ஒரு ஜப்பானிய மன்னன் பலரையும் அணுகி,சுவர்க்கம் - நரகம் என்றால் என்ன என்ற கேட்டுவந்தான். யாரிடமிருந்தும் அவனுக்குச் சரியான பதில் கிடைக்கவில்லை.
மன்னனின் மந்திரி,"ஒரு ஜென் மாஸ்டர் இருக்கிறார்.அனைத்தையும் உணர்ந்தவர்.அவரிடம் சென்று நீங்கள் கேட்டால்,உங்களுக்குத் திருப்தியான பதில் கிடைக்கும்” என்றார். மன்னனும் அந்த ஜென் மாஸ்டரிடம் சென்று தனது வழக்கமான கேள்விகளைக் கேட்டான்.
ஜென் மாஸ்டர் ஒரு நிமிடம் மௌனமாக இருந்தார்.
பின்னர் மன்னனை நோக்கி,"என்ன முட்டாள்தனமான கேள்விகளைக் கேட்கிறாய் நீ! அகம்பாவம் பிடித்தவனே! உன்னைப் போன்ற ஒரு முட்டாளையும் அவலட்சணமானவனையும் நான் பார்த்ததில்லை” என்று வெறுப்புத் தொனிக்கும் குரலில் கூறினார்.
மன்னன் அதிர்ச்சியுற்றான்.அவனிடம் இப்படி யாருமே பேசியதில்லை.
கோபம் உச்சத்திற்கு ஏறியது."அட மடையனே, என்னையா இப்படிச் சொல்கிறாய்” என்று கூவியவாறே தன் வாளை உருவி ஓங்கினான் அரசன். இப்போது ஜென் மாஸ்டர் உரத்தக்குரலில் கூவினார்,"நில்! இது தான் நரகத்திற்கு போகும் வழி. தெரிந்துக் கொண்டாயா?” என்றார்.
அவரது 'நில்' என்ற கம்பீரமான சப்தத்தால்,வாளை ஓங்கிய மன்னன் அப்படியே நின்றான். அவரது பதிலில் இருந்த உண்மையை அறிந்து கொண்டு,அவர் காலில் விழுந்து பணிந்து தன்னை மன்னிக்குமாறு உருக்கமுடன் வேண்டினான்.
"மன்னா! எழுந்திரு! இதுதான் சுவர்க்கத்திற்குப் போகும் வழி!"
என்ன ஆச்சரியம், ஒரு நிமிடத்தில் நரகத்திற்குப் போகும் வழியையும் தெரிந்துகொண்டாய். சுவர்க்கத்திற்குப் போகும் வழியையும் தெரிந்து கொண்டாயே” என்று கூறிய ஜென் மாஸ்டர் அவனை ஆசீர்வதித்தார்.
மன்னனும் மகிழ்ந்து அவரது சீடரானான்.
கோபம் நரகத்திற்கு வழி! பணிவு சுவர்க்கத்திற்கு வழி!
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
மரணத்துக்குப் பின்,தன் தந்தையான சூரியனின் இருப்பிடத்தை அடைந்த கர்ணன் சூரியனிடம்,"தந்தையே! நான் என் நண்பன் துரியோதனனுக்கு, செஞ்சோற்றுக் கடன் தீர்க்க வேண்டுமென்ற நல்லெண்ணத்தில், அவன் பக்கம் போர் புரிந்தேன்.ஆனால் வஞ்சகன் கண்ணன் என்னை வஞ்சித்து வீழ்த்தி விட்டானே!” என்று புலம்பினான்.
அப்போது சூரிய பகவான், "இல்லை கர்ணா! கண்ணனை வஞ்சகன் என்று சொல்லாதே. நீ ஒரு தவறு செய்துவிட்டாய். செஞ்சோற்றுக் கடன் தீர்ப்பது சிறந்த தர்மம் என்பதில் சந்தேகமே இல்லை.
ஆனால் கண்ணனோ சாமானிய தர்மங்களை விட, உயர்ந்த விசேஷ தர்மமாக விளங்குபவன்.
"க்ருஷ்ணம் தர்மம் ஸனாதனம்” என்று அதனால்தான் சொல்கிறோம்.
