தி.மு.க.,வின் 125 எம்.எல்.ஏ.,க்களில் ஒருவரான உதயநிதிக்கு மட்டும் அரசு நிகழ்ச்சிகளில் முக்கியத்துவம் கொடுப்பது பற்றி, இப்பகுதியில் வாசகர் ஒருவர் கடிதம் எழுதியிருந்தார்.
தி.மு.க., ஆட்சிக்கு வந்தால் கருணாநிதியின் வாரிசுகள், அரசு நிர்வாகத்தில் முன்னிலை பெறுவது புதிதல்ல; வழக்கமான ஒன்று தான்.
கடந்த 2006ல் கருணாநிதி ஆட்சிக்கு வந்தவுடன், அவரது மகன் ஸ்டாலின் உள்ளாட்சி துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
அரசு நிகழ்ச்சிகளில் சிறப்பு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.துணை முதல்வர் என்ற பதவியும் கொடுத்து தன் மகனை அழகு பார்த்தார், கருணாநிதி. அரசு அலுவலகங்களில் கருணாநிதியின் படத்துடன் ஸ்டாலின் படமும் இடம்பெற்றது.அதே பாணியை தான், முதல்வர் ஸ்டாலின் பின்பற்றுகிறார்.
தன் மகன் உதயநிதிக்கு, அரசு நிர்வாகத்தில் சிறப்பு முக்கியத்துவம் அளிக்கிறார்.கட்சியின் மூத்த நிர்வாகிகள் துரைமுருகன், பொன்முடி, எ.வ.வேலு, கே.என்.நேரு ஆகியோர் அமைச்சர் பதவி வகித்தாலும், ஸ்டாலின் வாரிசான உதயநிதி தான் அரசு நிகழ்ச்சிகளுக்கு தலைமை தாங்குகிறார்.
அதே போல தான், 24 தி.மு.க., - எம்.பி.,க்கள் இருந்தாலும், முதல்வர் ஸ்டாலினின் தங்கை கனிமொழிக்கு தான், அரசு நிகழ்ச்சிகளில் சிறப்பு அந்தஸ்து வழங்கப்படுகிறது.
திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவிலை புதுப்பித்தல் தொடர்பான ஆய்வு கூட்டம், சென்னை நுங்கம்பாக்கம் அறநிலைய துறை அலுவலகத்தில், அத்துறை அமைச்சர் சேகர்பாபு தலைமையில் சமீபத்தில் நடந்தது.
இதில் மீன்வள துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், அறநிலைய துறை முதன்மை செயலர், ஆணையர் மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.அறநிலைய துறை அமைச்சருக்கான இடத்தில், துாத்துக்குடி எம்.பி., கனிமொழி அமர்ந்து இருந்தார்.
தென் மாவட்டத்திற்கு உதயநிதியையும், வட மாவட்டத்திற்கு கனிமொழியையும் துணை முதலமைச்சராகவே, முதல்வர் ஸ்டாலின் நியமித்து விடலாம். இது போன்ற சர்ச்சை கிளம்பாது!
தினமலர்
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
"அப்படி கடைவதற்கு மேரு மலை மத்தாக பயன்பட்டதாம். வாசுகி பாம்பு கயிறாக பயன்பட்டதாம் - யப்பா முடியலடா சாமி! இதைவிட ஒரு காமெடி என்னன்னா... அவ்ளோ பெரிய மலையை ஒரு ஆமை தான் முதுகுல தாங்கிக்கிச்சாம் கேட்டா அது விஷ்னுவோட அவதாரமாம்.
அவ்ளோ பெரிய ஆமையை Discovery channelல கூட காமிக்கலையே. தேவர்களும், அசுரர்களும் பாம்பின் தலையையும் வாலையும் பிடித்து இழுத்தார்களாம். அப்படி இழுக்கும் போது முதலில் ஆலகால விஷம் வந்ததாம். அத அப்படியே சிவன் அள்ளிக் குடிச்சாராம்.
சிவன் செத்துறக் கூடாதுன்னு அவரோட சம்சாரம் சக்தி தொண்டையிலேயே அந்த விஷத்த நிக்க வச்சிருச்சாம். விஷத்த குடிச்சா சாமி சாகுமா? இல்ல அப்படி செத்தா அது சாமியா? அப்புறம் அமுதம் வந்துச்சாம் அத குடிச்ச தேவர்கள் சாகவே இல்லையாம்.
