கூடங்குளத்தில் 5, 6வது அணு உலைகள் மற்றும் அணுக்கழிவு மையம் அமைக்கப்படுவது உடனடியாக தடுத்து நிறுத்தப்பட வேண்டும்! - மே17 இயக்கம்
நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் தமிழர்களின் கடும் எதிர்ப்பை மீறி கொண்டுவரப்பட்ட முதல் 2 அணு உலைகள் சரிவர செயல்படாத நிலையில், @CMOTamilnadu@mkstalin 1/
மக்களின் எதிர்ப்பை புறந்தள்ளிவிட்டு 3 மற்றும் 4வது என மேலும் இரண்டு உலைகளுக்கு அனுமதியளித்து அதன் கட்டுமானப்பணிகள் பாதியளவு நிறைவடைந்துள்ளன. இது தென் தமிழ்நாட்டு மக்களின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கியுள்ள நிலையில், தற்போது கூடங்குளம் அணு உலை வளாகத்தில் 5வது 6 வது என
2/
மேலும் இரண்டு அணு உலைகளை அனுமதித்து அதற்கான கட்டுமானப்பணிகள் துவங்கியுள்ளனர். மக்களின் பாதுகாப்பு குறித்து கவலைகொள்ளாமல், மக்களின் குரலை உதாசீனப்படுத்தி, அணு உலைகளை அதிகரித்துக்கொண்டே செல்லும் இந்திய ஒன்றிய அரசின் போக்கை மே பதினேழு இயக்கம் வன்மையாக கண்டிக்கிறது.
3/
கூடங்குளத்தில் அணு உலை அமைக்க ரசியாவுடன் ஒப்பந்தம் போடப்பட்ட நாள் முதல் இன்று வரை கூடங்குளம் அணு உலைகளுக்கு எதிராக அதன் சுற்றுவட்டார மக்கள் 30 ஆண்டுகளுக்கு மேலாக போராடி வருகின்றனர். மக்களின் கடும் எதிர்ப்பை மீறி முதல் அணு உலைகள் கட்டி முடிக்கப்பட்டு
4/
செயல்பாட்டுக்கு வரும் வேளையில் இந்த எதிர்ப்பு உச்சநிலையை அடைந்தது. தமிழ்நாடு முழுவதும் அணு உலையை திறப்பதற்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்றன. மே பதினேழு இயக்கம் பல போராட்டங்களை முன்னின்று நடத்தியும், பல போராட்டங்களில் பங்கேற்கவும் செய்தது.
5/
அணு சக்திக்கெதிரான மக்கள் இயக்கம் சார்பாக இடிந்தகரையில் 1000 நாட்களை தாண்டியும் தொடர் போராட்டம் நடைபெற்றது. அத்தனை எதிர்ப்புகளையும் புறந்தள்ளிய இந்திய ஒன்றிய அரசும் தமிழ்நாடு அரசும், அணு உலைகளை திறந்ததோடு, 4வது 5வது அணு உலைகளுக்கும் அனுமதியளித்து கட்டுமானப் பணிகளை துவங்கியது.
