இன்று (ஜூன் 3 - 2021) ‘மானமிகு சுயமரியாதைக்காரன்’ என்று தன்னை ஒரு வரியில் விமர்சித்த முத்தமிழ் வித்தகர் கலைஞரின் 97ஆம் ஆண்டு பிறந்த நாள் பெரு விழா! #HBDKalaignar98
கரோனா தொற்று பரவலான பாதிப்பை ஏற்படுத்தியுள்ள போதும், அடக்கத்தோடு ஆங்காங்கே உணர்வுப் பூர்வமாகக் கொண்டாடப்படுகிறது - முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க!
கலைஞர் உருவத்தால் மறைந்தாலும், உணர்வுடன் திராவிட இனத்தோடு என்றும் வாழ்பவர். #HBDKalaignar98
தந்தை பெரியாரின் ‘ஈரோட்டுக் குருகுலம்‘ அறிஞர் அண்ணாவின் காஞ்சி அரசியல் பள்ளி, அவர்தம் உயிரினும் மேலான உடன்பிறப்புகளின் வற்றாத பாச மழை.
இவைகளால், கொள்கையால், உரிமைப் போராட்டமாய் என்றும் திராவிடத்தின் திசை மாறாமல் நடத்திச் செல்லும் கழகக் கலங்கரை வெளிச்சம் அவர்!
அவர் உடலால் மறைந்தவுடன், சிலர் தமிழ்நாட்டில் ‘வெற்றிடம்‘ என்று பார்வை தடுமாறி பதவியில் அமரத் துடித்தவர்களைப் பக்குவமாக ஒதுக்கியதோடு, இது வெற்றிடம் அல்ல; மற்றவர் வந்து தெரிந்து, தெளிந்து செல்ல வேண்டிய ‘கற்றிடம்‘. #HBDKalaignar98
தமிழ்நாடு கற்றிடம் என்பதைக் காட்டும் வண்ணம் கலைஞரின் கழகக் களத்தில் பயிற்சி அளிக்கப்பட்ட நம் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கலைஞரின் உழைப்பை, ஆளுமை ஆற்றலை அப்படியே பெற்று, இன்று அனைவரது பாராட்டையும் பெறுகிறார். #HBDKalaignar98
அடக்கத்திலும், ஆளுமையிலும், அசாதாரண சாதனையிலும் சரித்திரம் படைத்து, அதனையே தனது அர்ப்பணிப்பு மிக்க மலர்வளையமாக்கி, வேதனைகளைச் சாதனைகளாக்கி வென்று காட்டி நாளும் முதலமைச்சர் @mkstalin உயர்ந்து வருகிறார் என்றால், அதன் உண்மைப் பொருள் கலைஞர் வாழுகிறார்; கலைஞர்தான் ஆளுகிறார்.
‘திராவிடம் வெல்லும்‘ - என்றும்! இதை வீழ்த்த நினைப்போர் வீழ்ந்து விட்டார்கள் என்ற வீர வரலாற்றினை எழுதத் தொடங்கிவிட்டார் - 27 நாட்களின் ஆட்சியிலேயே! @mkstalin
இதைவிட, கலைஞரும் கழகமும் திராவிடமும் கடமையும், உரிமையும், வாய்மைப் போரும் எங்களது வெற்றிகளாக நாளும் பளிச்சிடும் என்று காட்டவும், கலைஞருக்கு மாலையாகச் சூட்டவும் வேறு சான்று தேவையா?
ஈரோட்டுக் குருகுலப் பயிற்சி பல தலைமுறைகளைக் களத்தில் இறக்கி, வெற்றி வாகை சூடிடும் வரலாற்றைப் படைத்துக் காட்டும் உறுதியைப் புதுப்பித்துக் கொள்ளும் - அவரது 97ஆம் ஆண்டு பிறந்த நாளில்! #HBDKalaignar98
கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்ற தடுப்பூசி - அரசியல் வியாதிகளை விரட்டி, பொற்கால ஆட்சி பூத்துக் குலுங்கிடும் மாண்பை மன்பதைக்கு உணர்த்திட உறுதி ஏற்போம்! #HBDKalaignar98
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
உச்சநீதிமன்றத்தில் நேற்று (3.6.2021) ஜஸ்டீஸ் U.U. லலித், ஜஸ்டீஸ் வினீத் சரண் ஆகியோரைக் கொண்ட அமர்வு, ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை அளித்துள்ளது.
