ஸ்ரீராமன் காட்டிற்கு வனவாசம் போகவேண்டும் என்று தந்தையின் உத்தரவு. சீதையும் லக்ஷ்மணனும் அவர் கூடவே சென்றார்கள். கங்கை நதியை கடந்து அக்கரை செல்லவேண்டும். அப்போதுதான் முதன்முதலாக குகன்,ஸ்ரீராமனைப் பார்க்கிறார். ஶ்ரீராமனைப் பற்றி சகல விஷயங்களும் அவருக்குத் தெரியும்.
நாட்டைத் துறந்து தன்முன் நிற்கும்,மரவுரி தரித்த ஸ்ரீராமனைக் காணமுடியாமல் கண்களில் குகனுக்குக் கண்ணீர்த்திரை. "என்னால் உனக்கு என்ன உதவி ஆகவேண்டும் ஸ்ரீராமா?” என பக்தியோடு கேட்டார். "கங்கையைக் கடந்து அக்கரை செல்லவேண்டும் குஹா" எனக் கூறினார் ஶ்ரீராமர்.
அப்போது ஒரு படகு யாரையோ இறக்கி விட்டுவிட்டு புறப்படத் தயாராக இருந்தது.அந்த படகோட்டியின் பெயர் கேவத். குகன் அவனை அணுகி, "கேவத் உன் படகை இங்கே கொண்டுவா” எனச்சொல்ல, படகு நெருங்கி வந்தது.”கேவத், இதோ நிற்கிறார்களே, இது யார் தெரியுமா? அயோத்தி மஹாராஜா
ஸ்ரீராமர்,அது சீதாதேவி,அவர் மனைவி,
அது லக்ஷ்மணன் அவருடைய சகோதரன்.இவர்களை அக்கரை கொண்டு சேர்”. கேவத் ஸ்ரீராம லக்ஷ்மணர்களை, சீதாவை வணங்கினான்.அவன் தினமும் காலையில் எழும்போதும், இரவில் தூங்கும் முன்பும் ஸ்ரீராம நாமம் சொல்பவன்."ஐயா குகனே, நான் இவர்களை கங்கையின் மறுகரை கொண்டு சேர்க்கிறேன்"எனக்கூறி மறுகரை சேர்த்தான்.
படகில் இருந்து ஸ்ரீராமர் இறங்கும் பொழுது,கேவத் மற்றும் அவன் மனைவி இருவரும், கங்கை ஜலத்தால் ஸ்ரீராமரின் பாதங்களைக் கழுவி வணங்கி, அந்த நீரை தங்கள் தலையில் தெளித்துக் கொண்டனர். கேவத் தனது மேல்துண்டால், ஸ்ரீராமரின் பாதங்களை, துளியும் தூசி இல்லாமல் துடைத்தான்.
கையைப் பிடித்து எல்லோரையும் படகில் இருந்து கரை இறக்கினான். சீதா தேவி மன நிறைவோடு, தனது மோதிரம் ஒன்றைக் கழற்றி ஸ்ரீராமனிடம் தந்தாள். "இதை அவருக்கு பரிசாகக் கொடுங்கள்" என்றாள். "அம்மா எனக்கு எதுவும் வேண்டாம்" என கேவத் பரிசை ஏற்க மறுத்தான்.
"ஓ அப்படியா கேவத், நீ இதை பரிசாக ஏற்க வேண்டாம். எங்களைப் படகில் ஏற்றி கங்கையை கடக்க செய்ததற்கு கூலியாக ஏற்றுக்கொள்" என சிரித்துக் கொண்டே, அந்த மோதிரத்தை அவனிடம் நீட்டினார் ஸ்ரீராமன். "ஶ்ரீராமா!ஒருவேளை நான் பரிசாகவாவது ஏற்றுக்கொண்டிருப்பேன். நிச்சயம் கூலி வாங்கமாட்டேன் ஐயா"
என்றான் கேவத். அதற்கு ஶ்ரீராமர்,"என்னப்பா கேவத், நீ பேசுவது விநோதமாக இருக்கிறதே. ஏன் என்னிடம் கூலி வாங்க மாட்டேன் என்கிறாய்?". அதற்கு கேவத், "தொழில் விஸ்வாசம் ஐயா” என்றான். "அப்பா கேவத் கொஞ்சம் புரியும்படியாக சொல்லேன்” எனக் கேட்டார் ஸ்ரீராமர்.
