போர் முடிவடைந்த பிறகு,அஸ்தினாபுரத்தில் முறைப்படி தர்மருக்கு ராஜ்யாபிஷேகம் நடந்தது.பீஷ்மரின் தர்மோபதேசத்தால் தருமர் முடிசூட்டிக் கொண்டாலும்,அவரது மனம் கலக்கத்துடனேயே இருந்தது.ஒருநாள் சகோதர்களுடன் சென்று பீஷ்மருக்கு அருகில் அமர்ந்த தருமர்,தமது உள்ளத்தில் உள்ள சந்தேகங்களை கேட்டார்.
"பிதாமகரே! நல்ல குலத்தில் பிறந்தவர்கள் எவரும் வாய்க்காத நிலையில்,நற்குணமும் பண்பும் நிறைந்த வேற்று குலத்தவரை தனது அமைச்சராகவோ நண்பராகவோ ஓர் அரசன் ஏற்றுக் கொள்ளலாமா?”. பீஷ்மர் பதிலளித்தார், ”தருமா! இதுகுறித்து ஒரு கதை கூறுகிறேன் கேள்.
மனித நடமாட்டம் அதிகம் இல்லாத வனத்தில் முனிவர் ஒருவர் வசித்தார்.மகா யோகியான அவர்,முக்காலமும் உணர்ந்தவர். அந்த வனத்தில் உள்ள கொடிய விலங்குகள் கூட,அவரிடம் சகஜமாக பழகி வந்தன.அங்கு, நாய் ஒன்றும் இருந்தது. முனிவரைப் போலவே அந்த நாயும் சாத்வீகமானது. மாமிசத்தை ஏறெடுத்தும் பார்க்காமல்,
காய்கனிகளை மட்டுமே சாப்பிட்டு வந்தது. ஒருநாள்,அந்த நாயைக் கொன்று சாப்பிடும் எண்ணத்தில்,சிறுத்தை ஒன்று அதை நெருங்கியது.இதனால் பயந்து போன நாய், ஒரே பாய்ச்சலாக ஓடிவந்து முனிவரைச் சரணடைந்தது. உடனே முனிவர்,அதன் உருவத்தை சிறுத்தையாக மாற்றினார்.
சிறுத்தையாக மாறிய நாயைக் கண்ட நிஜ சிறுத்தை, ‘அட இதுவும் நம்ம இனம்தான்'என்ற எண்ணத்துடன்,அதைத் தாக்காமல் திரும்பியது.சிறுத்தை உருவத்துடனேயே உலவிய நாய்,வழக்கம் போலவே காய்கனிகளைத் தின்று வாழ்ந்து வந்தது.இந்த நிலையில் ஒருநாள்,கொடிய புலி ஒன்று,சிறுத்தை உருவில் இருந்த நாயைத் துரத்தியது.
தலைத்தெறிக்க ஓடிவந்த நாய்,முனிவரிடம் ‘என்னை புலியிடமிருந்து காப்பாற்றுங்கள்’ என்று கதறியது.இந்த முறை, நாயை புலியாக மாற்றினார் முனிவர்.உண்மையான புலியும், ‘இது நம்ம இனம்’ என்று நினைப்பில் அங்கிருந்து அகன்றது.
புலியாக மாறிய நாய்,தனது பழைய குணங்களை விட்டுவிட்டு,
புலியைப் போலவே மற்ற விலங்குகளை அடித்துக் கொன்று, தின்று கொழுக்க ஆரம்பித்தது.அடுத்து ஒரு நாள்.இந்த முறை மத யானை ஒன்று துரத்தியது.புலி வடிவில் இருந்த நாய் வழக்கம் போல்,ஓடிவந்து முனிவரிடம் நின்றது.முனிவரின் கருணையால் யானையாக மாறியது நாய். நிஜ யானையும் ஒன்றும் செய்யாமல் சென்றது.
