ஆக்கப்பூர்வமாக விமர்சிப்பது, விமர்சிக்க வேண்டும் என்பதற்காக எதையாவது கற்பனை செய்து கதை எழுதுவது என்பதான வகைகள் விமர்சனங்களில் உண்டு.
குறிப்பாக நாம் தமிழர் மீது ஏவப்படும் விமர்சனங்களை கூர்ந்து கவனியுங்கள். கடந்த பத்தாண்டுகளாக விமர்சனங்களைத் - 1/15
தவிர வேறு எதையும் அடையாத நாம் தமிழர் கட்சியின் அரசியல் பயணம் என்பது அசாதாரணமானது.
ஜெயலலிதாவை பார்த்துவிட்டு வந்தபோது அதிமுகவோடு கூட்டணி வைக்கப் போகிறார் என ஒரு கூட்டம் அலறும்.சசிகலாவை போய் பார்த்து விட்டு நடராஜன் சாவிற்கு துக்கம் விசாரித்துவிட்டு வந்தால் சீமான் சசிகலாவின் - 2/15
ஆள் என ஏதோ ஒரு கூட்டம் பதறும். அப்போது முதலமைச்சராக இருந்த எடப்பாடியை சந்தித்து கோரிக்கைகள் வைத்து விட்டு வந்தால் இவர் அண்ணா திமுகவின் ஆள் இன்னொரு கூட்டம் சிதறும். திருமண விழாவில் எதிர்பாராமல் சந்தித்து விட்ட பொன் ராதாகிருஷ்ணனை பார்த்து ஒரு வார்த்தை பேசினால் உடனே - 3/15
பாஜகவின் ஆள் என்று ஒரு கூட்டம் பதறும். கமல் கட்சி தொடங்கும் போது அவர் அழைத்த காரணத்திற்காக நேரடியாக அண்ணன் சீமான் சந்திக்க போனதை கமலோடு கூட்டணி என கதை கட்டி மற்றொரு கூட்டம் கதறும்.
அரசியல் காரணங்களுக்காக விமர்சிப்பது என்பது வேறு. தனிப்பட்ட முறையில் மனித மாண்போடு சக - 4/15
அரசியல் தலைவர்களை அணுகுவது, சந்திப்பது என்பது வேறு. எப்போதும் அண்ணன் சீமான் அதில் மிகச் சரியாக இருந்திருக்கிறார். தீவிரமாக எதிர்த்த திமுக தலைவர் கருணாநிதி சாவிற்கு கூட அண்ணன் சீமான் சென்று விட்டு தான் வந்தார். இதுபோன்ற செயல்பாடுகள் அரசியல் முதிர்ச்சியின் வெளிப்பாடு - 5/15
சக அரசியல் தலைவர்களை சந்தித்து பேசுவதால் அண்ணன் சீமான் என்றுமே தனது அரசியல் நிலைப்பாடுகளை மாற்றிக் கொண்டதில்லை. கடந்தகால வரலாறு அதை கம்பீரமாக அறிவிக்கிறது.
இன்று முதலமைச்சராக இருக்கக்கூடிய ஸ்டாலினை 7 தமிழர் விடுதலை மற்றும் இதர கோரிக்கைகளுக்காக எங்கள் அண்ணன் சீமான் - 6/15
சந்தித்து விட்டு வந்திருக்கிறார். வழக்கம்போல கதற தொடங்கிவிட்டார்கள். 7 தமிழர் விடுதலை பற்றி எடப்பாடியிடம் இன்று பேச முடியாது. எடப்பாடி கூட ஸ்டாலினிடம் தான் இன்று கோரிக்கைகள் வைக்க முடியும்.
அந்நிலையில் தமிழகத்தின் மூன்றாவது மாபெரும் அமைப்பாக, உண்மையான எதிர்க்கட்சியாக - 7/15
உருக்கொண்டு நிற்கின்ற நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் முதல்வரை சந்திப்பது என்பது ஒரு மிகச்சரியான எதிர்க்கட்சிக்கான பண்பியல்.