"ஒரு நாவிதன் மற்றொரு நாவிதனுக்கு சேவை செய்யும்போது கூலி வாங்கமாட்டான். துணி வெளுப்பவன் இன்னொரு துணி வெளுப்பவனிடம் கூலி வாங்கமாட்டான், என்பதுதான் உலக வழக்கம் ஐயா",எனக்கூறினான் கேவத். அதற்கு ஶ்ரீராமர் கேட்டார்,"புரியவில்லை. விளக்கமாக சொல் கேவத்.
நீ துணி வெளுப்பவனோ, நாவிதநோ, எனக்கு அவ்வாறு சேவை செய்யவில்லையே. நீ படகோட்டிதானே?"
கேவத் பதில் உரைத்தான்."உங்களுக்கா புரியாது. என்னைச் சோதிக்கிறீர்கள். நாம் இருவருமே ஓடக்காரர்கள். படகோட்டிகள். நான் ஒரு கரையிலிருந்து மறுகரைக்கு, இந்த நீரை மட்டும் கடக்க உதவும் ஓடக்காரன் மட்டுமே.
ஆனால் நீங்களோ, எல்லோரையும் ஜனன மரண துன்பங்களிலிருந்தும், இந்த சம்ஸார கடலிலிருந்தும், கரை சேர்க்கும் பரந்தாமன் அல்லவா. நாம் இருவரும் படகோட்டிகள் தானே. நான் சின்ன படகோட்டி. நீங்கள் பிரம்மாண்டமான பெரிய படகோட்டி. நம் தொழில் ஒன்று தானே ஸ்வாமி"
"என்னையும் ஒரு நாள், இந்த சம்சார சாகரத்தைக் கடக்க உதவி செய்து, உங்கள் கணக்கை நேர் செய்துக் கொள்ளுங்கள்” என்று ஸ்ரீராமர் காலில் விழுந்து வணங்கினான் கேவத். ஸ்ரீராமர் லக்ஷ்மணர் சீதாதேவி கண்களின் ஓரத்தில் நீர் கசிந்தது.
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
அந்த அரண்மனையில் மன்னர் திருதராஷ்டிரன் தனது ஆசனத்தில் அமர்ந்திருந்தார். "துரோணாச்சார்யரே! எனக்கு ஒரு சந்தேகம்" என்று ஆரம்பித்தார் மன்னர் திருதராஷ்டிரன். "கேளுங்கள் மன்னா!’’
"சீடர்களிடம் பாரபட்சம் காட்டாமல், வித்தை கற்பிப்பதுதானே நல்ல ஆசானின் இலக்கணம்?"திருதராஷ்டிரன் கேட்டார்.
"ஆம் மன்னா"பதிலளித்தார் துரோணர்."தாங்கள் நல்லதோர் ஆசானாகத் திகழவேண்டும் என்பதே எனது விருப்பம்"என்றார் மன்னர்."மன்னா என்ன கூறுகிறீர்கள்?"திடுக்கிட்டார் துரோணர்.
"துரோணரே!பாண்டவர்களையும் எனதருமைப்பிள்ளைகளையும் சரிசமமாக பாவித்து வித்தைகளைக் கற்பிக்க வேண்டும்."
பாண்டவர்கள் மீது பொறாமை கொண்ட துரியோதனாதிகள், தன்னைப் பற்றி கோள் சொல்லி இருப்பார்கள்"என்று உணர்ந்து கொண்டார் துரோணர்.பிறகு அவர்,"மன்னிக்க வேண்டும் மன்னா. நான் எந்தவித பாகுபாடும் காட்டுவதில்லை. ஆர்வம், முயற்சி,உத்வேகம்,தனித்தன்மை போன்ற இயல்புகள் எல்லோரிடமும் ஒரே மாதிரி அமைவதில்லை,
போர் முடிவடைந்த பிறகு,அஸ்தினாபுரத்தில் முறைப்படி தர்மருக்கு ராஜ்யாபிஷேகம் நடந்தது.பீஷ்மரின் தர்மோபதேசத்தால் தருமர் முடிசூட்டிக் கொண்டாலும்,அவரது மனம் கலக்கத்துடனேயே இருந்தது.ஒருநாள் சகோதர்களுடன் சென்று பீஷ்மருக்கு அருகில் அமர்ந்த தருமர்,தமது உள்ளத்தில் உள்ள சந்தேகங்களை கேட்டார்.
