#தமிழ்நாடு நிதியமைச்சர் என்றால் ஆண்டுக்கு ஒருமுறை #பட்ஜெட் தாக்கல் செய்யவரும் போது கையில் ஒரு பெட்டியுடன் சட்டமன்ற படிக்கட்டில் ஏறுவது போல் காட்சி தருவார். தவிர அவர் குறித்த பெரிய தகவல்கள் ஏதும் வராது . ஏன் செய்தியாளர்கள் சந்திப்பு கூட அரிதினும் அரிது.
ஆனால் நிதியமைச்சக பணி என்பது சாதாரணமானது அல்ல. தமிழ்நாட்டின் தலையெழுத்தை எடுத்துகொண்டால் ஓபிஎஸ் , ஜெயக்குமார் போன்றர்வர்கள் எல்லாம் நிதியமைச்சர்களாக இருந்திருக்கிறார்கள். என்ன ? இத்தனை நாட்களாக. நாலு நல்ல ஐஏஎஸ் அதிகாரிகள் தயவில் தமிழ்நாடு தப்பி வந்திருக்கிறது.
ஆனால் இப்பொழுது தமிழ்நாட்டிற்கு நல்ல காலம் என்றே சொல்லலாம். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் துல்லியமாக ஒரு நபரை பிடித்து போட்டிருக்கிறார். தமிழ்நாடு நிதியமைச்சரின் செயல்பாடுகளை பார்க்கும் போது அவர் மத்திய நிதியமைச்சராக இருப்பதற்கே தகுதியானவராக இருக்கிறார்.
அவர் ஒரு மாநிலத்தின் நிதி நிலைமையை கவனிப்பது உண்மையில் தமிழ்நாட்டிற்கு வலிமை.

சரி ! அவர் ஏன் இத்தனை விமர்சனத்திற்கு உள்ளாகிறார் ?
ஏன் எனில் அவரிடம் பகட்டு இல்லை. வெட்டு ஒன்று துண்டு இரண்டு தான் பேச்சு.
#ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் அவர் கேட்ட கேள்விகளுக்கு நிர்மலா சீதாராமனால் பதில் தரமுடியவில்லை.மாறாக கோவா அமைச்சரையும் #வானதிசீனிவாசன் போன்ற அரைவேக்காடு சங்கிகளையும் வைத்து நிதியமைச்சரை சீண்டிப்பார்க்கிறார். இதையெல்லாம் கடந்து வரும் அளவிற்கு உளவியல் தெரியாதவர் அல்ல நிதியமைச்சர்
வானதியை ஒரு Congential Liar என்று பதில் அளிப்பதின் மூலம் அவர் தனிப்பட்ட வானதிக்கு பதில் தரவில்லை. நான் ஒரு உளவியல் பட்டதாரியாக அந்த வார்த்தையின் ஆழத்தை எண்ணி சிரித்துகொண்டிருக்கிறேன். நிதியமைச்சரின் இந்த சொல்லாடல் ஒட்டுமொத்த சங்கிகளின் டி.என்.ஏ.வையே எள்ளி நகையாடுகிறது.
அடுத்து கோவாவுக்கு ஏதோ இழுக்கை ஏற்படுத்திவிட்டது போல் அம்மாநில மவுன் கோடின்கோ நிதியமைச்சர் பிடிஆர் மன்னிப்பு கேட்கவேண்டும் என்ற எகிறினார். அதனை தனது இடது கையால் சாதரணமாக கையாள்கிறார் நிதியமைச்சர். உனக்கு என்ன பதில் சொல்வது ?
நான் கோவா மக்களுக்கு உனது முட்டாள்தனத்தை வெளிச்சம் போட்டு காட்டுகிறேன் என்று அவர் ஆங்கிலத்தில் வெளியிட்டுள்ள ஒரு செய்தி குறிப்பு #கோவா இளசுகளிடையே டிரெண்டிங்கில் உள்ளது.
"நான் என் மாநிலத்திற்காக பேசவில்லை. கோவாவின் மாநில உரிமைக்காகவும் தான் பேசுகிறேன்" என்பதை மிகத் தெளிவாக குறிப்பிடுகிறார்.

