17ம் நூற்றாண்டில் ஔரங்கசீபின் காலத்தில் சிதம்பரம் கோயில் மாலிக் காபூர் தாக்குதலுக்குப் பின் மீண்டும் இஸ்லாமியத் தாக்குதல்களுக்கு இலக்காயிற்று. சுமார் 38 ஆண்டுகள் கோயில் பூஜையின்றி இருந்தது. இக்காலகட்டத்தில் நடராஜரின் திருவுருவம் வேறுவேறு இடங்களில் வைத்துப் பாதுகாக்கப்பட்டு வந்தது
என்பதற்குப் பல ஆதாரங்கள் கிடைக்கின்றன. இது குறித்த ஒரு செவிவழிச் செய்தியை வைத்து உ.வே.சாமிநாதையர் ‘அம்பலப்புளி’ என்ற சுவாரஸ்யமான கட்டுரையை எழுதியிருக்கிறார் (நினைவு மஞ்சரி இரண்டாம் பாகம், பக். 1-10). இஸ்லாமியப் படையெடுப்பு குறித்து அறியவந்த சிதம்பரம் தீட்சிதர்கள் இரவோடிரவாக
நடராஜரின் மூர்த்தியை எடுத்துச் சென்று ஒரு சிற்றூரிலிலுள்ள புளியந்தோப்பில் புளியமரப் பொந்தில் வைத்து அப்பொந்தை மூடிவிட்டுத் திரும்பி வந்து விடுகிறார்கள். அத்தோப்புக்குச் சொந்தக்காரர் எதேச்சையாக அதற்குள் நடராஜரின் திருவுருவம் இருப்பதைக் கண்டு இதற்கு ஏதோ காரணம் இருக்கவேண்டும் என்று
ஊகிக்கிறார். இந்த மரத்தில் தெய்வம் இருப்பதாகக் கனவு கண்டதாக ஊர்மக்களிடம் கூறிப் பூசை செய்து வருகிறார். ஆண்டுகள் பல கடந்ததும் சிதம்பரத்தில் அமைதி திரும்புகிறது. தீட்சிதர்கள் நடராஜரை மறைத்து வைத்த இடத்தை அடையாளம் காண முடியாமல் ஊரூராகத் தேடி அலைகிறார்கள். ஓரிடத்தில் “தம்பி, அந்த
அம்பலப்புளியில கொண்டு போய் மாட்டைக் கட்டு” என்று ஒரு பெரியவர் சொல்வதைக் கேட்டு அங்கு சென்று பார்க்க, நடராஜர் உருவம் அங்கு ஒரு புளியமரப் பொந்தில் இருந்தது கண்டு பெருமகிழ்ச்சியடைந்து, அதை எடுத்துவந்து கோயிலில் பிரதிஷ்டை செய்கிறார்கள். இதன் காரணமாகவே அந்த ஊருக்கு புளியங்குடி என்று
பெயர் ஏற்பட்டது என்று கூறி அதற்குச் சான்றாக ‘சோழமண்டல சதகம்’ என்ற நூலிலிருந்து பின்வரும் பாடலையும் உ.வே.சா மேற்கோளாகத் தருகிறார்.
‘தெளிவந்து அயன்மால் அறியாத தில்லைப்பதி அம்பலவாணர்
புளியம்பொந்தினிடம் வாழும் புதுமை காட்டிப் பொருள்காட்டி
எளிதிற் புளியங்குடியார் என்று இசைக்கும்
பெருமை ஏருழவர்
வளருங்குடியில் பொலிவாழ்வு வளஞ்சேர் சோழமண்டலமே.’
உ.வே.சா குறிப்பிடும் விஷயம் கற்பனையல்ல, வரலாற்றில் உண்மையாக நடந்த சம்பவங்களின் அடிப்படையிலானதே என்பதற்கான ஆதாரம் செப்பேடுகள் மூலம் உறுதி செய்யப் படுகிறது. இதில் நான்கு செப்பேடுகள் (‘தஞ்சை மராட்டியர் செப்பேடுகள்-50’
நூலின் படி, செப்பேடு எண் 45 முதல் 48) சிதம்பரத்தில் நடந்த இரண்டு கும்பாபிஷேக விழாக்கள் பற்றிக் குறிப்பிடுகின்றன. இவை சத்ரபதி சிவாஜியின் புதல்வரான சாம்பாஜி காலத்தியவை. 47 எண்ணுள்ள செப்பேடு 1684ல் நடந்த கும்பாபிஷேகம் பற்றிக் கூறுகிறது. இதில் வரும் பாடலில் முதல் பாதியில் கும்பாபிஷேக
ஆண்டு நாள் கிழமை விவரங்கள் உள்ளன. இரண்டாம் பாதி இவ்வாறு கூறுகிறது –

உயர் ஆகமப் படியின் ஆனந்த நடராஜர்
ஒளிபெற நிருத்தமிடவே
ஓங்கு சிற்சபைதனைச் செம்பினால் மேய்ந்திடும்
உண்மையை உரைக்க எளிதோ.