"பிதாமகரே! நல்ல குலத்தில் பிறந்தவர்கள் எவரும் வாய்க்காத நிலையில்,நற்குணமும் பண்பும் நிறைந்த வேற்று குலத்தவரை தனது அமைச்சராகவோ நண்பராகவோ ஓர் அரசன் ஏற்றுக் கொள்ளலாமா?”. பீஷ்மர் பதிலளித்தார், ”தருமா! இதுகுறித்து ஒரு கதை கூறுகிறேன் கேள்.
மனித நடமாட்டம் அதிகம் இல்லாத வனத்தில் முனிவர் ஒருவர் வசித்தார்.மகா யோகியான அவர்,முக்காலமும் உணர்ந்தவர். அந்த வனத்தில் உள்ள கொடிய விலங்குகள் கூட,அவரிடம் சகஜமாக பழகி வந்தன.அங்கு, நாய் ஒன்றும் இருந்தது. முனிவரைப் போலவே அந்த நாயும் சாத்வீகமானது. மாமிசத்தை ஏறெடுத்தும் பார்க்காமல்,
பஞ்ச பூதத்தலங்களுள் அக்னித் தலமான திருவண்ணாமலையை பிரபுடதேவராயன் எனும் மன்னன் ஆட்சி செய்த காலம். ஒருநாள்,சபையில் அமைச்சர்கள் புடைசூழ வீற்றிருந்தான் மன்னன். அப்போது மன்னனின் நெருங்கிய நண்பனும்,ஆஸ்தான பண்டிதனுமான சம்பந்தாண்டான் அங்கு வந்தான்.
சமணக்கவியான சம்பந்தாண்டான் மந்திர சாஸ்திரங்கள் கற்றறிந்தவன்.தேவி உபாசகனும்கூட. அவனை மகிழ்ச்சியுடன் வரவேற்றான் மன்னன்.தனது ஆசனத்தில் அமர்ந்த சம்பந்தாண்டான் மெல்லிய குரலில், ”மன்னா, நண்பன் என்ற முறையில் உங்களிடம் ஒரு விஷயத்தைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.ஆனால்…” என்று
நிறுத்தியவன்,மன்னனின் முகத்தை ஏறிட்டான். சம்பந்தாண்டாரே!எதுவாயினும் தயங்காமல் சொல்லுங்கள்!” என்றார் மன்னர்.சம்பந்தாண்டான் தொடர்ந்தான்: ”மன்னா! சமீப காலமாகத் தங்களுடன் நட்புறவாடி வரும்,அருணகிரியைப் பற்றி தங்களது அபிப்ராயம்?”
அந்தப் பெயரைக் கேட்டதும் மன்னனின் முகத்தில் பிரகாசம்!
அவருடைய இயற்பெயர் ஸ்ரீனிவாச நாயக்.கி.பி.1480லேயே 9கோடி சொத்திற்கு அதிபதி.ஆனால் ஒரு மகாகருமி.நாயக் 18வயதில், கடவுள் பக்தையான,தான-தர்மத்தில் சிறந்தவளான, சரஸ்வதி எனும் பெண்ணை மணந்தார்.அவர் வாழ்ந்த ஊரில் பகவான் ஸ்ரீகிருஷ்ணன் பாண்டுரங்கனாகக் காட்சியளித்தான்.
மக்கள் தெருவில் தினமும் பஜனை பாடுவார்கள்.நாயக் கண்டுகொள்ளமாட்டார்.பார்த்தான் பாண்டுரங்கன்.ஒரு முதிய ஏழை அந்தணன் உருவில்,ஏழு வயது சிறுவனோடு,நாயக்கின் கடைமுன் வந்து நின்றான் இறைவன்."ஐயா!தர்மப்பிரபுவே"
நாயக் அந்த அந்தணனை திரும்பிக்கூட பார்க்கவில்லை. விடுவானா இறைவன்?
