#ஶ்ரீகிருஷ்ணன்_கதைகள் #திருமங்கையாழ்வார் அரங்கனுக்கு கோவில் கட்டும் பணியில் ஈடுபட்டிருந்த நேரம். ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் அந்த திவ்ய திருத்தொண்டில் ஈடுபட்டு வந்தனர். கூலிக்கு பலர் வேலை செய்து வந்தாலும் சிலர் நாம் செய்து கொண்டிருப்பது ஒரு திருத்தொண்டு என்ற எண்ணத்துடனும், சிலர்
அதை வெறும் கூலி வேலையாகவும், சிலர் அதை வேண்டா வெறுப்பாகவும் செய்துவந்தனர். சிலர் அதைக் கூட செய்யாமல் வேலை செய்வது போல பாசாங்கு செய்தனர். ஒரு மாபெரும் பணியில் இதெல்லாம் சகஜம் தானே, அவரவர்க்கு அவரவர் மனசாட்சி தானே நீதிபதி?
நாளொரு மேனி பொழுதொரு வண்ணமுமாக வெகு ஜோராக நடைபெற்று வந்த
அந்த பணியில் ஒரு கட்டத்தில் பொருள் வசதி இன்றி தொய்வு ஏற்பட்டது. செய்வதறியாது திகைத்தார் திருமங்கையாழ்வார். அன்றைய பணிக்கு கூலி தரக்கூட பணம் இல்லை என்றார் கணக்குப்பிள்ளை. திருமங்கையாழ்வார் தவித்துப் போனார். என்ன செய்வேன்? இந்த தொழிலார்களுக்கு என்ன பதில் சொல்வேன்? இவர்கள் எல்லாம்
பிள்ளைகுட்டிக்காரர்களாயிற்றே ரங்கா இப்படி ஒரு பழிக்கு என்னை ஆளாக்கிவிட்டாயே என்று அரங்கனிடம் உருகினார். இன்று ஒரு நாள் சமாளித்துவிடுங்கள். பணத்திற்கு பதில் ஏதேனும் பொருள் கொடுத்து அனுப்ப முடியுமா பாருங்கள். நாளைக்கு ஏதாவது செய்யலாம் என்று கூறி கணக்குப் பிள்ளையை அனுப்பிவிட்டு
தனியே யோசிக்கிறார். நேரம் தான் சென்றதே தவிர ஒரு உபாயமும் தோன்றவில்லை. நடப்பது அவன் பணி. அது வெற்றிகரமாக நிறைவேற வேண்டியது அவனிடத்தில் உள்ளது. நாம் எதற்கு கவலைப்படுவானேன் என்று மனதை தேற்றிக்கொண்டார்.
கோவிலுக்கு சென்று அரங்கனை வணங்கி தனது மனக்குறையை எடுத்து சொல்லி, உன் ஆலயத்
திருப்பணியை நீ தான் மேற்கொண்டு தொடர உதவவேண்டும். நீ அறியாதது எதுவும் இல்லை என்று கூறிவிட்டு வீட்டுக்கு சென்றார். அன்றிரவு அவரது கனவில் தோன்றிய அரங்கன், “அன்பனே கவலை வேண்டாம். நாளை கொள்ளிடக் கரைக்கு வாருங்கள். கொள்ளும் அளவிற்கு பொருள் தருகிறேன்” என்று கூறிவிட்டு மறைந்தான். மறுநாள்
எழுந்ததும் அரங்கன் பள்ளி கொண்டிருக்கும் திசையை நோக்கி வணங்கியவர் நித்யகர்மானுஷ்டானங்களை முடித்துவிட்டு கொள்ளிடக்கரைக்கு விரைந்தார். ஆனால் கொள்ளிடக்கரையில் யாரும் இல்லை. நிமிடங்கள் நாழிகையானது நாழிகைகள் கரைந்து நாளானது. யாரும் வரவில்லை. ஒருவேளை அரங்கன் கனவில் வந்தது பிரம்மையோ
அரங்கன் வந்து எதுவும் சொல்லவில்லையோ எப்போதும் கோவில் கட்டும் நினைவிலேயே இருப்பதால் நமக்கு தான் அப்படி ஒரு கனவு வந்ததோ இவ்வாறாக சிந்தித்துக்கொண்டிருந்தார் ஆழ்வார். அரங்கன் வருவான் வருவான் என்று நாள் முழுக்க காத்திருந்தது தான் மிச்சம். ஒரு ஈ காக்கா குருவி கூட வரவில்லை. சரி
புறப்படலாம் என்று அவர் தீர்மானித்த நேரம், தொலைவில் யாரோ வருவது போலிருந்தது.
