உளவு பார்க்கப்பட்ட தோழர் திருமுருகன் காந்தியின் தொலைபேசி! ஜனநாயகத்தின் குரல்வளையை நெறிக்க முயலும் மோடி அரசை வன்மையாக கண்டிக்கின்றோம்!
- மே பதினேழு இயக்கம்
பெகாசஸ் ஸ்பைவேர் (#Pegasus) என்ற உளவுச் செயலியின் மூலம் உலகின்..
பல நாடுகளை சேர்ந்த முக்கிய நபர்களின் தொலைபேசிகள் அரசுகளால் உளவு பார்க்கப்பட்டிருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. அவ்வாறு உளவு பார்க்கப்பட்டிருக்கக்கூடும் என்ற பட்டியலில் மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்களின் தொலைபேசியும் இருக்கிறது என்ற..
2/
தகவல் அதிர்ச்சியளிக்கிறது. தோழர் திருமுருகன் காந்தி அவர்களின் தரவுகளை சேகரித்து அவரை முடக்கிவிடலாம் என்ற எண்ணத்தில் இந்திய ஒன்றிய மோடி அரசு ஈடுபட்டுள்ளது இதன் மூலம் அம்பலமாகியுள்ளது. தோழர் திருமுருகன் காந்தி உட்பட முற்போக்கு செயற்பாட்டாளர்களை, பத்திரிக்கையாளர்களை முடக்கி..
3/
ஜனநாயகத்தின் குரல்வளையை நெறிக்க முயலும் பாஜக மோடி அரசை மே பதினேழு இயக்கம் மிக வன்மையாக கண்டிக்கிறது.
இஸ்ரேல் நாட்டை சேர்ந்த என்.எஸ்.ஓ. (NSO) என்ற நிறுவனத்தின் பெகாசஸ் ஸ்பைவேர் என்ற உளவு செயலியின் மூலம் உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த அரசுகள் அந்நாட்டின் செயற்பாட்டாளர்கள்..
4/
அரசியல்வாதிகள், பத்திரிக்கையாளர்கள் உட்பட ஆயிரக்கணக்கானோரின் தொலைபேசிகள் உளவு பார்க்கப்பட்டு, வாட்சப் தகவல்கள் உட்பட மொபைல் தரவுகள் அனைத்தையும் சேகரித்துள்ளன என இந்தியாவின் தி வயர் (The Wire), தி பிரிண்ட், இங்கிலாந்தின் கார்டியன், அமெரிக்காவின் தி வாசிங்டன் போஸ்ட்...
5/
தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல் உட்பட உலகின் முன்னணி பத்திரிக்கைகள் பல நேற்று (18-07-21) இரவு செய்தி வெளியிட்டுள்ளது. இந்தியாவில் மட்டும் 40 பத்திரிக்கையாளர்கள் உட்பட 300-க்கும் மேற்பட்டோரின் தொலைபேசிகள் உளவு பார்க்கப்பட்டிருக்கும் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவற்றில் ஒன்று தான்..
6/
தோழர் திருமுருகன் காந்தி அவர்களின் தொலைபேசியும் என்ற தகவல் வெளிவந்துள்ளது.
தமிழீழ விடுதலை மற்றும் தமிழ்நாட்டின் வாழ்வுரிமை சிக்கல்களை முன்வைத்து போராடி வரும் தமிழ்த்தேசிய அமைப்பான மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள், ஒன்றிய பாஜக அரசின்..
7/
தமிழின விரோத போக்கை தமிழர்களிடையே அம்பலப்படுத்துவதும், தமிழர்களை எளிமையாக அரசியல்படுத்தும் வேலையை செய்வதும் மோடி அரசை சினம்கொள்ள செய்துள்ளது. பாஜக அரசியலுக்கு தடையாக இருக்கும் தோழர் திருமுருகன் காந்தி அவர்களை முடக்கிவிட்டால், தமிழ்நாட்டு அரசியலை மாற்றிட முடியும்..
8/
தமிழ்நாட்டு அரசியலில் இலகுவாக செயல்பட முடியும் என்ற நோக்கத்திலேயே தான், அவரது தொலைபேசியை உளவு பார்த்து அவரது தனிப்பட்ட தரவுகளை சேகரிக்கும் முயற்சியில் மோடி அரசு ஈடுபட்டுள்ளது. இச்செயலியின் மூலம் பல்வேறு நாடுகளை சேர்ந்த அரசுகளால் உளவு பார்க்கப்பட்டுள்ள நபர்கள் யாரென்று..
