ஈஸ்வரனைக் காட்டிலும் குரு பெரியவர், ஈஸ்வர பக்தியைக் காட்டிலும் குருபக்தி விசேஷம் என்கிறார்களே ஏன் என்று கேட்டால், ஈசுவரனை யாரும் பார்க்கவில்லை। ஆனால் பிரத்தியக்ஷமாக நாம் பார்க்கக்கூடிய ஒரு மனிதர் எப்போதும் ஞானம் உடையவராய், அசைவு இல்லாத சித்தம் உடையவராய், அப்பழுக்கு இல்லாமல்
என்று சொல்லியிருக்கிறார்கள். இந்த சுலோகத்தில் குருவுக்கும்
பரமாத்மாவுக்கும் பேதமின்மையை சொல்லியிருப்பது ஒரு விசேஷம்.
இதில் விஷ்ணு, சிவன் இருவரையும் சொல்லியிருப்பதால் இந்த சுலோகத்தைச் சொல்லி நாம் குருவந்தனம் பண்ணினால் நமக்கு சிவ- விஷ்ணு பேதமின்மை பாவமும் உண்டாகி விடும்.
ஆனால் தெய்வ பக்தியை மறக்கக் கூடாது. குருவை நம்மோடு சேர்த்து
வைப்பதே தெய்வம் தானே? தெய்வ அநுக்ரஹம் இல்லாவிட்டால் இந்த குருவை எப்படி அடைவோம்? இதையே வேறு விதமாகவும் சொல்வதுண்டு. குரு, ஈசுவரன் என்ற இரண்டு பேர் என்று வைத்துக் கொள்ளாமல் ஈசுவரனே குருவாக வந்திருக்கிறான் என்று வைத்துக் கொண்டு விட்டால் குரு பக்தி, ஈசுவர பக்தி என்ற இரண்டு தனித்
தனியாகப் பண்ணவேண்டாம்। குருவே ஈசுவரன் என்று கருதி அந்த குருவான ஈசுவரன் ஒருவரிடத்திலேயே பூர்ண சரணாகதி பண்ணிவிடலாம்.
குரு பரம சுத்தமானவராக, உத்தமமானவராக இல்லாவிட்டாலும் கூட, இவர் மூலமாக நாம் நித்திய சுத்தமும் உத்தமோத்தமனுமான ஈசுவரனையே பக்தி செய்வதால், அந்த ஈஸ்வரனே இவர் மூலமாக
நமக்கு அனுக்கிரகம் பண்ணிவிடுவார். இதனால் தான் குருவையே பிரம்மா, விஷ்ணு, சிவன், இந்த மூன்றுக்கும் ஆதாரமான பரப்பிரம்மம் என்று எடுத்த எடுப்பில் சொல்லிக் கொடுக்கிறார்கள்।
#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள்
ஆயர்பாடியில் ததிபாண்டன் என்ற ஒரு தயிர் வியாபாரி இருந்தான். ஒரு சமயம் கண்ணனை அன்னை யசோதை பிரம்பைக் கையில் ஏந்தியபடி துரத்திக் கொண்டே வர, ததிபாண்டன் கடைக்கு ஓடி வந்தான் விஷமக்காரக் கண்ணன்.
