இந்திய தபால் துறை :
நான் மிகவும் மதிக்கும் ஒரு பொதுத்துறை நிறுவனம் இது. உலகிலேயே மிகச் சிறப்பான கட்டமைப்பும், அர்ப்பணிப்பும் கொண்ட நிறுவனம் இது என்று கூட நான் சொல்வேன். சின்ன வயசிலே நான் பல பரிசோதனைகளை செய்து பார்த்த அனுபவத்தில் இதை சொல்கிறேன்.
நினைவு 1 : அட்லஸ் எடுத்து வடக்கே
ஒரு சின்ன ஊரின் பெயரைத் தேர்ந்தெடுப்பேன். 15 பைசாவுக்கு போஸ்ட் கார்டை வாங்கி அந்த ஊரில் ஒரு கற்பனைக் கேரக்டரை உருவாக்கி, உடைந்த ஆங்கிலத்தில் எங்க ஊர், கோவில் பற்றி, அன்றைக்கு மயில் பார்த்தது, வீட்டுப்பாடம் எழுதியது எல்லாம் டைரி போல எழுதி தபால் பெட்டியில் போடுவேன். நாட்கள் மிக மிக
மெதுவாக நகர்ந்த காலம் அது. பல நாள் கழித்து அந்த தபால் கார்டு மேலே பற்பல முத்திரைகளை வாங்கி குடுகுடுப்பைக்காரனின் ஒட்டுப்போட்ட துணி போல எனக்கே திரும்ப வரும். addressee not found என முத்திரை தாங்கி.. நான் கொடுத்த 15 பைசாவுக்கு மதிப்புத் தந்து அந்த அட்டையை பல ஆயிரம் மைல்கள் பற்பல
ஊழியர்கள், பல இடங்களுக்கு எடுத்துச் சென்று ஆளைத் தேடி கண்டு பிடிக்க முடியாமல், அதை வருத்தத்துடன் எனக்குச் சொல்லி மீண்டும் என்னிடமே சேர்க்கும் அதி அற்புதமான பொதுத்துறை நிறுவனம் அது. ஒருமுறை காஷ்மீர் பார்டருக்கு ராணுவ ஜெனரல், காஷ்மீர் பொத்தாம் பொதுவா விலாசம் எழுதி, எல்லையில்
எச்சரிக்கையா இருங்க. குளிர் அதிகமா இருந்தால் நீலகிரி தைலத்தை கொதிக்கும் நீரில் போட்டு ஆவி பிடிச்சால் சளி பிடிக்காது., எங்க அம்மா அப்படித்தான் என்னை செய்ய சொல்வாங்க என அறிவுரை எல்லாம் எழுதி அஞ்சல் அட்டையை அனுப்பினேன். பல வாரங்கள் கழித்து என் மனசுலே இருந்த பெயர் கொண்ட அந்த ராணுவ
ஜெனரல் இங்கில்லை என்றும், ஆனாலும் இந்திய ராணுவ வீரர்களின் மீது நீங்களும், உங்க அம்மாவும் கொண்ட அக்கறைக்கு நன்றி என சொல்லி ஒரு மேஜர், பதில் கடிதமும், காஷ்மீர் பனிமலையின் புகைப்படமும் அனுப்பி வைத்ததும் நினைவில் இருக்கு. அதெல்லாம் அற்புதமான இளம்வயது நினைவுகள்.
நினைவு 2 : அப்பா
இறந்த பல ஆண்டுகள் கழித்து எதையோ தேடியப்போது ரப்பர் பேண்ட் சுற்றப்பட்ட ஒரு பழைய கவர் கிடைத்தது. அதன் உள்ளே 60 களில் அப்பா வாங்கிய பல 50, 100 ரூபாய் தபால்துறை சேமிப்புப் பத்திரங்கள். பெரும்பாலும் செல்லரிச்சுப் போய் கிடந்தது. தலைமைத் தபால் நிலையத்தில் என் நண்பனோட அப்பாதான் முக்கிய
அலுவலர். அவரிடம் கொண்டு போய் இது என்னன்னு பாருங்கப்பா என தந்துட்டு வந்துட்டேன். அவர் அதில் உள்ள எண்கள், முத்திரைத் தேதி ஆகியவைகளைக் கொண்டு பழைய லெட்ஜர் எல்லாம் தேடிப் பிடிச்சு அசல் பதிவை எடுத்து ஒரு மாதம் கழித்து என்னை அழைத்து ஒரு செக் தந்தார். அது 90,000/- ரூபாய்க்கானது.
