நமது நன்றிக் காணிக்கை!
-------------------------------------
திராவிட சமுதாயத்தின் பேராயுதமான தந்தை பெரியார் அவர்கள், தமது அறிவுப் பட்டறையில் வார்த்தெடுத்துத் தந்த போராயுதம்தான் இன்று (1.6.2021) 87 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் ‘விடுதலை' நாளேடு என்ற ஏவுகணை! #viduthalai87
இந்த கரோனா தொற்று காலத்தில் பல பெரிய நாளேடுகளும் தவித்து திகைத்த நேரத்தில், தொய் வின்றி தனது அறிவுப் போரை நாளும் தொடர்ந்த வாளேடு இந்த நாளேடு - ‘விடுதலை!' #viduthalai87
அதற்காக ஆதரவுக்கரம் நீட்டி, புது உத்தியாம் பி.டி.எஃப். மூலம் பல லட்ச வாசகர்களை ஈர்த்து, புது வகைப் பாய்ச்சலை ஏற்படுத்திடக் காரணமான திராவிட இயக்க உறவுகளுக்கும், புதிய வரவுகளுக்கும் எமது தலைதாழ்ந்த நன்றியை உரித்தாக்குகிறோம்.
‘‘திராவிடம் வெல்லும் - நாளைய வரலாறு இதைச் சொல்லும்'' என்ற முழக்கத்தினை செயல் படுத்தி - பொதுத் தேர்தல் நேரத்திலும் அது வென்றது!
அதில் விடுதலையின் மறக்க முடியாதது! #viduthalai87
ஆயிரம் மேடு பள்ளங்களும், வளைவுகளும், சுளிவுகளும், ஆங்காங்கே இருந்தாலும், வற்றாத ஜீவ நதியாக ஓடி, அறிவுத் தாகம் தீர்த்து, அளப்பரிய அறிவு விளைச்சலுக்கு நீர் பாய்ச்சி கதிர்களை களத்து மேட்டிற்குக் கொண்டு வருவதற்குக் காரணமான வாசகர்களே, கடமையாற்றும் ‘விடுதலை' பணித் தோழர்களே,
உங்கள் உழைப்புக்கும், உற்சாகத்திற்கும் எப்படி நன்றியைக் கூறுவது? 59 ஆண்டு அனுபவத்தில், பல புதிய பரிமாணங்களுக்குக் காரணமான அனைவருக்கும் நன்றி! நன்றி!!
‘விடுதலை'யின்றேல் எவரே வாழ்வர்?
‘விடுதலை' தொண்டால் எவரே தாழ்வர்?
உயர்வால், உயர்வீர்! #viduthalai87@viduthalainews
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
இன்று (ஜூன் 3 - 2021) ‘மானமிகு சுயமரியாதைக்காரன்’ என்று தன்னை ஒரு வரியில் விமர்சித்த முத்தமிழ் வித்தகர் கலைஞரின் 97ஆம் ஆண்டு பிறந்த நாள் பெரு விழா! #HBDKalaignar98
கரோனா தொற்று பரவலான பாதிப்பை ஏற்படுத்தியுள்ள போதும், அடக்கத்தோடு ஆங்காங்கே உணர்வுப் பூர்வமாகக் கொண்டாடப்படுகிறது - முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க!
கலைஞர் உருவத்தால் மறைந்தாலும், உணர்வுடன் திராவிட இனத்தோடு என்றும் வாழ்பவர். #HBDKalaignar98
தந்தை பெரியாரின் ‘ஈரோட்டுக் குருகுலம்‘ அறிஞர் அண்ணாவின் காஞ்சி அரசியல் பள்ளி, அவர்தம் உயிரினும் மேலான உடன்பிறப்புகளின் வற்றாத பாச மழை.
இவைகளால், கொள்கையால், உரிமைப் போராட்டமாய் என்றும் திராவிடத்தின் திசை மாறாமல் நடத்திச் செல்லும் கழகக் கலங்கரை வெளிச்சம் அவர்!
ஏழு பேர் விடுதலை சட்ட நிலை என்ன?
குடியரசு தலைவர் அளவுக்குச் செல்லாமலேயே அரசமைப்புச் சட்டம் 161 பிரிவின்கீழ் மாநில அரசே விடுதலை செய்ய சகல அதிகாரமும் உண்டு! @mkstalin@CMOTamilnadu
பேரறிவாளன் உள்ளிட்ட எழுவர் - ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டவர்கள் - 30 ஆண்டுகளுக்குமேல் சிறைத் தண்டனைக் கொடுமையை அனுபவித்துவிட்ட நிலையில், அவர்களை விடுதலை செய்வது என்று ஜெயலலிதா அவர்கள் முதலமைச்சராக இருந்தபோது கொள்கை முடிவு எடுத்த நிலையில்,
தெளிவாக இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 161 ஆம் பிரிவுப்படியே மாநில அரசுக்கு (அமைச்சரவைக்கு) உள்ள பரந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி செயல்பட்டிருந்தால், இத்தனை காலதாமதமும், தொடர் குழப்பங்களும் அதன் காரணமாக தாமதிக்கப்பட்ட நீதி, மறுக்கப்பட்ட நீதியாகும் அவலமும் உருவாகி இருக்காது.
