#புத்தர் தன்னுடைய சீடர்களில் ஒருவரை அனுப்பி ஏரியில் இருந்து குடிப்பதற்கு நீர் கொண்டுவரச் சொன்னார். சீடரும் தங்களிடம் இருந்த பானை ஒன்றை எடுத்துக்கொண்டு நீர்நிலையை நோக்கி நடந்தார். அந்த நேரத்தில், மாட்டு வண்டிக்காரர் ஒருவர், ஏரிக்குள் இறங்கி ஏறியைக் கடந்து சென்றார். ஏரி கலங்கி
விட்டது. அத்துடன் ஏரியின் கீழ்ப்பகுதியில் இருந்த சேறும் சகதியும் மேலே வந்து நீரை அசுத்தப் படுத்தி பார்ப்பதற்கே உபயோகமற்றதாகக் காட்சி அளித்தது. இந்தக் கலங்கிய நீர் எப்படிக் குடிப்பதற்குப் பயன்படும், இதை எப்படிக் குருவிற்குக் கொண்டுபோய்க் கொடுப்பது என்று தண்ணீரில்லாமல் திரும்பி
விட்டார். அத்துடன் தன் குருவிடமும் அதைத் தெரிவித்தார். ஒரு மணி நேரம் சென்ற பிறகு, புத்தர் தன்னுடைய சீடரை மீண்டும் ஏரிக்குச் சென்று வரப் பணித்தார். நீர் நிலையருகே சென்று சீடர் பார்த்தார். இப்போது நீர் தெளிந்திருந்தது. சகதி நீரின் அடியிற்சென்று பதிந்திருந்தது. ஒரு பானையின் தண்ணீரை
முகர்ந்து கொண்டு சீடர் புத்தரிடம் திரும்பினார். புத்தர் தண்ணீரைப் பார்த்தார். சீடரையும் பார்த்தார். பிறகு மெல்லிய குரலில் சொல்லலானார். தண்ணீர் சுத்தமாவதற்கு என்ன செய்தாய்? என்றார். நான் ஒன்றும் செய்யவில்லை சுவாமி அதை அப்படியே விட்டுவிட்டு வந்தேன். அது தானாகவே சுத்தமாயிற்று. ஆக நீ
அதை அதன் போக்கிலேயே விட்டாய். அது தானாகவே சுத்தமாயிற்று. அத்துடன் உனக்கு தெளிந்த நீரும் கிடைத்தது இல்லையா? ஆமாம் சுவாமி! என்றார் சீடர். நம் மனமும் அப்படிப்பட்டதுதான். மனம் குழப்பத்தில் இருக்கும்போது நாம் ஒன்றும் செய்ய வேண்டாம். அதை அப்படியே விட்டு விட வேண்டும். சிறிது கால அவகாசம்
கொடுக்க வேண்டும். அது தனக்குத்தானே சரியாகி விடும் என்றார் புத்தர். குழப்பம் என்பது அமைதியின்மை எனினும் குழப்பத்தை அமைதியாகவே அணுக வேண்டும். மனதில் போராட்டமும் குழப்பமும் மிகுதியாகிறபோது கண்களை மூடுவதற்குப் பதில் மனதை மூட வேண்டும். வெறுமையான மனதில் குழப்பத்திற்கான விடை தானே வரும்.

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with அன்பெழில்

அன்பெழில் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @anbezhil12

9 Jul
சபரிமலையில் ஐயப்பசாமியை உறங்க வைக்கும் ஹரிவராசனம் விஸ்வமோகனம் எனும் பாட்டு அத்தாழப்பூஜை முடிந்த பின் நடை சாத்தும் பாடலாக ஒலிக்கும். இந்தப் பாடலை இயற்றியவர் தமிழகத்தைச் சேர்ந்த கம்பங்குடி ஸ்ரீ குளத்து ஐயர். இவர் 1920 ஆம் வருடம் இந்தப் பாடலை இயற்றினார். இவர் திருநெல்வேலி மாவட்டம் Image
கல்லிடைக்குறிச்சி எனும் ஊரில் பிறந்தவர். கம்பங்குடி சுந்தரம் குளத்து ஐயர் பிரசுரித்த சாஸ்தா ஸ்துதி கதம்பம் என்ற புத்தகத்தில் உள்ளது ஹரிவராசனம் கீர்த்தனம். இவர் ஹரிவராசனம் பாடலை ஐயப்பசாமியை தரிசிக்கும்போது எழுதினார். ஒவ்வொரு வரிகளும் ஐயப்ப சாமியே அருளியது போல இருந்ததாக அவர்
கூறியுள்ளார். இவரது முன்னோர்கள் மிகவும் கஷ்டப்பட்டாலும், இவர்களது வீட்டின் வழியாக போவோர் வருவோருக்கும், இல்லாதவர்களுக்கும் உணவளித்து வரும் பழக்கத்தை கடைபிடித்து வந்தனர். அப்போது ஐயப்பசாமி, தாயின் தலைவலி போக்கப் புலிப்பாலை எடுக்க அந்த வழியாக வந்துள்ளார். அப்போது மிக களைப்புடன்
Read 9 tweets
9 Jul
சேவா குஞ் எனும் இடத்தை 1590ல் சுவாமி ஹிட் ஹரிவன்ஷ் கண்டுபிடித்தார். அவரது சம்பிரதாயத்தைப் பின்பற்றுபவர்கள் இந்த புனித தளத்தை பராமரித்து, தினசரி பூஜா சேவையை ராதா வழங்குகிறார்கள். இது ராதா கிருஷ்ணனுக்கு என அர்ப்பணிக்கப்பட்ட ஒரு அழகான கோவில். இது ரங் மஹால் என்றும் அழைக்கப்படுகிறது. Seva Kunj- constructed and proposed.