9/
உற்று நோக்குகையில் இதனை அறிந்துகொள்ள முடிகிறது.
பீமா கோரேகான் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள, தற்போது தொலைபேசி உளவு பார்க்கப்பட்டவருள் ஒருவரான ரோனா வில்சன் என்பவது மடிக்கணினி Hack செய்யப்பட்டு போலியான மின்னஞ்சல்கள் அவர் அனுப்பியது போல் நிறுவப்பட்டது. அதனை அமெரிக்காவின்..
10/
டிஜிட்டல் தடயவியல் நிறுவனம் ஒன்றும் உறுதிபடுத்தியது. இப்படியாக போலியான தரவுகள் மூலம் பீமா கோரேகான் வழக்கில் சிக்க வைக்கப்பட்ட ரோனா வில்சன் உட்பட பலர் பிணை கூட வழங்கப்படாமல் மூன்று ஆண்டுகளாக விசாரணையின்றி சிறையில் உள்ளனர். அதேபோல், தோழர் திருமுருகன் காந்தி அவர்களின்..
11/
தொலைபேசியிலும் போலியான தகவல்களை நிறுவி, தோழர் திருமுருகன் காந்தி அவர்களை சதியின் மூலம் ஏதேனும் ஒரு வழக்கில் சிக்க வைக்கும் பாஜக அரசின் கீழ்த்தரமான முயற்சி என மே பதினேழு இயக்கம் இதனை கருதுகிறது. உளவு பார்க்கப்பட்டதாக கருதப்படும் 2018 காலகட்டத்தில், தோழர் திருமுருகன் காந்தி..
12/
மீது அரசு சட்டவிரோத நடவடிக்கை மேற்கொள்ள திட்டமிட்டதை “#OperationTMG” என்று நக்கீரன், விகடன் போன்ற பத்திரிக்கைகள் அம்பலப்படுத்தி எழுதின என்பதையும் நினைவுகூர வேண்டும்.
2019 நாடாளுமன்ற தேர்தலின் போது மே17 இயக்கத்தின் செயல்பாட்டை தடுக்க வேண்டும் என்ற எண்ணம் பாஜகவிடம் இருந்தது.
13/
இதற்காக, தோழர் திருமுருகன் காந்தி உட்பட மே பதினேழு இயக்கத் தோழர்கள் மீது 2017 முதல் கடுமையான நெருக்கடிகள் திணிக்கப்பட்டது. 2017-ல் தமிழீழ இனப்படுகொலைக்காக நினைவேந்தல் நடத்தியதற்காக தோழர் திருமுருகன் காந்தி குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார்.
14/
குண்டர் சட்டம் உடைக்கப்பட்டு சிறையிலிருந்து வெளியே வந்து, தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர் சிலைகளுக்கு மாலை அணிவித்ததற்காக தேச துரோக வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. 2018ம் ஆண்டு தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை படுகொலையை ஐநா மனித உரிமை மன்றத்தில் பதிவு செய்ததற்காக, UAPA என்னும்..
15/
கருப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். அன்று முதல் அவரது கடவுச்சீட்டு பறிமுதல் செய்யப்பட்டு முடக்கப்பட்டுள்ளது. இந்த காலகட்டத்தில் 40 வழக்குகளுக்கு மேல் பதிவு செய்யப்பட்டதோடு, அனைத்து வழக்குகளும் சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்குகளை சந்திக்க இன்றளவும்..
16/
தமிழ்நாடு முழுவதும் பல்வேறு நீதிமன்றங்களுக்கு சென்று வருகிறார்.
தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் மீதான அடக்குமுறைகள் என்பது மே பதினேழு இயக்கத்தை முடக்குவதற்கான முயற்சிகள். அதனை பாஜக தலைவர்களின் பேச்சும் உறுதி செய்துள்ளது. அரசின் நெருக்கடியை சந்தித்ததால்,...
17/
தோழர் திருமுருகன் காந்தி உட்பட மே பதினேழு இயக்கத் தோழர்களை ஊடகங்கள் புறக்கணிப்பும் செய்தன. மே பதினேழு இயக்கம் தொடர்பான செய்திகளை வெளியிடாமல் இருப்பது, இரட்டடிப்பு செய்வது போன்றவையும் நடந்தேறின. அதே போல், மே பதினேழு இயக்கத்தோடு இணைந்து செயல்பட்ட பல அமைப்புகள் காவல்துறையின்..
