ஆளுநர் உரையில் தமிழீழத் தமிழர் குறித்த நிலைப்பாடு மாற்றப்பட வேண்டும்!
தமிழ்நாடு அரசிற்கு மே பதினேழு இயக்கம் கோரிக்கை
22 ஜூன் 2021

21 ஜூன் 2021-இல் தமிழ்நாட்டின் புதிய அரசின் சட்டமன்ற பொறுப்பேற்கும் முதல் அமர்வில், ஆளுநர் உரையில் குறிப்பிடப்பட்டுள்ள கர்நாடகா மேகதாதுவில்

1/
கட்டப்போகும் அணையை தடுக்கும் முயற்சி, செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்திற்கான தன்னாட்சி பாதுகாப்பு, அரசு பள்ளிகளில் படித்தவர்களுக்கு அரசு வேலைகளில் முன்னுரிமை, ஒன்றிய அரசு பணியிடங்களில், பொதுத்துறை நிறுவனங்களில் தமிழ்நாட்டைச் சார்ந்தவர்களுக்கு வேலையில் முன்னுரிமை,

2/
ஈழத்தமிழர்களுக்கான இந்தியக் குடியுரிமை ஆகிய ஒன்றிய அரசை வலியுறுத்தும் அறிவிப்புகள், வேளாண்மைக்கான தனி நிதிநிலை அறிக்கை, 69% இடஒதுக்கீட்டுக்கான பாதுகாப்பு உள்ளிட்ட முற்போக்கு முயற்சிகளை மே பதினேழு இயக்கம் வரவேற்கிறது.

அதே நேரத்தில், ஆளுநரின் இந்த உரையில், தமிழீழத் தமிழர்கள்

3/
குறித்த 15-ஆம் குறிப்பு சொல்லுகின்ற ’ஈழத் தமிழர்களுக்கு சம குடிமைசார் மற்றும் அரசியல் உரிமைகளை உறுதி செய்திட, இலங்கை அரசை அறிவுறுத்துமாறு ஒன்றிய அரசு வலியுறுத்தப்படும்’ எனும் முடிவானது, 08-06-2011-ஆம் ஆண்டு சட்டமன்ற தீர்மானம், 27-03-2013 சட்டமன்ற தீர்மானங்கள் ஆகியவற்றிற்கு

4/
மாறானதாகவும், புறம்பானதாகவும் அமைந்துள்ளது.

மேலும் இந்த முடிவானது, தி.மு.க-வின் 2019 தேர்தல் அறிக்கை 17-ம் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ள,

“இலங்கைக்கு எதிராக அமெரிக்க அரசால் கொண்டு வரப்பட்ட தீர்மானங்கள் இருமுறை ஐ.நா.மனித உரிமை ஆணையத்தால் அண்மைக் காலத்தில் ஏற்கப்பட்டன.

5/
எனவே, ஈழமண்ணில் அரங்கேற்றப்பட்ட போர்க்குற்றங்கள், இனப்படுகொலை, மனித உரிமை மீறல்கள் அனைத்தின்மீதும் பாரபட்சமற்ற விசாரணையை உடனடியாக நடத்திட ஐ.நா. அமைப்புகளும், உலகநாடுகளும் ஏற்றுக்கொள்ளூம் வகையில் உறுதியான நடவடிக்கைகளை இந்திய அரசு மேற்கொள்ள, கழகம் தொடர்ந்து வலியுறுத்தும்.”,

6/
“இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வாழ்கின்ற தமிழர்கள் மற்றும் புலம் பெயர்ந்த தமிழர்களிடம் தமிழ்ஈழப் பிரச்சனைக்கு எவ்வித நிலையான அரசியல் தீர்வுகளை அவர்கள் விரும்புகிறார்கள் என்பதைக் கண்டறிய ஐ.நா.வின் நேரடி கண்காணிப்பில் பொதுவாக்கெடுப்பு (Referendum) நடத்த, இந்திய அரசை

7/
திமுக வலியுறுத்தும்.”,

மற்றும் 2021ஆம் ஆண்டு 16வது சட்டப்பேரவைத் தேர்தல் அறிக்கையில் ‘ஈழத்தமிழர் நல்வாழ்வு’ தலைப்பின் கீழ் 13வது வாக்குறுதியாக குறிப்பிடப்பட்டுள்ள,

“இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள், போர்க் குற்றங்கள், இனப்படுகொலை ஆகியவை குறித்துச் சுதந்திரமானதும்,

8/
நம்பகத் தன்மை வாய்ந்ததுமான சர்வதேச விசாரணையை மேற்கொள்ள இந்திய அரசு உலக நாடுகளை வலியுறுத்திச் செயல்படுத்த வேண்டுமென மத்திய அரசைத் தி.மு.கழகம் தொடர்ந்து வலியுறுத்தும்.”,

14-வது வாக்குறுதியான,

“இலங்கையின் வடக்குகிழக்கு மாகாணங்களில் முழுவதும் நீர்த்துப்போன அரசியல்

8/
அதிகாரப் பங்கீடுகளே அனுமதிக்கப்பட்டுள்ளன. அங்குள்ள தமிழர்களின் விருப்பத்திற்கேற்றவாறு நிரந்தரமான அரசியல் தீர்வு அமைய இலங்கையில் உள்ள தமிழர்கள் மற்றும் புலம்பெயர்ந்த ஈழத் தமிழர்களிடையே ஐ.நா. சபையின் மேற்பார்வையில், பொதுவாக்கெடுப்பு நடத்தவும், இலங்கையில் புதிதாக உருவாக உள்ள

9/
அரசியல் அமைப்புச் சட்டத்தில் முழுமையான அதிகாரங்கள் தமிழர்களுக்குக் கிடைத்திடும் வகையில் சட்டப் பிரிவுகளை உருவாக்கவும் இலங்கை அரசை நிர்ப்பந்திக்க வேண்டுமென மத்திய அரசைத் தி.மு.கழகம் தொடர்ந்து வலியுறுத்தும்.”,

என குறிப்பிடப்பட்டுள்ள வாக்குறுதிகளில் ’இலங்கை அரசு,

10/
ஒருபோதும் நிறைவேற்றவே, செய்திடாத அதிகார பங்கீடு’ பற்றி மட்டுமான ஒன்றிய அரசை வலியுறுத்தும் நிலைப்பாடானது ஆளுநர் உரையினூடாக வெளிப்படுகிறது. இந்த நிலைப்பாடு உங்களது வாக்குறுதியின் கருப்பொருளான பொதுவாக்கெடுப்பு மற்றும் இனப்படுகொலை குற்றவாளிகள் மீதான சர்வதேச விசாரணையை

11/
வெளிப்படுத்துவதாக அமையவில்லை. இந்த கோரிக்கைகள் உள்ளடக்கப்படும் வகையில் மாற்றியமைக்கபட வேண்டுமென்பதை தங்கள் கவனத்திற்கு கொண்டு வருகின்றோம். மேலும் தமிழீழத் தமிழர்கள் அதிகாரப்பகிர்விற்காக போராடவில்லை. மாறாக, தமிழீழ தேசத்திற்காகவே போராடினார்கள் என்பதை கடந்த 40 ஆண்டுகால

12/
திமுகவின் மாநாடுகளின் தீர்மானங்களே வெளிப்படுத்தி இருக்கின்றன. மற்றும் தி.மு.கவின் ஒப்புதலோடு ஏகமனதாக கடந்த 2011 மற்றும் 2013 காலங்களில் தமிழ்நாட்டு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட,

‘ஈழத்தமிழர்களுக்கான பொதுவாக்கெடுப்பு’, ’இலங்கை அரசின் மீது சர்வதேச இனப்படுகொலைக்கான விசாரணை’,

13/
’இலங்கை அரசின் மீது பொருளாதாரத் தடை’, என இலங்கை அரசிற்கு எதிரான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன என்பதை தங்களின் கவனத்திற்கு கொண்டு வருகிறோம்.

எனவே, தமிழ்நாட்டின் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், தமிழீழத் தமிழர்கள் தொடர்பான தமிழ்நாட்டின் (மேற்சொன்ன) நீண்டநாள் கோரிக்கைகளை

14/
வலியுறுத்தி, ஒன்றிய அரசின் கொள்கை மாற்றத்தினை சாத்தியமாக்கிட வேண்டும். நீண்ட அநீதிக்குள்ளான ஈழத்தமிழர்கள், இன்றளவும் இனப்படுகொலைக்கு உள்ளாகிறார்கள். இதை புலப்படுத்தும் வகையில் 21-06-2021-இல் மட்டக்களப்பில் தமிழீழ இளைஞர் சிங்கள இராணுவத்தால் சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட

15/
செய்தியும் வந்து சேர்ந்திருக்கிறது. இது சமயம், ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்றம் இலங்கை அரசிற்கு அளித்து வந்த GSP+ (Generalised Scheme of Preferences) எனும் சலுகைகளை நிறுத்துவது தொடர்பாக முடிவெடுத்திருக்கிறது. இலங்கையில் ஈழத்தமிழர்கள் துன்புறுத்துவது தொடர்பாகவும்,

16/
மனித உரிமைகள் மீறப்படுவது தொடர்பாகவும் தமிழர்களுக்கு நேரடியாக தொடர்பற்ற ஐரோப்பிய ஒன்றியமே இம்முடிவினை துணிந்து மேற்கொள்ளும் காலகட்டத்தில் தமிழர்களின் தாய்நிலமான தமிழ்நாடும் இலங்கை அரசின் மீது நேர்மையான சமரசமற்ற முடிவுகளை இந்திய அளவில் கொண்டுவர போராட வேண்டும்.

17/
இந்நிலை சாத்தியமாகவில்லையெனில், ஆளுநர் உரையின் 34-வது குறிப்பான தமிழ்நாட்டு மீனவர்கள் பாதுகாப்பு, வாழ்வுரிமை, கைது செய்யப்படுதல், கச்சத்தீவு மீட்பு ஆகியவை கானல் நீராகும் என்பதை கடந்த கால வரலாறு நமக்கு சுட்டிக்காட்டுகிறது. இலங்கை குறித்த வெளியுறவுக் கொள்கையில்

18/
தமிழ்நாட்டின் முடிவுகள் முக்கியமானவையாகின்றன. வங்கதேசத்தின் மீதான வெளியுறவுக் கொள்கையில் மேற்கு வங்க மக்கள் ஆளுமை செலுத்துவதற்கு இணையாக தமிழ்நாடும் இலங்கை தொடர்பில் தமது நிலைப்பாடுகளை உறுதியாக வலியுறுத்தி நடைமுறைப்படுத்துவது அவசியமாகிறது. மேற்குவங்க மாநில

19/
மக்களின் பங்களிப்பினால் தங்களுக்கென தனிநாடு உருவாக்கிக் கொண்ட வங்கதேசம், இவ்வருடத்தில் 50-ஆம் ஆண்டு விடுதலை தினத்தை கொண்டாடுகிறது. தமிழ்நாடும் இவ்வாறாகவே தமிழீழம் குறித்த நிலைப்பாட்டின் மூலமாக, சனநாயகரீதியில் வலிமையான மாநிலமாக இக்காலகட்டத்தில் மாற வேண்டுமென விரும்புகிறோம்.

20/
எனவே, இந்நிலைப்பாடு தொடர்பாக உடனடியாக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களும், தமிழ்நாடு அரசும் தனது முடிவுகளை ஏற்கனவே மேற்கொண்ட கொள்கையின் அடிப்படையில் மாற்றியமைத்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென மே பதினேழு இயக்கத்தின் சார்பாக கோரிக்கை வைக்கிறோம்.

21/
திருமுருகன் காந்தி
ஒருங்கிணைப்பாளர்
மே பதினேழு இயக்கம்
22 ஜூன் 2021

2011 தீர்மானம் assembly.tn.gov.in/debates/pdfdoc…

2013 தீர்மானம் assembly.tn.gov.in/debates/pdfdoc…

அறிக்கையின் இணைப்பு:
facebook.com/thirumurugan.g…

22/22
முழு அறிக்கை:

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with மே பதினேழு இயக்கம்

மே பதினேழு இயக்கம் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @May17Movement

18 May
தமிழீழ இனப்படுகொலைக்கான நினைவுச் சின்னத்தை தமிழ்நாட்டில் எழுப்பிடுவோம்! தமிழீழம் காக்க கட்சி, சாதி, மதம் கடந்து ஒன்றுபடுவோம்! - மே பதினேழு இயக்கம்

தமிழர்களின் தாகமான தமிழீழ தாயகத்தை அடையும் நோக்கில் போராடிய தமிழர்களை இனப்படுகொலை செய்தது இலங்கை, இந்தியா, அமெரிக்கா...

