A Thread on Safety Tips while using Digital India Transactions 👇
VJS - ஒரு கதை சொல்லட்டா சார்?
Maddy - என்ன உன்னை மாதிரி ஏமாத்தறவங்களுக்கு ஒரே கதை தானே.
VJS - அது எப்படிச் சார், ஏமாறவங்க இருக்கும் போது ஏமாற்ற தான செய்வார்கள், அப்படிப் பார்த்த நீயும் நானும் ஒன்னு தானே சார்?
சரி, வாங்க வங்கி பரிவர்த்தனைகளைப் பயன்படுத்தும் போது பாதுகாப்பு குறித்து விரிவாகப் பார்ப்போம்.
இணையச் சேவைகளின் அதிகரிப்புடன், ஆன்லைன் மற்றும் மொபைல் வங்கியின் பயன்பாடு வெகு அளவில் அதிகரித்துள்ளது, குறிப்பாக demonetization பிறகு, அதுவும் இப்பொழுது இருக்கும்
lock down காரணமாக அன்றாட பரிவர்த்தனைகளுக்கு பெரும்பாலும் ஆன்லைன் மற்றும் மொபைல் வங்கியைப் பயன்படுத்தத் தொடங்கினோம்.
ஸ்மார்ட் போனின் அபரிமிதமான வளர்ச்சி, ஆன்லைன் மற்றும் மொபைல் வங்கி பயன்பாட்டுடன் தொடர்புடைய அச்சுறுத்தல்கள் மற்றும் அபாயங்கள் அதிகமாகத் தொடங்கியுள்ளது.
ஆன்லைன் மற்றும் மொபைல் வங்கி பரிவர்த்தனைகள் அதிகரிப்புடன், மோசடிகளும் அதிகரித்துள்ளன.
உங்கள் மொபைலிருந்து வங்கி விவரங்கள் போன்ற உங்கள் தனிப்பட்ட மற்றும் நிதி தகவல்களை எடுக்க மோசடி செய்பவர்களுக்குப் பல வழிமுறைகள் தெரியும். குறிப்பாக உங்கள் வங்கி பயன்பாடுகள் மற்றும் தொடர்புடைய
அனைத்து வங்கி தகவல்களும் சேமிக்கப்பட்டிருந்தால் வலுவான password இல்லாத மொபைல் போன் மோசடி செய்பவர்களுக்கு எளிதான இலக்கு.நீங்கள் ஆன்லைன் மற்றும் மொபைல் வங்கியின் பயன்பாட்டினை அதிகம் நம்பி இருந்தால், உங்கள் மொபைல், லேப்டாப் மற்றும் கணினியை எப்போதும் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும்
இதுபோன்ற மோசடிகளுக்கு நீங்கள் மாட்டிக்கொள்ளாமல் இருப்பதற்குச் சிறந்த வழி, விழிப்புடன் இருப்பது மற்றும் ஹேக்கைத் தவிர்ப்பதற்குத் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும்.
ஆன்லைன் மற்றும் மொபைல் மோசடிகளைச் செய்ய பல்வேறு முறைகள் உள்ளன. இதுபோன்ற மோசடிகளுக்கு மாட்டிக்கொள்ளாமல் நமக்கு நாமே எப்படி பாதுகாத்துக்கொள்ளலாம் என்பதைப் பற்றிச் சிறு குறிப்புகள்:
a. உங்கள் Password களை தவறாமல் அடிக்கடி மாற்றவும். எழுத்துக்கள், எண்கள் மற்றும் சிறப்பு எழுத்துக்கள் கலந்து பயன்படுத்துங்கள்.
b. உங்கள் Password களை ரகசியமாக வைத்திருங்கள், அதை யாருக்கும் பகிர வேண்டாம். எப்போதும் வலுவான Password வைத்திருங்கள். மிகவும் பொதுவான மற்றும் மோசமான Password பட்டியல்: en.wikipedia.org/wiki/List_of_t…
c. Carding scam - நண்பா, எனக்கு ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ் வெறும் ரூ. 10 ஆயிரம் சொல்ராங்க, நான் அதை வாங்கலாமா? இன்ஸ்டாகிராம் மற்றும் டெலிகிராம் போன்ற தளங்களில் அதிகம் தெரியும். நண்பா, நான் கார்டிங் தொழிலில் இருக்கிறேன். ஸ்மார்ட்போனை அதன் விலையில் 10% என்னால் செய்ய முடியும்.