அப்போது அது பெரிய தொகை. அதைவிட தனது வாடிக்கையாளர் தன்னை நம்பி டெபாசிட் செய்த பணத்தை தெளிவற்ற ஆதாரங்களைக் கொண்டு தேடி எடுத்து 38 ஆண்டுகளுக்குப் பிறகு அவர் வாரிசிடம் ஒப்படைத்த அந்த நேர்மைதான் எனக்கான புத்திக் கொள்முதல். தபால்துறை ஊழியர்களும், வாடிக்கையாளர்களும் பெருமைப்படலாம்.
இன்றைய செய்தி : சென்னை துறைமுகக் கழகம் இந்தியன் வங்கியில் டெபாசிட் செய்திருந்த 100 கோடி ரூபாய் எங்கே போச்சு என தெரியலை என வங்கி சொல்லிடுச்சாம்! இத்தனைக்கும், இரண்டுமே பொதுத்துறை நிறுவங்கள்தாம்!
கார்ப்பரேட் மோகத்தில் காலங்காலமாக பொன்முட்டையிட்ட வாத்துகளைக் கொன்றே விட்டோம். 🤦🙄
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
"மாநில வளர்ச்சி கொள்கைக்குழு" எனப்படும் முன்னாள் மாநிலத் திட்டக்குழுவுக்கு துணைத் தலைவராக பேராசிரியர் ஜெயரஞ்சன் நியமிக்கப்பட்டுள்ளார். இந்தப் பொறுப்பு தமிழக அரசின் கேபினெட் அமைச்சர் பதவிக்கு நிகரான அதிகாரங்களும், வசதிகளும் கொண்ட உயர்ந்த பொறுப்பாகும். கடந்த ஐந்து ஆண்டுகளில்
தமிழக அரசின் கொள்கைகள், மக்களுக்கான இலவசத் திட்டங்கள், கல்வி, மருத்துவ அடிப்படைக் கட்டமைப்புக்கு எதிராக வடக்கில் இருந்து சங்கிகள் நடத்திய மிகப் பெரிய பண்பாட்டுப் போரை நாம் எதிர்கொண்டோம். அரசியல் கட்சிகளுக்கு வெளியில் இருந்து நமது சமூகநீதி சார்ந்த வளர்ச்சித் திட்டங்களுக்கு
ஆதரவாக ஆதாரப்பூர்வமாக பேசியும், எழுதியும் இளம் தலைமுறையினருக்கு "நாம் சரியான பாதையில்தான் செல்கிறோம்" என ஆற்றுப்படுத்தி வழி நடத்திய பொருளாதார மேதைக்கு இந்த உயரிய கவுரம் அளித்தது மிகப் பொருத்தமே!
அடுத்ததாக பேரா. ம. விஜயபாஸ்கர். The Dravidian Model புத்தகம் எழுதிய ஆய்வாளர். அதுபோக
+2 தேர்வை எப்படி நடத்தவது?
எனது யோசனைகள்.. பரிசீலினைக்கும் & விவாதத்துக்கும். 1. சராசரியாக 8 லட்சம் பிள்ளைகள் +2 தேர்வை எழுதுகின்றனர். 2. எந்தப் பாடப்பிரிவாக இருந்தாலும் ஒவ்வொருவருக்கும் 6 தேர்வுகள்தான். 3. அதில் இரண்டு மொழிப்பாடங்கள். 4. மீதமுள்ள 4 பாடங்களின் மதிப்பெண்கள்தான்
உயர்கல்விக்கான தகுதி மதிப்பெண்கள். சரிதானே!