1/16
ஜனநாயகத்தில்- அரசியல் சட்டம் அளித்துள்ள கருத்துரிமை, எழுத்துரிமை, பேச்சுரிமை என்பதையொட்டி இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள வினோத்துவா என்ற பத்திரிகையாளர், மத்தியில் ஆளும் பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசின் ‘கோவிட்’ என்ற கரோனா தொற்றில் எடுத்துள்ள நிலைப்பாடு பற்றியும், 2/16
கடந்த 2019ஆம் ஆண்டு தேர்தலில் புல்வாமா, பாலாகோட் தீவிரவாதிகளுக்கு எதிரான தாக்குதல் வெற்றியைக் காட்டி வாக்குச் சேகரிக்கப் பயன்படுத்திக் கொண்ட பிரச்சார நடவடிக்கைகள் என விமர்சித்து, 2020 மார்ச் 30ஆம் தேதி (30.3.2020) எழுதப்பட்ட கருத்துகளுக்காக, 3/16
சி.பி.எஸ்.இ. தேர்வை ரத்து செய்து அறிவிக்கும் மத்திய அரசு, ‘நீட்’ தேர்வை ஏன் ரத்து செய்ய மறுக்கிறது?
தமிழ்நாடு அரசு பிளஸ் டூ தேர்வை ரத்து செய்யும் சூழ்ச்சிப் பொறியில் சிக்காமல் மாணவர் நலன், பாதுகாப்பை உறுதி செய்யவேண்டும்!
மத்திய கல்வித் துறை - பிரதமர் மோடி தலைமையில் கரோனா கொடுந்தொற்றின் இரண்டாவது அலையின் வீச்சு அதிகமாக இருப்பதாகக் கூறி, சி.பி.எஸ்.இ. (CBSE) நடத்தும் 12 ஆம் வகுப்புத் தேர்வை இவ்வாண்டு ரத்து செய்வது என்று முடிவு செய்து அறிவித்துள்ளது.
ஆனால், அதே காரணங்கள் வலுவாக இருக்கும் நிலையில், நாடு முழுவதும் மருத்துவப் படிப்புக்கான ‘நீட்’ தேர்வு என்ற நுழைவுத் தேர்வினை ரத்து செய்வதாக அறிவிக்கவில்லை! அதை நடத்தியே தீருவோம் என்று கூறுகிறார்கள்!
நமது நன்றிக் காணிக்கை!
-------------------------------------
திராவிட சமுதாயத்தின் பேராயுதமான தந்தை பெரியார் அவர்கள், தமது அறிவுப் பட்டறையில் வார்த்தெடுத்துத் தந்த போராயுதம்தான் இன்று (1.6.2021) 87 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் ‘விடுதலை' நாளேடு என்ற ஏவுகணை! #viduthalai87
இந்த கரோனா தொற்று காலத்தில் பல பெரிய நாளேடுகளும் தவித்து திகைத்த நேரத்தில், தொய் வின்றி தனது அறிவுப் போரை நாளும் தொடர்ந்த வாளேடு இந்த நாளேடு - ‘விடுதலை!' #viduthalai87
அதற்காக ஆதரவுக்கரம் நீட்டி, புது உத்தியாம் பி.டி.எஃப். மூலம் பல லட்ச வாசகர்களை ஈர்த்து, புது வகைப் பாய்ச்சலை ஏற்படுத்திடக் காரணமான திராவிட இயக்க உறவுகளுக்கும், புதிய வரவுகளுக்கும் எமது தலைதாழ்ந்த நன்றியை உரித்தாக்குகிறோம்.
ஏழு பேர் விடுதலை சட்ட நிலை என்ன?
