இந்திய அரசியல்வாதிகள், பத்திரிகையாளர்கள், இதர பிரபலங்களின் போன்களை ஒட்டு கேட்க, 'பெகாசஸ்' மென்பொருள் பயன்படுத்தப்பட்டதாக, குற்றச்சாட்டு வைக்கப்பட்டது.
இதன் உண்மை தன்மை பற்றி கேள்வி எழுந்தவுடன், இத்திட்டத்தோடு தொடர்புடைய, 'அம்னெஸ்டி இன்டர்நேஷனல்' அமைப்பு, தொடர்ந்து முன்னுக்குப் பின் முரணாக, அறிக்கைகள் வெளியிட்டு வருகிறது.
இஸ்ரேல் நாட்டை சேர்ந்த என்.எஸ்.ஓ., நிறுவனத்தின் வேவு மென்பொருளே, பெகாசஸ்.
என்.எஸ்.ஓ., இந்த மென்பொருளை, அரசுகளுக்கு மட்டுமே விற்பனை செய்யும் என்ற நிலையில், அந்த மென்பொருளைப் பயன்படுத்தி, பல நாடுகளைச் சேர்ந்த 50 ஆயிரம் பேரின், மொபைல் போன்கள் ஒட்டு கேட்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.
இந்தியாவில் 300 போன்கள் எண்களும், இதில் இடம்பெற்றுஉள்ளன, அதில் 40 பத்திரிகையாளர்களின் போன்களும் அடக்கம். ஆனால், அடிப்படையில் பல கேள்விகள் எழுகின்றன. எங்கிருந்து இந்த 50 ஆயிரம் எண்கள் வெளியே வந்தன; யார் வெளியிட்டது; அதன் உண்மை தன்மை என்ன?
முக்கியமாக, சர்வதேச அளவில் புகழ்பெற்ற 17 ஊடக நிறுவனங்கள், இந்த ஒட்டு கேட்பு விவகாரத்தை வெளிக்கொண்டு வந்துள்ளன.
அடிப்படையே இல்லை
இவர்களுக்கு, இந்தத் தகவல்களை கொடுத்தது, பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த, 'பார்பிடன் ஸ்டோரீஸ்' என்ற வலைதளமும், அம்னெஸ்டி இன்டர்நேஷனல் அமைப்பும் தான்.
அமென்ஸ்டி இன்டர் நேஷனல், தன் பாதுகாப்பு ஆய்வகத்தில், 67 போன்களை ஆய்வுக்கு உட்படுத்தியதில், 37 போன்கள் பெகாசஸ் மென்பொருளால் பாதிக்கப்பட்டதாகத் தெரிவித்தது.
பல நாடுகளின், முக்கிய தலைவர்களின் பேச்சுகள் ஒட்டு கேட்கப்பட்டதாக தகவல் வெளியானவுடன், ஒவ்வொரு நாடும் என்.எஸ்.ஓ., நிறுவனம் மீதான விசாரணையை துவங்கி விட்டன.
இந்நிலையில் தான், அம்னெஸ்டி இன்டர்நேஷனல், இஸ்ரேல் நாட்டில் 'ஹீப்ரு' மொழியில், அந்நாட்டு பத்திரிகைகளுக்கு ஒரு செய்தியை வெளியிட்டது. அது கூறியிருக்கும் முக்கிய செய்தி இது தான்:'இது என்.எஸ்.ஓ.,வின் பெகாசஸ் வேவு பார்க்கப்படுவோர் பட்டியல்' என்று அம்னெஸ்டி இன்டர்நேஷனல் வெளியிடவில்லை.
ஆனால், பல உலக நாடுகளைச் சேர்ந்த ஊடகங்கள் அப்படி தெரிவித்தன.
இது, என்.எஸ்.ஓ., வாடிக்கையாளர்களுக்கு, அதாவது பல நாடுகளுக்கு முக்கியமான எண்களாக இருக்கக்கூடிய பட்டியல் என்று தான், அம்னெஸ்டியும், புலனாய்வு பத்திரிகையாளர்களும்,
அவர்கள் பணியாற்றும் ஊடகங்களும், மிகத் தெளிவான மொழியில் தெளிவுபடுத்தியுள்ளன.இந்த நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள், ஆர்வம் காட்டக்கூடியவர்களின் உத்தேசப் பட்டியலாக இது இருக்கலாம்.