அந்தக் 'கண்ணன்' என்ற விசேஷ தர்மத்துக்கும், செஞ்சோற்றுக் கடன் தீர்த்தல் என்ற சாமானிய தர்மத்துக்கும், முரண்பாடு வருகையில், விசேஷ தர்மத்தை கைக்கொள்ள வேண்டும். நீ அதை விட்டுவிட்டுச் சாமானிய தர்மத்தை கைக்கொண்டு,
பெருமாள் கோவில்களில் பக்தர்களுக்கு துளசி தீர்த்தம் கொடுத்து, தலைமேல் சடாரியை வைத்து அருளாசி வழங்குவது உண்டு.
ஒரு குழந்தையை தாயின் கருப்பையிலிருந்து வெளியே தள்ளி, இவ்வுலக மாயையில் ஆழ்த்துகின்ற ஒருவகை வீரிய வாயுவிற்கு `சடம்’ என்று பெயர்.
வைணவ பக்தியில் சிறந்து விளங்கிய பன்னிரு ஆழ்வார்களுள் ஒருவர் நம்மாழ்வார். நான்கு வேதங்களையே தீந்தமிழில் பாடியதால் வேதம் தமிழ் செய்த மாறன் என்று புகழப்படுகிறார். இவர் தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார் திருநகரியில் பிறந்தவர்.
நம்மாழ்வார் கலி பிறந்த 43 வது நாளில், காரியார் மற்றும் உடைய நங்கைக்கு மகனாகப் பிறந்தார். உலக வழக்கப்படி குழந்தை பிறந்தவுடன் அழும். ஆனால் இவரோ இவை எவற்றையும் செய்யாமல், உலக இயற்கைக்கு மாறாக இருந்தார். எனவே அவரை மாறன் என்று அழைத்தனர்.
அந்த அரண்மனையில் மன்னர் திருதராஷ்டிரன் தனது ஆசனத்தில் அமர்ந்திருந்தார். "துரோணாச்சார்யரே! எனக்கு ஒரு சந்தேகம்" என்று ஆரம்பித்தார் மன்னர் திருதராஷ்டிரன். "கேளுங்கள் மன்னா!’’
"சீடர்களிடம் பாரபட்சம் காட்டாமல், வித்தை கற்பிப்பதுதானே நல்ல ஆசானின் இலக்கணம்?"திருதராஷ்டிரன் கேட்டார்.
"ஆம் மன்னா"பதிலளித்தார் துரோணர்."தாங்கள் நல்லதோர் ஆசானாகத் திகழவேண்டும் என்பதே எனது விருப்பம்"என்றார் மன்னர்."மன்னா என்ன கூறுகிறீர்கள்?"திடுக்கிட்டார் துரோணர்.
"துரோணரே!பாண்டவர்களையும் எனதருமைப்பிள்ளைகளையும் சரிசமமாக பாவித்து வித்தைகளைக் கற்பிக்க வேண்டும்."
பாண்டவர்கள் மீது பொறாமை கொண்ட துரியோதனாதிகள், தன்னைப் பற்றி கோள் சொல்லி இருப்பார்கள்"என்று உணர்ந்து கொண்டார் துரோணர்.பிறகு அவர்,"மன்னிக்க வேண்டும் மன்னா. நான் எந்தவித பாகுபாடும் காட்டுவதில்லை. ஆர்வம், முயற்சி,உத்வேகம்,தனித்தன்மை போன்ற இயல்புகள் எல்லோரிடமும் ஒரே மாதிரி அமைவதில்லை,
போர் முடிவடைந்த பிறகு,அஸ்தினாபுரத்தில் முறைப்படி தர்மருக்கு ராஜ்யாபிஷேகம் நடந்தது.பீஷ்மரின் தர்மோபதேசத்தால் தருமர் முடிசூட்டிக் கொண்டாலும்,அவரது மனம் கலக்கத்துடனேயே இருந்தது.ஒருநாள் சகோதர்களுடன் சென்று பீஷ்மருக்கு அருகில் அமர்ந்த தருமர்,தமது உள்ளத்தில் உள்ள சந்தேகங்களை கேட்டார்.