இந்த தள்ளுபடி உங்களுக்கு ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே. நீங்கள் ஆர்வமாக இருக்கிறீர்களா?" விலை மிக மலிவானதாக இருந்தால், விளம்பரங்களில் வரையறுக்கப்பட்ட விற்பனையைக் கொண்டுள்ளது, இது அநேகமாக ஒரு மோசடி.
d. Customer Care அழைப்புகள் அல்லது மின்னஞ்சல்களுக்கு
அல்லது மின்னஞ்சல்களுக்கு உங்கள் வங்கி / அட்டை விவரங்களை வழங்க வேண்டாம். உங்கள் வங்கியுடன் முக்கியமான தகவல்களை மின்னஞ்சல் வழியாகத் தொடர்பு கொள்ள வேண்டுமானால், வங்கியின் பாதுகாப்பான ஆன்லைன் வங்கி தளத்திற்குள் பாதுகாப்பான அஞ்சலைப் பயன்படுத்துவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
e. உங்களது ஆன்லைன் மற்றும் மொபைல் வங்கியின் பரிவர்த்தனைக்குத் தனி வங்கி அக்கௌன்ட் மற்றும் ஒரு மாதத்திற்குத் தேவையான தொகையை மட்டும் வைத்துக் கொள்ளுங்கள். மற்றொரு வங்கிக் கணக்கில் உங்கள் சேமிப்பு மற்றும் முதலீட்டு பரிவர்த்தனைகளை வைத்துக் கொள்ளுங்கள்.
f. உங்கள் இணைய இணைப்பைப் பாதுகாக்கவும். Password மூலம் உங்கள் வீட்டு வயர்லெஸ் நெட்வொர்க்கை எப்போதும் பாதுகாக்கவும்.
g. Google Play Store அல்லது Apple App Store இருந்து மட்டும் Apps களை எப்போதும் பதிவிறக்கவும். அறியப்படாத மூலங்களிலிருந்து எந்த APK வையும் பதிவிறக்க வேண்டாம்.
h. Social Media சமூக ஊடகங்களிலிருந்து நேரடியாக வாங்க வேண்டாம்: நம்பத் தகுந்த விற்பனையாளர்களிடம் மட்டும் பொருட்களை வாங்குங்கள்.
i. உங்கள் கணினியைப் பாதுகாக்கவும், இணையத் தாக்குதல்கள் அதிகரித்து வருவதால், உங்கள் கணினி வைரஸ் தடுப்பு மென்பொருளை நிறுவுவது முன்பைவிட முக்கியமானது.
j. Social Media வில் உங்களது தகவல்களைத் தனிப்பட்டதாக வைத்திருங்கள். உங்கள் password கண்டுபிடிக்க மற்றும் Forget password மூலம் பாதுகாப்பு கேள்விகளுக்குப் பதிலளிக்க ஹேக்கர்கள் உங்களது social media விவரங்களைப் பயன்படுத்தலாம். உங்கள் பிறந்த நாள், இடம், முகவரிகள், தாயின் இயற்பெயர்
போன்றவற்றைத் தவிர்க்கவும்.
k. பொது வைஃபை நெட்வொர்க்குகளுடன் இணைக்கும்போது, நீங்கள் எந்த தகவலை அனுப்புகிறீர்கள் என்பதில் எச்சரிக்கையாக இருங்கள்.
l. எந்த முகவரியும் கிளிக் செய்வதற்கு முன்பு HTTPS உடன் தொடங்குகிறது என்று உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். இணையத்தில் பாதுகாப்பான
இணைப்புகளை HTTPS செயல்படுத்துகிறது,( ஒரு சிறிய பூட்டப்பட்ட பேட்லாக் சின்னம் பக்கத்தில் தோன்றும்). ஆன்லைன் வகுப்புகள் நடப்பதால், குழந்தைகள் அறியாமல் திரையில் தோன்றும் இணைப்புகளைக் கிளிக் செய்ய பல வாய்ப்புகள் உள்ளன. தயவு செய்து கவனமாக இருங்கள்.