அவர்கள், பத்திரிகையாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், அரசியல் எதிரிகள், வழக்கறிஞர்கள் மற்றும் இதரரை வேவு பார்ப்பதில் முன்னர் ஆர்வம் காட்டியுள்ளனர்.
அதாவது, 17 சர்வதேச ஊடகங்கள் வெளியிட்ட போன் எண்கள் என்பவை, பல்வேறு நாடுகள் ஆர்வம் காட்டக்கூடியவர்களின், உத்தேச பட்டியல் தான்.இவ்வாறு தெரிவித்து, அம்னெஸ்டி இன்டர்நேஷனல், 'பல்டி' அடித்தது.
இதனால், பல்வேறு நாடுகளில் நடைபெறும் கருத்து மோதல்களில், ஒரு அர்த்தமும் இல்லை. அதற்கு அடிப்படையே இல்லை என்பது
தெளிவாகியுள்ளது.
சந்தேகம்
இந்த ஹீப்ரு மொழி பத்திரிகை செய்தி, ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு, சர்வதேச ஊடகங்களில் வெளியானவுடன், மீண்டும் ஒருமுறை, 'பல்டி' அடித்துள்ளது, அம்னெஸ்டி இன்டர்நேஷனல்.
'பழைய குருடி கதவைத் திறடி' என்பது போல், மீண்டும் அம்னெஸ்டி இன்டர்நேஷனல் வெளியிட்டுள்ள, 'டுவிட்டர்' செய்தியில், பெகாசஸ் திட்டத்தின் கண்டுபிடிப்புகளை, தாங்கள் முழுமையாக ஆதரிப்பதாக தெரிவித்து உள்ளது.
இப்படிப்பட்ட முரண்பட்ட செய்திகளாலும், நிலைப்பாடுகளும், அம்னெஸ்டி இன்டர்நேஷனலின் நேர்மை சந்தேகத்துக்கு உள்ளாகி இருப்பதாக தெரிவிக்கின்றனர், பல்வேறு சமூக ஆர்வலர்கள்.
தினமலர்
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
"அப்படி கடைவதற்கு மேரு மலை மத்தாக பயன்பட்டதாம். வாசுகி பாம்பு கயிறாக பயன்பட்டதாம் - யப்பா முடியலடா சாமி! இதைவிட ஒரு காமெடி என்னன்னா... அவ்ளோ பெரிய மலையை ஒரு ஆமை தான் முதுகுல தாங்கிக்கிச்சாம் கேட்டா அது விஷ்னுவோட அவதாரமாம்.
அவ்ளோ பெரிய ஆமையை Discovery channelல கூட காமிக்கலையே. தேவர்களும், அசுரர்களும் பாம்பின் தலையையும் வாலையும் பிடித்து இழுத்தார்களாம். அப்படி இழுக்கும் போது முதலில் ஆலகால விஷம் வந்ததாம். அத அப்படியே சிவன் அள்ளிக் குடிச்சாராம்.
சிவன் செத்துறக் கூடாதுன்னு அவரோட சம்சாரம் சக்தி தொண்டையிலேயே அந்த விஷத்த நிக்க வச்சிருச்சாம். விஷத்த குடிச்சா சாமி சாகுமா? இல்ல அப்படி செத்தா அது சாமியா? அப்புறம் அமுதம் வந்துச்சாம் அத குடிச்ச தேவர்கள் சாகவே இல்லையாம்.
தி.மு.க.,வின் 125 எம்.எல்.ஏ.,க்களில் ஒருவரான உதயநிதிக்கு மட்டும் அரசு நிகழ்ச்சிகளில் முக்கியத்துவம் கொடுப்பது பற்றி, இப்பகுதியில் வாசகர் ஒருவர் கடிதம் எழுதியிருந்தார்.