யாரோ ஒருவர் பார்க்க ஒரு வணிகர் போல இருந்தார். தலையில் தலைப்பாகை. கையில் ஒரு சுவாதியும் எழுத்தாணியும். இன்னொரு கையில் மரக்காலுடன் வந்துகொண்டிருந்தார். ஐயா நான் உங்களை பார்க்க தான் வந்துகொண்டிருக்கிறேன்.
இருங்கள் போய்விடாதீர்கள் என்று சற்று தொலைவில் வரும்போது ஆழ்வாரின் காதுகளில் விழுமாறு சொன்னான். ஆழ்வாருக்கு ஆச்சரியம். என்னைப் பார்க்கவா? “ஆமாம் ஐயா உங்களுக்கு ஏதோ பொருள் தேவையாமே. மிகவும் சிரமப்படுகிறீர்கள் என்று ரங்கநாதர் என்னை இங்கே அனுப்பிவைத்தார்.” ஓ மிக்க மகிழ்ச்சி ஐயா என்று
கூறிவிட்டு அவரை சற்று ஆராய்வது போல பார்த்தார். பின்னர் தொலைவில் அவர் வந்த திசையில் பார்த்தார். “என்ன ஐயா, பொருள் தர வந்திருப்பதாக சொல்கிறீர்கள். உங்களிடம் இந்த காலி மரக்காலை தவிர வேறு எதுவும் இல்லை. அதான் யாரவது பின்னால் வந்துகொண்டிருக்கிறார்களா என்று பார்த்தேன்.“ “ஐயா இதோ
இருக்கிறதே இந்த மரக்கால் தான் அந்தப் பணியை செய்யப் போகிறது”. ‘என்ன இந்த காலி மரக்காலா?’ ‘ஐயா இது ஏதோ நெல் அளக்கும் மரக்கால் என்று நினைத்துவிட்டீர்கள் போல. இது பொன் அளக்கும் மரக்கால் மந்திர மரக்கால் தெரியுமா? அரங்கன் திருப்பெயரை பக்தியுடன் உச்ச்சரித்து இதில் மண்ணை போட்டாலும் அது
பொன்னாகிவிடும்” என்று கூறி சிரித்தான் அந்த வணிகன். “அப்படியானால் வாருங்கள் திருப்பணி நடைபெற்றுக் கொண்டிருக்கும் இடத்திற்கே செல்வோம்” என்று கூறி வணிகனை அழைத்துக்கொண்டு திருவரங்கம் விரைந்தார் திருமங்கையாழ்வார். இவர்கள் சென்ற நேரம் கூலி கொடுக்கும் நேரம். தொழிலாளர்கள் அனைவரும் கூலி
வாங்கிக்கொண்டு தத்தங்கள் வீடுகளுக்கு செல்ல ஆயத்தமாகிக் கொண்டிருந்தனர். கணக்குப்பிள்ளையோ கையை பிசைந்துகொண்டிருந்தார். வணிகரை பார்த்து “ஐயா மரக்காலில் மண்ணை போட்டு அளக்கலாமா? நேரமாகிறது. தொழிலார்களுக்கு கூலி கொடுக்கவேண்டும்.” “இதோ உடனே. ஆனால் நான் சொன்னது நினைவிருக்கிறது அல்லவா?
இது மந்திர மரக்கால். யார் உண்மையில் உழைத்தார்களோ அவர்களுக்கு தான் இதில் பொன் கிடைக்கும். மற்றவர்களுக்கு மண் தான் கிடைக்கும். பொன் கிடைக்காது.” ஒவ்வொருவருமாக வரிசையாக வந்து நின்றனர். வணிகர் மண்ணை அள்ளி மரக்காலில் போட என்ன அதிசயம், அவரவர் உழைப்புக்கு தகுந்தவாறு மண் அனைத்தும் பொன்னா
மாறியது. பணி செய்யாமல் ஏய்த்துவந்தவர்களுக்கு மண் தான் கிடைத்தது. அவர்கள் திருதிருவென விழித்தனர். மரக்கால் பொய் சொல்லாது போங்கள் இங்கே இருந்து என்று அவர்களை விரட்டினார் திருமங்கையாழ்வார். மண் கிடைத்தவர்கள் அனைவரும் வெகுண்டெழுந்தனர். தங்களுக்குள் கூடிப் பேசி “ஐயா ஆழ்வாரே நீவிர்
செய்தது சரி இல்லை. உழைப்பை வாங்கிவிட்டு கூலி கொடுக்காமல் ஏமாற்றுகிறிரா? அதற்கு இந்த வணிகன் வேறு உடந்தை. அந்த வணிகன் நம்மை மோசம் செய்துவிட்டான்” என்று குமுறினர்.