திரும்பவும் கூப்பிட்டார்."டேய்!யாருடா நீ?"அதட்டினார் நாயக்.
"ஐயா நான் ஓர் ஏழை பிராமணன்.இவன் என் ஒரே மகன்.ஏழு வயது.பூநூல் போடவேண்டும்.நீங்கள் உதவி செய்தால் நடக்கும் பிரபு.ஏதாவது கொஞ்சம் பணம் கொடுங்கள் சாமி."
"போ போ வேறு எங்காவது பிச்சை எடு.என்னிடம் பணமே இல்லை"விரட்டினார் நாயக்.
ரயிலில் கூட்டம் நிரம்பி வழிந்தது.டிக்கெட் பரிசோதகரின் காலில் ஏதோ இடறியது. குனிந்து அதை எடுத்தார்.அது ஒரு பழைய மணி பர்ஸ்.ஓரமெல்லாம் ஜீரணம் ஆகி,மெருகு குலைந்திருந்தது. பர்ஸைத் திறந்தார்.சில கசங்கிய நோட்டுகளும்,சில்லறைகளும் இருந்தன.அத்துடன் ஸ்ரீகிருஷ்ணரின் படம் ஒன்றும் இருந்தது.
பர்ஸைத் தலைக்கு மேலே பிடித்துக் காட்டிய பரிசோதகர்,இது யாருடையது?என்று குரலை உயர்த்திக்கேட்டார்.ஒரு முதியவர்,அது என்னுடையது என்றார்.பர்ஸின் நிலையையும்,முதியவரின் வயதையும் கண்டு,ஜோடிப் பொருத்தம் பார்த்தே பர்ஸை தந்திருக்கலாம்.ஆனாலும் பரிசோதகர்,உம்முடையதுதான் என்பதற்கு என்ன ஆதாரம்?
எனக் கேட்டார்.அதில் கிருஷ்ணர் படம் இருக்கும் என்றார் பெரியவர்."இதெல்லாம் ஒரு ஆதாரமா?யார் வேண்டுமானாலும் கிருஷ்ணர் படம் வைத்திருக்கலாமே". "ஐயா" என்று செருமியவாறு முதியவர் ஏதோ கதை சொல்வது போல் சொல்ல ஆரம்பித்தார். வண்டி வேகமெடுத்ததால் காற்று பெட்டியினுள் பரவ, இறுக்கம் விலகியது.
காவிரிப்பூம்பட்டினத்தில் வணிகக்குலத்தை சேர்த்த செல்வந்தன் ஒருவன் தன் மனைவியுடன் வாழ்ந்துவந்தார்.தம்பதிகள் அறிவிலும் அறத்திலும் சிறந்தவர்களாக விளங்கினர்.காலப்போக்கில் வணிகன் ஒரு பெண் குழந்தையைப் பெற்றான். அக்குழந்தை சீராட்டி வளர்க்கப்பட்டு,உரிய காலத்தில் மணப்பருவத்தை அடைந்தது.
வணிகன் மதுரையில் வாழ்ந்து வந்த,ஏற்கனவே திருமணமான தன் மருமகனுக்கே பெண்ணை கொடுக்கப் போவதாக உறவினர்களிடம் கூறிக்கொண்டிருந்தான்.சில நாட்கள் சென்றதும் வணிகனும், அவனது மனைவியும் இறந்துவிட்டனர்.இறந்தவருக்குச் செய்யவேண்டிய இறுதிக் கடன்களை செய்து முடித்த சுற்றத்தார்,
மதுரையில் உள்ள மருமகனுக்கு அச்செய்தியை ஓலை மூலம் தெரிவித்தனர்.அவ்வோலையில், “உன் மாமனும்,மாமியும் இறந்து விட்டனர்.உன் மாமனுக்கு நிறைய சொத்தும் ஒரு பெண்ணும் உண்டு.ஆதலால் நீ வந்து உன் மாமன் பெண்ணைத் திருமணம் செய்து செல்வாயாக"என்று எழுதியிருந்தனர்.