6/
முதல் இரண்டு அணு உலைகள் முறையே 2013 மற்றும் 2016-இல் மின் உற்பத்தியை துவங்கியது முதல் இன்று வரை அதன் முழு கொள்ளளவில் இயக்கப்பட்டதே இல்லை. மேலும், பல முறை தொழில்நுட்ப கோளாறு காரணமாக பல மாதங்கள் வரை இயக்கப்படாமல் இருந்துள்ளன. அணு உலை தொழில்நுட்பத்தை அளித்த ரசியா,
7/
அதன் பாதுகாப்பு பொறுப்பிலிருந்து விலகிக்கொள்ள, இந்திய அரசோ பொறுப்பை எடுத்துக்கொள்ள சிரத்தை எடுக்கவில்லை. அணு உலை கழிவுகளை பாதுகாப்பாக சேமித்து வைக்கும் கூடத்தை இதுவரை அமைக்காததும், AFR எனப்படும் அணு உலைக்கு அருகில் அமைக்கப்படக் கூடாது என்ற முக்கிய பாதுகாப்பு விதியை மீறி,
8/
கூடங்குளம் அணு உலை வளாகத்திலேயே அணுக்கழிவு சேமிப்பு கூடம் அமைக்கப்படும் என்று இந்திய அணுசக்திக் கழகம் கூறியுள்ளது. மேலும், அணுக்கழிவு கூடம் அமைத்தல், அணுக்கழிவை கையாளுதல், மறுசுழற்சி செய்தல் போன்றவற்றிற்கான தொழில்நுட்ப அறிவு இந்திய அறிவியலாளர்களுக்கு இல்லை என்று
9/
இந்திய அணுசக்திக் கழகமே உச்சநீதிமன்றத்தில் கூறியுள்ளது.
இப்படியாக முதல் 2 அணு உலைகளின் பாதுகாப்பு குறித்த குளறுபடிகளே தீர்க்கப்படாத நிலையில், 4வது 5வது என மேலும் இரண்டு அணு உலைகளுக்கு அனுமதியளித்து கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்படுவதுடன், தற்போது 5வது 6வது அணு உலைகளுக்கு
10/
அனுமதி அளித்து கட்டுமானப்பணிகள் துவங்கியுள்ளன. ஜப்பானின் ஃபுகிஷிமா அணுஉலை விபத்து ஏற்படுத்திய தாக்கமும், கதிரியக்கம் பாதித்த பொருட்களை கையாள முடியாமல் தொழில்நுட்பத்தில் முன்னேறிய ஜப்பான் நாடே இன்று வரை திணறுவதை காண்கிறோம். அந்நிகழ்விற்கு பிறகு, அணுஉலை தொழில்நுட்பத்தை மறுத்து
11/
உலக நாடுகள் இயற்கை முறையிலான மறுசுழற்சி ஆற்றலை நோக்கி செல்ல துவங்கிவிட்டது. ஆனால், இந்தியாவோ அணு உலைகளை அதிகரித்துக்கொண்டே செல்வது, ஒன்றிய அரசிற்கு மக்கள் மீது, குறிப்பாக தமிழர்கள் மீது அக்கறையில்லை என்பதையே காட்டுகிறது.
புவிசார் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில்
12/
இது போன்று ஒரே இடத்தில் பல அலகுகளை கொண்ட அணு உலைப் பூங்கா அமைப்பது நாட்டின் பாதுகாப்பிற்கு, குறிப்பாக தமிழ்நாட்டின் பாதுகாப்பிற்கு மிகவும் அச்சுறுத்தலானது. தென் தமிழ்நாட்டின் 3 மாவட்டங்களில் 70 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்களின் பாதுகாப்பு இதன்மூலம் கேள்விக்குறியாகியுள்ளது.
13/
2017ம் ஆண்டு குஜராத் மாநிலத்தில் அமையவிருந்த 6000 மெகாவாட் அணுஉலை பூங்கா, மக்களின் கடும் எதிர்ப்பு காரணமாக ஆந்திரா மாநிலத்திற்கு மாற்றப்பட்டது. ஆனால், தமிழர்கள் எவ்வளவு போராடினாலும் கூடங்குளத்தில் அணுஉலைகளை ஒன்றிய அரசு அதிகரித்துக்கொண்டே செல்வது உள்நோக்கம் உடையதாக தெரிகிறது.