#ஒன்றியஅரசின் கட்டுபாட்டில் மாநில நிதி நிர்வாகம் இருக்கும் வரை மாநிலங்கள் நிச்சயம் தனித்து முன்னேற முடியாது.
எங்கள் நிதிநிர்வாகத்தை ஒன்றிய கட்டுபாட்டில் இருந்து விடுவியுங்கள் என்று அவர் எழுப்பும் கூக்குரல் பற்றி பாமரனும் அறிந்து வைத்திருக்கிறான்.

இந்திய ஒன்றியத்திற்கு அதிக வருவாய் ஈட்டித்தரும் இரண்டாவது பெரிய மாநிலம் தமிழ்நாடு.
இன்னும் கேட்டால் தமிழ்நாடு முதல் மாநிலமாக கூட இருக்க கூடும். நமது மாநிலத்தில் இருக்கும் பல நிறுவனங்களில் நிர்வாக அலுவலகங்கள் மும்பையில் இயங்குவதால் வருவாய் செலவு கணக்குகள் அங்கிருந்து தாக்கல் செய்யப்படுவதால் மகாராஷ்டிராவுக்கு கூடுதல் புள்ளிகள் கிடைத்து முதலிடத்தில் இருக்கிறது.
இப்படி எல்லா வளமும் கொண்ட ஒரு மாநிலத்தின் லகானை ஒன்றிய அரசு பிடித்து வைத்திருப்பது எந்தவிதத்திலும் நாயம் இல்லை. கூட்டாட்சி தத்துவத்தின் படி இயங்கவேண்டும் என்பதை திரும்ப திரும்ப சொல்கிறார் நிதியமைச்சர் @ptrmadurai.
காவிபூனைக்கு யார் மணி கட்டுவது என்று இருந்த இந்த விவகாரத்தை நீண்ட வருடங்களுக்கு பிறகு எழுப்பியிருக்கிறார்.இதே சிந்தனையுடைய பஞ்சாப், மஹாராஷ்டிரா,ஆந்திரா,கேரளா போன்ற மாநிலங்கள் இப்பொழுது விழித்துகொள்ள ஆரம்பித்திருக்கின்றன.

இது மத்திய அரசுக்கு புதிய உதறலை ஏற்படுத்த தொடங்கியுள்ளது.
ஆகவே தான் நிதியமைச்சர் அதிகம் விமர்சிக்கப்படுகிறார்.

காய்த்த மரம் தான் கல்லடி படும். ஒன்றிய அரசு வீசும் கற்களைகொண்டு அழகாக ஒரு மாளிகையை அமைக்கு வித்தை இவருக்கு இருப்பதாக உணர்கிறேன்.

இவர் அதிகம் பேசவில்லை .
அறிவுபூர்வமாகவே பேசுகிறார்.

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with பிடி சாம்பல்

பிடி சாம்பல் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @realtechsiva

11 Apr
#கர்ணன் படம் பார்க்கவில்லை, ஆனால் அது பேசும் கதை தெரியும்.

1995 ம் ஆண்டு ஜூலை மாதத்தில் வீரசிகாமணி என்ற கிராமத்தில் ஒரு பஸ் டிரைவருக்கும் அதில் பயணம் செய்த சில கல்லூரி மாணவர்களுக்கும் ஏற்பட்ட வாய்த் தகராறுதான் மிகப் பெரிய கலவரமான கொடியன்குளம் கலவரத்திற்கு வித்திட்டது.
இத்தனைக்கும் வீரசிகாமணி இருப்பது நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே. கொடியன்குளம் இருப்பதோ தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே. ஒரு மாத காலமாக ஒவ்வொரு ஊராக புகைந்து பரவிக் கொண்டு வந்த சாதித் தீயை அணைக்கத் தவறியது அன்றைய ஜெயலலிதாவின் அதிமுக அரசு.
நெல்லை மாவட்டத்தைப் பொருத்தவரை தேவர் சமூகத்தை சார்ந்தவர்கள் அதிகம், தூத்துக்குடி மாவட்டத்திலோ பட்டியலினத்தவர்கள் அதிகம்.