18/
நெருக்கடியை சந்தித்தன. இதனால், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஐயா நல்லகண்ணு அவர்கள் தலைமையில் 2019 டிசம்பரில் அனைத்து கட்சி கூட்டம் கூட்டப்பட்டு, மே பதினேழு இயக்கத்தின் மீதான அடக்குமுறைகளை கண்டித்தும், தோழர் திருமுருகன் காந்தி மீதான வழக்குகளை..
19/
திரும்பப் பெற வேண்டும் என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இச்சூழலில், தோழர் திருமுருகன் காந்தி அவர்களின் தொலைபேசி மோடி அரசினால் உளவு பார்க்கப்பட்டிருக்கக் கூடும் என்ற செய்தி மே பதினேழு இயக்கத்தை முடக்க பாஜக அரசு முயல்கிறது என்பதையே உறுதிபடுத்துகிறது. இவ்வாறு..
20/
தோழர் திருமுருகன் அவர்களை முடக்க முயலும் முயற்சிகளை மே பதினேழு இயக்கம் ஜனநாயக ரீதியில் எதிர்கொள்ளும். பாஜக அரசின் இது போன்ற செயல்கள் மூலம் மே பதினேழு இயக்கத் தோழர்களை அச்சமடைய செய்திட முடியும், அதன் மூலம் மே பதினேழு இயக்கத்தை முடக்கிவிட முடியும் என்ற எண்ணத்தை மே 17 இயக்கம்..
21/
உடைத்தெறியும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
பெகாசஸ் உளவு வேலையை இந்திய ஒன்றிய பாஜக அரசு மறுத்தாலும், பெகாசஸ் செயலியின் நிறுவனமான என்.எஸ்.ஓ., அரசு மற்றும் அரசு நிறுவனங்களுடன் மட்டுமே வணிக தொடர்பு வைத்திருப்பதாக உறுதிபட கூறியிருக்கிறது. இதன் மூலம், மோடி அரசு இச்செயலில்..
22/
ஈடுபட்டுள்ளது அம்பலமாகியுள்ளது. மேலும், மோடி அரசை விமர்சிக்கும் செயல்பாட்டாளர்கள், பத்திரிக்கையாளர்கள், எதிர்க்கட்சியினர் உட்பட நூற்றுக்கணக்கான நபர்களின் தொலைபேசி பெகாசஸ் மூலம் மோடி அரசினால் உளவு பார்க்கப்பட்டிருக்கக்கூடும் என்ற செய்தி, ஜனநாயகத்தை முடக்கும் முயற்சியாகும்.
23/
இது, மோடி அரசு பாசிசத்தை நோக்கி செல்கிறது என்பதை சுட்டிக்காட்டுகிறது.
மோடி அரசின் இத்தகைய ஜனநாயக விரோத, பாசிச போக்கு மிக வன்மையாக கண்டிக்கப்பட வேண்டியவை. நாட்டின் ஜனநாயக முற்போக்கு சக்திகள் அனைத்தும் ..
24/
ஒன்றிணைந்து மோடி அரசின் இந்த பாசிச போக்கை கண்டிக்க முன்வர வேண்டுமென மே பதினேழு இயக்கம் அறைகூவல் விடுக்கிறது. இந்த உளவு செயலில் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள பத்திரிக்கையாளர்களை காக்க, அனைத்து ஊடகங்களும் முன்வர வேண்டும். அரசின் ஜனநாயக விரோத செயல்களை அம்பலப்படுத்தி..
25/
அரசின் அடக்குமுறையை அறத்துடன் எதிர்கொள்வதன் மூலம் மட்டுமே பாசிசத்தை வேரறுக்க முடியும் என்பதை ஊடகங்கள் உணர வேண்டும். அப்படியான முன்னெடுப்புகளுக்கு மே பதினேழு இயக்கம் உறுதுணையாக இருக்கும் என்பதை கூறிக்கொள்கிறோம்.
