கோடிக்கணக்கான செலவில் உருவாக்கப்படும் பிரம்மாண்டமான சினிமாக்களுக்கு மத்தியில் "C/O கஞ்சர்பாலம், பலசா 1978, கலர்போட்டோ" மாதிரியான சின்னச்சின்ன எளிய படங்கள் நிகழ்த்தும் மாயாஜாலங்கள் அற்புதமானது. #Cinembandi யும் அவ்வகையைச் சார்ந்தது.
எதேச்சையாக கிடைத்த பொருள் ஒரு கைவிடப்பட்ட கிராமத்தின் கனவாக எப்படி மாறுகிறது எனும் எளிய கதை. கன்னடம்-தெலுகு பேசும் எல்லைப்புற கிராமமான கோலப்பள்ளி எனும் ஊரில் வருங்காலம், கிராமம் பற்றி நம்பிக்கை கொண்டிருக்கும் ஒரு ஷேர்- ஆட்டோ ஓட்டுனர் கையில் ஒரு உயர்தரமான கேமிரா சிக்குகிறது.
டிவியில் தெலுங்குத் திரையுலகில் வசூலை குவிக்கும் சிறிய பட்ஜெட் படங்களைப் பற்றிய செய்தி துணுக்கு கேமிரா வைத்திருக்கும் ஓட்டுனருக்கு ஒரு சினிமா படம் எடுக்கும் நம்பிக்கையை உண்டாக்க, தன் கிராமத்தில் கல்யாணங்களுக்கு போட்டோ எடுக்கும் சகாவுடன் தன் சினிமா திட்டங்களைத் துவக்குகிறார்.
கொஞ்சம் கொஞ்சமாக உருப்பெறும் அந்த சினிமா படப்பிடிப்பு சம்பவங்களின் வழியே ஒரு எளிய கிராம பிரஜையின் கனவு எப்படி மொத்த கிராம மக்களின் நம்பிக்கையாகவும் பரவுகிறது என்பதை அடுத்தடுத்த காட்சிகளில் அழகாக சமர்ப்பித்து முழுப்படம் நடந்து முடிகிறது.
எளிய மனிதர்களின் அன்பை நெகிழ்ச்சியுடன் பேசும் இந்த சினிமாவில் பெண் கதாபாத்திரங்களை கையாண்ட விதம் என்பது மிகச்சிறப்பானது. படத்தின் வரும் நான்கு பெண்களின் பாத்திரமும் தனித்துவம் மற்றும் நம்பிக்கை நிறைந்தவை.
ஒருவருக்கு தன் கண்டிப்பான தந்தையைத் தாண்டி தன் கனவுகளும், காதலும் முக்கியமானதாக உள்ளது. அவர் அதில் உறுதியாக இருக்கிறார். மற்றொறு பெண் தன் கணவனின் கனவை புரிந்துகொண்டு, குடும்பத்தை நிர்வகிக்கும் உழைப்பாளியாக நகர்கிறார்.
கிராமத்திற்கு வெளியே நகரம் சார்ந்த பெண் பாத்திரம், தன் லட்சியமான கேமராவை, தன் உழைப்பால் சேமித்து வாங்கியிருக்கிறார். தவறவிடப்பட்ட அந்தக் கேமராவை மீட்க உறுதியாக போராடுகிறாள். அந்த கேமிராவில் நிகழ்த்தப்பட்ட எளிய மனிதர்களின் உழைப்பை அங்கிகரிப்பவளாகவும் இருக்கிறாள்.
உள் படத்தின் ஹீரோயினாக நடிக்கும் 'மங்கா' கதாபாத்திரம் நான்கு பெண்களிலும் ஒருபடி மேலாக சிறப்பானது. உழைக்கும் மகளிரான அவள், படப்பிடிப்பை உழைப்பாகவே அணுகுகிறாள். படப்பிடிப்பின் இடைவேளையில், தன் தொழிலான காய்கறி விற்பனையிலும் இயங்குகிறாள்.
வீராங்கனைகளாக, போராளியாக இருந்தாலும் பாகுபலிகள் வந்துதான் காப்பாற்ற வேண்டும் என்கிற அனுஷ்கா, தமன்னா மாடல்களை அனாயசமாக ஒரே காட்சியில் தவிடு பொடியாக்குகிறாள். இப்படி படம் நெடுக பெண் கதாபாத்திரங்கள் மன உறுதியும், தெளிவும் மிக்க, சுயம் உணர்ந்த பெண்களாக உலவுகிறார்கள்.
ஹீரோக்கள்/ஆண்களின் மையமான சினிமா உலகில் இப்படிப்பட்ட பெண் கதாபாத்திரங்களை தொடர்ச்சியாக படைப்பது என்பது பேரற்புதமானது. பாராட்டத்தகுந்தது.
ஒரு ஷேர் ஆட்டோ, அதன் ஓட்டுனர் கமா இயக்குனர், ஒரு போட்டோகிராபர் + ஒளிப்பதிவாளர், ஹீரோ+ சிகையலங்கார தொழிலாளர் மரிதேஸ் பாபு, எழுதப் படிக்கவே தெரியாத கதாசிரியர் தாத்தா, கிராமத்து மனிதர்கள் மற்றும் ஒரு கேமிராவை வைத்துக்கொண்டு நெகிழ்சிமிக்க ஒரு திரைப்படத்தை உண்டாக்கியிருக்கிறார்கள்.
எளிய மற்றும் அற்புதமான #CinemaBandi யில் அவசியம் ஒரு ரவுண்டு போகலாம். ❤