‘செம்பினால் மேய்ந்திடும் என்பது கவனிக்கத்தக்கது. இதன்மூலம், சோழபாண்டியர்கள் அளித்த பொன்
முழுவதும் இஸ்லாமியப் படையெடுப்பில் கொள்ளையடிக்கப்பட்ட பிறகு மூளியாக இருந்த சிற்சபை, சுமார் 350 ஆண்டுகளுக்குப் பிறகு செம்புத் தகடுகள் வேய்ந்து திருப்பணி செய்யப்படுகிறது என்பது புலனாகிறது. கீழே அடுத்துவரும் பாடலில் இருந்து இந்தக் கும்பாபிஷேகத்தின்போது நடராஜரின் மூலமூர்த்தி
தில்லைக்கு வெளியே இருந்தது என்பதும் தெரியவருகிறது.
45ம் எண்ணுள்ள செப்பேட்டின் படி, 1686ம் ஆண்டு, கனகசபையில் முற்றிலும் பொன் வேய்ந்து மீண்டும் கும்பாபிஷேகம் நடத்தப்பட்ட செய்தி உள்ளது. இதுதான் இன்று நாம் காணும் பொன்னம்பலம். இந்த நிகழ்வைக் குறிக்கும் செப்பேட்டுப் பாடலில் நடராஜர்
தில்லையிலிருந்து வெளியேறி மீண்டும் திரும்பி வந்த காலக் கணக்கு துல்லியமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. நடராஜர் வெளியே இருந்த காலம் சகாப்தம் 1570 சர்வதாரி மார்கழி 25 (1648 டிசம்பர் 24) முதல் சகாப்தம் 1608 அட்சய வருடம் கார்த்திகை 14 (1686 நவம்பர் 14) வரை. அதாவது 37 ஆண்டுகள் 10 மாதம்
20 நாட்கள். மேற்கூறிய இரண்டு கும்பாபிஷேகங்களும் சாம்பாஜி மன்னரின் ஆணைப் படி நிகழ்ந்தன. அவரது குலகுருவான முத்தைய தீட்சிதரின் வழிகாட்டலில் திருச்சிற்றம்பல முனிவர் நடத்தி வைத்தார். பறங்கிப் பேட்டையில் மராட்டிய மன்னரின் அதிகாரியாக இருந்த கோபால் தாதாஜி பண்டிதர் என்பவர் பொறுப்பேற்று
திருப்பணிகளைக் கண்காணித்தார். இந்தச் செய்திகளும் இச்செப்பேடுகளிலிருந்து தெரிய வருகின்றன. இதற்குப் பின்னரும் இன்னும் ஒரு பத்தாண்டுகள், 1686 முதல் 1696 வரை மீண்டும் நடராஜர் தில்லையிலிருந்து வெளியேறி திருவாரூரில் இருந்தார் என்ற செய்தி சிதம்பரம் கோயில் ஆயிரங்கால் மண்டபத்தில் உள்ள ஒரு
கல்வெட்டிலிருந்து தெரிய வருகிறது. ஔரங்கசீப்பின் இஸ்லாமியப் படைகள் மராத்தியப் படைகளைத் துரத்தி வந்து செஞ்சியில் முகாமிட்டிருந்தது இதற்குக் காரணமாக இருக்கலாம்.