எனது யோசனை :
1.) 8 லட்சம் பேர்களுக்கும் மொழிப்பாடங்களுக்கு அவர்களின் +1, +2 (பிற தேர்வுகள்) அடிப்படையில் மதிப்பெண்களைத் தந்து விடலாம். கூடுதலாக Covid Consideration ஆக 10 மதிப்பெண்களும் தரலாம் 2) வசிக்கும் இடங்களுக்கு அருகில் உள்ள
கலை & அறிவியியல் கல்லூரி, பட்டயக் கல்லூரிகளில் சேர்ந்து படிக்கத் திட்டமிட்டுள்ளவர்களுக்கு மீதமுள்ள 4 பாடங்களுக்கும் கூட இதே முறையில் மதிப்பெண்கள் வழங்கிவிடலாம்.
மேற்சொன்ன கல்லூரி / பாலிடெக்னிகளில் தேவைக்கும் அதிகமான இரு மடங்கு இடங்கள் உள்ளமையால் இவர்கள் கோரும் இடங்களைத்
#பரிவு
முதல் அலையின் போது நண்பர் ஒருவர் ஸ்டான்லி #COVID பிரிவில் அனுமதிக்கப் பட்டிருந்தார். தனிமை, மவேற்று மனிதர்கள், கவச உடை அணிந்த பணியாளர்கள் என புதியச் சூழலைக் கண்டு கடுமையாக பதட்டமாகி ரத்த அழுத்தம் அதிகமாகி விட்டது. தலைமை டாக்டர், நண்பரின் உறவினர் யாரையாவது உள்ளே சென்று
உடன் இருந்து தைரியம் சொல்லச் சொன்னார். PPE kit கூட தருவதாக சொல்லி இருக்கிறார். தாய், தந்தை வயதானவர்கள் என்பதால் அவர்களுக்கு அனுமதி இல்லை. சகோதரன் ஏதோ காரணம் சொல்லி விட்டான். மனைவியை உள்ளே செல்ல அவரது பெற்றோர்கள் அனுமதிக்கவில்லை. நண்பர்கள் சிலர் துணிந்தபோதும் முயற்சி கைகூடவில்லை.
இறுதியில் யாருமே நேரில் சென்று பாராமலேயே, தனிமையில் அவன் இறந்து விட்டான்.
இன்று தொலைக்காட்சியில் முதல்வர் @mkstalin PPE Kit அணிந்து கொண்டு #COVID வார்டுக்கு செல்லும் காட்சியைப் பார்த்த நண்பன் இந்த நிகழ்வை நினைவுபடுத்தி குறுஞ்செய்தி அனுப்பி இருந்தான்.
முதல்வர் ஸ்டாலினுக்கு 69
திரியின் இரண்டாவது, மூன்றாவது ட்வீட்லேயே ராஜகோபாலனை ரிலீஸ் பண்ணிட்டாங்க. அவர் குற்றம் செய்திருந்தால் நிச்சயம் தண்டனை பெறுவார் எனும் நம்பிக்கையை கூட வாழ விடலை. இதுதான் நான் சொல்லும் நியாயமற்ற ஒப்பீடு. நாம நிற்க வேண்டியது victim பக்கம் எனில், ஒற்றைக் குரலாக பள்ளிக் குழந்தைகள்
பக்கம் நிற்க வேண்டாமா? வழக்கு விசாரணையில் இருக்கும்போதே ஜட்ஜ்மெண்ட் தருவதும், விசாரணைக்கே வராத வழக்கை உடன் ஒப்பிட்டு பேசுவதும் எந்த விதத்தில் இந்தப் பிள்ளைகளுக்கு உதவும்?
மைனர் குழந்தைகளின் மீதான வன்கொடுமையும், பெண்கள் மீதான வன்கொடுமையும் வெவ்வேறு. தனிதனி குற்றங்கள், சட்டங்கள்.