இது ஒரு மரங்கள்-செடிகள் வளர்ந்துள்ள பெரிய தோட்டமாகும், இதில் நெளிந்து-வளைந்து செல்லும் பாதைகள் உள்ளன. இங்கு ராதாவும் கிருஷ்ணனும் பிருந்தாவனத்தின் மற்ற கோபிகளுடன் ராஸ் லீலாவை நிகழ்த்தினர். கோவிலின் சுவர்களில் ஸ்ரீ ராதாகிருஷ்ணா நிகழ்த்திய பல்வேறு லீலைகளின் ஓவியங்களால் அலங்கரிக்கப்
பட்டுள்ளன. ஒவ்வொரு ஓவியமும் ராதா மற்றும் கிருஷ்ணரின் வெவ்வேறு அம்சங்களை சித்தரிக்கிறது.
ஓவியத்தில் ஒன்று கிருஷ்ணர் ராதாவின் முடிகளை வாறுவதையும் அலங்கரிப்பதையும் சித்தரிக்கிறது. மற்றொரு ஓவியத்தில் கிருஷ்ணர் ராஸ் லீலாவால் சோர்வடைந்த ராதாவின் கால்களை மசாஜ் செய்கிறார். மற்ற ஓவியங்கள் Temple entrance.
Read 9 tweets
7 Jul
#ஶ்ரீகிருஷ்ணன்_கதைகள்
#திருமங்கையாழ்வார் அரங்கனுக்கு கோவில் கட்டும் பணியில் ஈடுபட்டிருந்த நேரம். ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் அந்த திவ்ய திருத்தொண்டில் ஈடுபட்டு வந்தனர். கூலிக்கு பலர் வேலை செய்து வந்தாலும் சிலர் நாம் செய்து கொண்டிருப்பது ஒரு திருத்தொண்டு என்ற எண்ணத்துடனும், சிலர் ImageImage
அதை வெறும் கூலி வேலையாகவும், சிலர் அதை வேண்டா வெறுப்பாகவும் செய்துவந்தனர். சிலர் அதைக் கூட செய்யாமல் வேலை செய்வது போல பாசாங்கு செய்தனர். ஒரு மாபெரும் பணியில் இதெல்லாம் சகஜம் தானே, அவரவர்க்கு அவரவர் மனசாட்சி தானே நீதிபதி?
நாளொரு மேனி பொழுதொரு வண்ணமுமாக வெகு ஜோராக நடைபெற்று வந்த
அந்த பணியில் ஒரு கட்டத்தில் பொருள் வசதி இன்றி தொய்வு ஏற்பட்டது. செய்வதறியாது திகைத்தார் திருமங்கையாழ்வார். அன்றைய பணிக்கு கூலி தரக்கூட பணம் இல்லை என்றார் கணக்குப்பிள்ளை. திருமங்கையாழ்வார் தவித்துப் போனார். என்ன செய்வேன்? இந்த தொழிலார்களுக்கு என்ன பதில் சொல்வேன்? இவர்கள் எல்லாம்
Read 22 tweets
5 Jul
#ஜனகமகராஜா ஒரு நாள் இரவு தூங்கிக் கொண்டிருந்தார். அவருக்கு அப்போது ஒரு கனவு வந்தது. அதில் அவர் ஒரு பிச்சைகாரனாக எண்ணி மிகவும் சிரமப்படுவது போல் கனவு. கனவில் அவர் படாத பாடுபட்டு துன்பப்பட்டார். அப்போது அது கனவு போலவே அவருக்குத் தெரியவில்லை. நிஜம் போலவே இருந்தது. திடுக்கிட்டு
நாராயணா என்று அலறினார். கண் விழித்தார். கண்விழித்துப் பார்த்தால் எல்லாம் மாறியிருந்தது. சில வினாடி முன்பு பிச்சைக்காரராக இருந்தவர் இப்போது மன்னராக இருந்தார்.