சிவாஜியின் முதல் மனைவியின் மூத்த மகனாகப் பிறந்த சாம்பாஜியின் வாழ்க்கை பெரும் போராட்டங்களும் துயரங்களும் தியாகமும்
நிறைந்தது. அவர் உலகில் வாழ்ந்திருந்ததே 31 ஆண்டுகள்தான். ஆட்சியில் இருந்த காலம் பத்தாண்டுகள் கூட அல்ல. அவ்வளவு குறுகிய வாழ்க்கையில் இரண்டு முறை தில்லை நடராஜரின் கும்பாபிஷேகம் அவரது ஆணையின் கீழ் நடந்திருக்கிறது என்பது மிகவும் ஆச்சரியத்திற்குரிய விஷயம். இரண்டே ஆண்டுகளில்
சிற்சபைக்குக் கூரையிடும் அளவு பொன்னைத் திரட்டிய சாம்பாஜியின் பக்தியுணர்வும், முயற்சியும் வியக்க வைக்கின்றன. 1689ம் ஆண்டு சாம்பாஜி இஸ்லாமியப் படைகளால் சிறைப்பிடிக்கப்பட்டார். ஔரங்கசீப்பின் ஆணைப் படி அவர் குரூரமாகச் சித்திரவதை செய்து கொல்லப்பட்டார் என்பது வரலாற்றில் ஆதாரபூர்வமாகப்
பதிவுசெய்யப்பட்டுள்ளது. கூடுதலாக, ஔரங்கசீபின் முன் தலைவணங்கி இஸ்லாம் மதத்தை ஏற்றால் சாம்பாஜியை விடுவிக்கிறோம் என்று ஆசைகாட்டப்பட்டது என்றும், சாம்பாஜி அதை மறுத்து மரணத்தைத் தழுவி தனது வீரமரபின் மேன்மையைக் காத்தார் என்றும் மராட்டிய வீரகதைப் பாடல்கள் கூறுகின்றன. சாம்பாஜியை
‘தர்மவீரன்’ என்று புகழ்கின்றன. இனி அடுத்தமுறை சிதம்பரத்திற்குச் சென்றால், கனகசபையின் பொற்கலசங்களை நோக்கும்போது இந்த வரலாறும் உங்கள் நினைவில் எழட்டும். ஸ்தலபுராணக் கதைகளோடு சேர்த்து, அந்தந்தத் தலத்தின் புனிதத்தையும் பண்பாட்டையும் காப்பதற்காக நமது முன்னோர்கள் தொடர்ந்து போராடிய
தியாக வரலாறுகளையும் அறிந்து கொள்வோம். அவற்றை நமது அடுத்த தலைமுறைக்கும் கூறுவோம்.

திரு ஜடாயு அவர்கள் வலம் இதழில் எழுதிய கட்டுரையில் இருந்து எடுக்கப்பட்டது. முழு கட்டுரை லின்க் valamonline.in/2017/04/blog-p…

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with அன்பெழில்

அன்பெழில் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @anbezhil12

17 Jul
பிராமணர்கள் கடவுளின் பெயரால் அப்பாவிப் பெண்கள ஏமாற்றி லவ் ஜிகாத் செய்து கல்யாணம் செய்கிறார்களா?
மணல் கடத்தல், மலக்குடலில் தங்கம், கஞ்சா கடத்துகிறார்களா?
நில அபகரிப்பு செய்கிறார்களா?
வாடிகன் அடிமைகள் போல் என் மதத்துக்கு வா என்று மதமாற்றம் செய்கிறார்களா?
அரசியலுக்கு வந்து ஊழல்
செய்கிறார்களா?
