#சேலம்_ஆடிப்பண்டிகை
#சேலம்_ஆடித்திருவிழா
😍♥️🎊💥✨

இந்தவருடம் சேலத்தில் ஆடிப்பண்டிகை ஆரம்பம் ஆகவேண்டியநாள் இன்று.!

சேலத்தில், ஆடி 1 தேங்காய் சுடும் பண்டிகை என்று தொடங்கி அந்த மாதம் முழுவதும் திருவிழா தான்.🙌🏽😃

வாங்க ஒரு சின்ன த்ரெட்ஆ பாப்போம்.. இன்ரெஸ்ட் ஆ.😃

#KarthiWrites
ஆடி1 அன்னைக்கு ஊரே குதூகலமாக இருக்கும். சின்ன வயசுல விடிஞ்சா குச்சியும் தேங்காயும் கையுமா தான் சுத்திக்கிட்டு இருப்போம் அந்த நாள் முழுக்க.

அரிசி, பருப்பு, அவுள்,எள்ளு, பொட்டுக்கடலை, வெல்லம், எல்லாம் கலந்து போட்டு சரியான அளவு தேங்காய் தண்ணீர் நிரப்பி அடுப்பில் சுட்டு சாப்பிடுவோம்
சின்ன வயசுல வீட்டு பக்கம் இருக்குற காலியிடம்/காட்டுல அக்கம், பக்கம் வீடுன்னு எல்லாரும் விறகுகளைகொண்டு நெருப்பு மூட்டி சுடுவோம் ஆனால், இப்போ எல்லாம் வீடாகிட்டு, அதனால் அவங்க அவங்க வீட்டுலேய எல்லாம் முடிஞ்சுடும்.

வெந்து முடியும் தருவாயில் ஒரு மணம் வரும் பாருங்க. அப்போவே நாக்குல
எச்சில்🤤🤤 ஊரும். அவ்வளவு வாசாமா இருக்கும்.! அளவு சரியா போட்டு தேங்காய் தண்ணீர் சரியா சேர்த்திருந்தால் நெய் கலந்த பொங்கலை விட சுவையாக இருக்கும்😍

ஆடி 1 பிறந்து அடுத்து வரும் செவ்வாயில் பண்டிகைக்கு பந்தக்கால் நட்டு, பூ போட்டு பண்டிகை தொடங்கும். ஒரு நாள் விட்டு அடுத்து வரும்
வியாழக்கிழமையன்று கம்பம் நட்டு விழா சூடு பிடிக்கும்! அதிலிருந்து அடுத்த 15ஆம் நாள், பால் குடம், கரகம் எடுத்தல், அலகு குத்துதல், பூ மிதித்தல் என்று விழா மையப்பகுதியில் குடிகொண்டிருக்கும்.

இதில் இடையில் ஆடி முதல் வெள்ளி, ஆடி 18(ஆடிப்பெருக்கு) என்று ஒவ்வொன்றாக முடிவுக்கு வரும்.
~ நீங்க நினைக்கலாம் எல்லா ஊரிலும் இது தானே நடக்கும் இதுல என்ன ஸ்பெஷல் இருக்குன்னு?!.

கிராமத்துல ஒரு சின்ன ஊருல நடக்குறதுக்கும், சிட்டில ஊரே குதூகலமாக இருக்குறதுகும் வித்தியாசம் இருக்கு.!

இதுல சேலம் பழையபேருந்து நிலையம் அருகில் இருக்குற போஸ் மைதானத்தில், பெரிய பொருட்காட்சி
அரசாங்கத்தால் நடத்தப்படும். ஆடிப்பண்டிகையை ஒட்டி, அதன் காரணமாகவே நடத்தப்படும் ஒரு பொருட்காட்சி/கண்காட்சி. திருவிழாவின் மைய நாட்களன்று பொருட்காட்சியில் entry க்கு கொடுக்குற டிக்கெட்ல கலெக்ட் ஆகுற அமௌண்ட் எவ்வளவு அப்டின்னு செய்தில பேப்பர்ல எல்லாம் வரும்! அந்த அளவுக்கு அந்த ஒரு
7 நாட்கள் கூட்டம் கூடும் சேலத்தின் மையப்பகுதியில். இதில் மையத்தில்உள்ள சேலம் கோட்டை மற்றும் குகை மாரியம்மன் கோவில் முக்கியபங்கு வகிக்கும்.