Cinema pandi
2021
Netflix
--

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with ச.கருணாநிதி

ச.கருணாநிதி Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @karna_sakthi

2 Mar
தலித்தின ஆண்களின் சுயமரியாதையை மீட்டெடுப்பதில் தலித் பெண்களுக்கு வரலாறுதொட்டே எப்பொழுதும் பெரும்பங்கு இருந்திருக்கிறது. சொம்பில் தண்ணீர் கொண்டு வந்து கொடுத்து, பவ்யமாக கைகட்டி, கணவன் பின்னால் நிற்கும் பெண்களல்ல அவர்கள்.
எசிலிக்கு எசிலியாக, ராட்சசர்களுக்கு ராட்சசிகளாக, அன்புக்கு அன்பாக, முகத்துக்கு நேராக ஊடகை, காதலை, கூடலைக் கொட்டித்தரும் அசுரச்சிகள்.
கருத்த, கம்பீரமான தன் ஆண் இதர சமூக ஆண்களின் முன்பு அடிமையாய் தலைகுனிவதை அவர்கள் எப்பொழுதும் விரும்பியதில்லை.
பெரும்பான்மை கிராமிய சாதிக்கொடுமைகளிலிருந்து ஆண்களை நகரங்களுக்கு நகர்த்தி கல்வியில்,வேலையில், சமூகத்தில் ஆண்களை ஆளாக்குகிறவர்களாக அவர்களே இருக்கிறார்கள்.
Read 8 tweets
28 Feb
நாட்டிலேயே முதன்முறையாக கணினி படிப்பிற்கான வசதிகள் சென்னை மாநாகராட்சி பள்ளிகளில்தான் கொண்டுவரப்பட்டது; கொண்டு வந்த மேயர்.. தலைவர் @mkstalin 😍

#HBDMKStalin
சென்னையின் மேயராக தலைவர் @mkstalin இருந்த காலத்தில்தான் நகரத்தின் முக்கியமான 9 மேம்பாலங்கள் கட்டிமுடிக்கப்பட்டன; மேம்பாலங்களுக்கு ஒதுக்கிய 95கோடியில் 30 சதவீதத்தை மிச்சம் செய்து கட்டி முடித்ததுதான் தலைவரின் நிர்வாகத் திறனுக்கு சான்று.

#HBDMKStalin
தலைவர் @mkstalin செய்து தந்த சென்னையின் அசாத்திய வளர்ச்சித்திட்டங்களைப் பார்த்து வியந்த வியந்த ஹட்கோ நிறுவனம் சென்னைக்கு 'தூய்மையான நகரம்' என்ற விருது வழங்கி சிறப்பித்தது வரலாறு.