குடியரசு தலைவர் அளவுக்குச் செல்லாமலேயே அரசமைப்புச் சட்டம் 161 பிரிவின்கீழ் மாநில அரசே விடுதலை செய்ய சகல அதிகாரமும் உண்டு! @mkstalin@CMOTamilnadu
பேரறிவாளன் உள்ளிட்ட எழுவர் - ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டவர்கள் - 30 ஆண்டுகளுக்குமேல் சிறைத் தண்டனைக் கொடுமையை அனுபவித்துவிட்ட நிலையில், அவர்களை விடுதலை செய்வது என்று ஜெயலலிதா அவர்கள் முதலமைச்சராக இருந்தபோது கொள்கை முடிவு எடுத்த நிலையில்,
தெளிவாக இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 161 ஆம் பிரிவுப்படியே மாநில அரசுக்கு (அமைச்சரவைக்கு) உள்ள பரந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி செயல்பட்டிருந்தால், இத்தனை காலதாமதமும், தொடர் குழப்பங்களும் அதன் காரணமாக தாமதிக்கப்பட்ட நீதி, மறுக்கப்பட்ட நீதியாகும் அவலமும் உருவாகி இருக்காது.
சரியாக ஒரு நூறு ஆண்டுகளுக்குமுன் பார்ப்பனரல்லாத திராவிட இளைஞர்கள் - ‘‘பஞ்சம, சூத்திர'' - ஒடுக்கப்பட்ட சமூக இளைஞர்களை மனுவின் கல்வி மறுப்பு தீக்குழியினின்று காப்பாற்றி, பெருமை வாய்ந்த (சென்னை) மாநிலக் கல்லூரி- ‘பிரசிடென்சி காலேஜ்' (1/3)
(உயர்ஜாதியினரும், மேல்தட்டு வர்க்கத்தினரும், வெள்ளைக்காரரும் மட்டுமே கல்வி பயில உரிய கல்விக் கூடமாக இருந்த மாநிலக் கல்லூரி) - திராவிடர் ஆட்சியான, பனகால் அரசர் தலைமையில் அமைந்த ஆட்சியில், பார்ப்பனரல்லாத மாணவர்களைச் சேர்க்க - தனிக் கமிட்டி அமைத்து, (2/3)
அதன் கதவுகளைத் திறந்ததோடு, ஒடுக்கப்பட்ட சமூக மாணவர்களின் கல்விக் கண்ணையும் திறந்த - ஆணை போடப்பட்டு செயலுறு கொண்ட நாள் - இந்நாள், இனிய நாள்!
திராவிடத்தால்தான் எழுந்தோம், புரிகிறதா? (3/3)
ஓய்வு வயதை உயர்த்தியும், வெளி மாநிலத்தவருக்கு வாய்ப்பளித்தும்
தமிழக இளைஞர்களின் வேலை வாய்ப்பில் மண்ணை அள்ளிப் போடுவதா?
தமிழக இளைஞர்களே, நடக்கவிருக்கும் சட்டப் பேரவை தேர்தலில்
உதயசூரியனை உதிக்கச் செய்வீர்!
உதவாக்கரைகளை வீட்டுக்கு அனுப்புவீர்!!
கடந்த சில ஆண்டுகளாகவே தமிழ்நாட்டில் நடைபெறும் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க.அரசின் நிதிநிலை மிகவும் மோசமாகியுள்ளதைப் பற்றிக் கவலைப்படாமல் ஏராளமான கடன்வாங்கி, இப்போது அளிக்கப்பட்ட வரவு-செலவுத் திட்டத்தின்படி இக்கடன் தொகை ரூ.5லட்சத்து 70ஆயிரம் கோடி ஆக உயர்ந்துள்ளது.
பிறக்கப் போகும் ஒவ்வொரு குழந்தைக்கும்கூட ரூ.63 ஆயிரம் கடனோடு பிறக்கும் ‘கீர்த்தியை’ அதன் தலையில் கிரீடமாகச் சூட்டியுள்ளது அதிமுக அரசு.