பின் எதற்காக திருடர்கள், மதவெறியர்கள், கடத்தல்காரர்கள், அந்நிய நாட்டு அடிமைகள், கேடுகெட்ட அரசியல் ஓநாய்கள், தேச துரோகிகள், கொலைகாரர்கள், குற்றவாளிகள் ஓன்று சேர்ந்து அடுத்தவர்களை எதிர்பார்த்து கோவிலில் தட்டில் விழும் பிச்சைக் காசுக்காக தங்கள் குடும்ப நலனையும்
சுகத்தையும் துறந்து தியாகம் செய்து வாழும் பிராமணர்களை எதிர்க்கிறார்கள்? காரணம் இது தான். பிராமணர்கள் மிகுந்த தியாக மனப்பான்மையோடு, ஒழுக்கத்தோடு, உறுதியோடு இந்த மண்ணிற்கு உரிய அடையாளங்களான ஆன்மீகத்தை, திருக்கோவில்களை, கலாச்சாரத்தை, பண்பாட்டை, மொழிகளை (சமஸ்கிருதம் & தமிழ்)
Read 4 tweets
9 Jul
சபரிமலையில் ஐயப்பசாமியை உறங்க வைக்கும் ஹரிவராசனம் விஸ்வமோகனம் எனும் பாட்டு அத்தாழப்பூஜை முடிந்த பின் நடை சாத்தும் பாடலாக ஒலிக்கும். இந்தப் பாடலை இயற்றியவர் தமிழகத்தைச் சேர்ந்த கம்பங்குடி ஸ்ரீ குளத்து ஐயர். இவர் 1920 ஆம் வருடம் இந்தப் பாடலை இயற்றினார். இவர் திருநெல்வேலி மாவட்டம்
கல்லிடைக்குறிச்சி எனும் ஊரில் பிறந்தவர். கம்பங்குடி சுந்தரம் குளத்து ஐயர் பிரசுரித்த சாஸ்தா ஸ்துதி கதம்பம் என்ற புத்தகத்தில் உள்ளது ஹரிவராசனம் கீர்த்தனம். இவர் ஹரிவராசனம் பாடலை ஐயப்பசாமியை தரிசிக்கும்போது எழுதினார். ஒவ்வொரு வரிகளும் ஐயப்ப சாமியே அருளியது போல இருந்ததாக அவர்
கூறியுள்ளார். இவரது முன்னோர்கள் மிகவும் கஷ்டப்பட்டாலும், இவர்களது வீட்டின் வழியாக போவோர் வருவோருக்கும், இல்லாதவர்களுக்கும் உணவளித்து வரும் பழக்கத்தை கடைபிடித்து வந்தனர். அப்போது ஐயப்பசாமி, தாயின் தலைவலி போக்கப் புலிப்பாலை எடுக்க அந்த வழியாக வந்துள்ளார். அப்போது மிக களைப்புடன்
Read 9 tweets
9 Jul
சேவா குஞ் எனும் இடத்தை 1590ல் சுவாமி ஹிட் ஹரிவன்ஷ் கண்டுபிடித்தார். அவரது சம்பிரதாயத்தைப் பின்பற்றுபவர்கள் இந்த புனித தளத்தை பராமரித்து, தினசரி பூஜா சேவையை ராதா வழங்குகிறார்கள். இது ராதா கிருஷ்ணனுக்கு என அர்ப்பணிக்கப்பட்ட ஒரு அழகான கோவில். இது ரங் மஹால் என்றும் அழைக்கப்படுகிறது. Seva Kunj- constructed and proposed.
இது ஒரு மரங்கள்-செடிகள் வளர்ந்துள்ள பெரிய தோட்டமாகும், இதில் நெளிந்து-வளைந்து செல்லும் பாதைகள் உள்ளன. இங்கு ராதாவும் கிருஷ்ணனும் பிருந்தாவனத்தின் மற்ற கோபிகளுடன் ராஸ் லீலாவை நிகழ்த்தினர். கோவிலின் சுவர்களில் ஸ்ரீ ராதாகிருஷ்ணா நிகழ்த்திய பல்வேறு லீலைகளின் ஓவியங்களால் அலங்கரிக்கப்
பட்டுள்ளன. ஒவ்வொரு ஓவியமும் ராதா மற்றும் கிருஷ்ணரின் வெவ்வேறு அம்சங்களை சித்தரிக்கிறது.
ஓவியத்தில் ஒன்று கிருஷ்ணர் ராதாவின் முடிகளை வாறுவதையும் அலங்கரிப்பதையும் சித்தரிக்கிறது. மற்றொரு ஓவியத்தில் கிருஷ்ணர் ராஸ் லீலாவால் சோர்வடைந்த ராதாவின் கால்களை மசாஜ் செய்கிறார். மற்ற ஓவியங்கள் Temple entrance.