m. சில ஷாப்பிங் தளத்தின் தனியுரிமைக் கொள்கைகளைப் படிக்கவும். அது சேகரிக்கும் தனிப்பட்ட தகவல்களைத் தளம் எவ்வாறு பாதுகாக்கிறது என்பதைத் தனியுரிமைக் கொள்கைகள் உங்களுக்குக் கூறுகின்றன.
n. உங்கள் வயர்லெஸ் நெட்வொர்க் default Password யும் default SSID ஐயும் மாற்றவும்.
o. ஆன்லைன் பரிவர்த்தனைகளுக்கு உங்கள் கார்டைப் பயன்படுத்தும் போது எப்போதும் கவனமாக இருங்கள், பாதுகாப்பான கட்டண தளங்களை மட்டுமே பயன்படுத்துங்கள்.
p. Phishing (ஃபிஷிங்) மின்னஞ்சல்களில் ஜாக்கிரதை. இந்த மின்னஞ்சல்கள் உங்கள் தகவல்களை எடுக்க அல்லது மாற்றுவதற்கு மின்னஞ்சலில் வழங்கப்பட்ட
இணைப்புகளைக் கிளிக் செய்யும்படி கேட்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. Click bait என்று சொல்லுவார்கள்.
q. உங்கள் அனைத்து முதலீடுகளின் வங்கி அறிக்கைகள் சிறிது காலம் வைத்திருங்கள். எதிர்காலத்தில் உங்கள் பரிவர்த்தனைகளைத் தணிக்கை செய்ய இது உதவியாக இருக்கும்.
r. ஹார்ட் டிஸ்க், பென் டிரைவ் மற்றும் எஸ்டி கார்டு (card) பயன்படுத்துவதற்கு முன்பு வைரஸ் தடுப்பு மூலம் முழு ஸ்கேன் செய்யுங்கள்.
s. Salami slicing என்பது வங்கி பரிவர்த்தனைகளில் அருகிலுள்ள தோராயம் (round off) பயன்படுத்துவதன் மூலம், மிகக் குறைந்த அளவுகளில் பணத்தை மீண்டும் மீண்டும் திருடும் மோசடி. நம்ம அந்நியன் படத்தில் சொல்ற மாதிரி 5 கோடி பேர் கிட்ட 5 கோடி தடவை 5 பைசா திருடின தப்பா. உங்கள் வங்கியிலிருந்து
வரும் குறும்செய்திகளைப் படியுங்கள் , புறக்கணிக்க வேண்டாம். சிறிய தொகை தானே என்று அலட்சிய பட வேண்டாம்.
t. Trial period சலுகைகளுடன் கவனமாக இருங்கள்: Trial period என்பது பல நிறுவனங்கள் பெரிய மற்றும் சிறிய அனைத்து முக்கிய இடங்களிலும் பயன்படுத்தும் சந்தைப்படுத்தல் கருவியாகும்,
ஏனெனில் trial period செயல்படும் விதம் உங்கள் கிரெடிட் கார்டு தகவலை உள்ளிட வேண்டும், மேலும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு நீங்கள் சேவையை இலவசமாகப் பயன்படுத்த வேண்டும், மேலும் அந்தக் காலம் முடிந்ததும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. சோதனை முடிவதற்கு முன்பும் அதற்குப் பிறகு எந்த
நேரத்திலும் உங்கள் சந்தாவை ரத்து செய்ய முறையான நிறுவனங்கள் உங்களை அனுமதிக்கும். மறுபுறம், மோசடி செய்பவர்கள் உங்களை எவ்வாறு தக்க வைத்துக் கொள்வது என்று முயற்சிப்பார்கள். இந்த trial period சலுகையைப் பெறுவதற்கு முன்பு சேவை விதிமுறைகளைப் படிப்பதை உறுதிசெய்க.
u.பொது வைஃபை மற்றும் பொது கணினிகளைப் பயன்படுத்தி ஆன்லைன் வங்கி பரிவர்த்தனைகளை தவிர்ப்பீர்.