இந்திய அரசியல்வாதிகள், பத்திரிகையாளர்கள், இதர பிரபலங்களின் போன்களை ஒட்டு கேட்க, 'பெகாசஸ்' மென்பொருள் பயன்படுத்தப்பட்டதாக, குற்றச்சாட்டு வைக்கப்பட்டது.
இதன் உண்மை தன்மை பற்றி கேள்வி எழுந்தவுடன், இத்திட்டத்தோடு தொடர்புடைய, 'அம்னெஸ்டி இன்டர்நேஷனல்' அமைப்பு, தொடர்ந்து முன்னுக்குப் பின் முரணாக, அறிக்கைகள் வெளியிட்டு வருகிறது.
இஸ்ரேல் நாட்டை சேர்ந்த என்.எஸ்.ஓ., நிறுவனத்தின் வேவு மென்பொருளே, பெகாசஸ்.
என்.எஸ்.ஓ., இந்த மென்பொருளை, அரசுகளுக்கு மட்டுமே விற்பனை செய்யும் என்ற நிலையில், அந்த மென்பொருளைப் பயன்படுத்தி, பல நாடுகளைச் சேர்ந்த 50 ஆயிரம் பேரின், மொபைல் போன்கள் ஒட்டு கேட்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.
நாகர்கோவில் : ஹிந்து மதம், பிரதமர் மோடி, தி.மு.க., பற்றி அவதுாறாக பேசிய பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா தலைமறைவானார். அவர் கடல் வழியாக தீவிற்கு தப்பி சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
குமரி மாவட்டம், அருமனை அருகே பனங்கரையில் கிறிஸ்துவ வழிபாட்டு தலத்துக்கு ஒரு பிரிவினர் எதிர்ப்பு தெரிவித்ததால், 'சீல்' வைக்கப்பட்டது.
இதை கண்டித்து அருமனையில் ஜூலை 18ல் நடந்த கண்டன பொதுக்கூட்டத்தில் பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா பேசுகையில், 'தி.மு.க., வெற்றி நாங்கள் போட்ட பிச்சை, கிறிஸ்துவ வளர்ச்சியை யாரும் தடுக்க முடியாது. துணி உடுக்காமல் சாமி கும்பிட்டாலும் ஓட்டு கிடைக்காது' என்றதுடன்,
சென்னையில் உள்ள சிறப்பு மிக்க நரசிம்மர் கோவில்களை இன்று காணலாம்
பைராகிமடம், சவுகார்பேட்டை :
இத்தலத்தில் லட்சுமி நரசிம்மன் சந்நிதி மகவும் விசேஷம். தீபாராதனையின் போது மூலவர் நரசிம்மரின் கண்கள் அசல் சிங்கத்தின் கண்கள் போலவே காட்சியளிக்கும்.
🇮🇳🙏1
திருவல்லிக்கேணி யோக நரசிம்மர் :
திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் பார்த்தசாரதிக்கு நேர் பின்புறமாக யோக நரசிம்மராக சிங்கப் பெருமாள் காட்சியளிக்கிறார்.
🇮🇳🙏2
இவருடைய சந்நிதியில் தீர்த்தம் மேலே தெளிக்கப்பட்டால் தீயசக்திகள் அனைத்தும் ஓடிவிடுமென்பது நம்பிக்கை. அத்திரி முனிவருக்கும் காட்சி தந்த கோலம். இவரைத் தெள்ளிய நரசிம்ம சுவாமி என்பார்கள்.
பாதுகாப்புக்கு தனிப்பட்டியல் உள்ளதா? தமிழக அரசுக்கு அண்ணாமலை கேள்வி
சென்னை: ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பகவத்தின் மதுரை வருகையை ஒட்டி சாலைகளை சீரமைக்க உத்தரவிட்ட, மதுரை மாநகராட்சி உதவி ஆணையர் சண்முகம் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டார். இது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
இதனை கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ள தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, ‛யார் யார் வந்தால் என்னென்ன பராமரிப்பு, பாதுகாப்பு என்பதற்கு தமிழக அரசு தனியாக பட்டியல் வைத்திருக்கிறதா?,' எனக் கேள்வியெழுப்பியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் அகில இந்திய தலைவர் மோகன் பகவத் நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து அமைப்பின் நிர்வாகிகளையும் பொதுமக்களையும் சந்திப்பது வழக்கமான ஒன்று. இவருக்கு உயர்மட்ட பாதுகாப்பான இசட் பிரிவு பாதுகாப்பு வழங்கப்படுகிறது.