‘நீ மந்திரவாதி தானே. இரு இரு உனக்கு நாங்கள் பாடம் புகட்டுகிறோம்’ என்று அவனை அடிக்கப் பாய்ந்தனர்.ஆனால் அந்த வணிகனோ
அவர்கள் பிடியில் அகப்படாமல் ஓட்டமெடுத்தான். அனைவரும் வணிகரை துரத்த, திருமங்கையாழ்வார் குதிரை மீது ஏறி அவ்வணிகரை பின் தொடர்ந்தார். வணிகர் அப்படி இப்படி போக்கு காட்டிவிட்டு ஒரு இடத்தில் வந்து அமர்ந்து ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீமன்நாராயணனாக காட்சி தந்தார். அந்த இடமே #ஆதனூர் என்னும்
தலம். 108 திவ்யதேசத்தில் இது 11 வது #திவ்யதேசம். தன்னை காக்கவந்து பொன் தந்து படியளந்தது சாட்சாத் அரங்கனே என்பதை அறிந்த திருமங்கையாழ்வார் கண்ணீர் மல்க அரங்கனின் துதித்தார். பாமாலைகள் பாடினார். பின்னர் பெருமாள் ஏட்டில் எழுத்தாணி கொண்டு எழுதி திருமங்கையாழ்வாருக்கு உபதேசமும் செய்தார்
இதனைக் குறிக்கும் விதமாக இத்தலப் பெருமாள் மரக்காலை தலைக்குக்கீழ் வைத்து ஏடு, எழுத்தாணியைக் கையில் கொண்டவாறு பள்ளிகொண்ட கோலத்தில் உள்ளார். வணிகனாக வந்தது சாட்சாத் அரங்கன் என்பதை அறிந்த ஏனையவரும் மனம்திருந்தினர். ஆழ்வார் அவர்களிடம் திருக்கோவிலில் பணி செய்யும் வாய்ப்பு எல்லாருக்கும்
கிடைக்காது. எனவே அதை ஈடுபாட்டுடன் செய்யவேண்டும் என்பதை வலியுறுத்துவதே அரங்கன் இந்த விளையாட்டை நிகழ்த்தினார் என்று கூறினார். நம் ஆழ்வார்கள் நாயன்மார்கள் பக்தியை பற்றி தெரிந்து கொள்வோம். புராணம் படித்து அதில் சொல்லப்பட்டுள்ள நற்கருத்துகளை எடுத்துக் கொண்டு நாமும் அதைப் போல்
நன்முறையில் வாழ்க்கையை அனைத்துக் கொள்ள முயற்சி செய்வோம்.
சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
சபரிமலையில் ஐயப்பசாமியை உறங்க வைக்கும் ஹரிவராசனம் விஸ்வமோகனம் எனும் பாட்டு அத்தாழப்பூஜை முடிந்த பின் நடை சாத்தும் பாடலாக ஒலிக்கும். இந்தப் பாடலை இயற்றியவர் தமிழகத்தைச் சேர்ந்த கம்பங்குடி ஸ்ரீ குளத்து ஐயர். இவர் 1920 ஆம் வருடம் இந்தப் பாடலை இயற்றினார். இவர் திருநெல்வேலி மாவட்டம்
கல்லிடைக்குறிச்சி எனும் ஊரில் பிறந்தவர். கம்பங்குடி சுந்தரம் குளத்து ஐயர் பிரசுரித்த சாஸ்தா ஸ்துதி கதம்பம் என்ற புத்தகத்தில் உள்ளது ஹரிவராசனம் கீர்த்தனம். இவர் ஹரிவராசனம் பாடலை ஐயப்பசாமியை தரிசிக்கும்போது எழுதினார். ஒவ்வொரு வரிகளும் ஐயப்ப சாமியே அருளியது போல இருந்ததாக அவர்
கூறியுள்ளார். இவரது முன்னோர்கள் மிகவும் கஷ்டப்பட்டாலும், இவர்களது வீட்டின் வழியாக போவோர் வருவோருக்கும், இல்லாதவர்களுக்கும் உணவளித்து வரும் பழக்கத்தை கடைபிடித்து வந்தனர். அப்போது ஐயப்பசாமி, தாயின் தலைவலி போக்கப் புலிப்பாலை எடுக்க அந்த வழியாக வந்துள்ளார். அப்போது மிக களைப்புடன்
சேவா குஞ் எனும் இடத்தை 1590ல் சுவாமி ஹிட் ஹரிவன்ஷ் கண்டுபிடித்தார். அவரது சம்பிரதாயத்தைப் பின்பற்றுபவர்கள் இந்த புனித தளத்தை பராமரித்து, தினசரி பூஜா சேவையை ராதா வழங்குகிறார்கள். இது ராதா கிருஷ்ணனுக்கு என அர்ப்பணிக்கப்பட்ட ஒரு அழகான கோவில். இது ரங் மஹால் என்றும் அழைக்கப்படுகிறது.
