A thread on Digital Marketing, Types, Certifications and Job opportunities: 👇
டிஜிட்டல் மார்க்கெட்டிங், அதன் வகைகள், பாட சான்றிதழ்கள் மற்றும் வேலை வாய்ப்புகள் குறித்த ஒரு பதிவு:
இந்த மார்க்கெட்டிங் இல்லைனா ஒரு பொருட்களையும் விற்க முடியாது, எந்த பொருள் வேணாலும் எடுத்துக்கோங்க, எல்லாத்துக்கும் நமக்கு ஒரு விளம்பரம் தேவைபடுகிறது. விளம்பரம் எப்படி வேணா இருக்கும் டிவி AD, ஒருத்தர் சொல்லி, பத்திரிகை, வீடியோ, மின்னஞ்சல்... பல வழியில் நமக்கு வருகிறது.
உ: ஒரு தொழில் நிறுவனம் அவங்க தயாரிக்கும் பொருட்களை அல்லது சேவைகளை வாடிக்கையாளர்களுக்கு சொல்லணும். அதை அவங்க விளம்பரமாகச் செய்யாவிட்டால், அவங்க தயாரிப்புகள் என்ன, சேவைகள் என்ன என்று வாடிக்கையாளர்களுக்குத் தெரியாது.
அவங்க தயாரிப்புகள் அல்லது சேவைகளைப் பற்றி வாடிக்கையாளர்களுக்கு சொல்ல, அவங்க பல மார்க்கெட்டிங் யுக்திகளை கையாள வேண்டும்.
பொருட்களை அல்லது சேவைகளை சந்தைப்படுத்தும் யுக்திகள் ஒவ்வொரு காலத்திலும் மாறிக்கொண்டே இருக்கிறது. அதுவும் இந்த டிஜிட்டல் காலத்தில், இன்டர்நெட் மூலம் சந்தைப்படுத்தும் யுக்திகள் தவிர்க்க முடியாதவை. மின்னணு ஊடகங்கள் வழியாக சந்தைப்படுத்துதல் தான் டிஜிட்டல் மார்க்கெட்டிங் ஆகும்.
பாரம்பரிய மார்க்கெட்டிங் (Traditional Marketing) என்னனா?
பொருட்களை அல்லது சேவைகளை பொதுவான ஒரு விளம்பரம் மூலம் மார்க்கெட்டிங் செய்வது (தொலைக்காட்சி விளம்பரங்கள், செய்தித்தாளில் விளம்பரங்கள், துண்டுப்பிரசுர விநியோகித்தல் மற்றும் விளம்பரப் பலகைகள்).
டார்கெட்டட் மார்க்கெட்டிங்(Targeted Marketing) என்னனா? சரியான வாடிக்கையாளரிடம் சரியான நேரத்தில் அவர்களுக்கு தேவையான பொருட்களை விளம்பரம் செய்வது தான் கூடுதல் பயனுள்ள முறையாக இருக்கிறது. இது நுகர்வோர் பொருட்கள்,சேவைகள், மின்னணு பொருட்கள் என எல்லா சந்தைப் பொருட்களுக்கும் பொருந்தும்.
இந்த கொரோனா தொற்று பல சில்லறை விற்பனையாளர்களை தங்களது வணிகங்களை மறுபரிசீலனை செய்ய மற்றும் மறுவடிவமாக்கக் கட்டாயப்படுத்தியுள்ளது. இந்த சூழ்நிலையில், விற்பனையாளர்கள் இணையம் மூலம் அதிக வாடிக்கையாளர்களைச் சென்றடைய முடியும்.
ஸ்மார்ட்போன்கள் மற்றும் இணைய வளர்ச்சி இன்று டிஜிட்டல் மார்க்கெட்டிங் ஆதிக்கத்திற்குக் கணிசமாகப் பங்களித்துள்ளது. டிஜிட்டல் மார்க்கெட்டிங் மூலம் சந்தைப்படுத்துபவர்களுக்கு மிகவும் செலவு குறைந்த மார்க்கெட்டிங்யை உருவாக்கியுள்ளது.
2021 முதல் இணையவழி தளங்களைக் கொண்டு செய்யும் வணிகங்கள் அதிகரிக்கும். டிஜிட்டல் மார்க்கெட்டிங் கடந்த இரண்டு ஆண்டுகளில் மிகவும் பிரபலமான தொழிலாக மாறிவிட்டது.