காலியாக இருந்த தயிர்ப் பானையைத் தலையணையாக வைத்தபடி உறங்கிக் கொண்டு
இருந்தான் ததிபாண்டன். மாமா மாமா என்று இனிய, ஆழமான குரலில் அவனைக் கண்ணன் அழைத்தான். அவன் கண்விழித்துப் பார்த்து என்ன என்று கேட்டான். மாமா நான் வீட்டிலிருந்த வெண்ணெய் எல்லாம் திருடித் தின்றதால் என் அம்மா என் மேல் கோபத்துடன் பிரம்பை எடுத்துக் கொண்டு என்னைத் துரத்தி வருகிறாள். நான்
ஒளிந்து கொள்ள இடம் தேடி வந்துள்ளேன். உங்களுடைய காலிப் பானை ஒன்றினுள் நான் ஒளிந்து கொள்கிறேன். நான் ஒளிந்து கொள்ளும் பானையின் வாயைத் துணிபோட்டுக் கட்டிவிடுங்கள். என் தாய் வந்து கேட்டால் நான் இங்கு இல்லை என்று சொல்லிவிடுங்கள் என்றான். ததிபாண்டனும் அதற்குச் சம்மதித்து அவ்வாறே
தினமும் நம் வீட்டு பூஜையறையில் உள்ள நம் குலதெய்வம் மற்றும் அனைத்து தெய்வங்களுக்கும் அன்னம் நைவேத்தியம் செய்து அதை வீட்டிலுள்ள அனைத்து ஸ்வாமி படங்களுக்கும் காண்பித்துவிட்டு காகத்திற்கு போடவேண்டும். ஆனால் சிலர் நான் காலையில் குளிக்காமல் குக்கர் வைப்பதால் சாதம் நைவேத்தியம்
செய்வதில்லை என்கின்றனர். அது தவறு. தயவுசெய்து கண்டிப்பாக தினமும் ஸ்வாமிக்கு சாதம் எப்படியாவது நைவேத்தியம் செய்ய வேண்டும். அதுவும் குக்கரில் வைத்த அனைத்து அன்னத்தையும் அல்லது வடித்த சோறு அனைத்தையும் சிறிது நெய்விட்டு அப்படியே நைவேத்யம் செய்யவேண்டும். வைணவர்கள் கண்டருளப் பண்ணுதல்
என்று அழகிய தமிழில் இதை சொல்வார்கள். நைவேத்தியம் என்றால் அறிவிக்கிறேன் என்று பொருள் அதாவது இன்று இது உன் அருள் இது எப்போதும் எல்லோர்க்கும் கிடைக்கவேண்டும் என்று பிரார்த்தித்துக் கொள்ள வேண்டும். சிலர் சிறிய கிண்ணத்தில் கொண்டு
வந்து வைக்கிறார்கள். அது வேண்டாம். அந்த அன்னம்
ஒரு முறை நாரத மகரிஷியிடம் குடும்பவாசி ஒருவர், அய்யா சுவாமி நான் பாவமே செய்யக் கூடாது என்றே நினைக்கிறேன். ஆனால், என்னையும் அறியாமல் செய்து விடுகிறேன். இதைத் தடுக்க வழியே இல்லையா என்று கேட்டார். நாரத மகரிஷி அவரிடம், என்ன பாவம் செய்திருந்தாலும், இன்னும் ஏழுநாட்கள் மட்டும்
பொறுத்துக் கொள்ளுங்கள். அதன் பின் உங்கள் கவலை தீர்ந்து விடும் என்றார். ஏன் இன்னும் ஏழு நாட்களில் என்ன நிகழ்ந்து விடப் போகிறது என்றார் பக்தர். ஏழு நாளோடு உங்கள் ஆயுளே முடிந்து விடப் போகிறது என்பதை தான் சொன்னேன் என்றார் நாரத மகரிஷி. இதைக் கேட்டு, சுவாமி என் ஆயுள் இன்னும் ஏழுநாள்
தானா என்று அதிர்ந்தார். ஆம் என்றார் நாரத மகரிஷி. பீதியடைந்த பக்தரும், தினமும் பகவான் நாம சங்கீர்த்தனம், பஜனை, எளியோர்க்கு
தொண்டு, என குடும்ப மகிழ்ச்சியோடு நாட்களை எண்ணிக் கொண்டிருந்தார். ஒருவாரம் கடந்தது. இன்று தான் கடைசிநாள். எனவே ஒருமுறை மீண்டும் நாரத மகரிஷியினை தரிசிக்கலாம்
ஏன் யானையிடம் இருந்து ஆசி பெறுகிறோம் என்று இன்று தெரிந்து கொண்டேன். அதை பகிர்கிறேன். தினமும் மூலிகை தாவரங்களை மட்டும் உண்டு மிருகங்களில் பலமுள்ளதாக திகழும் உயிரினம் யானை. மகத்தான தெய்வீக அம்சங்களும் பொருந்தியது. உலகில் வாழும் உயிரினங்களில் இரண்டு நாசித் துவாரங்கள் வழியாகவும் ஒரே
நேரத்தில் சுவாசிக்கும் தன்மை யானைக்கு மட்டுமே உண்டு. நமக்கு கூட 24 நிமிடங்களுக்கொரு முறை சுவாசம் ஒரு நாசித் துவாரத்திலிருந்து இன்னொரு நாசி துவாரத்துக்கு மாறிக்கொண்டே இருக்கிறது. சுவாசத்தை கட்டுப்படுத்தும் மற்றும் முறைப்படுத்தும் ஆன்மீக முயற்சிகளுக்கு #சரகலை என்று பெயர்.