யானை வடிவில் இருந்த நாய்,எந்தக் கவலையுமின்றி நிம்மதியாய் வனத்தில் உலவியது.இந்த முறை சிங்கம், ஆக்ரோஷமாக துரத்த, யானை உருவில் இருந்த நாயும் அலறித்துடித்தபடி முனிவரிடம் செல்ல,அவரும் நாயை சிங்கமாக மாற்ற,அந்த சிங்கமும் ஒன்றும் செய்யாமல் திரும்பியது.பின்னர் சிங்க உருவில் இருந்த நாயை,
எட்டுக் கால்களைக் கொண்ட சரபம் எனும் கொடிய விலங்கு துரத்த,பதறி ஓடிவந்த நாயை, சரபமாக மாற்றினார் முனிவர். சரபமாக மாறிய நாய்,வனத்தை சுற்றி வந்தது.ஒருநாள் நாய்க்கு உதித்தது அந்த எண்ணம்.’நாயாக இருந்தாலும், நம்மை சிறுத்தை, புலி, யானை, சிங்கம் மற்றும் சரபம் என்று மாற்றிய இந்த முனிவர்,
நாளை பிற விலங்குகளையும்,என்னைப் போலவே சரபமாய் மாற்றிவிட்டால் என்ன செய்வது?முனிவரை இனி உயிருடன் விடக்கூடாது.எனவே அவரைக் கொல்லவேண்டும்’ என்று தீர்மானித்தபடி,அவரது ஆஸ்ரமத்துக்குச் சென்றது.தனது ஞானத்தால் நாயின் கெட்ட எண்ணத்தை உணர்ந்தார் முனிவர்.
சரப வடிவில் இருந்த நாய் ஆவேசமாக வந்தது
நாயைத்தடுத்து நிறுத்தினார் முனிவர்."தீய எண்ணம் கொண்ட நாயே.நன்றி மறந்த நீ,நாயாகவே மாறக்கடவது"என்று சபிக்க,அடுத்த நிமிடமே நாயாக மாறியது”.இந்த இடத்தில் கதையை முடித்தார் பீஷ்மர்."தர்மபுத்திரா!நாயின் மனப் போக்கை பார்த்தாயா?இந்த குணத்தைக் கொண்டவன் எந்த குலத்தைச் சேர்ந்தவனாக இருந்தாலும்
அவனை அமைச்சனாகவோ,நண்பனாகவோ ஒருபோதும் ஏற்கக்கூடாது.கல்வி,அறிவு, பொறுமை,நேர்மை, ஒழுக்கம் முதலான குணங்கள் கொண்டவர் தாழ்ந்த குலத்தில் பிறந்தாலும் அவர்களை ஏற்கலாம்.இந்த குணங்கள் இல்லாமல், உயர் குலத்திலே பிறந்தவராக இருந்தாலும்,அவர்களை நெருங்க விடவே கூடாது"என்று முடித்தார் பீஷ்மர்.

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Avvai 🇮🇳

Avvai 🇮🇳 Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @Avvaitweets

14 Mar
அந்த அரண்மனையில் மன்னர் திருதராஷ்டிரன் தனது ஆசனத்தில் அமர்ந்திருந்தார். "துரோணாச்சார்யரே! எனக்கு ஒரு சந்தேகம்" என்று ஆரம்பித்தார் மன்னர் திருதராஷ்டிரன். "கேளுங்கள் மன்னா!’’
"சீடர்களிடம் பாரபட்சம் காட்டாமல், வித்தை கற்பிப்பதுதானே நல்ல ஆசானின் இலக்கணம்?"திருதராஷ்டிரன் கேட்டார். Image
"ஆம் மன்னா"பதிலளித்தார் துரோணர்."தாங்கள் நல்லதோர் ஆசானாகத் திகழவேண்டும் என்பதே எனது விருப்பம்"என்றார் மன்னர்."மன்னா என்ன கூறுகிறீர்கள்?"திடுக்கிட்டார் துரோணர்.
"துரோணரே!பாண்டவர்களையும் எனதருமைப்பிள்ளைகளையும் சரிசமமாக பாவித்து வித்தைகளைக் கற்பிக்க வேண்டும்."