டிஜிட்டல் மார்க்கெட்டிங் என்பது ராக்கெட் அறிவியல் அல்ல, மிகவும் எளிமையானது மற்றும் அடிப்படை கணினி அறிவு உள்ள எவரும் நல்ல டிஜிட்டல் மார்க்கெட்டராக முடியும்.
உதாரணமாக, ஒருவருடைய buying behaviour முதலான தகவல்களைச் சேகரிக்கப் பல apps மற்றும் tools உள்ளன. இவ்வாறு திரட்டிய தகவல்கள் மூலம், சரியான வாடிக்கையாளரை சரியான சமயத்தில் அணுகி பொருட்களைச் சந்தைப்படுத்தலாம்.
Data Science மற்றும் Artificial Intelligence இந்த டிஜிட்டல் மார்கெட்டிங்கில் அதிமுக்கியமான பங்கை வகிக்கிறது. Consumer Behavior, Search Pattern மற்றும் buying behaviour என்று பல சமூக வலைதளைகளிடமிருந்து திரட்டப்படும் தகவல்களை ஆராய்ந்து, தங்களுக்குத் தேவையான பொருட்களையோ, சேவைகளையோ
எவ்வாறு தேடுகிறார்கள் என்பதைக் கண்டறிந்து மார்க்கெட்டர்களுக்கு தெரிவிப்பதில் இந்த Data Science மற்றும் Artificial Intelligence பெரிதும் உதவுகிறது. அவ்வாறு திரட்டப்பட்ட தகவல் மூலம் ஒருவருடைய வயது, பாலினம், ஆர்வம், முக்கிய வார்த்தைகள், வலைத்தளங்கள், இடம், போன்றவற்றை வைத்து
வாடிக்கையாளர்களை டிஜிட்டல் மார்க்கெட்டிங் துல்லியமாகக் குறிவைக்கிறது. வணிக உரிமையாளர்கள் குறிப்பிட்ட வயது ஆண்களுக்கு மட்டுமே விளம்பரங்களைக் காட்ட விரும்பினால் விளம்பரங்களைக் குறிப்பிட்ட வயது ஆண்களுக்கு மட்டுமே தெரியும்படி டிஜிட்டல் மார்க்கெட்டிங்கில் வரையறுக்கலாம்.
டிஜிட்டல் மார்க்கெட்டிங் வகைகள்:
டிஜிட்டல் மார்கெட்டிங்கில் பல வகைகள் உள்ளன, அவற்றில் மிக முக்கியமான வகைகள், இதில் ஒவ்வொரு வகையிலும் தனி நுட்பங்கள் மற்றும் வகைகள் உள்ளன:
1Search Engine Optimization:
ஒரு நிறுவனத்தின் வலைத்தளத்தை search engine பக்கங்களில் தரவரிசை மேம்படுத்துவதாகும். அதாவது நம்ம ஒரு பொருளை தேடினால், முதல் வலைத்தளமான வர வைப்பது. முதலில் எந்த வலைதளம் வருதோ அதைதான் நம்ம கிளிக் செய்வோம். இதன் மூலம் வலைத்தளம் போக்குவரத்து அதிகரிக்கும்.
2. Social Media Marketing:
ஒரு நிறுவனத்தின் பொருட்களை அல்லது சேவைகளை விழிப்புணர்வை அதிகரிக்கவும், வலைத்தளம் போக்குவரத்தை அதிகரிக்கவும், நிறுவனத்தின் வணிகத்திற்கான வழிவகைகளை உருவாக்கவும் சமூக ஊடக சேனல்களில் மூலம் ஊக்குவிக்கிறது.
3. Pay Per Click Marketing:
PPC என்பது நிறுவனத்தின் விளம்பரத்தை கிளிக் செய்யும் ஒவ்வொரு முறையும் வெளியீட்டாளருக்குப் பணம் செலுத்து. இதன் மூலம் நிறுவனத்தின் வலைத்தளத்திற்குப் போக்குவரத்தை அதிகரிக்கும் ஒரு முறையாகும்.
4. Content Marketing:
ஒரு நிறுவனத்தின் வலைப்பதிவில் கட்டுரைகளை எழுதுவதும் வெளியிடுவதும் மூலம் பிராண்ட் விழிப்புணர்வு, வலைத்தளத்திற்குப் போக்குவரத்தை அதிகரிக்கும், இதன் மூலம் வாடிக்கையாளர்களை உருவாக்கவும் ஈர்க்கவும் உதவுகிறது.
