# +2 தேர்ச்சியடைந்த மாணவிகளுக்கு வேலைவாய்ப்புடன் கூடிய 2 வருட பயிற்சி அளிக்கப்படுகிறது.
# +2 முடித்த மாணவிகளுக்கு விடுதி, உணவு, பயிற்சிக்கு பிறகு ஊதியத்துடன் வேலை, தனித் திறமைகளை வெளிக்கொணர வாய்ப்பு, கண் மருத்துவப் பரிசோதனை மற்றும் சிகிச்சையில் துணை நிற்கும் வாய்ப்பு.
A - கல்வியிலும் வேலையிலும் அனைவரும் முதல் ரேங்க் தான் வரணும் என்று கல்வியாளர் ஒருவர் மாணவர்கள் மத்தியில் பேசினார்.
B - கடைசி ரேங்க் மாணவன் இருப்பதால் தானே முதல் ரேங்க் மாணவனுக்கு புகழ் சேர்க்கிறது என்றேன்.
A - அப்ப நீ என்ன கடைசி ரேங்க் எடுத்தா புளாங்கிதம் அடைவியா என்று கேட்டார்.
B - நான் அப்படி பொருள்பட சொல்லல சார் ஆனால் யதார்த்தத்தை இவ்வுலகம் ஏன் ஏற்க மறுக்கிறது என்று வினவினேன்.
A - எத யதார்த்தம் என்று நீ சொல்ற? ரஜினி படத்துக்கு FDFS போற மாதிரி தான் கல்வியிலும் என்றார்.
B - ரேங்க் நோக்கி குதிரைக்கு லாடம் கட்டுன மாதிரி பயணிக்க வேண்டாம். ரேங்க்கை காட்டிலும் வளரும் சமூகத்திற்காக இங்கு பேசி மாற்ற வேண்டியது நிறைய இருக்கு. கல்வி ரேங்க்கையை புத்திசாலித்தனத்துடன் இணைத்து குழப்பக்கூடாது. நம் நாட்டில் ஆராய்ச்சி சார்ந்த கல்வி வளர வேண்டும் என்றேன்.