சபரிமலையில் ஐயப்பசாமியை உறங்க வைக்கும் ஹரிவராசனம் விஸ்வமோகனம் எனும் பாட்டு அத்தாழப்பூஜை முடிந்த பின் நடை சாத்தும் பாடலாக ஒலிக்கும். இந்தப் பாடலை இயற்றியவர் தமிழகத்தைச் சேர்ந்த கம்பங்குடி ஸ்ரீ குளத்து ஐயர். இவர் 1920 ஆம் வருடம் இந்தப் பாடலை இயற்றினார். இவர் திருநெல்வேலி மாவட்டம்
கல்லிடைக்குறிச்சி எனும் ஊரில் பிறந்தவர். கம்பங்குடி சுந்தரம் குளத்து ஐயர் பிரசுரித்த சாஸ்தா ஸ்துதி கதம்பம் என்ற புத்தகத்தில் உள்ளது ஹரிவராசனம் கீர்த்தனம். இவர் ஹரிவராசனம் பாடலை ஐயப்பசாமியை தரிசிக்கும்போது எழுதினார். ஒவ்வொரு வரிகளும் ஐயப்ப சாமியே அருளியது போல இருந்ததாக அவர்
கூறியுள்ளார். இவரது முன்னோர்கள் மிகவும் கஷ்டப்பட்டாலும், இவர்களது வீட்டின் வழியாக போவோர் வருவோருக்கும், இல்லாதவர்களுக்கும் உணவளித்து வரும் பழக்கத்தை கடைபிடித்து வந்தனர். அப்போது ஐயப்பசாமி, தாயின் தலைவலி போக்கப் புலிப்பாலை எடுக்க அந்த வழியாக வந்துள்ளார். அப்போது மிக களைப்புடன்
இருந்த ஐயப்பன் அந்த குடும்பத்தைப் பற்றி கேள்விப்பட்டு வந்து உணவு கேட்டுள்ளார். உணவு ஏதும் இல்லாததால் வீட்டில் இருந்த கம்பு தானியத்தை கூழாக செய்து உணவளித்தனர். அதனாலதான் அவர்களது குடும்பம் கம்பங்குடி என அழைக்கப்பட்டது.
அந்த பூர்விகமான குடும்பத்தில் பிறந்தவர் தான் ஹரிவராசனம் பாடலை
இயற்றிய கம்பங்குடி ஸ்ரீ குளத்து ஐயர். இந்தப் பாடல் வழக்கத்திற்கு வருவதற்கு முன் சபரிமேலையில் சாந்தியாக இருந்த செங்ஙன்னூர் கிட்டுமணி திருமேணி நம்பூதிரி புல்லாங்குழல் வாசித்து நடை சார்த்துவது நடப்பில் இருந்தது. 1950 களில் சபரிமலை ஐயப்பன் கோவில் தீக்கிரையாகி பின் தேவபிரசன்னம்
பார்க்கப்பட்டு சபரிமலை கோவிலை மீண்டும் 1951 புனரமைத்தனர். அப்போது கோவில் மேல்சாந்தியாக இருந்த ஈஸ்வரன் நம்பூதிரி ஹரிவராசனம் கீர்த்தனம் இரவு அத்தாழப் பூஜையில் ஐயப்பசாமி முன் நின்று ஸ்லோகம் போன்று சொல்வதை மாற்றினார். இது ஐயப்பசாமியை உறங்கவைக்கும் பாடல்போல உள்ளதாகக் கருதி, அத்தாழ பூஜ
(இரவு பூஜை) முடிந்து நடை சாத்தும் பாடலாக மாற்றினார். மேல் சாந்தியாக இருந்த ஈஸ்வரன் மற்றும் கோவில் ஊழியர்களும் ஹரிவராஸனம் பாட ஆரம்பித்த வழக்கம், ஏசுதாஸின் இனிய குரலில் இந்தப் பாடல் வெளிவந்த பிறகு அந்த இசைத்தட்டை இசைப்பதாக மாறியது. கே.ஜே. யேசுதாஸ் 1975 ஆம் ஆண்டு தமிழ், மலையாளம்
மொழிகளில் வெளிவந்த ‘சுவாமி ஐயப்பன் ‘ திரைப்படத்தில் முதன் முறையாக இந்தப் பாடலை பாடினார். அதற்கு தேவராஜன் என்பவர் இசையமைத்தார். அந்த மெட்டில் அமைந்த ஹரிவராசனம் பாடல்தான் இன்றுவரை சபரிமேலையில் நடைசாத்தும் பாடலாக ஒலிக்கிறது.
ஸ்வாமியே சரணம் ஐயப்பா mahaperiyavaa.blog/2021/07/09/har…
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
சேவா குஞ் எனும் இடத்தை 1590ல் சுவாமி ஹிட் ஹரிவன்ஷ் கண்டுபிடித்தார். அவரது சம்பிரதாயத்தைப் பின்பற்றுபவர்கள் இந்த புனித தளத்தை பராமரித்து, தினசரி பூஜா சேவையை ராதா வழங்குகிறார்கள். இது ராதா கிருஷ்ணனுக்கு என அர்ப்பணிக்கப்பட்ட ஒரு அழகான கோவில். இது ரங் மஹால் என்றும் அழைக்கப்படுகிறது.