5. Affiliate Marketing:
இது ஒரு நிறுவனத்தின்/நபரின் வலைத்தளத்தில் வேறொரு ஒரு நிறுவனத்தின் தயாரிப்புகள் அல்லது சேவைகளைப் பற்றிய விளம்பரம் மற்றும் விற்பனை செய்வதின் மூலம் கமிஷனைப் பெறுவார்கள். உதாரணமாக – Amazon & Meesho Affiliate Marketing.
6. eMail Marketing:
நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களிடம் தங்களது பொருட்களின் மீதான தள்ளுபடிகள் மற்றும் வணிக நிகழ்வுகளைப் பற்றிக் கூறவும், வணிகத்தின் வலைத்தளத்தை நோக்கி மக்களை ஈர்க்கவும் மின்னஞ்சல் பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது.
7. Video Marketing:
காணொளி மார்க்கெட்டிங் என்பது நிறுவனத்தின் பிராண்ட், தயாரிப்பு அல்லது சேவைகளை வீடியோ மூலம் விற்பனை செய்ய உதவுகிறது. உதாரணமாக – You Tube, Tik Tok , Moj….
8. Influencer/Sponsor Marketing:
ஒரு செல்வாக்கு மிக்கவர் (Influencer) மூலம் ஒரு நிறுவனத்தின் பிராண்டை விளம்பரப்படுத்தவும் அல்லது விளம்பரதாரர் (Sponsor) மூலம் பிராண்டை விளம்பரப்படுத்தவும் உதவுகிறது.
9Marketing Automation:
ஒரு மென்பொருள் மூலம் நிறுவனத்தின் தினசரி மார்க்கெட்டிங் பதிவுகளை நிறுவனத்தின் வலைத்தளத்தில் தானாகவே பதிவு இடுவதும் மற்றும் மின்னஞ்சல்களை வாடிக்கையாளர்களுக்கு மின்னஞ்சல்களை அனுப்புவது போன்ற தொடர்ச்சியான பணிகளை இந்த செயல்முறையின் மூலம் தானாகவே செய்ய முடியும்
டிஜிட்டல் மார்க்கெட்டிங் வேலைக்கான நன்மைகள்:
- டிஜிட்டல் மார்க்கெட்டிங் படிப்புகள் இணையம் மற்றும் டிஜிட்டல் சந்தைப்படுத்தல் கருவிகளைப் பயன்படுத்துவதன் மூலம் பல்வேறு வகையான சந்தைப்படுத்தல் நுட்பங்களை கற்றுக்கொள்ளலாம்.
பாரம்பரிய சந்தைப்படுத்தல் முறைகள் மூலம் எட்டுவதை விட அதிக எண்ணிக்கையிலான மக்களை அணுக டிஜிட்டல் மார்க்கெட்டிங் உதவுகின்றன.
தனியார் மற்றும் அரசு நிறுவனங்கள் தங்கள் நிறுவனத்திற்கு டிஜிட்டல் சந்தைப்படுத்துபவர்களை நியமிக்கின்றன. எனவே, டிஜிட்டல் மார்க்கெட்டிங் படிப்புகள் பற்றி அறிந்த எவருக்கும் நிச்சயமாக டிஜிட்டல் மார்க்கெட்டிங் வேலை கிடைக்கும்.
-உலகம் மேலும் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு வருவதால், டிஜிட்டல் மார்க்கெட்டிங் படிப்புகளின் தேவை நாளுக்கு நாள் அதிகரிக்கும் எனவே டிஜிட்டல் மார்க்கெட்டருக்கான வாய்ப்பு சந்தையில் அதிகமாக உள்ளது.
-ஃப்ரீலான்ஸ் அல்லது பகுதி நேர வேலை வாய்ப்புகள், மற்றும் பல்வேறு துறைகளைப் பற்றி ஆராயலாம்.
டிஜிட்டல் மார்க்கெட்டிங்-யில் நீங்கள் பணியாற்றத் தொடங்குவதற்கு முன், அதன் வரம்புகள்: 1. விலை வெளிப்படைத்தன்மை (transparency) மற்றும் விலை போட்டி 2. தொழில்நுட்பத்தைச் சார்ந்திருத்தல் 3. எளிதில் எதிர்மறை சந்தைப்படுத்தல் (Negative Marketing and Anti Branding) உருவாக்க முடியும்.
