ஒருநாள் இரவு நெருங்கும் வேளையில் வயதான பெண்மணி ஒருவர், கார் அருகில் வெகு நேரமாக நிற்பதை ஒருவர் கவனித்தார். ரோட்டில் செல்லும் வாகனங்களை அந்தப் பெண்மணி கைக்காட்டி நிறுத்தப்பார்த்தார். ஆனால் எந்த வாகனமும் நிற்கவில்லை.
அந்த நபர் அருகில் சென்று என்னப் பிரச்சனை என்று அந்த பெண்மணியிடம் கேட்டார்.கார் டயர் பஞ்சர் ஆகிவிட்டது என்றார் அந்த பெண்மணி."என் பெயர் தயாளன்.நீங்கள் காரில் உட்காருங்கள், நான் டயர் மாற்றிக் கொடுக்கிறேன் எனக்கூறி, சிறிது நேரத்தில் மிகவும் கஷ்டப்பட்டு டயரை மாத்தினார்.
அந்தப் பெண்மணி,"உங்கள் உதவிக்கு நான் ஏதாவது பணம் தர வேண்டும்"என்றார்.அதற்கு தயாளன்,"நான் சிறியதாக ஒரு டீக்கடை நடத்தி வருகிறேன். நீங்கள் பணம் எதுவும் தரவேண்டாம்.நீங்கள் கஷ்டப்படும் நேரத்தில் என்னாலான உதவி செய்தேன் அவ்வளவே. அப்படியே நீங்கள் பண உதவி செய்யவேண்டும் என்று எண்ணினால்,
வேறு யாராவது ஒரு நபர் கஷ்டத்தில் இருக்கும்போது என்னை நினைத்துப் பாருங்கள்.அவர்களுக்கு உதவி செய்யுங்கள்" என்றார்.
உதவி செய்வது என்பது ஒரு சக்கரம் மாதிரி சுழன்றுக்கொண்டே இருக்க வேண்டும்.நான் உங்களுக்கு உதவி செய்தேன்.நீங்கள் வேறு யாராவது கஷ்டத்தில் இருக்கும்போது உதவி செய்யுங்கள்"
என்று சொல்லிவிட்டு தயாளன் நடக்க ஆரம்பித்தார்.அந்தப் பெண்மணி தயாளனை ஆச்சரியத்துடன் பார்த்துவிட்டு, காரை எடுத்துக்கொண்டு சென்றார். வழியில் தலைவலி எடுப்பது போல் இருக்கவே,அருகில் உள்ள டீக்கடை அருகே காரை நிறுத்திவிட்டு உள்ளே சென்றார்.டீக்கடை பார்ப்பதற்கு ரொம்பவே பரிதாபமாக இருந்தது.
உள்ளே இருந்து ஒரு பெண் வந்து,என்ன வேண்டும் அம்மா என்று கேட்டார்.வயதான பெண்மணி டீக்கடையில் வேலை செய்யும் பெண்ணைப் பார்த்தார். அந்தப் பெண் ஒன்பது மாத கர்ப்பிணி என்பதை தெரிந்துக்கொண்டார்.குடிக்க டீ கொண்டு வாம்மா என்றார்.தயாளன் சொன்னது அந்த அம்மாவிற்கு நினைவு வந்தது.
அந்த அம்மா டீ குடித்துவிட்டு 5000 ரூபாய் பணத்தை டேபிள் மேல் வைத்துவிட்டு சென்றுவிட்டார்.டீ கடையில் வேலை செய்த பெண் காபி டம்பளரை கழுவி வைத்துவிட்டு வந்தார். டேபிளில் கட்டாக பணம் இருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.அதை எடுத்துக் கொண்டு அந்த வயதான பெண்மணியிடம் கொடுக்க ஓடினார்.
அதற்குள் கார் கிளம்பி சென்றுவிட்டது.கடையில் இருக்கும் வேலை எல்லாம் முடித்துவிட்டு, கையில் அந்த வயதான பெண்மணி விட்டு சென்ற பணத்தையும் எடுத்துக்கொண்டு வீட்டுக்குச் சென்றார்.
பிரசவ செலவுக்கு என்ன செய்யப்போகிறோம் என்று புலம்பிக்கொண்டு இருந்த தன் கணவருக்கு இந்தப்பணத்தை காட்ட வேண்டும்
என்று கணவரின் அருகில் சென்றார். ஆனால் மிகுந்த அசதியால் தூங்கிக்கொண்டு இருந்தார் அவரது கணவரான தயாளன்.

எதை நாம் மற்றவருக்குச் செய்கிறோமோ, அதுவே நமக்கு நிச்சயம் திரும்பி வரும்.