பாண்டவர்கள் மீது பொறாமை கொண்ட துரியோதனாதிகள், தன்னைப் பற்றி கோள் சொல்லி இருப்பார்கள்"என்று உணர்ந்து கொண்டார் துரோணர்.பிறகு அவர்,"மன்னிக்க வேண்டும் மன்னா. நான் எந்தவித பாகுபாடும் காட்டுவதில்லை. ஆர்வம், முயற்சி,உத்வேகம்,தனித்தன்மை போன்ற இயல்புகள் எல்லோரிடமும் ஒரே மாதிரி அமைவதில்லை,
Read 15 tweets
12 Mar
ஸ்ரீராமன் காட்டிற்கு வனவாசம் போகவேண்டும் என்று தந்தையின் உத்தரவு. சீதையும் லக்ஷ்மணனும் அவர் கூடவே சென்றார்கள். கங்கை நதியை கடந்து அக்கரை செல்லவேண்டும். அப்போதுதான் முதன்முதலாக குகன்,ஸ்ரீராமனைப் பார்க்கிறார். ஶ்ரீராமனைப் பற்றி சகல விஷயங்களும் அவருக்குத் தெரியும். Image
நாட்டைத் துறந்து தன்முன் நிற்கும்,மரவுரி தரித்த ஸ்ரீராமனைக் காணமுடியாமல் கண்களில் குகனுக்குக் கண்ணீர்த்திரை. "என்னால் உனக்கு என்ன உதவி ஆகவேண்டும் ஸ்ரீராமா?” என பக்தியோடு கேட்டார். "கங்கையைக் கடந்து அக்கரை செல்லவேண்டும் குஹா" எனக் கூறினார் ஶ்ரீராமர்.
அப்போது ஒரு படகு யாரையோ இறக்கி விட்டுவிட்டு புறப்படத் தயாராக இருந்தது.அந்த படகோட்டியின் பெயர் கேவத். குகன் அவனை அணுகி, "கேவத் உன் படகை இங்கே கொண்டுவா” எனச்சொல்ல, படகு நெருங்கி வந்தது.”கேவத், இதோ நிற்கிறார்களே, இது யார் தெரியுமா? அயோத்தி மஹாராஜா
ஸ்ரீராமர்,அது சீதாதேவி,அவர் மனைவி,
Read 12 tweets
6 Mar
பஞ்ச பூதத்தலங்களுள் அக்னித் தலமான திருவண்ணாமலையை பிரபுடதேவராயன் எனும் மன்னன் ஆட்சி செய்த காலம். ஒருநாள்,சபையில் அமைச்சர்கள் புடைசூழ வீற்றிருந்தான் மன்னன். அப்போது மன்னனின் நெருங்கிய நண்பனும்,ஆஸ்தான பண்டிதனுமான சம்பந்தாண்டான் அங்கு வந்தான்.
சமணக்கவியான சம்பந்தாண்டான் மந்திர சாஸ்திரங்கள் கற்றறிந்தவன்.தேவி உபாசகனும்கூட. அவனை மகிழ்ச்சியுடன் வரவேற்றான் மன்னன்.தனது ஆசனத்தில் அமர்ந்த சம்பந்தாண்டான் மெல்லிய குரலில், ”மன்னா, நண்பன் என்ற முறையில் உங்களிடம் ஒரு விஷயத்தைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.ஆனால்…” என்று
நிறுத்தியவன்,மன்னனின் முகத்தை ஏறிட்டான். சம்பந்தாண்டாரே!எதுவாயினும் தயங்காமல் சொல்லுங்கள்!” என்றார் மன்னர்.சம்பந்தாண்டான் தொடர்ந்தான்: ”மன்னா! சமீப காலமாகத் தங்களுடன் நட்புறவாடி வரும்,அருணகிரியைப் பற்றி தங்களது அபிப்ராயம்?”
அந்தப் பெயரைக் கேட்டதும் மன்னனின் முகத்தில் பிரகாசம்!
Read 19 tweets
28 Feb
அவருடைய இயற்பெயர் ஸ்ரீனிவாச நாயக்.கி.பி.1480லேயே 9கோடி சொத்திற்கு அதிபதி.ஆனால் ஒரு மகாகருமி.நாயக் 18வயதில், கடவுள் பக்தையான,தான-தர்மத்தில் சிறந்தவளான, சரஸ்வதி எனும் பெண்ணை மணந்தார்.அவர் வாழ்ந்த ஊரில் பகவான் ஸ்ரீகிருஷ்ணன் பாண்டுரங்கனாகக் காட்சியளித்தான்.
மக்கள் தெருவில் தினமும் பஜனை பாடுவார்கள்.நாயக் கண்டுகொள்ளமாட்டார்.பார்த்தான் பாண்டுரங்கன்.ஒரு முதிய ஏழை அந்தணன் உருவில்,ஏழு வயது சிறுவனோடு,நாயக்கின் கடைமுன் வந்து நின்றான் இறைவன்."ஐயா!தர்மப்பிரபுவே"
நாயக் அந்த அந்தணனை திரும்பிக்கூட பார்க்கவில்லை. விடுவானா இறைவன்?