டிஜிட்டல் மார்க்கெட்டிங் படிப்புகள் மற்றும் தகுதிகள்:
சான்றிதழ்கள்+டிப்ளோமா+யுஜி படிப்புகளுக்கு- 10 அல்லது +12 ஆம் வகுப்பு படித்திருக்கவேண்டும்.
பி.ஜி. படிப்புகளுக்கு-எந்தவொரு இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.இது ஒவ்வொரு பயிற்சி மையங்களையும் அடிப்படையாகக் கொண்டு தகுதி மாறும்.
முக்கியமான டிஜிட்டல் மார்க்கெட்டிங் சான்றிதழ்கள் மற்றும் அதற்கான கட்டணங்கள்:
கூகுள் சான்றிதழ்கள் தேர்வை எடுக்க, நீங்கள் உங்கள் Google கணக்கில் நுழைந்து Google Skill Shop செல்ல வேண்டும். URL கிளிக் செய்க: skillshop.exceedlms.com/student/catalog
யூடியூப் யில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் தொடர்பாக நெறைய வீடியோக்கள் இருக்கிறது, பார்த்து, படித்து, பயன் பெறுக.
மேல சொன்னதுல நிறுவனம் பதிலா கடை, தொழில் எதை வேணாலும் போட்டுக்கொள்ளுங்கள். டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயன்படுத்தி உங்கள் தொழில், வணிகம், கடை, ஆகியவற்றை மேம்படுத்தவும்.
கல்லூரி மாணவர்கள், பகுதி நேர வேலை வாய்ப்புகள் மற்றும் புதிதாக வேலை தேடுபவர்கள், சந்தைப்படுத்தல் வல்லுநர்கள், தொழில் மாற்றம் விரும்புபவர்கள், இல்லத்தரசிகள், தொழில் முனைவோர் மற்றும் வணிக உரிமையாளர்கள் தங்களது புதிய தொழிலாக டிஜிட்டல் மார்கெட்டிங்கைத் தேர்வு செய்யலாம்.
001.பாண்ட் என்றால் என்ன?
பாண்ட் என்பது ஒரு பாதுகாப்பான முதலீட்டுத் திட்டம் ஆகும். அவை ஒரு நிறுவனத்திற்கு நிதி திரட்டவும் மூலதன தேவைகளைப் பூர்த்தி செய்ய உதவும். முதலீட்டாளர்களிடமிருந்து பெறும் கடன் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் கடன் வாங்கியவர்கள் வட்டியுடன் திருப்பி கொடுப்பார்கள்
நிறுவனங்கள் முதலீட்டாளர்களிடமிருந்தோ அல்லது பொதுமக்களிடமிருந்தோ தங்கள் தொழிலுக்குத் தேவையான மூலதனத்தைத் திரட்ட கடன் வாங்குவார்கள். வாங்கிய கடனுக்குப் பத்திரத்தைக் கொடுப்பார்கள். கடன் வாங்கியவர் வாங்கிய கடனுக்கு வட்டி செலுத்துகிறார். இந்த பத்திரங்கள் ஒரு தேதியில் முதிர்ச்சியடையும்
A Thread on Safety Tips while using Digital India Transactions 👇
VJS - ஒரு கதை சொல்லட்டா சார்?
Maddy - என்ன உன்னை மாதிரி ஏமாத்தறவங்களுக்கு ஒரே கதை தானே.
VJS - அது எப்படிச் சார், ஏமாறவங்க இருக்கும் போது ஏமாற்ற தான செய்வார்கள், அப்படிப் பார்த்த நீயும் நானும் ஒன்னு தானே சார்?
சரி, வாங்க வங்கி பரிவர்த்தனைகளைப் பயன்படுத்தும் போது பாதுகாப்பு குறித்து விரிவாகப் பார்ப்போம்.