14/
"ஹைட்ரோகார்பன், மீத்தேன், நியூட்ரினோ, கூடங்குளம் போன்ற அணுஉலைகள், சேலம் 8 வழிச்சாலை இதையெல்லாம் மத்திய அரசு தமிழகத்தின் மீது நடத்தக்கூடிய ரசாயன தாக்குதலாக அமைந்திருக்கிறது" என்று, கடந்த மார்ச் 28 அன்று சேலம் சீலநாயக்கன்பட்டியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது
15/
தற்போதைய முதலமைச்சர் மாண்புமிகு மு.க. ஸ்டாலின் அவர்கள் கூறியதை நினைவில் கொள்ள வேண்டும்.
முதல் இரண்டு அணு உலைகளே பாதுகாப்பற்ற சூழலை உண்டாக்கியுள்ள நிலையில், கூடங்குள அணு உலை வளாகத்தில் மேற்கொண்டு அணு உலைகள் அமைக்கப்படுவதை தமிழ்நாடு அரசு தடுக்க வேண்டும்.
16/
5வது, 6வது அணு உலை கட்டுமானப்பணிகளை துவக்கத்திலேயே தடுத்து நிறுத்துவதோடு மட்டுமல்லாமல், பாதி முடிக்கப்பட்ட 3வது 4வது அணு உலை கட்டுமானப் பணிகளையும் தடுத்து நிறுத்த தமிழ்நாடு அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டுமென மே பதினேழு இயக்கம் வலியுறுத்துகிறது.
17/
பாதுகாப்பற்ற முறையில், தமிழ்நாட்டை மேலும் வஞ்சிக்கும் வகையில் அணு உலை வளாகத்திலேயே அணுக்கழிவு மையம் அமைக்கப்படுவதும் தடுக்கப்பட வேண்டும்.
கூடங்குளம் அணு உலை வளாகம் மூடப்படுவதே தமிழர்களுக்கு பாதுகாப்பான சூழலை கொடுக்கும். இந்தியாவில் அதிக காற்றாலைகள் கொண்ட இப்பகுதியில்,
18/
காற்றாலைகள் மூலம் அதே அளவிலான மின்சாரத்தை மறுசுழற்சி ஆற்றலாக பெற முடியும் எனும் போது, ஆபத்தான அணு உலைகள் ஏன் தேவை என்ற கேள்வி எழுகிறது. உலகம் மறுசுழற்சி ஆற்றலை நோக்கி செல்லும் போது, நாம் எதிர் திசையில் பயணிப்பது அறிவியல்பூர்வ செயலாகவோ, சுற்றுச்சூழலுக்கு
19/
நன்மைபயக்கக்கூடிய செயலாகவோ இருக்க முடியாது. மக்களின் நீண்டகால போராட்ட உணர்விற்கு மதிப்பளித்து, கூடங்குளம் அணு உலை வளாகத்தை இழுத்து மூட நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டுமென தமிழ்நாடு அரசை மே பதினேழு இயக்கம் கேட்டுக்கொள்கிறது.
சாதி ஆதிக்க வெறிக்கு பலியான மேலவளவு முருகேசன் உள்ளிட்ட தியாகிகளுக்கு வீர வணக்கம்- மே பதினேழு இயக்கம்.
தமிழ்ச் சமூகத்தை கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளாக அடிமைபடுத்த பார்ப்பனியம் புகுத்திய தீமைதான் சாதி. இந்த சாதி எனும் தீமையை சுமந்து கொண்டு திரிபவர்களால் கடந்த காலங்களில்...
(1)
தமிழ் சமுகத்தில் நடந்தேறிய கொடூரங்கள் அதிகம். அப்படி 1996 மதுரை மாவட்டம் மேலூரில் மேலவளவு கிராமத்தில் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு தலித் மக்கள் நின்றார்கள் என்ற காரணத்திற்காக 8 பேர் ஆதிக்கசாதி வெறியினால் படுகொலை செய்யப்பட்ட நாள் இன்று (ஜூன் 30).
