ஒரு ஹோட்டல் லாட்ஜில் ஒரு பெண் மரணித்துள்ளார் என்று வைத்து கொள்ளுங்கள்.
நீங்கள் விசாரணைக்கு எப்படி எல்லாம் விசாரிப்பீர்கள் எதை எல்லாம் கவனிப்பீர்கள்?
Crime Novel ரசிகர்கள் பதில் தரலாம். 😁
// பல விடைகளை பகிர்ந்த அனைவருக்கும் நன்றி //
# முதலில் மரணித்தவராக கருதப்படும் பெண்ணின் உயிர் இருக்கிறதா? பிரிந்ததா? என்பதை மருத்துவர் சோதிக்க வேண்டும்.
# இறந்தது உறுதி செய்யப்பட்ட பிறகு பெண்ணின் உடலில் வெளிக்காயங்கள் ஏதேனும் இருக்கிறதா என்பதை கவனிக்க வேண்டும்.
# பெண் இறந்துகிடக்கும் விதம் உடல் நகர்த்தப்பட்டு இருக்கிறதா? என்பதை பார்க்க வேண்டும்.
# இங்கே தங்கிட பெண் வந்தது எப்போது? அடிக்கடி வரக்கூடியவரா? என்பதை அறிய வேண்டும்.
# பெண்ணின் தொலைபேசி எண்களை ஆராய வேண்டும்.
# கடைசியாக ரூம் சர்வீஸ் செய்தது யார்? என்பதை அறிய வேண்டும்.
# பெண் கொடுத்த அடையாள அட்டை குறித்து ஆய்வு செய்ய வேண்டும்.
# லாட்ஜ் வருகை பதிவேடு விபரங்களை அலசி குறிப்பாக பெண்ணின் ஊர், கல்லூரி, பணி பின்னணியில் யாரும் தங்கி உள்ளார்களாக என்று பார்க்க வேண்டும்.
# ரூமில் பெண்ணை பார்க்க வெளிநபர் வந்தார்களா என்பதை ஆராய வேண்டும்?
# தங்கியிருந்த ரூமில் பெண்ணை தவிர வேறு யாராவது இருந்தார்களா என்பதை அலச வேண்டும்.
# கட்டிலுக்கு அருகில் பாத்ரூமுக்கு அருகில் ரூம் கதவுக்கு அருகில் நகக்கீறல்கள் ஏதேனும் இருக்கிறதா? என்பதை கவனித்து பெண் உயிர்க்கு போராடினாளா என்பதை கவனிக்க வேண்டும்.
# ரூமில் குப்பை தொட்டியில் பில், கடிதம் அல்லது ஏதேனும் கிழித்து வீசப்பட்டு இருக்கிறதா என்பதை பார்க்க வேண்டும்.
# கண்ணாடி உடைந்திருக்கிறதா? ஜன்னல் திறந்திருக்கிறதா? ஸ்கிரீன் கசங்கி இருக்கிறதா? என கவனிக்க வேண்டும்.
# Parking, Lobby, Floors, Backside CCTV காட்சிகளை ஆராய வேண்டும்.
# ரத்தம், முடி, நகம், மாத்திரை, விந்து, துணி இப்படி ஏதாவது தென்பட்டால் அதனை சேகரித்து சோதனைக்கூடத்திற்கு அனுப்ப வேண்டும்.
# ஆய்வுகள் முடியும் வரை ரூமை சீல் செய்ய வேண்டும் மற்றும் சில நாட்கள் காவலர்களின் கண்காணிப்பு ஹோட்டலில் இருக்க வேண்டும்.
# வீட்டில் கொலை நிகழ்ந்தால் கொலைகாரனை பிடிப்பதை காட்டிலும் வெளியிடத்தில்கொலை நிகழ்ந்தால் கொலை நடந்த விதத்தை அறியலாம் ஆனால் கொலைகாரனை பிடிக்க சிறிது மெனக்கெட வேண்டும்.
# கொலையாக இருந்தால் கொலைகாரனை பிடித்திட பல்வேறு நுணுக்கங்கள் மூலம் நிச்சயம் கண்டுபிடிக்க முடியும்.
ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
A - கல்வியிலும் வேலையிலும் அனைவரும் முதல் ரேங்க் தான் வரணும் என்று கல்வியாளர் ஒருவர் மாணவர்கள் மத்தியில் பேசினார்.
B - கடைசி ரேங்க் மாணவன் இருப்பதால் தானே முதல் ரேங்க் மாணவனுக்கு புகழ் சேர்க்கிறது என்றேன்.
A - அப்ப நீ என்ன கடைசி ரேங்க் எடுத்தா புளாங்கிதம் அடைவியா என்று கேட்டார்.
B - நான் அப்படி பொருள்பட சொல்லல சார் ஆனால் யதார்த்தத்தை இவ்வுலகம் ஏன் ஏற்க மறுக்கிறது என்று வினவினேன்.
A - எத யதார்த்தம் என்று நீ சொல்ற? ரஜினி படத்துக்கு FDFS போற மாதிரி தான் கல்வியிலும் என்றார்.
B - ரேங்க் நோக்கி குதிரைக்கு லாடம் கட்டுன மாதிரி பயணிக்க வேண்டாம். ரேங்க்கை காட்டிலும் வளரும் சமூகத்திற்காக இங்கு பேசி மாற்ற வேண்டியது நிறைய இருக்கு. கல்வி ரேங்க்கையை புத்திசாலித்தனத்துடன் இணைத்து குழப்பக்கூடாது. நம் நாட்டில் ஆராய்ச்சி சார்ந்த கல்வி வளர வேண்டும் என்றேன்.