இணையச் சேவைகளின் அதிகரிப்புடன், ஆன்லைன் மற்றும் மொபைல் வங்கியின் பயன்பாடு வெகு அளவில் அதிகரித்துள்ளது, குறிப்பாக demonetization பிறகு, அதுவும் இப்பொழுது இருக்கும்
A Thread on Financial Mistakes done by Middle-Class People: 👇
நடுத்தர வர்க்க மக்கள் நம் செய்யும் நிதி தவறுகள்:
தல அஜித்: ஹலோ! நண்பர்களே இந்த வாரம் நம்ம நடுத்தர வர்க்க மக்கள் செய்யும் நிதி தவறுகள் பற்றி விரிவா பார்த்துருவோம் வாங்க.
a.பெரும்பாலும் நாம் செய்வது சேமிப்பு= (வருமானம்–செலவுகள்) அல்ல செலவு= வருமானம் - (சேமிப்பு+முதலீடு) இது தான் தாரக மந்திரமாக இருக்க வேண்டும்.
வரவு எட்டணா செலவு பத்தணா பண்ணாதீர்கள்.
b.எல்லாவற்றையும் ஒரே முதலீட்டுத் திட்டத்தில் முதலீடு செய்ய வேண்டாம்.
ஆற்றிலே போட்டாலும் அளந்து போடு
அடல் ஓய்வூதிய யோஜனா (APY), இது இந்திய அரசாங்கத்தால் தொடங்கப்பட்ட உத்தரவாத ஓய்வூதிய திட்டமாகும்.
அமைப்புசாரா துறை தொழிலாளர்கள் மற்றும் ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தால் (PFRDA) நிர்வகிக்கப்படுகிறது. APY இன் கீழ், குறைந்தபட்ச உத்தரவாத ஓய்வூதியம்
ரூ .1000/- அல்லது ரூ 2,000/- அல்லது ரூ 3,000/- அல்லது மாதத்திற்கு ரூ 4,000/- அல்லது ரூ 5,000/- 60 வயதை எட்டிய பின்னர் சந்தாதாரர்களின் பங்களிப்புகளைப் பொறுத்துத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஓய்வூதிய தொகை தொடங்கும்.
வயது வரம்பு: குறைந்தபட்சம் 18 ஆண்டுகள்; அதிகபட்சம் 40 ஆண்டுகள்
A Thread on PMSBY - An Accidental Death Insurance Plan 👇
பிரதான் மந்திரி சூரக்ஷா பீமா யோஜனா (PMSBY) என்பது மத்திய ஆட்சியால் தொடங்கப்பட்ட குறைந்த பிரீமியம் விபத்து இறப்பு காப்பீடு திட்டம். இந்த திட்டத்தின் கீழ், விண்ணப்பதாரருக்கு ரூ. 2 லட்சம் காப்பீடு ஆண்டுக்கு ரூ. 12 பிரீமியத்தில் கிடைக்கிறது மற்றும் ஒவ்வொரு ஆண்டும் புதுப்பிக்கத்தக்கது
காப்பீடு பாதுகாப்பு: பிரதான் மந்திரி சூரக்ஷா பீமா யோஜனா (PMSBY) திட்டத்தின் கீழ் காப்பீடு செய்யப்பட்ட விண்ணப்பதாரர் விபத்தில் இறந்தால் ரூ .2 லட்சம் உறுதி செய்யப்பட்ட தொகை நாமினிக்கு கொடுக்கப்படும்.
விண்ணப்பதாரர் இறப்பு: நாமினி ரூ.2 லட்சம் தொகையைப் பெறுவார்கள்.
பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா (PMJJBY) என்பது மத்திய ஆட்சியால் தொடங்கப்பட்ட குறைந்த பிரீமியம் டெர்ம் காப்பீடு திட்டம். இந்த திட்டத்தில் விண்ணப்பதாரருக்கு ரூ. 2 லட்சம் ஆயுட் காப்பீடு ஆண்டுக்கு ரூ .330 பிரீமியத்தில் கிடைக்கிறது மற்றும் ஒவ்வொரு ஆண்டும் புதுப்பிக்கத்தக்கது.
காப்பீடு பாதுகாப்பு: PMJJBY திட்டத்தின் கீழ் காப்பீடு செய்யப்பட்ட விண்ணப்பதாரர் எந்தவொரு காரணத்திற்காகவும் இறந்தால் ரூ .2 லட்சம் உறுதி செய்யப்பட்ட தொகை நாமினிக்கு கொடுக்கப்படும்.
விண்ணப்பதாரர் இறப்பு: நாமினி ரூ . 2 லட்சம் தொகையைப் பெறுவார்கள்.