சரியாக ஒரு நூறு ஆண்டுகளுக்குமுன் பார்ப்பனரல்லாத திராவிட இளைஞர்கள் - ‘‘பஞ்சம, சூத்திர'' - ஒடுக்கப்பட்ட சமூக இளைஞர்களை மனுவின் கல்வி மறுப்பு தீக்குழியினின்று காப்பாற்றி, பெருமை வாய்ந்த (சென்னை) மாநிலக் கல்லூரி- ‘பிரசிடென்சி காலேஜ்' (1/3)
(உயர்ஜாதியினரும், மேல்தட்டு வர்க்கத்தினரும், வெள்ளைக்காரரும் மட்டுமே கல்வி பயில உரிய கல்விக் கூடமாக இருந்த மாநிலக் கல்லூரி) - திராவிடர் ஆட்சியான, பனகால் அரசர் தலைமையில் அமைந்த ஆட்சியில், பார்ப்பனரல்லாத மாணவர்களைச் சேர்க்க - தனிக் கமிட்டி அமைத்து, (2/3)
அதன் கதவுகளைத் திறந்ததோடு, ஒடுக்கப்பட்ட சமூக மாணவர்களின் கல்விக் கண்ணையும் திறந்த - ஆணை போடப்பட்டு செயலுறு கொண்ட நாள் - இந்நாள், இனிய நாள்!
திராவிடத்தால்தான் எழுந்தோம், புரிகிறதா? (3/3)
ஓய்வு வயதை உயர்த்தியும், வெளி மாநிலத்தவருக்கு வாய்ப்பளித்தும்
தமிழக இளைஞர்களின் வேலை வாய்ப்பில் மண்ணை அள்ளிப் போடுவதா?
தமிழக இளைஞர்களே, நடக்கவிருக்கும் சட்டப் பேரவை தேர்தலில்
உதயசூரியனை உதிக்கச் செய்வீர்!
உதவாக்கரைகளை வீட்டுக்கு அனுப்புவீர்!!
கடந்த சில ஆண்டுகளாகவே தமிழ்நாட்டில் நடைபெறும் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க.அரசின் நிதிநிலை மிகவும் மோசமாகியுள்ளதைப் பற்றிக் கவலைப்படாமல் ஏராளமான கடன்வாங்கி, இப்போது அளிக்கப்பட்ட வரவு-செலவுத் திட்டத்தின்படி இக்கடன் தொகை ரூ.5லட்சத்து 70ஆயிரம் கோடி ஆக உயர்ந்துள்ளது.
பிறக்கப் போகும் ஒவ்வொரு குழந்தைக்கும்கூட ரூ.63 ஆயிரம் கடனோடு பிறக்கும் ‘கீர்த்தியை’ அதன் தலையில் கிரீடமாகச் சூட்டியுள்ளது அதிமுக அரசு.
இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சியின் செயலாளராக, மத்தியக் குழு உறுப்பினராக, ‘ஜனசக்தி'யின் ஆசிரியராக, நாடாளுமன்ற உறுப்பினராக, தலைசிறந்த பேச்சாளராக, எழுத்தாளராக, நூலாசிரியராகப் பரிணமித்தவர் தோழர் தா.பா.
உடலால் தோழர் தா.பா. மறைந்தாலும், அவரின் உரைவீச்சு என்னும் சங்கநாதம் - முழக்கம் நம் காதுகளில் ஒலித்துக் கொண்டே இருக்கும். அவரது பிரிவு - இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சிக்கு எவ்வளவு துயரமோ, அதே அளவு துயரத்தை திராவிடர் கழகம் வெளிப்படுத்துகிறது.
தோழர் தா.பாண்டியன் அவர்களின் அளப்பரிய பொதுத் தொண்டுக்குக் கழகத்தின் சார்பில் வீர வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
தந்தை பெரியார் நூற்றாண்டு விழாவில் பல முக்கிய ஊர்களில் எல்லாம் பங்கேற்று அவர் ஆற்றிய உரைகள் ‘‘சமுதாய விஞ்ஞானி பெரியார்'' எனும் நூலாக நாம் வெளியிட்டோம் - பல பதிப்புகளாக வெளிவந்துள்ளன.
எம்.ஜி.ஆர். முதலமைச்சராக இருந்தபோது, அவரால் கொண்டுவரப்பட்ட வருமான வரம்பு ஆணையை எதிர்த்து திராவிடர் கழகம் மேற்கொண்ட அனைத்து மாநாடுகள் - நிகழ்ச்சிகள் அனைத்திலும் பங்கேற்ற சமூகநீதியாளர் அவர்!
கடந்த ஆண்டு தந்தை பெரியார் நினைவுநாளில் (24.12.2020) அவருக்குப் ‘‘பெரியார் விருது'' அளித்து பெருமகிழ்ச்சி கொண்டது திராவிடர் கழகம். உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையிலும், கடைசிவரையில் அமர்ந்து, ‘இந்த விருதுக்கு நிகர் வேறு ஒன்றும்இல்லை!' என்று மனந்திறந்து நெகிழ்ச்சியுரையாற்றினார்.