தி.மு.க., ஆட்சிக்கு வந்தால் கருணாநிதியின் வாரிசுகள், அரசு நிர்வாகத்தில் முன்னிலை பெறுவது புதிதல்ல; வழக்கமான ஒன்று தான்.
கடந்த 2006ல் கருணாநிதி ஆட்சிக்கு வந்தவுடன், அவரது மகன் ஸ்டாலின் உள்ளாட்சி துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
அரசு நிகழ்ச்சிகளில் சிறப்பு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.துணை முதல்வர் என்ற பதவியும் கொடுத்து தன் மகனை அழகு பார்த்தார், கருணாநிதி. அரசு அலுவலகங்களில் கருணாநிதியின் படத்துடன் ஸ்டாலின் படமும் இடம்பெற்றது.அதே பாணியை தான், முதல்வர் ஸ்டாலின் பின்பற்றுகிறார்.
நாகர்கோவில் : ஹிந்து மதம், பிரதமர் மோடி, தி.மு.க., பற்றி அவதுாறாக பேசிய பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா தலைமறைவானார். அவர் கடல் வழியாக தீவிற்கு தப்பி சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
குமரி மாவட்டம், அருமனை அருகே பனங்கரையில் கிறிஸ்துவ வழிபாட்டு தலத்துக்கு ஒரு பிரிவினர் எதிர்ப்பு தெரிவித்ததால், 'சீல்' வைக்கப்பட்டது.
இதை கண்டித்து அருமனையில் ஜூலை 18ல் நடந்த கண்டன பொதுக்கூட்டத்தில் பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா பேசுகையில், 'தி.மு.க., வெற்றி நாங்கள் போட்ட பிச்சை, கிறிஸ்துவ வளர்ச்சியை யாரும் தடுக்க முடியாது. துணி உடுக்காமல் சாமி கும்பிட்டாலும் ஓட்டு கிடைக்காது' என்றதுடன்,
சென்னையில் உள்ள சிறப்பு மிக்க நரசிம்மர் கோவில்களை இன்று காணலாம்
பைராகிமடம், சவுகார்பேட்டை :
இத்தலத்தில் லட்சுமி நரசிம்மன் சந்நிதி மகவும் விசேஷம். தீபாராதனையின் போது மூலவர் நரசிம்மரின் கண்கள் அசல் சிங்கத்தின் கண்கள் போலவே காட்சியளிக்கும்.
🇮🇳🙏1
திருவல்லிக்கேணி யோக நரசிம்மர் :
திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் பார்த்தசாரதிக்கு நேர் பின்புறமாக யோக நரசிம்மராக சிங்கப் பெருமாள் காட்சியளிக்கிறார்.
🇮🇳🙏2
இவருடைய சந்நிதியில் தீர்த்தம் மேலே தெளிக்கப்பட்டால் தீயசக்திகள் அனைத்தும் ஓடிவிடுமென்பது நம்பிக்கை. அத்திரி முனிவருக்கும் காட்சி தந்த கோலம். இவரைத் தெள்ளிய நரசிம்ம சுவாமி என்பார்கள்.
பாதுகாப்புக்கு தனிப்பட்டியல் உள்ளதா? தமிழக அரசுக்கு அண்ணாமலை கேள்வி
சென்னை: ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பகவத்தின் மதுரை வருகையை ஒட்டி சாலைகளை சீரமைக்க உத்தரவிட்ட, மதுரை மாநகராட்சி உதவி ஆணையர் சண்முகம் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டார். இது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
இதனை கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ள தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, ‛யார் யார் வந்தால் என்னென்ன பராமரிப்பு, பாதுகாப்பு என்பதற்கு தமிழக அரசு தனியாக பட்டியல் வைத்திருக்கிறதா?,' எனக் கேள்வியெழுப்பியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் அகில இந்திய தலைவர் மோகன் பகவத் நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து அமைப்பின் நிர்வாகிகளையும் பொதுமக்களையும் சந்திப்பது வழக்கமான ஒன்று. இவருக்கு உயர்மட்ட பாதுகாப்பான இசட் பிரிவு பாதுகாப்பு வழங்கப்படுகிறது.