இந்தக் கலவரத்தில் இருபக்கமும் சேதாரம் அதிகமென்றாலும், தேவர் சமுதாயத்தில் உயிர்ச் சேதம் அதிகமாகவும், பள்ளர் சமுதாயத்தில் பொருட்சேதம் அதிகமாகவும் இருந்தது.
Read 13 tweets
11 Apr
கர்ணன் படம், ஒடுக்கப்பட்டவர்கள் பக்கம் நின்று பார்க்கவைப்பது எல்லாம் சரிதான்...!

ஆனால்
கொடியன்குளம் கலவரம் நடந்தது 1995, அதாவது செல்வி. ஜெயலலிதா ஆட்சிகாலம். படத்தின் கதை ஆரம்பிப்பது 1997, அதாவது கலைஞர் ஆட்சிகாலம்...!

இதையேத்தான் சங்கி சங்கர் தன் முதல்வன் படத்தில் செய்தார்...!
1991ல் சென்னையில் வெட்னெரி சயின்ஸ் படிச்சுட்டுட்டு இருந்த மாஸ்டர் பட்டதாரி இளைஞரை தரகுறைவா பேசிய பஸ் கண்டெக்டர், டிரைவர் இருவரும் அந்த பட்டதாரியை அடிக்கவும் செய்தார்கள்! அது பெரியகலவரமாகி சென்னையே ஸ்தம்பித்தது! அப்போது அதிமுக ஆட்சி.
ஆனா சங்கி சங்கர் படம் எடுத்து சிம்பாலிக்கா கலைஞரை தாக்கினார்..!

1992ல் மே மாதம் ஜெவும் சசியும் ஜலகீரீடை பண்ணியதில் பலர் இறந்தனர்!

அதே 1992ல் ஜூன் மாதத்தில் வாச்சாத்தி போலீஸ் ரேப்!

அதே 1992 நவம்பரில் வந்தவாசி கலவரத்தில் 30 பேத்துக்கு அரிவாள் வெட்டு...!
Read 6 tweets
8 Apr
#ராடிமகன்_நீலம்

தம்பி ஒருவன் அண்ணனை திட்டி வீடியோ போட்டிருக்கானாம். உடனே அதை தூக்கிக் கொண்டு ஊர் ஊராக பரப்பும் வேலையில் இறங்குவோர் கவனத்திற்கு:

இப்போ என்ன அவசரம்?
உங்களுக்கு என்ன தேவையிருக்கு?

இப்படித் தான் தேமுதிக என்ற கட்சியை நம்பி தமிழ்நாடு முழுவதும் .. Image
39 எம்பி தொகுதிகள்,
234 சட்டமன்ற தொகுதிகள்,
12 மாநகராட்சிகள்,
148 நகராட்சிகள்,
385 ஊராட்சி ஒன்றியங்கள்,
520 பேரூராட்சிகள்,
12618 ஊராட்சிகள்
என்று ஆயிரக்கணக்கானோர் தங்கள் கை காசை செலவு செய்து வீதிக்கு வந்தனர்.
கடந்த 2016 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட உங்க ஊர் தேமுதிக வேட்பாளரை இந்த தேர்தலில் எந்த வாக்குச்சாவடியிலாவது பார்த்தீர்களா?

இல்லை என்பதே உங்களில் பெரும்பான்மையோரின் பதிலாக இருக்கும்.

