையை கூட வாழ விடலை. இதுதான் நான் சொல்லும் நியாயமற்ற ஒப்பீடு. நாம நிற்க வேண்டியது victim பக்கம் எனில், ஒற்றைக் குரலாக பள்ளிக் குழந்தைகள்
பக்கம் நிற்க வேண்டாமா? வழக்கு விசாரணையில் இருக்கும்போதே ஜட்ஜ்மெண்ட் தருவதும், விசாரணைக்கே வராத வழக்கை உடன் ஒப்பிட்டு பேசுவதும் எந்த விதத்தில் இந்தப் பிள்ளைகளுக்கு உதவும்?
மைனர் குழந்தைகளின் மீதான வன்கொடுமையும், பெண்கள் மீதான வன்கொடுமையும் வெவ்வேறு. தனிதனி குற்றங்கள், சட்டங்கள்.
அழக்கூட தெரியாத குழந்தைகளை பாதுகாப்பதுதான் முன்னுரிமை. குடிச்சுட்டு பஸ் ஓட்டுறவனும், குடிபோதையில் பைக் ஓட்டுறவனும் ஒரே குற்றத்தை செய்யலை.
இந்த நேரத்தில் மற்ற விஷயங்களைப் பேசும்போது மேலும், மேலும் பல தரப்பு வாதங்கள் வந்து குவிந்து மாணவிகளுக்கு நடந்த வன்கொடுமை மீதான கவனத்தை
ஒரு திட்டம் : உங்கள் கருத்துகளை சொல்லுங்க.
வீட்டுக்கே வந்து ப்ரஷ் காய்கறிகளை தரும் வண்டி. 1. இது அந்தந்தப் பகுதி / ஊர் கோ.ஆப் சொசைட்டி மூலம் இயக்கப்படும். 2. கொள்முதலை நேரடியாக விவசாயிகளிடம் வாங்க வேண்டும். (பால் சொசைட்டி போல). 3. சுத்தம் செய்வது, தரம் பிரிப்பது, எடை & பேக்கிங்
சுய உதவிக்குழுக்கள் நியாயமான கூலியில் செய்து தருவார்கள். 4. ஏற்கனவே பதிவு செய்து, ஒரு மாதத்துக்கான தொகையை முன்கூட்டியே கட்டி இருப்பவர்கள், APP மூலம் அன்றைய தேவையை ஆர்டர் செய்யலாம். 5. குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட இடத்துக்கு வண்டி வரும்போது, app notification வரும். போய்
நமது ஆர்டரை எடை பரிசோதனை செய்து பெற்றுக் கொள்ளலாம். 6. இதில் முக்கியமான விஷயம் : காய்கறிகளுக்கு ஃபிக்ஸட் விலைதான். (பால் பாக்கெட் போல).
உதாரணத்துக்கு தக்காளி எப்போதுமே கிலோ 25 ரூபாய்தான். மார்கெட்லே 10 ரூபாய்க்கு கிடைத்தாலும் 25 தான்.. 80 ரூபாய்க்கு ஏறினாலும் ரூ 25 தான்.
இந்த
இதுக்கு பதில் சொல்லுவோம். 1. சாக்கடை, கக்கூஸ் போன்ற அடிப்படை வசதிகளை மாநிலத் தலைநகரின் மையப் பகுதியில் கூட சரியாக இல்லை. இதைச் செய்ய வேண்டிய மாநகராட்சியை 10 ஆண்டுகளாக நடத்தியது யார்? 2. 10 ஆண்டுகளாக அதிமுக எம்.எல்.ஏக்கள் உள்ள தூத்துக்குடி, சேலம், ஈரோடு மாநகராட்சித் தொகுதிகளில்
சாக்கடை, கக்கூஸ் வசதிகள் அமோகமாக உள்ளனவா? 3. கோவையிலேயே தொண்டாமுத்தூர் தொகுதிக்கு இணையாக பக்கத்தில் உள்ள தொகுதிகளில் வசதிகள் உள்ளனவா? 4. எதிர்கட்சி எம்.எல்.ஏக்களை விட அந்தப் பகுதியின் ஆளும்கட்சி வட்டச் செயலாளருக்கு அதிக அதிகாரம் உண்டு என்பதை ஊர் அறியும்தானே? 4. தொடர்ந்து திமுக
வுக்கு ஓட்டுப் போட்ட சேப்பாக்கம் தொகுதி மக்களுக்கு, இந்த சீர்கேடுகளுக்கான காரணம் அதிமுகதான் என்பது தெரிந்துதானே, மாபெரும் வித்தியாசத்தில் ஒரு புதுமுக வேட்பாளர் @Udhaystalin ஐ வெற்றி பெற வைக்கின்றனர்? 5. பேரிடர் காலத்தில் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள ஒவ்வொருவரும் பாடுபடும்போது
#சேலம்விஜய்