v.கார்டு தொலைத்து விட்டால் வங்கியிடம் உடனடியாக புகாரளிக்கவும். மோசடி நடப்பதற்கு முன்பு வேகமாகச் செயல்படுங்கள்.
w.பழைய காசோலைகள், Card, மற்றும் ATM எண் வரும் தகவல்களைக் கவனமாகக்
கிழித்துவிடுங்கள்.
x. பயன்பாட்டில் இல்லாதபோது bluetooth தை ஆப் செய்து வையுங்கள். உங்கள் மொபைல் ஹேக் செய்து உங்கள் தகவல்களைத் திருட ஹேக்கர்கள் சுலபமாகப் பயன்படுத்திக் கொள்வார்கள்.
y. ஒரு வலுவான password இல்லாத ஒரு திருடப்பட்ட மொபைல் போன், குறிப்பாக வங்கி பயன்பாடுகள் மற்றும்
தொடர்புடைய அனைத்து வங்கி தகவல்களும் சேமிக்கப்பட்டிருந்தால் மோசடிகளுக்குப் பயன்படுத்தப்படலாம். Password பாதுகாக்கப்பட்ட மொபைல் போனைக் கூட ஹேக் செய்து மொபைல் வங்கி
மோசடிகளுக்குப் பயன்படுத்தப்படலாம்,. எனவே, உங்கள் மொபைல் போனை ஒருபோதும் வங்கி தகவல்களைச் (Username & Password, மற்றும்
இதர தகவல்கள்) சேமிக்க வேண்டாம்.
z. Skimmer scam - உங்களது கார்டு தகவல் திருடப்படுவது, ஒரு சிறிய சாதனம் (skimmer device) மூலம் பயன்படுத்தப்படுகிறது. இந்த டிவிஸ்லிருந்து வங்கி பரிவர்த்தனையின் போது கார்டு தகவல் எடுக்கப்படுகிறது. இந்த திருடப்படும் தகவல்கள் மூலம் ஆன்லைன் ஷாப்பிங்
அல்லது குளோனிங் கார்டுகளை தயாரிக்கிறார்கள்.
இது எல்லாம் பண்ண ஹேக்கிங் இருந்து கொஞ்சம் மாட்டிக்கொள்ளாமல் இருக்கலாம்.
நம்ம கிட்ட எங்கே காசு இருக்கிறது இல்ல நமக்கு ஒன்றும் ஆகாது என்று நினைக்காமல் பொது நலம் கருதி உங்கள் தெரிந்தவர்களும் சொல்லுங்கள். Kumutha Happy Annachi!
A Thread on Financial Mistakes done by Middle-Class People: 👇
நடுத்தர வர்க்க மக்கள் நம் செய்யும் நிதி தவறுகள்:
தல அஜித்: ஹலோ! நண்பர்களே இந்த வாரம் நம்ம நடுத்தர வர்க்க மக்கள் செய்யும் நிதி தவறுகள் பற்றி விரிவா பார்த்துருவோம் வாங்க.
a.பெரும்பாலும் நாம் செய்வது சேமிப்பு= (வருமானம்–செலவுகள்) அல்ல செலவு= வருமானம் - (சேமிப்பு+முதலீடு) இது தான் தாரக மந்திரமாக இருக்க வேண்டும்.
வரவு எட்டணா செலவு பத்தணா பண்ணாதீர்கள்.
b.எல்லாவற்றையும் ஒரே முதலீட்டுத் திட்டத்தில் முதலீடு செய்ய வேண்டாம்.
ஆற்றிலே போட்டாலும் அளந்து போடு
அடல் ஓய்வூதிய யோஜனா (APY), இது இந்திய அரசாங்கத்தால் தொடங்கப்பட்ட உத்தரவாத ஓய்வூதிய திட்டமாகும்.
அமைப்புசாரா துறை தொழிலாளர்கள் மற்றும் ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தால் (PFRDA) நிர்வகிக்கப்படுகிறது. APY இன் கீழ், குறைந்தபட்ச உத்தரவாத ஓய்வூதியம்
ரூ .1000/- அல்லது ரூ 2,000/- அல்லது ரூ 3,000/- அல்லது மாதத்திற்கு ரூ 4,000/- அல்லது ரூ 5,000/- 60 வயதை எட்டிய பின்னர் சந்தாதாரர்களின் பங்களிப்புகளைப் பொறுத்துத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஓய்வூதிய தொகை தொடங்கும்.