Read 9 tweets
9 Jul
#புத்தர் தன்னுடைய சீடர்களில் ஒருவரை அனுப்பி ஏரியில் இருந்து குடிப்பதற்கு நீர் கொண்டுவரச் சொன்னார். சீடரும் தங்களிடம் இருந்த பானை ஒன்றை எடுத்துக்கொண்டு நீர்நிலையை நோக்கி நடந்தார். அந்த நேரத்தில், மாட்டு வண்டிக்காரர் ஒருவர், ஏரிக்குள் இறங்கி ஏறியைக் கடந்து சென்றார். ஏரி கலங்கி
விட்டது. அத்துடன் ஏரியின் கீழ்ப்பகுதியில் இருந்த சேறும் சகதியும் மேலே வந்து நீரை அசுத்தப் படுத்தி பார்ப்பதற்கே உபயோகமற்றதாகக் காட்சி அளித்தது. இந்தக் கலங்கிய நீர் எப்படிக் குடிப்பதற்குப் பயன்படும், இதை எப்படிக் குருவிற்குக் கொண்டுபோய்க் கொடுப்பது என்று தண்ணீரில்லாமல் திரும்பி
விட்டார். அத்துடன் தன் குருவிடமும் அதைத் தெரிவித்தார். ஒரு மணி நேரம் சென்ற பிறகு, புத்தர் தன்னுடைய சீடரை மீண்டும் ஏரிக்குச் சென்று வரப் பணித்தார். நீர் நிலையருகே சென்று சீடர் பார்த்தார். இப்போது நீர் தெளிந்திருந்தது. சகதி நீரின் அடியிற்சென்று பதிந்திருந்தது. ஒரு பானையின் தண்ணீரை
Read 6 tweets
7 Jul
#ஶ்ரீகிருஷ்ணன்_கதைகள்
#திருமங்கையாழ்வார் அரங்கனுக்கு கோவில் கட்டும் பணியில் ஈடுபட்டிருந்த நேரம். ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் அந்த திவ்ய திருத்தொண்டில் ஈடுபட்டு வந்தனர். கூலிக்கு பலர் வேலை செய்து வந்தாலும் சிலர் நாம் செய்து கொண்டிருப்பது ஒரு திருத்தொண்டு என்ற எண்ணத்துடனும், சிலர் ImageImage
அதை வெறும் கூலி வேலையாகவும், சிலர் அதை வேண்டா வெறுப்பாகவும் செய்துவந்தனர். சிலர் அதைக் கூட செய்யாமல் வேலை செய்வது போல பாசாங்கு செய்தனர். ஒரு மாபெரும் பணியில் இதெல்லாம் சகஜம் தானே, அவரவர்க்கு அவரவர் மனசாட்சி தானே நீதிபதி?
நாளொரு மேனி பொழுதொரு வண்ணமுமாக வெகு ஜோராக நடைபெற்று வந்த
அந்த பணியில் ஒரு கட்டத்தில் பொருள் வசதி இன்றி தொய்வு ஏற்பட்டது. செய்வதறியாது திகைத்தார் திருமங்கையாழ்வார். அன்றைய பணிக்கு கூலி தரக்கூட பணம் இல்லை என்றார் கணக்குப்பிள்ளை. திருமங்கையாழ்வார் தவித்துப் போனார். என்ன செய்வேன்? இந்த தொழிலார்களுக்கு என்ன பதில் சொல்வேன்? இவர்கள் எல்லாம்
Read 22 tweets
5 Jul
#ஜனகமகராஜா ஒரு நாள் இரவு தூங்கிக் கொண்டிருந்தார். அவருக்கு அப்போது ஒரு கனவு வந்தது. அதில் அவர் ஒரு பிச்சைகாரனாக எண்ணி மிகவும் சிரமப்படுவது போல் கனவு. கனவில் அவர் படாத பாடுபட்டு துன்பப்பட்டார். அப்போது அது கனவு போலவே அவருக்குத் தெரியவில்லை. நிஜம் போலவே இருந்தது. திடுக்கிட்டு
நாராயணா என்று அலறினார். கண் விழித்தார். கண்விழித்துப் பார்த்தால் எல்லாம் மாறியிருந்தது. சில வினாடி முன்பு பிச்சைக்காரராக இருந்தவர் இப்போது மன்னராக இருந்தார்.
இது தொடர்ந்து பல நாட்களாக நடந்து கொண்டே இருந்தது. அவர் தினசரி இரவு தூங்கும் போது கனவில் பிச்சைக்காரனாகி படாத பாடுபடுவார்.
பகலில் எழுந்தால் மன்னனாக சகல சுகபோகங்களுடன் இருப்பார். ஜனகருக்கு ஒரு பெரும் சந்தேகம் உதித்தது. நான் மன்னனாக இருந்து பிச்சைக்காரனாக இருப்பது போல் கனவு கண்டேனா? அல்லது பிச்சைகாரனாக இருந்து இப்போது மன்னராக இருப்பது போல் கனவு காண்கிறேனா என சந்தேகம் வந்து விட்டது. மந்திரி, ராஜகுரு
Read 19 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!

:(