நீங்கள் ஜூனியர் விகடனின் அட்டைப்படப் புகைப்படத்துக்காகவே புத்தகம் வாங்கியிருந்தால் அது அநேகமாக தம்பி விஜய் எடுத்தப் படமாகத்தான் இருக்கும். எளிய மக்களின் உணர்வுகளை உறைய வைப்பதில் மன்னன். டெங்கு காய்ச்சலை வெறும் மர்மக்காய்ச்சல் என எடப்பாடி அரசு பதிவு செய்த காலத்தில்
தர்மபுரியில் இறந்த குழந்தையை ஒரு தாய் கையில் வைத்துக் கொண்டு கதறி அழும் படத்தை விஜய் எடுத்ததும், அது ஜூனியர் விகடன் அட்டைப்படமாக வந்து, சட்டப்பேரவை அல்லோகலப்பட்டது வரலாறு. அதன்பிறகுதான் சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு டெங்கு கொசுக்கள் ஒழிக்கப்படும் நிலை உருவானது. இதுதான்
புகைப்படத்தின் மேஜிக். இந்த அற்புதத்தை நிகழ்த்தும் கலைஞர்கள் கடைசிவரை நம் கவனத்துக்கு வரவே மாட்டார்கள் என்பதுதான் பெரும் சோகம். சேலம் தாண்டி எந்த ஊருக்குப் போனாலும் அவனுக்கு நான் போன் செய்தாக வேண்டும் என்பது எழுதப்படாத சட்டம். கையில் ஏதேனும் ஒரு உணவோடு பைபாஸ் ரோடில் நிற்பான்.
உயிர் வாழ்வது ஒவ்வொருவரின் உரிமை. உதவி செய்வது அனைவரின் கடமை. இப்படியொரு பேரிடர் காலத்தில் "உழக்கினில் கிழக்கு மேற்கு" பார்க்கும் மனப்பான்மை தவறு. கேட்கும் எல்லோருக்கும் எல்லா மருத்துவ உதவிகளையும் செய்ய முடியாமல், குற்ற உணர்வில் மனம் குமைந்து கொண்டு இருக்கிறோம். கண் முன்னே பல
உயிர்கள் அநியாயமாக போவதைக் கண்டு மனம் சமநிலை இழக்கிறது. தினமும் பல மரணங்களைக் கண்ட பிறகும், துணிந்து பணியாற்றும் மருத்துவர்களையும், பணியாளர்களையும் கடவுளாகக் காணத் தோன்றுகிறது. அவர்கள் முன் வரும் நோயாளிகளில் யாருக்கு மருத்துவம் செய்யணும், செய்யக்கூடாது என அறிவுரை சொல்ல முடியுமா?
நாம் அனைவரும் அறிந்த ஒரு பெண் உயிர் அச்சம் கொண்டு உதவி கேட்கும் போது, நம் அனைவரின் மனங்களும் குவிந்து ஆறுதல் சொல்ல வேண்டாமா? அது மட்டுந்தானே நம்மால் செய்ய இயலும்? இத்தனைக்கும் அவருக்கு அந்த ஆறுதலும், நம்பிக்கையும் மட்டுந்தான் தரப்பட்டது. ஒருவேளை நடுநிசியில் அவர் ஒரு ஆக்சிஜன் வசதி
#KVAnand
சுமார்15 ஆண்டுகளுக்கு முன், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் தனது மாநில மாநாட்டை திருவண்ணாமலையில் நடத்தியது. அதற்கு வரவேற்புக்குழுத் தலைவராக என்னைத் தேர்ந்தெடுத்து இருந்தனர். அதில் கலந்து கொள்ள பல திரைப்பிரபலங்களை அழைத்திருந்தோம். பாலுமகேந்திரா சார் ஒரு வாரம்
எங்களுடனே தங்கி கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுமாறு நண்பர் பவா செல்லதுரை பலருக்கும் போஸ்ட் கார்ட் அனுப்பி இருந்தார். அது வழக்கமான ஒன்று. யாரும் அதை மதித்து வரப் போவதில்லை. ஆனால், கே.வி.ஆனந்த் வந்தார்.
நிகழ்ச்சி நடந்த எங்கள் டேனிஷ் பள்ளி வாசல் கேட்டில் தோளில்
பையை மாட்டிக் கொண்டு ஒரு கட்டையான உருவம் நின்று கொண்டிருந்ததைக் கண்ட பவா, அவர் அருகில் சென்று யார் சார் நீங்க? யாரை பார்க்கணும்? பாவம்.. ரொம்ப நேரமா நின்னுகிட்டு இருக்கீங்க? என கேட்க, என் பேர் கே.வி. ஆனந்த் சார்., இங்கே பவா செல்லதுரை என்பரை பார்க்கணும்னு கையில் இருந்த தபால்