கூடங்குளத்தில் 5, 6வது அணு உலைகள் மற்றும் அணுக்கழிவு மையம் அமைக்கப்படுவது உடனடியாக தடுத்து நிறுத்தப்பட வேண்டும்! - மே17 இயக்கம்
நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் தமிழர்களின் கடும் எதிர்ப்பை மீறி கொண்டுவரப்பட்ட முதல் 2 அணு உலைகள் சரிவர செயல்படாத நிலையில், @CMOTamilnadu@mkstalin 1/
மக்களின் எதிர்ப்பை புறந்தள்ளிவிட்டு 3 மற்றும் 4வது என மேலும் இரண்டு உலைகளுக்கு அனுமதியளித்து அதன் கட்டுமானப்பணிகள் பாதியளவு நிறைவடைந்துள்ளன. இது தென் தமிழ்நாட்டு மக்களின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கியுள்ள நிலையில், தற்போது கூடங்குளம் அணு உலை வளாகத்தில் 5வது 6 வது என
2/
மேலும் இரண்டு அணு உலைகளை அனுமதித்து அதற்கான கட்டுமானப்பணிகள் துவங்கியுள்ளனர். மக்களின் பாதுகாப்பு குறித்து கவலைகொள்ளாமல், மக்களின் குரலை உதாசீனப்படுத்தி, அணு உலைகளை அதிகரித்துக்கொண்டே செல்லும் இந்திய ஒன்றிய அரசின் போக்கை மே பதினேழு இயக்கம் வன்மையாக கண்டிக்கிறது.
3/
சாதி ஆதிக்க வெறிக்கு பலியான மேலவளவு முருகேசன் உள்ளிட்ட தியாகிகளுக்கு வீர வணக்கம்- மே பதினேழு இயக்கம்.
தமிழ்ச் சமூகத்தை கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளாக அடிமைபடுத்த பார்ப்பனியம் புகுத்திய தீமைதான் சாதி. இந்த சாதி எனும் தீமையை சுமந்து கொண்டு திரிபவர்களால் கடந்த காலங்களில்...
(1)
தமிழ் சமுகத்தில் நடந்தேறிய கொடூரங்கள் அதிகம். அப்படி 1996 மதுரை மாவட்டம் மேலூரில் மேலவளவு கிராமத்தில் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு தலித் மக்கள் நின்றார்கள் என்ற காரணத்திற்காக 8 பேர் ஆதிக்கசாதி வெறியினால் படுகொலை செய்யப்பட்ட நாள் இன்று (ஜூன் 30).
(2)
தமிழர்களுக்குள் ஒரு பிரிவினர் தொட்டால் தீட்டு பார்த்தால் தீட்டு என்ற படிநிலையை வைத்துக்கொண்டு நாம் ஒரு நாளும் தமிழர்களின் உரிமை போராட்டத்தில் அடுத்த கட்டத்தை நோக்கி ஒரு அங்குலம் கூட நகர்ந்து விட முடியாது. ஆகவே தமிழர்கள் தங்களுடைய அடிப்படை உரிமைகளை வென்றெடுக்க வேண்டும்.
(3)
ஆளுநர் உரையில் தமிழீழத் தமிழர் குறித்த நிலைப்பாடு மாற்றப்பட வேண்டும்!
தமிழ்நாடு அரசிற்கு மே பதினேழு இயக்கம் கோரிக்கை
22 ஜூன் 2021
21 ஜூன் 2021-இல் தமிழ்நாட்டின் புதிய அரசின் சட்டமன்ற பொறுப்பேற்கும் முதல் அமர்வில், ஆளுநர் உரையில் குறிப்பிடப்பட்டுள்ள கர்நாடகா மேகதாதுவில்
1/
கட்டப்போகும் அணையை தடுக்கும் முயற்சி, செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்திற்கான தன்னாட்சி பாதுகாப்பு, அரசு பள்ளிகளில் படித்தவர்களுக்கு அரசு வேலைகளில் முன்னுரிமை, ஒன்றிய அரசு பணியிடங்களில், பொதுத்துறை நிறுவனங்களில் தமிழ்நாட்டைச் சார்ந்தவர்களுக்கு வேலையில் முன்னுரிமை,
2/
ஈழத்தமிழர்களுக்கான இந்தியக் குடியுரிமை ஆகிய ஒன்றிய அரசை வலியுறுத்தும் அறிவிப்புகள், வேளாண்மைக்கான தனி நிதிநிலை அறிக்கை, 69% இடஒதுக்கீட்டுக்கான பாதுகாப்பு உள்ளிட்ட முற்போக்கு முயற்சிகளை மே பதினேழு இயக்கம் வரவேற்கிறது.