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Avvai 🇮🇳

Avvai 🇮🇳 Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @Avvaitweets

10 Jul
மஹாராஷ்டிர மாநிலத்தில் பைதான் எனும் ஊரில் பாண்டுரங்கனின் பக்தரான ஏகநாதர் பிறந்தார்.அவருக்குத் திருமணமாகி ஒரு மகன் இருந்தான்.அவர் அடக்கம்,பொறுமை,மன்னிக்கும் சுபாவம்,கருணை வடிவுடன், கோபம் என்னும் குணத்தை வென்றிருந்தார். Image
ஒருநாள் ஏழைப் பண்டிதன் ஒருவன்,தன் மகளுக்கு திருமணம் செய்யவேண்டி காசுக்காக ஊர்ஊராக அலைந்தான்.அப்போது ஏகநாதர் இருக்கும் ஊருக்கு வந்தான்.அந்த ஊர் பணக்காரனிடம் சென்று பணம் வேண்டினான்.அந்த பணக்காரனுக்கு ஏகநாதர் மீது பொறாமை,ஊரே அவரை புகழ்கிறதே என்று.அதனால் ஒரு திட்டம் தீட்டினான்.
பண்டிதனிடம்,"நீ போய் ஏகநாதனை கோபப்படுத்தி பொறுமையிழக்கச் செய்யவேண்டும்.அப்படிச் செய்தால் உன் மகள் திருமணத்தை நடத்துவதற்கு பணத்தை நானே தருகிறேன்" என்றான்.பணம் வரும் ஆசையில் பண்டிதன்,நேராக ஏகநாதர் வீட்டிற்குச் சென்றான்.அங்கே ஏகநாதர் தன்வீட்டு திண்ணையில் அமர்ந்துகொண்டு, Image
Read 14 tweets
7 Jul
ஒரு ஏழைச்சிறுவன் வீடுவீடாகச் சென்று,தேவைப்பட்ட பொருள்களை, பலருக்கும் விற்று சிறிது காசு சம்பாதித்தான்.கிடைக்கும் காசை வைத்து தன் பள்ளிக்கூட கட்டணத்தைக் கட்டினான். புத்தகங்களையும் தானே வாங்கினான்.ஒருநாள் விற்றுக்கொண்டிருக்கும்போது, சிறுவனுக்கு அதீத பசி எடுத்தது.ஆனால் அவன் கையிலோ
சிறிது காசே இருந்தது. தான் செல்லவிருக்கும் அடுத்த வீட்டில் அந்த காசைக்கொடுத்து ஏதேனும் வாங்கி உண்ணலாம் என்று முடிவு செய்தான்.ஆனால் அடுத்த வீட்டின் கதவைத் தட்டியபோது வெளியே வந்த அழகிய இளம் பெண்ணைப் பார்த்து அவன் தயங்கினான். தான் கேட்க நினைத்ததைக் கேட்க அவனால் முடியவில்லை.
ஆனால் பசியோ பசி.ஒரு டம்ளர் தண்ணீர் தருமாறு கேட்டான் அவன்.
அந்த இளம்பெண் அவன் முகம் வாடியிருப்பதைப் பார்த்து அவன் அளவற்ற பசியால் துடிக்கிறான் என்பதை உணர்ந்தாள்.ஆகவே தண்ணீருக்கு பதிலாக ஒரு பெரிய டம்ளரில் பாலைக் கொண்டுவந்து கொடுத்தாள்.மெதுவாக அதைக் குடித்த அந்தச் சிறுவன்,
Read 12 tweets
5 Jul
ஒரு இளைஞன் காட்டுவழியே நடந்து போய்க் கொண்டிருந்தான். அவனுக்கு பசியெடுத்தது.ஒரு மரத்தின் உயரத்தில் கனிந்த பழங்கள் இருப்பதைக் கண்டான்.மரத்தின் மேல் சரசரவென்று ஏறினான்.மிக கனிந்த வாசனையுள்ள பழங்கள் கிளைகளின் நுனியில் இருந்தன.அவற்றை எட்டிப் பறிக்க,கிளையின் மேல் நகர்ந்து சென்றபோது Image
அவனது பாரம் தாங்காமல் அந்தக் கிளை முறிந்தது. சட்டென்று சுதாரித்த அவன்,கீழே இருந்த ஒரு கிளையை பிடித்துக் கொண்டு தொங்க ஆரம்பித்தான்.குனிந்து பார்த்தான்.தரை வெகு கீழே இருந்தது. ஏற்கெனவே பயந்து போயிருந்த அவன் மேலும் பயந்து கண்ணை மூடிக் கொண்டு "யாராவது காப்பாற்றுங்கள்' என்று
திரும்பத் திரும்ப கத்த ஆரம்பித்தான். உள்ளங்கை வியர்த்து வழுக்கும் நிலை வந்துவிட்டது. தற்செயலாக அப்போது அந்தப் பக்கம் ஒரு முதியவர் வந்தார். மரத்தில் தொங்கிக் கொண்டிருந்தவனை பார்த்தார். அவன்மேல் ஒரு சிறிய கல்லை விட்டு எறிந்தார்.
