பாதுகாப்புக்கு தனிப்பட்டியல் உள்ளதா? தமிழக அரசுக்கு அண்ணாமலை கேள்வி
சென்னை: ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பகவத்தின் மதுரை வருகையை ஒட்டி சாலைகளை சீரமைக்க உத்தரவிட்ட, மதுரை மாநகராட்சி உதவி ஆணையர் சண்முகம் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டார். இது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
இதனை கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ள தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, ‛யார் யார் வந்தால் என்னென்ன பராமரிப்பு, பாதுகாப்பு என்பதற்கு தமிழக அரசு தனியாக பட்டியல் வைத்திருக்கிறதா?,' எனக் கேள்வியெழுப்பியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் அகில இந்திய தலைவர் மோகன் பகவத் நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து அமைப்பின் நிர்வாகிகளையும் பொதுமக்களையும் சந்திப்பது வழக்கமான ஒன்று. இவருக்கு உயர்மட்ட பாதுகாப்பான இசட் பிரிவு பாதுகாப்பு வழங்கப்படுகிறது.
உலகின் பெரிய சேவை அமைப்புகளில் ஆர்.எஸ்.எஸ்., முதன்மையாக திகழ்கிறது. அரசியலுக்கு அப்பாற்பட்டு இந்திய தேசத்தின் வளர்ச்சிக்கும், இந்திய மக்களின் உயர்வுக்கும் சேவை ஆற்றுகிற அமைப்பாக ஆர்எஸ்எஸ் விளங்குகிறது.
மோகன் பகவத், மதுரை, கன்னியாகுமரி பகுதிகளில் 22 முதல் 26-ம் தேதி வரை பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். இவர் மதுரை வருகைக்கான ஏற்பாடுகளை அங்குள்ள அரசு அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்.
நாட்டின் ‛அதி உயர் பாதுகாப்பு' கொண்ட தலைவர் வருகையின்போது வழக்கமாக என்னென்ன நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமோ அதை பின்பற்றி மதுரை மாநகராட்சி நிர்வாகிகள் செயல்பட்டுள்ளனர்.
இதற்கென மதுரை மாநகராட்சி துணை ஆணையர் சண்முகம், மாநகராட்சி அதிகாரிகளுக்கு பராமரிப்பு பணிகள் குறித்து கடிதம் அனுப்பியுள்ளார். இதற்காக தமிழக அரசு அவரை பணி விடுவிப்பு செய்துள்ளது மிகவும் வருந்ததக்கது, கண்டிக்கத்தக்கது.
யார் யார் வந்தால் என்னென்ன பராமரிப்பு, பாதுகாப்பு என்பதற்கு தமிழக அரசு தனியாக பட்டியல் வைத்திருக்கிறதா? பாதுகாப்பு பட்டியலில் இருக்கும் தலைவர்கள் வரும்போது அவர்களுக்கு உரிய வசதி செய்து கொடுப்பது சட்ட விரோதமா?
இந்த நடவடிக்கையின் மூலம் அரசு அதிகாரிகள் எந்த வகையில் செயல்பட வேண்டும் என தமிழக அரசு விரும்புகிறது என்று புரியவில்லை.
திமுக.,வின் சாமானியத் தலைவர்கள் சென்றால் கூட, மாநகராட்சி அதிகாரிகளே நேரில் சென்று சாலை சீரமைப்பு, அனைத்து விதமான பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
ஆனால், அரசு தாங்கள் விரும்பாத அமைப்பின் மிக முக்கியமான தலைவர் வருகைக்கான ஏற்பாடுகளை வழக்கம்போல் செய்த அதிகாரிக்கு தண்டனை கொடுப்பது நியாயமா? மேலும் இத்தகைய நடவடிக்கை தவறான முன்னுதாரணம் ஆகிவிடும்.
தமிழக அரசு நேர்மையாக பாரபட்சமின்றி நடந்து கொள்வதை உறுதி செய்ய வேண்டும் என்றால் துணை ஆணையர் சண்முகம் பணிவிடுவிப்பு ரத்து செய்யபட வேண்டும்.
இல்லையென்றால் திமுக ஆட்சியின் ஒருதலைபட்சமான செயலையும், அதிகாரிகளை பழிவாங்குகிறது செயலையும் மக்கள் மன்றத்திற்கு எடுத்துச்செல்லப்படும். இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளார்
தினமலர்
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
"அப்படி கடைவதற்கு மேரு மலை மத்தாக பயன்பட்டதாம். வாசுகி பாம்பு கயிறாக பயன்பட்டதாம் - யப்பா முடியலடா சாமி! இதைவிட ஒரு காமெடி என்னன்னா... அவ்ளோ பெரிய மலையை ஒரு ஆமை தான் முதுகுல தாங்கிக்கிச்சாம் கேட்டா அது விஷ்னுவோட அவதாரமாம்.
அவ்ளோ பெரிய ஆமையை Discovery channelல கூட காமிக்கலையே. தேவர்களும், அசுரர்களும் பாம்பின் தலையையும் வாலையும் பிடித்து இழுத்தார்களாம். அப்படி இழுக்கும் போது முதலில் ஆலகால விஷம் வந்ததாம். அத அப்படியே சிவன் அள்ளிக் குடிச்சாராம்.