(2)
தமிழர்களுக்குள் ஒரு பிரிவினர் தொட்டால் தீட்டு பார்த்தால் தீட்டு என்ற படிநிலையை வைத்துக்கொண்டு நாம் ஒரு நாளும் தமிழர்களின் உரிமை போராட்டத்தில் அடுத்த கட்டத்தை நோக்கி ஒரு அங்குலம் கூட நகர்ந்து விட முடியாது. ஆகவே தமிழர்கள் தங்களுடைய அடிப்படை உரிமைகளை வென்றெடுக்க வேண்டும்.
(3)
ஆளுநர் உரையில் தமிழீழத் தமிழர் குறித்த நிலைப்பாடு மாற்றப்பட வேண்டும்!
தமிழ்நாடு அரசிற்கு மே பதினேழு இயக்கம் கோரிக்கை
22 ஜூன் 2021
21 ஜூன் 2021-இல் தமிழ்நாட்டின் புதிய அரசின் சட்டமன்ற பொறுப்பேற்கும் முதல் அமர்வில், ஆளுநர் உரையில் குறிப்பிடப்பட்டுள்ள கர்நாடகா மேகதாதுவில்
1/
கட்டப்போகும் அணையை தடுக்கும் முயற்சி, செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்திற்கான தன்னாட்சி பாதுகாப்பு, அரசு பள்ளிகளில் படித்தவர்களுக்கு அரசு வேலைகளில் முன்னுரிமை, ஒன்றிய அரசு பணியிடங்களில், பொதுத்துறை நிறுவனங்களில் தமிழ்நாட்டைச் சார்ந்தவர்களுக்கு வேலையில் முன்னுரிமை,
2/
ஈழத்தமிழர்களுக்கான இந்தியக் குடியுரிமை ஆகிய ஒன்றிய அரசை வலியுறுத்தும் அறிவிப்புகள், வேளாண்மைக்கான தனி நிதிநிலை அறிக்கை, 69% இடஒதுக்கீட்டுக்கான பாதுகாப்பு உள்ளிட்ட முற்போக்கு முயற்சிகளை மே பதினேழு இயக்கம் வரவேற்கிறது.
அதே நேரத்தில், ஆளுநரின் இந்த உரையில், தமிழீழத் தமிழர்கள்
3/
தமிழீழ இனப்படுகொலைக்கான நினைவுச் சின்னத்தை தமிழ்நாட்டில் எழுப்பிடுவோம்! தமிழீழம் காக்க கட்சி, சாதி, மதம் கடந்து ஒன்றுபடுவோம்! - மே பதினேழு இயக்கம்
தமிழர்களின் தாகமான தமிழீழ தாயகத்தை அடையும் நோக்கில் போராடிய தமிழர்களை இனப்படுகொலை செய்தது இலங்கை, இந்தியா, அமெரிக்கா...
1/n
இங்கிலாந்து, சீனா உள்ளிட்ட நாடுகள். இனப்படுகொலை நடத்தப்பட்டு 12 ஆண்டுகள் ஆன பின்பும் தமிழர்களுக்கான நீதி கானல்நீராகவே உள்ளது. ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் தமிழர்களுக்கான நீதி என கொண்டுவரப்பட்ட தீர்மானங்கள், இனப்படுகொலையாளர்களை காப்பாற்றும் முயற்சியாகவே நீடிக்கிறது.
2/n
தமிழீழ விடுதலைப் புலிகளின் கீழ் இயங்கிய தமிழீழ அரசாங்கம், மிக சிறப்பான, முற்போக்கான ஜனநாயக ஆட்சியை வழங்கியது. பிராந்திய (புவிசார்) அரசியல் நலனுக்காக தெற்காசிய அரசியலில் ஆதிக்கம் செலுத்தி வந்த ஏகாதிபத்தியத்திய நாடுகள் விடுதலைப் புலிகளின் நடைமுறை அரசிற்கு எதிராக இருந்தன.