அதே நேரத்தில், ஆளுநரின் இந்த உரையில், தமிழீழத் தமிழர்கள்
3/
தமிழீழ இனப்படுகொலைக்கான நினைவுச் சின்னத்தை தமிழ்நாட்டில் எழுப்பிடுவோம்! தமிழீழம் காக்க கட்சி, சாதி, மதம் கடந்து ஒன்றுபடுவோம்! - மே பதினேழு இயக்கம்
தமிழர்களின் தாகமான தமிழீழ தாயகத்தை அடையும் நோக்கில் போராடிய தமிழர்களை இனப்படுகொலை செய்தது இலங்கை, இந்தியா, அமெரிக்கா...
1/n
இங்கிலாந்து, சீனா உள்ளிட்ட நாடுகள். இனப்படுகொலை நடத்தப்பட்டு 12 ஆண்டுகள் ஆன பின்பும் தமிழர்களுக்கான நீதி கானல்நீராகவே உள்ளது. ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் தமிழர்களுக்கான நீதி என கொண்டுவரப்பட்ட தீர்மானங்கள், இனப்படுகொலையாளர்களை காப்பாற்றும் முயற்சியாகவே நீடிக்கிறது.
2/n
தமிழீழ விடுதலைப் புலிகளின் கீழ் இயங்கிய தமிழீழ அரசாங்கம், மிக சிறப்பான, முற்போக்கான ஜனநாயக ஆட்சியை வழங்கியது. பிராந்திய (புவிசார்) அரசியல் நலனுக்காக தெற்காசிய அரசியலில் ஆதிக்கம் செலுத்தி வந்த ஏகாதிபத்தியத்திய நாடுகள் விடுதலைப் புலிகளின் நடைமுறை அரசிற்கு எதிராக இருந்தன.
3/n
அதில் பதிவிடப்படும் பதிவுகளை அப்பக்கத்தை பின்தொடர்பவர்களுக்கு காட்டப்படுவதில்லை. பல்லாயிரக்கணக்கான சப்ஸ்கிரைபர்களை கொண்டிருந்த மே 17 இயக்கத்தின் யூட்யூப் சேனல் நீக்கப்பட்டு, பல முக்கிய காணொளிகளை இழந்துள்ளோம். மே 17 இயக்கத்தின் பல முக்கிய தோழர்களின் கணக்குகள் தொடர்ச்சியாக...
2/11
முடக்கப்பட்டும், மட்டுப்படுத்தபட்டும் வருகின்றன.
அதே போல், தோழர் திருமுருகன் காந்தியின் தனிநபர் கணக்கை 3 முறை தடை செய்ததோடு, தற்போது தனக்கான தனிநபர் கணக்கை உருவாக்குவதை கூட முகநூல் தடுத்து வைத்துள்ளது. தோழர் திருமுருகன் காந்தியின் டிவிட்டர் கணக்கின் இணைப்பை கூட...
யாழ் பல்கலைக்கழக முள்ளிவாய்க்கால் நினைவிடம் தகர்ப்பு! சர்வதேசத்தின் தோல்வியால் தமிழீழத்தில் தொடரும் தமிழினப்படுகொலை!! - மே பதினேழு இயக்கம்
தமிழீழ இனப்படுகொலையை நினைவுகூரும் வகையில் யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்தில் வைக்கப்பற்றிருந்த முள்ளிவாய்க்கால் நினைவு சின்னத்தை...
1/12
...மாணவர்களின் கடும் எதிர்ப்பையும் மீறி இரவோடு இரவாக தகர்த்தெறிந்துள்ளது சிங்களப் பேரினவாத இலங்கை அரசு! 1.5 லட்சம் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டதற்கு நீதி வேண்டி சர்வதேச சமூகத்திடம் தமிழினம் போராடி வரும் வேளையில், மீண்டும் ஆட்சிக்கு வந்த தமிழீழ இனப்படுகொலையாளர்கள்...
2/12
...சர்வதேசத்தின் முன்னியிலையே தமிழர் மீதான அடக்குமுறையை தொடர்கின்றனர். தமிழீழ கோரிக்கையை வேரோடு அழிக்க வேண்டும் என்று சிங்களப் பேரினவாத இலங்கை அரசு முனைப்போடு இருப்பதையே யாழ் பல்கலைக்கழக நினைவிடம் தகர்ப்பு உறுதிபடுத்துகிறது!