"பிதாமகரே! நல்ல குலத்தில் பிறந்தவர்கள் எவரும் வாய்க்காத நிலையில்,நற்குணமும் பண்பும் நிறைந்த வேற்று குலத்தவரை தனது அமைச்சராகவோ நண்பராகவோ ஓர் அரசன் ஏற்றுக் கொள்ளலாமா?”. பீஷ்மர் பதிலளித்தார், ”தருமா! இதுகுறித்து ஒரு கதை கூறுகிறேன் கேள்.
மனித நடமாட்டம் அதிகம் இல்லாத வனத்தில் முனிவர் ஒருவர் வசித்தார்.மகா யோகியான அவர்,முக்காலமும் உணர்ந்தவர். அந்த வனத்தில் உள்ள கொடிய விலங்குகள் கூட,அவரிடம் சகஜமாக பழகி வந்தன.அங்கு, நாய் ஒன்றும் இருந்தது. முனிவரைப் போலவே அந்த நாயும் சாத்வீகமானது. மாமிசத்தை ஏறெடுத்தும் பார்க்காமல்,
ஸ்ரீராமன் காட்டிற்கு வனவாசம் போகவேண்டும் என்று தந்தையின் உத்தரவு. சீதையும் லக்ஷ்மணனும் அவர் கூடவே சென்றார்கள். கங்கை நதியை கடந்து அக்கரை செல்லவேண்டும். அப்போதுதான் முதன்முதலாக குகன்,ஸ்ரீராமனைப் பார்க்கிறார். ஶ்ரீராமனைப் பற்றி சகல விஷயங்களும் அவருக்குத் தெரியும்.
நாட்டைத் துறந்து தன்முன் நிற்கும்,மரவுரி தரித்த ஸ்ரீராமனைக் காணமுடியாமல் கண்களில் குகனுக்குக் கண்ணீர்த்திரை. "என்னால் உனக்கு என்ன உதவி ஆகவேண்டும் ஸ்ரீராமா?” என பக்தியோடு கேட்டார். "கங்கையைக் கடந்து அக்கரை செல்லவேண்டும் குஹா" எனக் கூறினார் ஶ்ரீராமர்.
அப்போது ஒரு படகு யாரையோ இறக்கி விட்டுவிட்டு புறப்படத் தயாராக இருந்தது.அந்த படகோட்டியின் பெயர் கேவத். குகன் அவனை அணுகி, "கேவத் உன் படகை இங்கே கொண்டுவா” எனச்சொல்ல, படகு நெருங்கி வந்தது.”கேவத், இதோ நிற்கிறார்களே, இது யார் தெரியுமா? அயோத்தி மஹாராஜா
ஸ்ரீராமர்,அது சீதாதேவி,அவர் மனைவி,
பஞ்ச பூதத்தலங்களுள் அக்னித் தலமான திருவண்ணாமலையை பிரபுடதேவராயன் எனும் மன்னன் ஆட்சி செய்த காலம். ஒருநாள்,சபையில் அமைச்சர்கள் புடைசூழ வீற்றிருந்தான் மன்னன். அப்போது மன்னனின் நெருங்கிய நண்பனும்,ஆஸ்தான பண்டிதனுமான சம்பந்தாண்டான் அங்கு வந்தான்.
சமணக்கவியான சம்பந்தாண்டான் மந்திர சாஸ்திரங்கள் கற்றறிந்தவன்.தேவி உபாசகனும்கூட. அவனை மகிழ்ச்சியுடன் வரவேற்றான் மன்னன்.தனது ஆசனத்தில் அமர்ந்த சம்பந்தாண்டான் மெல்லிய குரலில், ”மன்னா, நண்பன் என்ற முறையில் உங்களிடம் ஒரு விஷயத்தைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.ஆனால்…” என்று
நிறுத்தியவன்,மன்னனின் முகத்தை ஏறிட்டான். சம்பந்தாண்டாரே!எதுவாயினும் தயங்காமல் சொல்லுங்கள்!” என்றார் மன்னர்.சம்பந்தாண்டான் தொடர்ந்தான்: ”மன்னா! சமீப காலமாகத் தங்களுடன் நட்புறவாடி வரும்,அருணகிரியைப் பற்றி தங்களது அபிப்ராயம்?”
அந்தப் பெயரைக் கேட்டதும் மன்னனின் முகத்தில் பிரகாசம்!