அதே மாதிரி தான் இந்த நாதக நாஜி கும்பலும்.
Read 9 tweets
4 Apr
S.T பாலசுப்பிரமணிய ஆதித்தன் தன் குடும்பம் கள்ளக்கடத்தல் வாயிலாக தங்கம் இந்தியாவுக்கு கடத்திவந்து எவ்வாறு தினத்தந்தி ஆரம்பிக்கப்பட்டது என்று அவர் வாயாலேயே தனது ஃபேஸ்புக் பேஜ் ல் சுயசரிதை அத்தியாயம் 15 இல் (24.5.20 ) கூறுவதைக் கேளுங்கள். :
"சி.பா. ஆதித்தன் சிங்கப்பூரில் சொந்தமாக கப்பல் வணிகம் செய்து வந்த பெரும் தொழில் அதிபர் ஓ. இராமசாமி நாடாரின் மகள் கோவிந்தம்மாளை திருமணம் செய்து இருந்தார். ஓ.ராமசாமி நாடாருக்கு மதுரையை அடுத்த மணச்சை சொந்த ஊர்.சிங்கப்பூரில் கிரிமினல் வழக்கு நடத்தி வந்தார் சி.பா.ஆதித்தன்.
எப்பேர்பட்ட கிரிமினல் குற்றவாளியையும் காப்பாற்றி விடுவதில் சர்வ வல்லமைவர் சி.பா.ஆதித்தன். ஒரு வழக்கில் வென்றால் அவருக்கு ஒரு வீடு சிங்கப்பூரில் வாங்கிக் கொடுத்து விட வேண்டும். இப்படியாக 91 வீடுகளை சி.பா. ஆதித்தன் சிங்கப்பூரில் வாங்கி வைத்து இருந்தார்.
Read 9 tweets
3 Apr
ஒற்றை செங்கல் தகர்த்தெறிந்துவிட்டது..

மோடி அமித்ஷா என்ற மாயபிம்பத்தை தமிழகத்தில் சுக்குநூறாக்கி ஒன்றுமில்லாதாக்கியது..

சூழ்ச்சியை,விலைபேசுதலை, மிரட்டலை அதிகாரத்தை பயன்படுத்தி ரெய்டுவிடுவதை தான் சாணக்கியத்தனம் என ஊடகங்கள் கட்டமைத்ததை,
ஒன்றுமில்லாதாக்கி...
டவுசரை உருவியவிதம் ரசிக்கவைத்தது..
"எய்ம்ஸ்" மருத்துவமனை
என மக்களை ஏமாற்ற நினைத்து இந்தியா முழுதும் அடிக்கல் நாட்டி சாதனையாக பீத்திக்கொண்டதை ஒற்றை செங்கலை உருவியெடுத்து அடித்த விதம் கலைஞரை ஞாபகபடுத்தியது.
பொய்களும் புரட்டும் புராணமும் இங்கே வேகாது என பொட்டில் அடித்தாற்போல் கிண்டலோடு கலந்தடித்து எதிரியை கதிகலங்கும் வைக்கும் திறன் ..
உதயநிதியின் வளர்ச்சிக்கு உதவும்..

மக்களோடு நெருக்கமானால் மட்டுமே சரியான பாதையில் பயணிக்க முடியும் ..
Read 4 tweets
3 Apr
சங்கிகள் அகராதியில்...
போயஸ் தோட்டத்தில் இருந்தது வீடு
நீலாங்கரையில் இருப்பது மட்டும் பங்களா!

அதுல ஒரு சங்கித் தே.ப கேட்குறான்.
ஸ்டாலின் மருமகனின் வருமானம் என்ன? எப்படி இவ்வளவு பெரிய வீடு வாங்கினாருன்னு.

இந்த நாய்களுக்கு செக்கு எதுன்னும் தெரியாது, சிவலிங்கம் எதுன்னும் தெரியாது
எல்லாருமே இவனுங்களை மாதிரி கைபர் கணவாய் வழியே வந்திருப்பதாகவே நினைச்சுப்பானுங்க போல.

போய் முதலில் தேனாம்பேட்டை சண்முக முதலியார் யார் என்றும்,, இன்று சென்னையின் பிரதானப் பகுதிகளில் ஒன்றான ஷெனாய் நகர் நிலத்தை ஏக்கர் கணக்கில் யாரிடமிருந்து அரசு பெற்றது என்றும்,
யாருடைய தந்தை இந்தியன் வங்கியில் மண்டல மேலாளராக இருந்து 90களில் ஓய்வுப் பெற்றார் என்றும், யார் 90களில் அண்ணா பல்கலையில் பி.டெக் பட்டதாரி என்றும், 2000த்தின் தொடக்கத்திலேயே யார் iSoft என்ற தனியார் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் Project Lead என்றும் தெரிஞ்சிக்கிட்டு..
Read 5 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!

:(