எதற்கெடுத்தாலும் விமர்சிக்க வேண்டும், கதற வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியை கண்கொத்தி பாம்பாக பார்த்துக்கொண்டிருக்கிற கண்றாவிகளைப் - 8/15
பற்றி நமக்கு கவலை இல்லை. ஆனால் ஸ்டாலினை பார்த்துவிட்டு வந்து விட்டால் இனி திமுகவை விமர்சிக்க மாட்டார்கள் என நப்பாசையில் கூவும் சில 200 ரூபாய் 'உபி' களை பார்க்கும்போதுதான் உண்மையில் காமெடியாக இருக்கிறது.
திமுகவை கொள்கை அடிப்படையில், கோட்பாட்டு எதிர்நிலையில் எதிர்ப்பது - 9/15
என்பது நாம் தமிழர் கட்சியின் அடிப்படை பண்புநலன். அதில் எவ்வித மாற்றமும் இல்லை.திமுக தலைவரை அண்ணா அறிவாலயத்தில் அண்ணன் சீமான் சென்று பார்க்கவில்லை. தமிழக மக்களின் கோரிக்கைகளை முன்வைத்து தமிழக முதல்வரை, 30 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்குகளை வாங்கி மாபெரும் கட்சியாக இன்று - 10/15
உருவாகியிருக்கிற நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக அண்ணன் சீமான் தலைமைச் செயலகத்தில் சந்தித்துவிட்டு வந்திருக்கிறார்.
அடுத்து வருகிற ஐந்து வருடமும் உண்மையான எதிர்க்கட்சியாக, திமுக அரசு தவறு செய்தால் கடுமையாக விமர்சிக்கின்ற, எதிர்த்துப் போராடுகின்ற மக்களின் - 11/15
அமைப்பாக நாம் தமிழர் கட்சி உறுதியாக செயல்படும்.
எந்த புதிய அரசுக்கும் முதல் 100 நாட்கள் என்பது தயாரிப்புக்கான காலம். அதனால் எடுத்த எடுப்பிலேயே விமர்சித்துக் கொண்டு இருக்க வேண்டிய அவசியமில்லை. நிறைய காலம் இருக்கிறது. நல்லது செய்தால் யாராக இருந்தாலும் நாங்கள் பாராட்டுவோம் - 12/15
. அதே சமயம் எம் இனத்திற்கு என ஒரு தீமை விளைந்தால் எவராயினும் எதிர்த்து நிற்போம்.
அந்த மன உறுதியோடு தான் நாங்கள் அரசியல் களத்தில் நிமிர்ந்து நிற்கிறோம்.
வழக்கம் போல் கிளம்பியிருக்கிற புரிதலற்ற கூப்பாடுகளை புறம்தள்ளி
நாம் முன் செல்வோம்.
இப்போது விமர்சிக்கிற எவரும் - 13/15
எப்போதும் நம்மை ஆதரித்ததில்லை. இனியும் ஆதரிக்கப் போவதுமில்லை. அவர்களுக்கு நாம் அசைந்தாலே குற்றம். அவற்றையெல்லாம் நாம் கணக்கில் எடுத்தால் நாம் எதுவும் செய்ய முடியாது - 14/15
இதை நமது உறவுகள் கணக்கில் எடுத்துக் கொண்டு எதை ஏற்க வேண்டும், எதை புறந்தள்ள வேண்டும் என்ற புரிதலில் சிந்தித்தாலே போதுமானது.
கடந்த 5 வருடமாக பேசியது தான். அன்றே அவர் சொன்னார் என்னை நீங்க தவிர்க்கலாம் மறைக்கலாம் ஆனால் நான் முன்வைக்கும் தத்துவங்களையும், அரசியலையும் ஒரு போதும் தவிர்க்க முடியாது. எவ்வளவு உண்மை! - 1/3
செய்திக்குறிப்பு: முதல்வர் ஸ்டாலினுடன் சீமான் சந்திப்பு - கொரோனா துயர்துடைப்பு பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு 5 இலட்ச ரூபாய் வழங்கினார் | நாம் தமிழர் கட்சி
இன்று 04-06-2021, தலைமைச் செயலகத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை - 1/5
ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்து, கொரோனா துயர்துடைப்பு பணிகளுக்காக, நாம் தமிழர் கட்சி சார்பாக 5 இலட்சம் ரூபாயை முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கினார். இச்சந்திப்பின் போது உடனிருந்த இயக்குநர் பாரதிராஜா அவர்களும் - 2/5
தனது சார்பில் ரூபாய் 5 இலட்சத்தை முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கினார்.