1/n Image
இங்கிலாந்து, சீனா உள்ளிட்ட நாடுகள். இனப்படுகொலை நடத்தப்பட்டு 12 ஆண்டுகள் ஆன பின்பும் தமிழர்களுக்கான நீதி கானல்நீராகவே உள்ளது. ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் தமிழர்களுக்கான நீதி என கொண்டுவரப்பட்ட தீர்மானங்கள், இனப்படுகொலையாளர்களை காப்பாற்றும் முயற்சியாகவே நீடிக்கிறது.

2/n
தமிழீழ விடுதலைப் புலிகளின் கீழ் இயங்கிய தமிழீழ அரசாங்கம், மிக சிறப்பான, முற்போக்கான ஜனநாயக ஆட்சியை வழங்கியது. பிராந்திய (புவிசார்) அரசியல் நலனுக்காக தெற்காசிய அரசியலில் ஆதிக்கம் செலுத்தி வந்த ஏகாதிபத்தியத்திய நாடுகள் விடுதலைப் புலிகளின் நடைமுறை அரசிற்கு எதிராக இருந்தன.

3/n
Read 18 tweets
9 Feb
மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தியின் டிவிட்டர் கணக்கு (@thiruja) முடக்கப்பட்டுள்ளது.

மே 17 இயக்கம் தொடர்பான சமூக வலைத்தள பக்கங்கள் முடக்கப்பட்டு வரும் சூழலில், மே 17 இயக்கத்தின் முகநூல் பக்கம் மட்டுப்படுத்தப்பட்டு...

@Twitter @TwitterIndia @jack

1/11
அதில் பதிவிடப்படும் பதிவுகளை அப்பக்கத்தை பின்தொடர்பவர்களுக்கு காட்டப்படுவதில்லை. பல்லாயிரக்கணக்கான சப்ஸ்கிரைபர்களை கொண்டிருந்த மே 17 இயக்கத்தின் யூட்யூப் சேனல் நீக்கப்பட்டு, பல முக்கிய காணொளிகளை இழந்துள்ளோம். மே 17 இயக்கத்தின் பல முக்கிய தோழர்களின் கணக்குகள் தொடர்ச்சியாக...

2/11
முடக்கப்பட்டும், மட்டுப்படுத்தபட்டும் வருகின்றன.

அதே போல், தோழர் திருமுருகன் காந்தியின் தனிநபர் கணக்கை 3 முறை தடை செய்ததோடு, தற்போது தனக்கான தனிநபர் கணக்கை உருவாக்குவதை கூட முகநூல் தடுத்து வைத்துள்ளது. தோழர் திருமுருகன் காந்தியின் டிவிட்டர் கணக்கின் இணைப்பை கூட...

3/11
Read 11 tweets
9 Jan
யாழ் பல்கலைக்கழக முள்ளிவாய்க்கால் நினைவிடம் தகர்ப்பு! சர்வதேசத்தின் தோல்வியால் தமிழீழத்தில் தொடரும் தமிழினப்படுகொலை!! - மே பதினேழு இயக்கம்

தமிழீழ இனப்படுகொலையை நினைவுகூரும் வகையில் யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்தில் வைக்கப்பற்றிருந்த முள்ளிவாய்க்கால் நினைவு சின்னத்தை...

1/12
...மாணவர்களின் கடும் எதிர்ப்பையும் மீறி இரவோடு இரவாக தகர்த்தெறிந்துள்ளது சிங்களப் பேரினவாத இலங்கை அரசு! 1.5 லட்சம் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டதற்கு நீதி வேண்டி சர்வதேச சமூகத்திடம் தமிழினம் போராடி வரும் வேளையில், மீண்டும் ஆட்சிக்கு வந்த தமிழீழ இனப்படுகொலையாளர்கள்...

2/12
...சர்வதேசத்தின் முன்னியிலையே தமிழர் மீதான அடக்குமுறையை தொடர்கின்றனர். தமிழீழ கோரிக்கையை வேரோடு அழிக்க வேண்டும் என்று சிங்களப் பேரினவாத இலங்கை அரசு முனைப்போடு இருப்பதையே யாழ் பல்கலைக்கழக நினைவிடம் தகர்ப்பு உறுதிபடுத்துகிறது!

தமிழீழ இனப்படுகொலையை நினைவுகூரும் விதமாக...