Read 8 tweets
3 Jul
ஒருநாள் ஒரு மரத்தில் குடியிருந்த குரங்குகளெல்லாம் கூடி, வாரம் இருமுறை உண்ணாவிரதம் மேற்கொள்ள வேண்டும் என்று முடிவு செய்தன. எனவே,தலைவர் குரங்கிடம் போய்,மற்ற குரங்குகள் எல்லாம் விஷயத்தைச் சொன்னவுடன்,தலைவர் குரங்கும் ”சரி அவ்வாறே செய்துவிடுவோம்.
அதற்கு முன்னால் உண்ணாவிரதம் முடிந்தவுடன் உண்ணுவதற்கான பழங்களைச் சேகரித்து வைத்துவிடுங்கள்.ஏனெனில் விரதம் முடியும்பொழுது பசியாக இருக்போம்.எனவே, அப்பொழுது போய் பழங்களைத் தேடிக் கொண்டிருக்க முடியாது” என்று அறிவுரை சொன்னது.
அதை ஆமோதித்த மற்ற குரங்குகளும்,அருகில் இருந்த தோட்டத்தில் இருந்து நிறைய வாழைப்பழங்களைக் கொண்டுவந்து தலைவர் முன் வைத்தன.உடனே தலைவர், ”சரி உண்ணாவிரதத்தை ஆரம்பித்து விடுவோம்” என்றார். அப்பொழுது கூட்டத்தில் இருந்த ஒரு மூத்த அனுபவமுள்ள குரங்கு, ”தலைவரே! விரதம் துவங்குவதற்கு முன்,
Read 9 tweets
24 Jun
போர் இனி தவிர்க்க முடியாததாக ஆகிவிட்டது. பாண்டவர்களை ஒழித்தால் தான் நிம்மதியாக அரசாள முடியும் என்ற முடிவுக்கு துரியோதனன் வந்தான். போர் ஆயத்தங்கள் முடிகின்ற நிலை."ஹூம்,அவர்களிடம் வெறும் ஏழு அக்ஷௌஹிணி சேனை மட்டும்தான். என்னிடமோ பதினோரு அக்ஷௌஹிணி சேனை.
ஒருவனை ஒருவன் வீழ்த்தினால் கூட மிச்ச்ம் நாலு மிஞ்சும் வெற்றியுடன். குடும்பத்தில் பெரியவரான பீஷ்மர் என் பக்கம். அனைவருக்கும் குருவான துரோணர் என் பக்கம். ஆசார்யர் கிருபர் என் பக்கம்.அருமைத்தம்பிகள்,மாமா சகுனி,ஏராளமான ராஜாக்கள்! அட இது போதாதா என் வெற்றிக்கு” என எண்ணி மகிழ்ந்தான்
துரியோதனன். ஆனால் அவனுக்கு ஒரே ஒரு உறுத்தல்.'அந்த மாயக் கண்ணன் அவர்கள் பக்கம்.அவன் ஏதாவது மாயாஜாலம் செய்து விடுவானோ',துரியோதனனுக்கு இந்த பயம் சற்று இருந்தது. அவனுக்கு பதில் தெரியவேண்டிய கேள்வி ஒன்றே ஒன்றுதான்.
'வெற்றி உறுதி என்ற போதிலும் கூட போர் எப்போது முடியும்,
Read 15 tweets
21 Jun
விருந்தின னாக ஒருவன்வந் தெதிரில்
வியத்தல்நன் மொழியினி துரைத்தல்
திருந்துற நோக்கல் வருகென வுரைத்தல்
எழுதல்முன் மகிழ்வன செப்பல்
பொருந்துமற் றவன்தன் அருகுற இருத்தல்
போமெனிற் பின்செல்வ தாதல்
பரிந்துநன் முகமன் வழங்கலிவ் வொன்பான்
ஒழுக்கமும் வழிபடு பண்பே.
விருந்தினர்களை உபசரிப்பது என்பது நமது பண்பாடு."விவேக சிந்தாமணி"சொல்லித் தருகிறது,நாம் விருந்தினர்களை எப்படி உபசரிக்க வேண்டும் என்று.

வியத்தல்:
விருந்தினரை ஆவலோடு,ஆச்சரியத்தோடு வியந்து நோக்க வேண்டும்.எங்களையும் ஒரு பொருட்டாக மதித்து வந்தீர்களே.அதுவே பெரிய சந்தோஷம் எனக்கூறுதல்.
நன்மொழி உரைத்தல்:
நல்ல வார்த்தைகளை இனிமையாகச் சொல்லவேண்டும்.
வீட்டில் அனைவரும் நலமா?உங்கள் உடம்பு நலமா?என விசாரித்தல்

திருந்துற நோக்கல்:
நன்மொழி உரைக்கும்பொழுது,கனிவான அன்பான பார்வை அவர்கள் முகத்தின்மேல் இருக்க வேண்டும். விதியே என சொல்லக்கூடாது.
அவர்களை நன்றாகப் பார்க்கவேண்டும்.
Read 7 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!

:(