இச்சந்திப்பில் எழுவர் விடுதலையில் 161வது, சட்டப்பிரிவின் படி அமைச்சரவையைக் கூட்டி விரைவில் நல்ல முடிவு எட்டப்படவேண்டும் எனவும், கொரோனா தீவிர நோய்த்தொற்றுக்கு ஆளானவர்களுக்கும் தமிழ் சித்த - 3/5
சிவசங்கர் பாபா (மாமா) எனும் கொடூர காமுகன். பள்ளி சிறுமிகளை சீரழிக்கும் ஒரு ஜந்து. அரபு நாடுகளில் கொடுக்கும் தண்டனையை விட 100 மடங்கு அதிக தண்டனை கொடுத்தாலும் பத்தாது
இந்த காணொளியில் அவனின் கொடூர வக்கிர முகம் வெளிப்படுது. இவனுக்கு பின்னால் ஒரு கூட்டம் இருக்கு - 1/5
பாஜக கேடி.ராகவன், மற்றும் ஆர்எஸ்எஸ் இந்துத்துவ அரசியல்வாதிகள் இந்த மாமாவுக்கு மிக நெருக்கம்.
கடந்த 20 வருடங்களாக ஒன்றும் விவரம் அறியாத குழந்தைகளிடம் இந்த பாலியல் கொடுமைகளை அரங்கேற்றியிருக்கான். என் ரத்தம் கொதிக்குது இவன் சிக்கினான் செத்தான்.
பலவகையான கொலை மிரட்டல் - 2/5
விலை பேசியும், வக்கீல் மூலம் நோட்டீஸ் அனுப்பியதையும் மதிக்காமல் கடந்தத மூன்று நாட்களாக இந்த காமக் கொடூரன் #சிவசங்கர்_மாமா வை கிழத்து தொங்கவிட்ட நம் தமிழ் தேசியவாத தங்கத் தம்பிகள் @sattaiOnline @pesutamizhapesu மற்றும் @hellotamizhayt அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் போதாது - 3/5
பன்னெடுங்காலமாக அடிமைப்பட்டுக் கிடக்கும் தமிழ்ப்பேரினத்தை மீட்டெடுப்பதற்காகவும், தமிழ் இனத்தையும், நிலத்தையும், மொழியையும் போற்றிப் பாதுகாப்பதற்காகவும், இழந்துவிட்ட தமிழரின் பழம்பெருமைகளையும் -1/15
பண்பாட்டுச் செழுமைகளையும் மீள்பெறச் செய்வதற்காகவும், தமிழினத்தலைவரை நெஞ்சிலும், தலைவர் தந்த புலிக்கொடியை கைகளிலும் ஏந்தி தமிழகத்தின் மூலைமுடுக்கெல்லாம் தமிழ்த்தேசிய அரசியலை விதைத்துவரும் பெரும்பணியை அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் கடந்த பதினொரு ஆண்டுகளாக - 2/15
செய்துவருகிறது நாம் தமிழர் கட்சி.
தமிழரை அடையாளமற்று திசைமாற்றும் போலிப் புனைவுகளான ஆரியம் திராவிடம் இரண்டிற்கும் மாற்றாக தமிழ்த்தேசிய அரசியலை வெகுசன அரசியல் பேரியக்கமாக மாற்றி அதன் மூலம் தமிழ்மக்களின் உரிமைகளைப் போராடிப் பெறுவதில் எப்போதும் முன்னிற்கிறது நாம் தமிழர் கட்சி - 3/15