3/12
Read 12 tweets
8 Jan
அஞ்சல் பணிக்கான தேர்வில் மீண்டும் தமிழ் புறக்கணிப்பு! இந்தியா ஒன்றிய அரசை வன்மையாக கண்டிக்கின்றோம்! - மே பதினேழு இயக்கம்

அஞ்சல் துறையின் கணக்கர் பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிடப்பட்டுள்ளது. இந்த பபணிக்கான தேர்வு இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே நடைபெறும் என்று...

1/8
...அறிவிக்கப்பட்டுள்ளது. இது தமிழர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. இனி அஞ்சல் துறை தேர்வு தமிழ் உள்ளிட்ட அனைத்து மாநில மொழிகளும் தேர்வு நடத்தப்படும் என்று கடந்த முறை உறுதியளித்ததற்கு மாறாக, தற்போது தேர்வில் மீண்டும் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டுள்ளது. மத்திய பாஜக அரசின்...

2/8
...இந்த உறுதி மீறலை மே பதினேழு இயக்கம் வன்மையாக கண்டிக்கின்றது.

கடந்த 2019 ஆண்டு அஞ்சல் துறை பணிகளுக்கான தேர்வானது வழக்கத்தை மீறி தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டு, கடும் எதிர்ப்புகளையும் சந்தித்து, இந்தி மற்றும் ஆங்கிலத்தில் நடத்தப்பட்டது. பின்னர் எதிர்ப்புகள் அதிகரிக்க...

3/8
Read 8 tweets
1 Jan
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழக வேலைவாய்ப்பில் OBC, SC/ST பிரிவினருக்கு இடஒதுக்கீடு மறுப்பு! இந்திய அரசை வன்மையாக கண்டிக்கின்றோம்! – மே17 இயக்கம்

ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் (Indian Council of Medical Research - ICMR)...

1/11
அதன் கீழ் செயல்படும் பல்வேறு நிறுவங்களுக்கான D மற்றும் E நிலை அறிவியலாளர்களின் 65 பணியிடங்களுக்கு நேரடி ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியிட்டிருந்தது. அதிர்ச்சி என்னவெனில், அரசு பணிகளான இவற்றிற்கு இடஒதுக்கீடு இல்லை என்பதே! மருத்துவ படிப்பை தொடர்ந்து, மருத்துவ பணியிடங்களுக்கும்...

2/11
இட ஒதுக்கீட்டை தொடர்ந்து மறுக்கும் பாஜக-மோடி அரசை மே 17 இயக்கம் வன்மையாக கண்டிக்கிறது.

மருத்துவ படிப்பில் BC, MBC பிரிவினருக்கான 50% இடஒதுக்கீட்டை உச்சநீதிமன்றம் வரை சென்று மறுத்த பாஜக அரசு, தற்போது மருத்துவ ஆராய்ச்சி சார்ந்த பணிகளுக்கு SC, ST, BC, MBC பிரிவினருக்கு...

3/11
Read 11 tweets
29 Sep 20
இந்துத்துவ மோடி அரசே! தொழிலாளர்களை வஞ்சிக்கும் புதிய தொழிலாளர்கள் சட்டத்தை உடனடியாக கைவிடு! மே17 இயக்கம்

கொரோணா பெருந்தொற்றை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு மாநில அரசுகளின் உரிமைகளை பறிப்பது, விவசாயிகள் தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களின் அடிப்படை வாழ்வாதார...

1/9
...உரிமைகளை பறித்து அதை முதலாளிகளுக்கு ஏகபோகமாக பகிர்ந்தளிக்கும் வேலையை இந்த மோடி அரசு திட்டமிட்டு செய்து வருகிறது. அதன்படிதான் நாட்டில் உள்ள அனைத்து தொழிலாளர்களையும் பாதிக்கும் விதமாக தொழிலாளர் விரோத சட்டங்களை மோடி அரசு நிறைவேற்றி இருக்கிறது.

2/9
நாட்டில் தொழிலாளர்கள் நலனைக் காப்பதற்காக இதுவரை இருந்த 44 சட்டங்களையும் சுருக்கி நான்கு சட்டங்களாக மாற்றி அதனை உறுப்பினர்கள் யாரும் இல்லாத நேரத்தில் நிறைவேற்றியிருக்கிறது மோடி அரசு.

1) இந்த சட்டத்தின்படி ஏற்கனவே 100க்கும் அதிகமான தொழிலாளர்களை பணியில் அமர்த்தி உள்ள...

3/9
Read 9 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!

:(