இது ஒரு மரங்கள்-செடிகள் வளர்ந்துள்ள பெரிய தோட்டமாகும், இதில் நெளிந்து-வளைந்து செல்லும் பாதைகள் உள்ளன. இங்கு ராதாவும் கிருஷ்ணனும் பிருந்தாவனத்தின் மற்ற கோபிகளுடன் ராஸ் லீலாவை நிகழ்த்தினர். கோவிலின் சுவர்களில் ஸ்ரீ ராதாகிருஷ்ணா நிகழ்த்திய பல்வேறு லீலைகளின் ஓவியங்களால் அலங்கரிக்கப்
பட்டுள்ளன. ஒவ்வொரு ஓவியமும் ராதா மற்றும் கிருஷ்ணரின் வெவ்வேறு அம்சங்களை சித்தரிக்கிறது.
ஓவியத்தில் ஒன்று கிருஷ்ணர் ராதாவின் முடிகளை வாறுவதையும் அலங்கரிப்பதையும் சித்தரிக்கிறது. மற்றொரு ஓவியத்தில் கிருஷ்ணர் ராஸ் லீலாவால் சோர்வடைந்த ராதாவின் கால்களை மசாஜ் செய்கிறார். மற்ற ஓவியங்கள்
#புத்தர் தன்னுடைய சீடர்களில் ஒருவரை அனுப்பி ஏரியில் இருந்து குடிப்பதற்கு நீர் கொண்டுவரச் சொன்னார். சீடரும் தங்களிடம் இருந்த பானை ஒன்றை எடுத்துக்கொண்டு நீர்நிலையை நோக்கி நடந்தார். அந்த நேரத்தில், மாட்டு வண்டிக்காரர் ஒருவர், ஏரிக்குள் இறங்கி ஏறியைக் கடந்து சென்றார். ஏரி கலங்கி
விட்டது. அத்துடன் ஏரியின் கீழ்ப்பகுதியில் இருந்த சேறும் சகதியும் மேலே வந்து நீரை அசுத்தப் படுத்தி பார்ப்பதற்கே உபயோகமற்றதாகக் காட்சி அளித்தது. இந்தக் கலங்கிய நீர் எப்படிக் குடிப்பதற்குப் பயன்படும், இதை எப்படிக் குருவிற்குக் கொண்டுபோய்க் கொடுப்பது என்று தண்ணீரில்லாமல் திரும்பி
விட்டார். அத்துடன் தன் குருவிடமும் அதைத் தெரிவித்தார். ஒரு மணி நேரம் சென்ற பிறகு, புத்தர் தன்னுடைய சீடரை மீண்டும் ஏரிக்குச் சென்று வரப் பணித்தார். நீர் நிலையருகே சென்று சீடர் பார்த்தார். இப்போது நீர் தெளிந்திருந்தது. சகதி நீரின் அடியிற்சென்று பதிந்திருந்தது. ஒரு பானையின் தண்ணீரை
#ஶ்ரீகிருஷ்ணன்_கதைகள் #திருமங்கையாழ்வார் அரங்கனுக்கு கோவில் கட்டும் பணியில் ஈடுபட்டிருந்த நேரம். ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் அந்த திவ்ய திருத்தொண்டில் ஈடுபட்டு வந்தனர். கூலிக்கு பலர் வேலை செய்து வந்தாலும் சிலர் நாம் செய்து கொண்டிருப்பது ஒரு திருத்தொண்டு என்ற எண்ணத்துடனும், சிலர்
அதை வெறும் கூலி வேலையாகவும், சிலர் அதை வேண்டா வெறுப்பாகவும் செய்துவந்தனர். சிலர் அதைக் கூட செய்யாமல் வேலை செய்வது போல பாசாங்கு செய்தனர். ஒரு மாபெரும் பணியில் இதெல்லாம் சகஜம் தானே, அவரவர்க்கு அவரவர் மனசாட்சி தானே நீதிபதி?