இது தொடர்ந்து பல நாட்களாக நடந்து கொண்டே இருந்தது. அவர் தினசரி இரவு தூங்கும் போது கனவில் பிச்சைக்காரனாகி படாத பாடுபடுவார்.
பகலில் எழுந்தால் மன்னனாக சகல சுகபோகங்களுடன் இருப்பார். ஜனகருக்கு ஒரு பெரும் சந்தேகம் உதித்தது. நான் மன்னனாக இருந்து பிச்சைக்காரனாக இருப்பது போல் கனவு கண்டேனா? அல்லது பிச்சைகாரனாக இருந்து இப்போது மன்னராக இருப்பது போல் கனவு காண்கிறேனா என சந்தேகம் வந்து விட்டது. மந்திரி, ராஜகுரு
Read 19 tweets
4 Jul
நாளை தோஷம் போக்கும் அபரா ஏகாதசி விரதம். அபரா என்றால் அபாரமான, ஏராளமான என்று பொருள். ஆனி மாத தேய்பிறை ஏகாதசி தினம் அபரா ஏகாதசி என அழைக்கப்படுகிறது. வைகுண்ட ஏகாதசிக்கு நிகரானது அபரா ஏகாதசி. மற்ற எந்த ஏகாதசிகளில் விரதம் இருக்க முடியவில்லை என்றாலும் இந்த அபரா ஏகாதசியில் விரதம்
இருந்து வழிபடுவது மிகவும் சிறப்பானது. முற்காலத்தில் மந்தத்தன் என்கிற அரசன் இந்த அபரா ஏகாதசி விரதத்தைக் கடைப்பிடித்து மிகச் சிறப்பான பலன்களை தன் வாழ்வில் பெற்றதாக புராணம் கூறுகிறது. அபரா ஏகாதசி தினத்திற்கு முன்தினம் இரவு வெறும் தரையில் படுத்துறங்க வேண்டும். ஏகாரசி அன்று
அதிகாலையில் எழுந்து, குளித்து முடித்துவிட்டு வீட்டின் பூஜை அறையில் இருக்கும் பெருமாள் மற்றும் லட்சுமி படத்திற்கு மஞ்சள் மற்றும் குங்குமம் பொட்டிட்டு, தாமரை பூ சமர்ப்பித்து, கிருஷ்ண துளசி இலைகள் மற்றும் இனிப்பு பிரசாதம் நைவேத்தியம் வைத்து, தூபங்கள் கொளுத்தி, தீபமேற்றி விஷ்ணு
Read 4 tweets
4 Jul
#கேரளா #மணப்புள்ளி_பகவதி_அம்மன் #திருக்கோயில் பாலக்காட்டு மாவட்டத்தில் அமைந்துள்ளது இந்த ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையான மணப்புள்ளி பகவதி அம்மன் கோவில். அரக்கர்களை அழித்த பிறகு படிஞ்சாரை யாக்கரை எனும் வயல்வெளி சூழ்ந்த இடத்தில் கோவில் கொண்டாள் பகவதி அம்மன். அறுவடைக் காலத்தில்
நெல் அடிக்கும் சத்தம் அதிகம் கேட்கவே பிறகு இங்கிருந்து கிழக்குப் பகுதியில் உள்ள ஒரு ஆலமரத்தடியில் கோயில் கொண்டாள். அங்கிருந்த பக்தர்கள் அம்மனுக்கு கோயில் கட்ட ஏற்பாடு செய்தனர். அப்போது தேவப்பிரசன்னம் பார்த்த கோயிலின் நம்பூதிரிகள் பகவதி அம்மன் கோயில் கொள்ள அந்த ஆலமரத்தடியை சரியான
இடம் என தீர்மானித்து, அங்கேயே பகவதி அம்மனுக்கு கோயில் கட்டப்பட்டது. மணப்பள்ளி பகவதி அம்மன் கருப்பு நிற தோற்றத்தோடு வட திசையை பார்த்தவாறு பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். நான்கு கரங்களில் சூலம், கபாலம், கட்கம், கேடயம் உள்ளது. மூன்று கண்களும், நான்கு கோரைப் பற்களும் கொண்டு அழகான
Read 8 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!

:(