பிராணாயாமம், வாசியோகம் போன்றவைகள் நம் சுவாசத்தை தெய்வீகத் தன்மைக்கு முன்னேற்றும் ஆன்மீக பயிற்சி முறைகளாகும். வாசியோகம் அல்லது பிராணாயாமத்தில் குறிப்பிட்ட நிலையை எட்டியவர்கள் எப்போதும் இரண்டு நாசித் துவாரங்கள் வழியாகவும் சுவாசிக்கும் திறமையை பெற்றுவிடுவார்கள். இதற்கு சுழுமுனை
#ஆடிமாத#அம்பாள்தரிசனங்கள்
அன்னை பராசக்தி சில தலங்களில் வித்தியாசமான கோலத்தில் அருள்பாலிக்கிறாள்.
*அம்மனுக்கு மூல விக்ரகம் இல்லாமல் உற்சவ விக்ரமே மூலவராக வழிபடப் பெறும் தலம், காரைக்குடி, #கொப்புடையம்மன் கோயில்.
*வடக்கு நோக்கி சிவனை பூஜை செய்யும் அம்பிகை சன்னதி உள்ள தலம் #தக்கோலம்
*அசாம் மாநிலம் கௌஹாத்திக்கு அருகில் உள்ள #காமாக்யாதேவி கோயிலில் தேவியின் யோனிச்சின்னம் மட்டுமே உள்ளது.
*கிடந்த கோல துர்க்கை சன்னதி உள்ள தலம், திருநெல்வேலி கங்கை கொண்டான் அருகில் உள்ள #பராஞ்சேரி. இங்கே பள்ளிகொண்ட துர்க்கை தரிசனம் தருகிறாள்.
*துர்க்கையம்மனுக்கு
என்று தனிக் கோயில்
மயிலாடுதுறையை அடுத்துள்ள #தருமபுரத்தில் உள்ளது.
*அம்பாள் வில் வடிவில் சிவனை வழிபடும் உற்சவமூர்த்தம், திருமால் பேறில் உள்ளது.
*பிரம்மனுக்கு ஞானம் அருளும் பிரம வித்யாம்பிகை உள்ள தலம்-திருவெண்காடு
*திருவானைக்கா, திருஆமாத்தூர், அறையணி நல்லூர் போன்ற தலங்களில் சுவாமி, அம்மன் சன்னதிகள்
சிவபெருமானின் 19அவதாரங்களை பற்றி நாம் அறியாத விஷயங்கள் 1. #பிப்லாட் அவதாரம்:
தாதிச்சி என்ற துறவியின் வீட்டில் பிறந்தார் சிவபெருமான். ஆனால் பிப்லாட் பிறப்பதற்கு முன்னதாகவே அத்துறவி வீட்டைவிட்டு சென்றார். சனி திசையின் இருக்கை நிலை சரியில்லாததால் தான், தன் தந்தை வீட்டைவிட்டு சென்றதை
வளரும் போதுதான் புரிந்து கொண்டார். தன் விண்ணக இருப்பிடத்தில் இருந்து சனி கிரகத்தை விழச் செய்தார். பின்னர் 16 வயது ஆவதற்கு முன்பு யாரையும் தொந்தரவு செய்யக்கூடாது என்ற நிபந்தனையோடு சனியை மன்னித்தார். அதனால் பிப்லாட் வடிவிலான சிவபெருமானை தரிசித்தால் நம்மை பிடித்த சனி தோஷம் நீங்கும்.
2. #நந்தி அவதாரம்:
நந்தி என்ற பெரிய காளை தான் சிவபெருமானின் ஏற்றமாகும். மந்தைகளின் பாதுகாவலனாக-பசுபதியாக நந்தி அவதாரம் பார்க்கப்படுகிறது. நான்கு கைகளை கொண்ட காளையாக அவர் தீட்டப்பட்டுள்ளார். கோடரி மற்றும் மானை இரண்டு கைகள் கொண்டிருக்கும். மற்ற இரண்டு கைகள் ஒன்றாக சேர்த்திருக்கும்