சிவன் செத்துறக் கூடாதுன்னு அவரோட சம்சாரம் சக்தி தொண்டையிலேயே அந்த விஷத்த நிக்க வச்சிருச்சாம். விஷத்த குடிச்சா சாமி சாகுமா? இல்ல அப்படி செத்தா அது சாமியா? அப்புறம் அமுதம் வந்துச்சாம் அத குடிச்ச தேவர்கள் சாகவே இல்லையாம்.
தி.மு.க.,வின் 125 எம்.எல்.ஏ.,க்களில் ஒருவரான உதயநிதிக்கு மட்டும் அரசு நிகழ்ச்சிகளில் முக்கியத்துவம் கொடுப்பது பற்றி, இப்பகுதியில் வாசகர் ஒருவர் கடிதம் எழுதியிருந்தார்.
தி.மு.க., ஆட்சிக்கு வந்தால் கருணாநிதியின் வாரிசுகள், அரசு நிர்வாகத்தில் முன்னிலை பெறுவது புதிதல்ல; வழக்கமான ஒன்று தான்.
கடந்த 2006ல் கருணாநிதி ஆட்சிக்கு வந்தவுடன், அவரது மகன் ஸ்டாலின் உள்ளாட்சி துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
அரசு நிகழ்ச்சிகளில் சிறப்பு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.துணை முதல்வர் என்ற பதவியும் கொடுத்து தன் மகனை அழகு பார்த்தார், கருணாநிதி. அரசு அலுவலகங்களில் கருணாநிதியின் படத்துடன் ஸ்டாலின் படமும் இடம்பெற்றது.அதே பாணியை தான், முதல்வர் ஸ்டாலின் பின்பற்றுகிறார்.
இந்திய அரசியல்வாதிகள், பத்திரிகையாளர்கள், இதர பிரபலங்களின் போன்களை ஒட்டு கேட்க, 'பெகாசஸ்' மென்பொருள் பயன்படுத்தப்பட்டதாக, குற்றச்சாட்டு வைக்கப்பட்டது.
இதன் உண்மை தன்மை பற்றி கேள்வி எழுந்தவுடன், இத்திட்டத்தோடு தொடர்புடைய, 'அம்னெஸ்டி இன்டர்நேஷனல்' அமைப்பு, தொடர்ந்து முன்னுக்குப் பின் முரணாக, அறிக்கைகள் வெளியிட்டு வருகிறது.
இஸ்ரேல் நாட்டை சேர்ந்த என்.எஸ்.ஓ., நிறுவனத்தின் வேவு மென்பொருளே, பெகாசஸ்.
என்.எஸ்.ஓ., இந்த மென்பொருளை, அரசுகளுக்கு மட்டுமே விற்பனை செய்யும் என்ற நிலையில், அந்த மென்பொருளைப் பயன்படுத்தி, பல நாடுகளைச் சேர்ந்த 50 ஆயிரம் பேரின், மொபைல் போன்கள் ஒட்டு கேட்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.
நாகர்கோவில் : ஹிந்து மதம், பிரதமர் மோடி, தி.மு.க., பற்றி அவதுாறாக பேசிய பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா தலைமறைவானார். அவர் கடல் வழியாக தீவிற்கு தப்பி சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
குமரி மாவட்டம், அருமனை அருகே பனங்கரையில் கிறிஸ்துவ வழிபாட்டு தலத்துக்கு ஒரு பிரிவினர் எதிர்ப்பு தெரிவித்ததால், 'சீல்' வைக்கப்பட்டது.
இதை கண்டித்து அருமனையில் ஜூலை 18ல் நடந்த கண்டன பொதுக்கூட்டத்தில் பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா பேசுகையில், 'தி.மு.க., வெற்றி நாங்கள் போட்ட பிச்சை, கிறிஸ்துவ வளர்ச்சியை யாரும் தடுக்க முடியாது. துணி உடுக்காமல் சாமி கும்பிட்டாலும் ஓட்டு கிடைக்காது' என்றதுடன்,
சென்னையில் உள்ள சிறப்பு மிக்க நரசிம்மர் கோவில்களை இன்று காணலாம்
பைராகிமடம், சவுகார்பேட்டை :
இத்தலத்தில் லட்சுமி நரசிம்மன் சந்நிதி மகவும் விசேஷம். தீபாராதனையின் போது மூலவர் நரசிம்மரின் கண்கள் அசல் சிங்கத்தின் கண்கள் போலவே காட்சியளிக்கும்.
🇮🇳🙏1
திருவல்லிக்கேணி யோக நரசிம்மர் :
திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் பார்த்தசாரதிக்கு நேர் பின்புறமாக யோக நரசிம்மராக சிங்கப் பெருமாள் காட்சியளிக்கிறார்.
🇮🇳🙏2
இவருடைய சந்நிதியில் தீர்த்தம் மேலே தெளிக்கப்பட்டால் தீயசக்திகள் அனைத்தும் ஓடிவிடுமென்பது நம்பிக்கை. அத்திரி முனிவருக்கும் காட்சி தந்த கோலம். இவரைத் தெள்ளிய நரசிம்ம சுவாமி என்பார்கள்.