இந்த கோவிலில் திருவிழாவின் முக்கியமான மூன்றாம் நாள் வண்டிவேடிக்கை என்னும் ஒரு சிறப்பு மாலையில் ஆரம்பித்து இரவு முடியும்வரை நடக்கும்.
சுற்றுவட்டாரத்தில் 40km தொலைவில் இருந்தும் மக்கள் இந்த நிகழ்வை காண வருகைதருவார்கள். அந்த அளவிற்கு சிறப்பாக நடக்கும். அதன் ஒரு பகுதியின் யூடியூப்/வீடியோ லிங்க் கீழே.



இந்த வழியில் செல்லும் பேருந்துகள் அனைத்தும் அன்று மதியத்தில் இருந்து மறுநாள் காலைவரை
நிறுத்தப்படும். இந்த மூனு நாள் திருவிழாவுக்கு சேலத்து மக்கள் எங்க இருந்தாலும், சேலத்தை நோக்கி வருவாங்க கண்டிப்பா. அந்த அளவுக்கு சிறப்பா நடக்கும்!

இந்த மூனு நாள்ல தெரிஞ்சிடும் ஊருக்குள்ள எத்தன பொண்ணுக்கு கல்யாணம் ஆகிருக்கு, யார் யாரு ரெடியா இருக்காங்க. அப்டின்னு.

அந்த ஒரு வாரம்
பசங்க எல்லாம் யோசிக்கணும், இவ்வளவு நாள் இவளுங்க எல்லாம் எங்க தான் மறைந்திருந்தார்கள்ன்னு!

யோசிச்சி கூட பாக்க முடியாத அளவுக்கு தேவதை கணக்கா புடவைலையும் தாவனிலையும் கோவில் கோவிலா குடும்பத்தோட சுத்திட்டு இருப்பாங்க. பசங்க மனசு திருவிழா கடைல கட்டி தொங்கவிட்டிருக்குற பலூன் மாதிரி
அவங்களையே சுத்தி சுத்தி பறந்துட்டு இருக்கும். இந்த ஒரு வாரத்துல மனச தொலைத்த பசங்களும் பொண்ணுங்களும் ஏராளமாக இருப்பாங்க. 😍♥️

சேலம் சிட்டில ஏறியாவுக்கு ஒரு கோவில் இருக்கும், பண்டிகை ஆரம்பமே அந்த இரண்டு பெரிய கோவில்ல இருந்து தான் ஆரம்பிக்கும். அதனால ஊருமுழுக்க விழாக்கோலம்
பூண்டிருக்கும். மையவிழா நடக்குற 5நாள் செவ்வாய்-ஞாயிறு வரை சேலத்துல லோக்கல் ஹாலிடே இருக்கும் அரசு அறிவிப்போடு. ஸ்கூல், Govt, எல்லாமே லீவ் ல இருக்கும்!

இந்த ஒரு வாரத்துல ஊருக்குள்ள இருக்குற பெரியகை, ஆளு இருக்குறவன் எல்லாம் கிரின்ச் கூ🔥யானுங்க மாதிரி சுத்திட்டு இருப்பானுங்க. Eg.👇🏽
பக்தி மயத்துல இருக்குறவங்கலும் இருப்பாங்க.

இந்த ஒரு மாசமும் கோவில்ல கூழு ஊத்துறது பிரசாதம் குடுக்குறதுன்னு அமர்க்களமாக இருக்கும். ஊரு முழுக்க எங்க பாத்தாலும் ரேடியோல சாமி பாட்டு தான். சவுண்ட் சிஸ்டம்லாவச்சு நைட்ல பாட்டுகச்சேரி, Dance, நாடகம் பட்டி மன்றம்ன்னு, சேலம் ஜொலிக்கும்.
இதுல எதாவது ஒரு கோவில்ல விஜய்டிவி சன்டிவி பிரபலங்கள்ன்னு கூட்டிட்டு வந்து புரோகிராம் பண்ணுவாங்க. அந்த கோவில்களை தேடி தேடி போயி மக்கள் பாப்பாங்க..