அழக்கூட தெரியாத குழந்தைகளை பாதுகாப்பதுதான் முன்னுரிமை. குடிச்சுட்டு பஸ் ஓட்டுறவனும், குடிபோதையில் பைக் ஓட்டுறவனும் ஒரே குற்றத்தை செய்யலை.
இந்த நேரத்தில் மற்ற விஷயங்களைப் பேசும்போது மேலும், மேலும் பல தரப்பு வாதங்கள் வந்து குவிந்து மாணவிகளுக்கு நடந்த வன்கொடுமை மீதான கவனத்தை
ஒரு திட்டம் : உங்கள் கருத்துகளை சொல்லுங்க.
வீட்டுக்கே வந்து ப்ரஷ் காய்கறிகளை தரும் வண்டி. 1. இது அந்தந்தப் பகுதி / ஊர் கோ.ஆப் சொசைட்டி மூலம் இயக்கப்படும். 2. கொள்முதலை நேரடியாக விவசாயிகளிடம் வாங்க வேண்டும். (பால் சொசைட்டி போல). 3. சுத்தம் செய்வது, தரம் பிரிப்பது, எடை & பேக்கிங்
சுய உதவிக்குழுக்கள் நியாயமான கூலியில் செய்து தருவார்கள். 4. ஏற்கனவே பதிவு செய்து, ஒரு மாதத்துக்கான தொகையை முன்கூட்டியே கட்டி இருப்பவர்கள், APP மூலம் அன்றைய தேவையை ஆர்டர் செய்யலாம். 5. குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட இடத்துக்கு வண்டி வரும்போது, app notification வரும். போய்
நமது ஆர்டரை எடை பரிசோதனை செய்து பெற்றுக் கொள்ளலாம். 6. இதில் முக்கியமான விஷயம் : காய்கறிகளுக்கு ஃபிக்ஸட் விலைதான். (பால் பாக்கெட் போல).
உதாரணத்துக்கு தக்காளி எப்போதுமே கிலோ 25 ரூபாய்தான். மார்கெட்லே 10 ரூபாய்க்கு கிடைத்தாலும் 25 தான்.. 80 ரூபாய்க்கு ஏறினாலும் ரூ 25 தான்.
இந்த
இதுக்கு பதில் சொல்லுவோம். 1. சாக்கடை, கக்கூஸ் போன்ற அடிப்படை வசதிகளை மாநிலத் தலைநகரின் மையப் பகுதியில் கூட சரியாக இல்லை. இதைச் செய்ய வேண்டிய மாநகராட்சியை 10 ஆண்டுகளாக நடத்தியது யார்? 2. 10 ஆண்டுகளாக அதிமுக எம்.எல்.ஏக்கள் உள்ள தூத்துக்குடி, சேலம், ஈரோடு மாநகராட்சித் தொகுதிகளில்
சாக்கடை, கக்கூஸ் வசதிகள் அமோகமாக உள்ளனவா? 3. கோவையிலேயே தொண்டாமுத்தூர் தொகுதிக்கு இணையாக பக்கத்தில் உள்ள தொகுதிகளில் வசதிகள் உள்ளனவா? 4. எதிர்கட்சி எம்.எல்.ஏக்களை விட அந்தப் பகுதியின் ஆளும்கட்சி வட்டச் செயலாளருக்கு அதிக அதிகாரம் உண்டு என்பதை ஊர் அறியும்தானே? 4. தொடர்ந்து திமுக
வுக்கு ஓட்டுப் போட்ட சேப்பாக்கம் தொகுதி மக்களுக்கு, இந்த சீர்கேடுகளுக்கான காரணம் அதிமுகதான் என்பது தெரிந்துதானே, மாபெரும் வித்தியாசத்தில் ஒரு புதுமுக வேட்பாளர் @Udhaystalin ஐ வெற்றி பெற வைக்கின்றனர்? 5. பேரிடர் காலத்தில் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள ஒவ்வொருவரும் பாடுபடும்போது