இது ஒரு மரங்கள்-செடிகள் வளர்ந்துள்ள பெரிய தோட்டமாகும், இதில் நெளிந்து-வளைந்து செல்லும் பாதைகள் உள்ளன. இங்கு ராதாவும் கிருஷ்ணனும் பிருந்தாவனத்தின் மற்ற கோபிகளுடன் ராஸ் லீலாவை நிகழ்த்தினர். கோவிலின் சுவர்களில் ஸ்ரீ ராதாகிருஷ்ணா நிகழ்த்திய பல்வேறு லீலைகளின் ஓவியங்களால் அலங்கரிக்கப்
பட்டுள்ளன. ஒவ்வொரு ஓவியமும் ராதா மற்றும் கிருஷ்ணரின் வெவ்வேறு அம்சங்களை சித்தரிக்கிறது.
ஓவியத்தில் ஒன்று கிருஷ்ணர் ராதாவின் முடிகளை வாறுவதையும் அலங்கரிப்பதையும் சித்தரிக்கிறது. மற்றொரு ஓவியத்தில் கிருஷ்ணர் ராஸ் லீலாவால் சோர்வடைந்த ராதாவின் கால்களை மசாஜ் செய்கிறார். மற்ற ஓவியங்கள்
#புத்தர் தன்னுடைய சீடர்களில் ஒருவரை அனுப்பி ஏரியில் இருந்து குடிப்பதற்கு நீர் கொண்டுவரச் சொன்னார். சீடரும் தங்களிடம் இருந்த பானை ஒன்றை எடுத்துக்கொண்டு நீர்நிலையை நோக்கி நடந்தார். அந்த நேரத்தில், மாட்டு வண்டிக்காரர் ஒருவர், ஏரிக்குள் இறங்கி ஏறியைக் கடந்து சென்றார். ஏரி கலங்கி
விட்டது. அத்துடன் ஏரியின் கீழ்ப்பகுதியில் இருந்த சேறும் சகதியும் மேலே வந்து நீரை அசுத்தப் படுத்தி பார்ப்பதற்கே உபயோகமற்றதாகக் காட்சி அளித்தது. இந்தக் கலங்கிய நீர் எப்படிக் குடிப்பதற்குப் பயன்படும், இதை எப்படிக் குருவிற்குக் கொண்டுபோய்க் கொடுப்பது என்று தண்ணீரில்லாமல் திரும்பி
விட்டார். அத்துடன் தன் குருவிடமும் அதைத் தெரிவித்தார். ஒரு மணி நேரம் சென்ற பிறகு, புத்தர் தன்னுடைய சீடரை மீண்டும் ஏரிக்குச் சென்று வரப் பணித்தார். நீர் நிலையருகே சென்று சீடர் பார்த்தார். இப்போது நீர் தெளிந்திருந்தது. சகதி நீரின் அடியிற்சென்று பதிந்திருந்தது. ஒரு பானையின் தண்ணீரை
#ஜனகமகராஜா ஒரு நாள் இரவு தூங்கிக் கொண்டிருந்தார். அவருக்கு அப்போது ஒரு கனவு வந்தது. அதில் அவர் ஒரு பிச்சைகாரனாக எண்ணி மிகவும் சிரமப்படுவது போல் கனவு. கனவில் அவர் படாத பாடுபட்டு துன்பப்பட்டார். அப்போது அது கனவு போலவே அவருக்குத் தெரியவில்லை. நிஜம் போலவே இருந்தது. திடுக்கிட்டு
நாராயணா என்று அலறினார். கண் விழித்தார். கண்விழித்துப் பார்த்தால் எல்லாம் மாறியிருந்தது. சில வினாடி முன்பு பிச்சைக்காரராக இருந்தவர் இப்போது மன்னராக இருந்தார்.