ரொம்ப நாள் கழிச்சி சந்திக்கும் சொந்தங்கள், நண்பர்கள், சரக்கடிக்கிர gang, போலீஸ்கிட்ட அடிவாங்குற gang இதெல்லாம் ஒரு பக்கம் இருக்கும்
சொல்லிகிட்டே போகலாம்.. அவ்வளவு இருக்கும் இந்த ஒரு மாதத்தில்.. 😍🤩🎊

😔 ஆனா போன வருடம், இந்த வருடமும் கொரோனா காரணமா விழா நடக்கல. எத்தனையோ வருடத்திற்கு பிறகு விழா தடைபடுது அப்டின்னு போன வருடம் சன் செய்தில சொன்னாங்க. வருடம் மட்டும் சரியா ஞாபகம் இல்ல, ஆனால் அதிக வருடம் அது ஞாபகம்
இருக்கு. Hope 😊 அடுத்த வருடம் எல்லாம் சரி ஆகிடும்னு நம்புறேன்/நம்புறோம். 😌♥️😎
நாங்க @ramesh_twetz @Its_Me_Prabakar @mundrikottai

Tag: @Tonystark_in @Ganae_Ramesh @_Java_Speaks @GiriSuriya_7 @manion_ra @CinemAnalyst @Karthicktamil86 @Ajit_karthi @karthick_45 @smithpraveen55

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with சமூகவாதி

சமூகவாதி Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @Karthi_Genelia

16 Jul
#Vaazhlreview #வாழ் ♥️🎬

இந்த படம் முதலில் எல்லோராலும் ரசிக்க முடியுமா, எல்லோருக்கும் பிடிக்குமா அப்டின்னா இல்ல! அருமையா வந்திருக்க வேண்டிய ஒரு படம் தான்.! சவுண்ட் விஷூவல் அப்டின்னு எல்லாமே அருமையா இருக்கு!

திரைக்கதைல இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தி, அரைமணி
#KarthiWrites
நேரம் அதிகமானாலும் பரவால்லன்னு இன்னும் கொஞ்சம் ஸ்டோரி சேர்த்து விஷூவல் add பண்ணி மெருகேற்றி இருந்தால் படம் அருமையா வந்திருக்கும்! ஒருசில இடங்களில் இசை சரியா பொருந்தவில்லை என்பது மறுக்க முடியாத உண்மை.

IT ல ஒர்க் பண்ற ஒருத்தனுக்கு மனம் ரீதியா எவ்வளவு பிரச்சனை இருக்கும் அப்டின்னு
காட்ட முயற்ச்சி பண்ணி, அதுல ஒரு 50% கூட சரியா காட்டல! ஒரு IT dude ஃபேஸ் பண்ற பிரச்சனை எவ்வளவோ இருக்கு!

புராஜக்ட்ல ஒருத்தனுக்கு அன்னன்னைக்கு வர்ற சின்ன சின்ன பிரச்சனைகள சரி பண்ண, ஒரு அரைமணி டீ குடிக்கிற இடைவெளி உதவும். அப்படி இருக்கைல இதுபோல ஒரு பயணம் அவனுக்கு மிகப்பெரிய பூஸ்டர்
Read 7 tweets
11 Jun
#InterviewTips
#InterviewProcess

பதிவு - 2

முடிஞ்சவரைக்கும் முதல் பதிவுல எல்லாமே சொல்லிருக்கேன். அதுல விட்டுப்போன ஒன்னு ரெண்டு இதுல பாக்கலாம்.