திரும்பவும் கூப்பிட்டார்."டேய்!யாருடா நீ?"அதட்டினார் நாயக்.
"ஐயா நான் ஓர் ஏழை பிராமணன்.இவன் என் ஒரே மகன்.ஏழு வயது.பூநூல் போடவேண்டும்.நீங்கள் உதவி செய்தால் நடக்கும் பிரபு.ஏதாவது கொஞ்சம் பணம் கொடுங்கள் சாமி."
"போ போ வேறு எங்காவது பிச்சை எடு.என்னிடம் பணமே இல்லை"விரட்டினார் நாயக்.
Read 24 tweets
17 Feb
ரயிலில் கூட்டம் நிரம்பி வழிந்தது.டிக்கெட் பரிசோதகரின் காலில் ஏதோ இடறியது. குனிந்து அதை எடுத்தார்.அது ஒரு பழைய மணி பர்ஸ்.ஓரமெல்லாம் ஜீரணம் ஆகி,மெருகு குலைந்திருந்தது.   பர்ஸைத் திறந்தார்.சில கசங்கிய நோட்டுகளும்,சில்லறைகளும் இருந்தன.அத்துடன் ஸ்ரீகிருஷ்ணரின் படம் ஒன்றும் இருந்தது.
பர்ஸைத் தலைக்கு மேலே பிடித்துக் காட்டிய பரிசோதகர்,இது யாருடையது?என்று குரலை உயர்த்திக்கேட்டார்.ஒரு முதியவர்,அது  என்னுடையது என்றார்.பர்ஸின் நிலையையும்,முதியவரின் வயதையும் கண்டு,ஜோடிப் பொருத்தம் பார்த்தே பர்ஸை தந்திருக்கலாம்.ஆனாலும் பரிசோதகர்,உம்முடையதுதான்  என்பதற்கு என்ன ஆதாரம்?
எனக் கேட்டார்.அதில் கிருஷ்ணர் படம் இருக்கும் என்றார் பெரியவர்."இதெல்லாம் ஒரு ஆதாரமா?யார் வேண்டுமானாலும் கிருஷ்ணர் படம் வைத்திருக்கலாமே". "ஐயா" என்று செருமியவாறு முதியவர் ஏதோ கதை சொல்வது போல் சொல்ல ஆரம்பித்தார். வண்டி வேகமெடுத்ததால் காற்று பெட்டியினுள் பரவ, இறுக்கம் விலகியது.
Read 12 tweets
16 Feb
காவிரிப்பூம்பட்டினத்தில் வணிகக்குலத்தை சேர்த்த செல்வந்தன் ஒருவன் தன் மனைவியுடன் வாழ்ந்துவந்தார்.தம்பதிகள் அறிவிலும் அறத்திலும் சிறந்தவர்களாக விளங்கினர்.காலப்போக்கில் வணிகன் ஒரு பெண் குழந்தையைப் பெற்றான். அக்குழந்தை சீராட்டி வளர்க்கப்பட்டு,உரிய காலத்தில் மணப்பருவத்தை அடைந்தது.
வணிகன் மதுரையில் வாழ்ந்து வந்த,ஏற்கனவே திருமணமான தன் மருமகனுக்கே பெண்ணை கொடுக்கப் போவதாக உறவினர்களிடம் கூறிக்கொண்டிருந்தான்.சில நாட்கள் சென்றதும் வணிகனும், அவனது மனைவியும் இறந்துவிட்டனர்.இறந்தவருக்குச் செய்யவேண்டிய இறுதிக் கடன்களை செய்து முடித்த சுற்றத்தார்,
மதுரையில் உள்ள மருமகனுக்கு அச்செய்தியை ஓலை மூலம் தெரிவித்தனர்.அவ்வோலையில், “உன் மாமனும்,மாமியும் இறந்து விட்டனர்.உன் மாமனுக்கு நிறைய சொத்தும் ஒரு பெண்ணும் உண்டு.ஆதலால் நீ வந்து உன் மாமன் பெண்ணைத் திருமணம் செய்து செல்வாயாக"என்று எழுதியிருந்தனர்.
Read 25 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!