3/n
அதில் பதிவிடப்படும் பதிவுகளை அப்பக்கத்தை பின்தொடர்பவர்களுக்கு காட்டப்படுவதில்லை. பல்லாயிரக்கணக்கான சப்ஸ்கிரைபர்களை கொண்டிருந்த மே 17 இயக்கத்தின் யூட்யூப் சேனல் நீக்கப்பட்டு, பல முக்கிய காணொளிகளை இழந்துள்ளோம். மே 17 இயக்கத்தின் பல முக்கிய தோழர்களின் கணக்குகள் தொடர்ச்சியாக...
2/11
முடக்கப்பட்டும், மட்டுப்படுத்தபட்டும் வருகின்றன.
அதே போல், தோழர் திருமுருகன் காந்தியின் தனிநபர் கணக்கை 3 முறை தடை செய்ததோடு, தற்போது தனக்கான தனிநபர் கணக்கை உருவாக்குவதை கூட முகநூல் தடுத்து வைத்துள்ளது. தோழர் திருமுருகன் காந்தியின் டிவிட்டர் கணக்கின் இணைப்பை கூட...
யாழ் பல்கலைக்கழக முள்ளிவாய்க்கால் நினைவிடம் தகர்ப்பு! சர்வதேசத்தின் தோல்வியால் தமிழீழத்தில் தொடரும் தமிழினப்படுகொலை!! - மே பதினேழு இயக்கம்
தமிழீழ இனப்படுகொலையை நினைவுகூரும் வகையில் யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்தில் வைக்கப்பற்றிருந்த முள்ளிவாய்க்கால் நினைவு சின்னத்தை...
1/12
...மாணவர்களின் கடும் எதிர்ப்பையும் மீறி இரவோடு இரவாக தகர்த்தெறிந்துள்ளது சிங்களப் பேரினவாத இலங்கை அரசு! 1.5 லட்சம் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டதற்கு நீதி வேண்டி சர்வதேச சமூகத்திடம் தமிழினம் போராடி வரும் வேளையில், மீண்டும் ஆட்சிக்கு வந்த தமிழீழ இனப்படுகொலையாளர்கள்...
2/12
...சர்வதேசத்தின் முன்னியிலையே தமிழர் மீதான அடக்குமுறையை தொடர்கின்றனர். தமிழீழ கோரிக்கையை வேரோடு அழிக்க வேண்டும் என்று சிங்களப் பேரினவாத இலங்கை அரசு முனைப்போடு இருப்பதையே யாழ் பல்கலைக்கழக நினைவிடம் தகர்ப்பு உறுதிபடுத்துகிறது!
அஞ்சல் பணிக்கான தேர்வில் மீண்டும் தமிழ் புறக்கணிப்பு! இந்தியா ஒன்றிய அரசை வன்மையாக கண்டிக்கின்றோம்! - மே பதினேழு இயக்கம்
அஞ்சல் துறையின் கணக்கர் பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிடப்பட்டுள்ளது. இந்த பபணிக்கான தேர்வு இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே நடைபெறும் என்று...
1/8
...அறிவிக்கப்பட்டுள்ளது. இது தமிழர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. இனி அஞ்சல் துறை தேர்வு தமிழ் உள்ளிட்ட அனைத்து மாநில மொழிகளும் தேர்வு நடத்தப்படும் என்று கடந்த முறை உறுதியளித்ததற்கு மாறாக, தற்போது தேர்வில் மீண்டும் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டுள்ளது. மத்திய பாஜக அரசின்...
2/8
...இந்த உறுதி மீறலை மே பதினேழு இயக்கம் வன்மையாக கண்டிக்கின்றது.
கடந்த 2019 ஆண்டு அஞ்சல் துறை பணிகளுக்கான தேர்வானது வழக்கத்தை மீறி தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டு, கடும் எதிர்ப்புகளையும் சந்தித்து, இந்தி மற்றும் ஆங்கிலத்தில் நடத்தப்பட்டது. பின்னர் எதிர்ப்புகள் அதிகரிக்க...
3/8