வாங்க த்ரெட்குள்ள போலாம்.!🙌🏽🤗

1. இன்டர்வியூ ல முக்கியமா ரெண்டே ரெண்டு விசயம்தான் கவனிப்பாங்கன்னு சொனேன். 1 இங்கிலீஷ் Knowledge.
2.டெக்னிகல் Knowledge. இதுல எதாவது ஒன்னுல நீங்க தரவாஇருந்தாலே போதும். அதுக்காக இங்கிலீஷ் மட்டும் தெரிஞ்சிருந்தா போதும் உங்களோட Profile job ரோல்ல எதுவும் தெரியலன்னாலும் பரவால்லனு நான் சொல்ல வர்ல. டெக்னிகல் Knowledge கம்மியா இருந்தாலும் இங்கிலீஷ் knowledge அதவிட நல்லா இருக்குபோது
உங்கள செலக்ட் பண்ணி உங்களுக்கு கொஞ்சம் ட்ரைனிங் குடுத்து jobல போடுவாங்க. இங்கிலீஷ் knowledge இல்லாம நீங்க டெக்னிகல்லா Perfect ah இருந்தா இங்கிலிஷ கண்டுக்கிடவே மாட்டாங்க. டெக்னிகல்க்காக உங்களுக்கு வேலை கிடைக்கும்.

2. நீங்க job தேடுறிங்க அப்டின்னா உங்களோட Naukri LinkedIn profile
Read 22 tweets
8 Jun
#interviewtips
#InterviewProcess

இன்டர்வியூ பத்தி எனக்கு தெரிஞ்ச கொஞ்சத்த நான் இங்க எழுதுறேன். தப்பா இருந்தாலோ அல்லது உங்க பக்கத்துவாதம் இருந்தாலோ தாராளமா சொல்லி திருத்தலாம். 🙏🏽🙂

வாங்க த்ரெட்குள்ள போலாம்.!

இன்டர்வியூ பற்றி திடீர்னு எழுத காரணம். சொல்லப்போனா இத ஒரு மாதத்திற்கு
முன்பாகவே எழுதி இருக்கணும்.

கடந்த ஒரு வாரமாக எனக்கும் நண்பர்கள் சிலர்க்கும் இன்டர்வியூ க்காக வந்த கால் மெயில் காரணம் இந்த ஒரு பெரிய த்ரெட். ஒரு வாரத்துல 10+ ஃபோன் கால் கொஞ்சம் மெயில். மெக்கானிக்கல் ஃபீல்டுல இருக்குற நண்பருக்கும் ITல இருக்குற எங்களுக்கும்.

எப்போவுமே வேலை தேடவும்
இன்டர்வியூ அட்டெண்ட் பண்ணவும் சரியான காலம் ஏப்ரல் முதல் ஜூன் வரை (ஜூலை அடிஷனல்). பிறகு நவம்பர் டிசம்பர் (ஜனவரி அடிஷனல்). இந்த ரெண்டு காலகட்டம் தான்.

எப்படி விதைவிதைப்புல தைப்பட்டம் ஆடிப்பட்டம் ரெண்டும் ரொம்ப முக்கியமோ அந்தமாதிரி வேலை தேடுறதுல இந்தரெண்டு காலமும் ரொம்ப முக்கியம்.
Read 22 tweets
5 Jun
#Mirzapur 🎬❤️

*தா என்னமா இருக்கு சீரிஸ்.. அதுவுயில்லாம தமிழ் டப்பிங் தெறிக்க விட்டிருக்காங்க. வார்த்தைக்கு வார்த்த கெட்டவார்த்தை.. தமிழ்ல இருக்க ஒரு கெட்டவார்த்தைய கூட விடல போல.. தரமான டப்பிங். 🔥🙌🏽 முந்தாநேத்து பாக்க ஆரம்பிச்சேன். ரெண்டு சீசனும் தரமா இருக்கு.

மொத்த சீரிஸ்ஸும் Image
விஸ்வாசம் அப்டிங்குற ஒரு concept ah மையமா வச்சுத்தான் நகருது. மக்பால் அப்டிங்கிற ஒரு character ah அதுக்கு எடுத்துக்காட்டா சொல்லலாம். தன்னோட அம்மா உயிர காப்பாத்துனதுக்காக காளித்க்கு விஸ்வாசமா இருப்பான். அவன்மூலமாவே தன்னோட அம்மா மீண்டும் சாகும்போது அந்த விஸ்வாசத்துல இருந்து வெளில Image
வறான்.

எல்லாருமே செம்ம ஆக்டிங்.