நாளொரு மேனி பொழுதொரு வண்ணமுமாக வெகு ஜோராக நடைபெற்று வந்த
அந்த பணியில் ஒரு கட்டத்தில் பொருள் வசதி இன்றி தொய்வு ஏற்பட்டது. செய்வதறியாது திகைத்தார் திருமங்கையாழ்வார். அன்றைய பணிக்கு கூலி தரக்கூட பணம் இல்லை என்றார் கணக்குப்பிள்ளை. திருமங்கையாழ்வார் தவித்துப் போனார். என்ன செய்வேன்? இந்த தொழிலார்களுக்கு என்ன பதில் சொல்வேன்? இவர்கள் எல்லாம்
#ஜனகமகராஜா ஒரு நாள் இரவு தூங்கிக் கொண்டிருந்தார். அவருக்கு அப்போது ஒரு கனவு வந்தது. அதில் அவர் ஒரு பிச்சைகாரனாக எண்ணி மிகவும் சிரமப்படுவது போல் கனவு. கனவில் அவர் படாத பாடுபட்டு துன்பப்பட்டார். அப்போது அது கனவு போலவே அவருக்குத் தெரியவில்லை. நிஜம் போலவே இருந்தது. திடுக்கிட்டு
நாராயணா என்று அலறினார். கண் விழித்தார். கண்விழித்துப் பார்த்தால் எல்லாம் மாறியிருந்தது. சில வினாடி முன்பு பிச்சைக்காரராக இருந்தவர் இப்போது மன்னராக இருந்தார்.
இது தொடர்ந்து பல நாட்களாக நடந்து கொண்டே இருந்தது. அவர் தினசரி இரவு தூங்கும் போது கனவில் பிச்சைக்காரனாகி படாத பாடுபடுவார்.
பகலில் எழுந்தால் மன்னனாக சகல சுகபோகங்களுடன் இருப்பார். ஜனகருக்கு ஒரு பெரும் சந்தேகம் உதித்தது. நான் மன்னனாக இருந்து பிச்சைக்காரனாக இருப்பது போல் கனவு கண்டேனா? அல்லது பிச்சைகாரனாக இருந்து இப்போது மன்னராக இருப்பது போல் கனவு காண்கிறேனா என சந்தேகம் வந்து விட்டது. மந்திரி, ராஜகுரு
நாளை தோஷம் போக்கும் அபரா ஏகாதசி விரதம். அபரா என்றால் அபாரமான, ஏராளமான என்று பொருள். ஆனி மாத தேய்பிறை ஏகாதசி தினம் அபரா ஏகாதசி என அழைக்கப்படுகிறது. வைகுண்ட ஏகாதசிக்கு நிகரானது அபரா ஏகாதசி. மற்ற எந்த ஏகாதசிகளில் விரதம் இருக்க முடியவில்லை என்றாலும் இந்த அபரா ஏகாதசியில் விரதம்
இருந்து வழிபடுவது மிகவும் சிறப்பானது. முற்காலத்தில் மந்தத்தன் என்கிற அரசன் இந்த அபரா ஏகாதசி விரதத்தைக் கடைப்பிடித்து மிகச் சிறப்பான பலன்களை தன் வாழ்வில் பெற்றதாக புராணம் கூறுகிறது. அபரா ஏகாதசி தினத்திற்கு முன்தினம் இரவு வெறும் தரையில் படுத்துறங்க வேண்டும். ஏகாரசி அன்று
அதிகாலையில் எழுந்து, குளித்து முடித்துவிட்டு வீட்டின் பூஜை அறையில் இருக்கும் பெருமாள் மற்றும் லட்சுமி படத்திற்கு மஞ்சள் மற்றும் குங்குமம் பொட்டிட்டு, தாமரை பூ சமர்ப்பித்து, கிருஷ்ண துளசி இலைகள் மற்றும் இனிப்பு பிரசாதம் நைவேத்தியம் வைத்து, தூபங்கள் கொளுத்தி, தீபமேற்றி விஷ்ணு
#கேரளா#மணப்புள்ளி_பகவதி_அம்மன்#திருக்கோயில் பாலக்காட்டு மாவட்டத்தில் அமைந்துள்ளது இந்த ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையான மணப்புள்ளி பகவதி அம்மன் கோவில். அரக்கர்களை அழித்த பிறகு படிஞ்சாரை யாக்கரை எனும் வயல்வெளி சூழ்ந்த இடத்தில் கோவில் கொண்டாள் பகவதி அம்மன். அறுவடைக் காலத்தில்
நெல் அடிக்கும் சத்தம் அதிகம் கேட்கவே பிறகு இங்கிருந்து கிழக்குப் பகுதியில் உள்ள ஒரு ஆலமரத்தடியில் கோயில் கொண்டாள். அங்கிருந்த பக்தர்கள் அம்மனுக்கு கோயில் கட்ட ஏற்பாடு செய்தனர். அப்போது தேவப்பிரசன்னம் பார்த்த கோயிலின் நம்பூதிரிகள் பகவதி அம்மன் கோயில் கொள்ள அந்த ஆலமரத்தடியை சரியான
இடம் என தீர்மானித்து, அங்கேயே பகவதி அம்மனுக்கு கோயில் கட்டப்பட்டது. மணப்பள்ளி பகவதி அம்மன் கருப்பு நிற தோற்றத்தோடு வட திசையை பார்த்தவாறு பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். நான்கு கரங்களில் சூலம், கபாலம், கட்கம், கேடயம் உள்ளது. மூன்று கண்களும், நான்கு கோரைப் பற்களும் கொண்டு அழகான