#HBDMKStalin #HBDStalin
Read 8 tweets
25 Jul 20
ஒடுக்கப்பட்ட மக்களின் ஒப்பற்ற தலைவர் தாத்தா H.M .ஜெகநாதன் அவர்களின நிளைவு தினம்- ஜீலை 25.

தாத்தா HM.ஜெகநாதன், சென்னையில் 1894 ல் அக்டோபர் 25ம் நாள் முனுசாமி என்பவரவது மகனாக பிறந்தார்.
தந்தையார் பிரிட்டிஸ் இந்திய அரசின் ராணுவத்திற்கான கருவிகளைச் செய்யும் தோல் ஒப்பந்ததாராக இருந்தார். செல்வச் செழிப்பில் பிறந்ததால் ஜெகநாதன் கல்வி கற்று பட்டம் பெற்றார். ஆங்கில மொழிப்புலமை மிக்கவவராகவும், சிறந்த ஆளுமைப்பண்புள்ளவராகவும் வளர்ந்தார்.
.
கல்லூரி முடித்தவுடன், 1914ல் துவங்கப்பட்ட நீதிக்கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார்.
ஒடுக்கப்பட்டமக்களின் விடுதலையின் பால் ஆர்வம் காரணமாக ராவ் சாகிப் எல்சி குருசாமி அவர்களுடன் இணைந்து சென்னை மாகாண அருந்ததியர் சங்கத்தை நிறுவி, அதன் பொதுச் செயலாளராக பொறுப்பேற்று களப்பணியாற்றினார்.
Read 15 tweets
22 Mar 19
யார் பெரியார்? #Thread
--
சமீபத்திய பொள்ளாச்சி விவகாரத்தில் கூட பெண்களின் ஒழுக்கம் பற்றி கேள்வியெழுப்பிய சனாதன மதவாத ஆண்களை செருப்பால் அடித்தவர்தான் பெரியார்.
நவீனத்தின் வளர்ச்சியடைந்திருந்தாலும் சுயசாதி உணர்வு பேசி வலம் வரும் ஆப்பாயில் இளைஞர்களை செருப்பால் அடித்து சமத்துவம் போதிக்கும் கருத்தியலின் தந்தைதான் பெரியார்.
தமிழ், தமிழன் என்று பேசும் மேடைப் பொய்யர்களின் தம்பிகளுக்கும் சேர்த்து தமிழை எளிமையாக்கி மூலை முடுக்கெல்லாம் பரவச் செய்தவர் பெரியார்.
Read 5 tweets
9 Jun 18
ஹாய் தோழர்.. நேற்றும் இன்றும் கடினமான வேலைப்பளுவில் இருந்ததால் உடனடியாக விவாதத்திற்கு வர இயலவில்லை. அபயங்கரிடம் வாள் இருந்தும், வெட்டவில்லை என்பதில் ஆரம்பித்து, எனக்கு அருகில் இருக்கும் கலைகளின் "வெறுப்பை உமிழ்பவன்" பட்டம் தந்து...
என் கமல் மேலான விமர்சனத்திற்கு பதிலடியாக காலாவை பகுதிபகுதியாக போஸ்ட்மார்ட்டம் செய்வோம் எனச்சொல்லி "அன்பே சிவம் என் மனதுக்கு நெருக்கமான சினிமா கூட கிடையாது. அதன் பாதி எழுத்து ஏற்கெனவே வெற்றி பெற்ற படம். ஆனால், எங்கள் படைப்பு எவ்வளவு உயர்வு தெரியுமா? என்றால்,
நொண்டிக் காலாவின் உண்மையை சொல்லத்தான் வேண்டியிருக்கிறது. என்றவாறு எனக்கு மென்சனிட்டு கேள்வி எழுப்பியிருந்தீங்க. ஒரு ஊடகவியலாளராக பரந்துபட்ட பார்வையோடு ஒரு சர்ச்சையை அணுகாமல், சராசரி ட்விட்டாளர் மனநிலையில் நான் கமல் மேல் சாதிய வன்மம் கொண்டவன்
Read 22 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!

:(