முன்னா! என்ன தான் பல கொலைகள் பண்ணாலும், முட்டாக்கூ மாதிரி இருந்தாலும்.. நண்பர்களுக்கு அவன் விஸ்வாசமா தான் இருப்பான் அவங்களும் இவனுக்கு விஸ்வாசமா தான் இருப்பாங்க. தன் இரண்டு நண்பர்களும் இவனால சாகும்போது அத அவனால தாங்கிக்க முடியாம கண்கலங்குவான்.
Read 7 tweets
21 May
#Novemberstoryreview 🎬

ஒரு 4மணிநேரம் 30நிமிட க்ரைம் த்ரில்லர். உக்காந்த இடத்தவிட்டு எந்திரிக்காம பாகும்படியாக குடுத்திருக்காங்க. எல்லாரோட நடிப்பும் அருமை. தமன்னாக்கு இதுரொம்ப நாளைக்கு அப்புறம் ஒருநல்ல படம்னு சொல்றத விட, பசுபதிக்கு தன்னோடா சினிமா வாழ்க்கைல இது ஒரு
#KarthiReviews
டர்நிங் பாய்ண்ட்ன்னே சொல்லலாம். மனுசன் பட்டைய கிளப்பி இருக்காப்டி.

பசுபதி தரமான நடிப்பு 🔥🔥

பசுபதி மட்டும் இல்ல அவரோட ஏசு கேரக்டர்ல குழந்தைப் பருவம் இளமைப் பருவம்ன்னு வந்த அந்த ரெண்டு பேரும் அட்டகாசமா நடிச்சிருக்காங்க.

சரியான ஆட்க்கள் தேர்வு. ஃபேமஸ் ஆர்டிஸ்ட் யாரையும் எடுத்து
காசு அதிகமா செலவு பண்ணாம, சின்ன சின்ன ஆக்டரா இருந்தாலும் எல்லாரும் தெரிஞ்ச முகம் தான். எல்லாரோட நடிப்பும் நல்லா இருந்தது.

கதை அருமையான ஒன்னு. இதபேஸ் பண்ணி படங்கள் இருக்கு. இருந்தாலும் இது ஓகேன்னு சொல்ற மாதிரியா இருக்கு.

இன்னும் கொஞ்சம் திரைக்கதைல கவனம் செலுத்திருந்தா இன்னும்
Read 10 tweets
19 May
#MoviesForKids 😍🎬

பெஸ்ட் மூவிஸ் டு வாட்ச் வித் ஃபேமிலி அண்ட் கிட்ஸ். நிறைய மூவீஸ் இருக்கு அதுலகொஞ்சம் #IMDb ரேட்டிங்வைஸ் குடுக்கப்பட்டிருக்கு. இதுல அதிகபட்சம் இங்லீஷ்ல தான்இருக்கு சோ! தமிழுக்கு டெலிகிராம் (அ) tamilyogi[dot]cafe siteல தேடிபாருங்க கிடைக்கும்.🍁

#KarthiReviews
1 #TheLionKing 1994
8.5 Anmtn,Advnte,Drma,Music

2 #BackToTheFuture 1985
8.5 Advnte,Cmdy,Sci-Fi

3 #WALL·E 2008
8.4 Anmtn,Advnte,Rmnce,Sci-Fi

4 #Coco 2017
8.4 Anmtn,Advnte,Drma,Fntsy,Music,Mstry

5 #Up 2009
8.2 Anmtn,Advnte,Cmdy,Fmly

6 #FindingNemo 2003
8.1 Anmtn,Advnte,Cmdy
7 #HarryPotter Seires (2001-2011)
8.1 Advnte,Drma,Fntsy,Mstry

8 #JurassicPark 1993
8.1 Actn,Advnte,Sci-Fi,Thrllr

9 #Monsters,Inc. 2001
8.1 Anmtn,Advnte,Cmdy,Fmly,Fntsy

10 #StandByMe 1986
8.1 Advnte,Drma

11 #InsideOut 2015
8.1 Anmtn,Advnte,Cmdy,Drma,Fmly,Fntsy
Read 23 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!

:(