இது தொடர்ந்து பல நாட்களாக நடந்து கொண்டே இருந்தது. அவர் தினசரி இரவு தூங்கும் போது கனவில் பிச்சைக்காரனாகி படாத பாடுபடுவார்.
பகலில் எழுந்தால் மன்னனாக சகல சுகபோகங்களுடன் இருப்பார். ஜனகருக்கு ஒரு பெரும் சந்தேகம் உதித்தது. நான் மன்னனாக இருந்து பிச்சைக்காரனாக இருப்பது போல் கனவு கண்டேனா? அல்லது பிச்சைகாரனாக இருந்து இப்போது மன்னராக இருப்பது போல் கனவு காண்கிறேனா என சந்தேகம் வந்து விட்டது. மந்திரி, ராஜகுரு
நாளை தோஷம் போக்கும் அபரா ஏகாதசி விரதம். அபரா என்றால் அபாரமான, ஏராளமான என்று பொருள். ஆனி மாத தேய்பிறை ஏகாதசி தினம் அபரா ஏகாதசி என அழைக்கப்படுகிறது. வைகுண்ட ஏகாதசிக்கு நிகரானது அபரா ஏகாதசி. மற்ற எந்த ஏகாதசிகளில் விரதம் இருக்க முடியவில்லை என்றாலும் இந்த அபரா ஏகாதசியில் விரதம்
இருந்து வழிபடுவது மிகவும் சிறப்பானது. முற்காலத்தில் மந்தத்தன் என்கிற அரசன் இந்த அபரா ஏகாதசி விரதத்தைக் கடைப்பிடித்து மிகச் சிறப்பான பலன்களை தன் வாழ்வில் பெற்றதாக புராணம் கூறுகிறது. அபரா ஏகாதசி தினத்திற்கு முன்தினம் இரவு வெறும் தரையில் படுத்துறங்க வேண்டும். ஏகாரசி அன்று
அதிகாலையில் எழுந்து, குளித்து முடித்துவிட்டு வீட்டின் பூஜை அறையில் இருக்கும் பெருமாள் மற்றும் லட்சுமி படத்திற்கு மஞ்சள் மற்றும் குங்குமம் பொட்டிட்டு, தாமரை பூ சமர்ப்பித்து, கிருஷ்ண துளசி இலைகள் மற்றும் இனிப்பு பிரசாதம் நைவேத்தியம் வைத்து, தூபங்கள் கொளுத்தி, தீபமேற்றி விஷ்ணு
#கேரளா#மணப்புள்ளி_பகவதி_அம்மன்#திருக்கோயில் பாலக்காட்டு மாவட்டத்தில் அமைந்துள்ளது இந்த ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையான மணப்புள்ளி பகவதி அம்மன் கோவில். அரக்கர்களை அழித்த பிறகு படிஞ்சாரை யாக்கரை எனும் வயல்வெளி சூழ்ந்த இடத்தில் கோவில் கொண்டாள் பகவதி அம்மன். அறுவடைக் காலத்தில்
நெல் அடிக்கும் சத்தம் அதிகம் கேட்கவே பிறகு இங்கிருந்து கிழக்குப் பகுதியில் உள்ள ஒரு ஆலமரத்தடியில் கோயில் கொண்டாள். அங்கிருந்த பக்தர்கள் அம்மனுக்கு கோயில் கட்ட ஏற்பாடு செய்தனர். அப்போது தேவப்பிரசன்னம் பார்த்த கோயிலின் நம்பூதிரிகள் பகவதி அம்மன் கோயில் கொள்ள அந்த ஆலமரத்தடியை சரியான
இடம் என தீர்மானித்து, அங்கேயே பகவதி அம்மனுக்கு கோயில் கட்டப்பட்டது. மணப்பள்ளி பகவதி அம்மன் கருப்பு நிற தோற்றத்தோடு வட திசையை பார்த்தவாறு பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். நான்கு கரங்களில் சூலம், கபாலம், கட்கம், கேடயம் உள்ளது. மூன்று கண்களும், நான்கு கோரைப் பற்களும் கொண்டு அழகான