வயது வரம்பு: குறைந்தபட்சம் 18 ஆண்டுகள்; அதிகபட்சம் 40 ஆண்டுகள்
A Thread on PMSBY - An Accidental Death Insurance Plan 👇
பிரதான் மந்திரி சூரக்ஷா பீமா யோஜனா (PMSBY) என்பது மத்திய ஆட்சியால் தொடங்கப்பட்ட குறைந்த பிரீமியம் விபத்து இறப்பு காப்பீடு திட்டம். இந்த திட்டத்தின் கீழ், விண்ணப்பதாரருக்கு ரூ. 2 லட்சம் காப்பீடு ஆண்டுக்கு ரூ. 12 பிரீமியத்தில் கிடைக்கிறது மற்றும் ஒவ்வொரு ஆண்டும் புதுப்பிக்கத்தக்கது
காப்பீடு பாதுகாப்பு: பிரதான் மந்திரி சூரக்ஷா பீமா யோஜனா (PMSBY) திட்டத்தின் கீழ் காப்பீடு செய்யப்பட்ட விண்ணப்பதாரர் விபத்தில் இறந்தால் ரூ .2 லட்சம் உறுதி செய்யப்பட்ட தொகை நாமினிக்கு கொடுக்கப்படும்.
விண்ணப்பதாரர் இறப்பு: நாமினி ரூ.2 லட்சம் தொகையைப் பெறுவார்கள்.
பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா (PMJJBY) என்பது மத்திய ஆட்சியால் தொடங்கப்பட்ட குறைந்த பிரீமியம் டெர்ம் காப்பீடு திட்டம். இந்த திட்டத்தில் விண்ணப்பதாரருக்கு ரூ. 2 லட்சம் ஆயுட் காப்பீடு ஆண்டுக்கு ரூ .330 பிரீமியத்தில் கிடைக்கிறது மற்றும் ஒவ்வொரு ஆண்டும் புதுப்பிக்கத்தக்கது.
காப்பீடு பாதுகாப்பு: PMJJBY திட்டத்தின் கீழ் காப்பீடு செய்யப்பட்ட விண்ணப்பதாரர் எந்தவொரு காரணத்திற்காகவும் இறந்தால் ரூ .2 லட்சம் உறுதி செய்யப்பட்ட தொகை நாமினிக்கு கொடுக்கப்படும்.
விண்ணப்பதாரர் இறப்பு: நாமினி ரூ . 2 லட்சம் தொகையைப் பெறுவார்கள்.
சிஷ்ய இந்த வாரமும் டெர்ம் இன்சூரன்ஸ் பற்றி விரிவா பார்த்துவிடுவோம்.
டெர்ம் இன்ஷூரன்ஸ் வாங்கும் முன் சிறு குறிப்புகள்: தொடர்கிறது!
i. நீங்கள் புகை / மதுப் பழக்கம் இருந்தால் மறைக்காமல் சொல்லுங்கள், மறைத்தாலும் மருத்துவம் சோதனை ல கண்டுபிடுச்சுருவாங்க. அதையும் மீறி சில சமயம் claim பண்ணும்போது உங்கள் claim rejection ஆகா வாய்ப்பு இருக்கு. முக்கியமா
சிஷ்ய இந்த வாரம் நாம டெர்ம் இன்சூரன்ஸ் பத்தி விரிவா பார்க்கப்போறோம்,
சரி குரு fulla படிச்சுருவோம்.
காப்பீடு (INSURANCE) என்பது தனிநபர் (Insurer) மற்றும் காப்பீட்டு நிறுவனத்திற்கு (Insurance Company) இடையே உள்ள சட்டபூர்வமான ஒப்பந்தமாகும்.
வாழ்க்கையில், எதிர்பாராத செலவுகள் எப்படி வேண்டுமாலும் வரலாம். நீங்கள் நிதி ரீதியாக பாதுகாப்பாக இருப்பதாக நினைத்து இருந்தாலும், இந்த திடீர்