ஒரு குறுநில மன்னன் இருந்தான். அவனுக்கு இறை நம்பிக்கை உண்டு. ஆனால் திடமான இறைபக்தி கிடையாது.ஒருநாள் அரச சபையில் இருந்த அனைவரையும் பார்த்து,"இறைவன் எங்கே இருக்கிறான்?"என்று கேட்டான். ஒரு மந்திரி சொன்னார்,"கடவுள் நம் அருகிலேயே இருக்கிறார். கூப்பிடும் தூரத்தில்தான் இருக்கிறார்".
முதலையின் வாயில் தன் கால் மாட்டிக்கொண்டு மீள முடியாதபோது,
'ஆதிமூலமே' என்று யானை ஒன்று கதறி அழுது கூப்பிட்டபோது,
இறைவன் வந்து அதைக் காப்பாற்றவில்லையா? தன் மானம் பறிபோகும் நிலையில்,'கண்ணா என்னைக் காப்பாற்று' என்று திரெளபதி கூக்குரல் இட்டபோது,இறைவன் உதவிக்கு வந்து அவள் மானத்தைக்
காக்கவில்லையா? ஆகவே இறைவனைக் கூப்பிட்டால்,கேட்கும் தூரத்தில்தான் இருக்கிறார். நீங்கள் மனம் உருகி அழைத்தால் அவர் வருவார். உங்களுக்கு வேண்டியதைச் செய்வார்"என்றார். அவர் சொல்வதில் உண்மை இருப்பதை உணர்ந்தான் மன்னன்.ஆனாலும் அவன் அதை முழுதாக அதை ஏற்றுக் கொள்ளாமல், தொடர்ந்துக் கேட்டான்.
"நீங்கள் சொல்வது சரி. ஆனாலும் ஒரு கேள்வி இருக்கிறது. துரியோதனின் சபைக்கு திரெளபதியை அவன் தம்பி துச்சாதனன் தரதரவென்று இழுத்துவந்த போது, ஏன் இறைவன் உடனே வந்து அவளைக் காக்கவில்லை?". மந்திரி பதிலுரைத்தார்,"இது கடவுளின் தவறில்லை மன்னா. தான் சொல்லியும் கேட்காமல் இழுக்கிறானே,
அப்படி என்ன செய்வான் பார்த்து விடுவோம் என்ற மனநிலையில் திரௌபதி முதலில் இருந்தாள்.அதேபோல அரச சபைக்கு வந்தவுடன், பீஷ்மர்,துரோணாச்சாரியார் போன்ற பெரியவர்களைப் பார்த்ததும், இங்கே தனக்குத் தவறு ஒன்றும் நேர்ந்துவிடாமல் அவர்கள் பார்த்துக் கொள்வார்கள் என்று துணிவுடன் இருந்தாள்.
பிறகு தன் வீரமிகுந்த கணவர்கள் ஐவரையும் அங்கேப் பார்த்தவுடன்
இவர்கள் இருக்கிறார்கள், யார் என்னை என்ன செய்துவிட முடியும்
என்ற நம்பிக்கையையும் கொண்டாள்.ஆனால் இறுதியில் எல்லாம் மோசமாகி, தன் சேலை உரியப்படும் நிலைக்கு வந்தவுடன் தன் கையால் சேலையை கெட்டியாகப் பிடித்துக் கொண்டிருந்தாள்.
பிறகுதான் இனி யாராலும் தன்னைக் காப்பாற்ற முடியாது, இறைவடிவான கண்ணன் ஒருவனால்தான் தன்னைக் காப்பாற்றமுடியும் என்ற முடிவிற்கு மின்னலாக வந்தாள். அதற்குப் பிறகுதான்'கண்ணா! என்னைக் காப்பாற்று' என்றுக் கதறி கூக்குரல் கொடுத்தாள். கண்ணனும் அவளுடைய மானத்தைக் காத்தார்.
நம்பிக்கையுடன் அழைத்தவர் குரலுக்கு மட்டுமே இறைவன் வருவான். ஆகவே மனம் உருகி அழையுங்கள். இறைவன்
வருவான். உங்கள் பிரச்சினைகளை அவன் தீர்த்துவைப்பான்."
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
ஒருமுறை கோவிலுக்குச் சென்ற ராமகிருஷ்ண பரமஹம்சரிடம்,
"ஒவ்வொரு நாளும் தயாரிக்கிற பிரசாதங்களையெல்லாம், எங்கிருந்தோ வருகிற எறும்புகள் மொய்த்து விடுகின்றன. கடவுளுக்கும் படைக்க முடியவில்லை, பக்தர்களுக்கும் கொடுக்க முடியவில்லை" என்று முறையிட்டனர்.
இதைக்கேட்ட பரமஹம்சர்,"இன்றைக்குக் கோவில் வாசலிலே, ஒரு பிடி சர்க்கரையைப் போட்டு வைத்துவிடுங்கள். அப்புறம் எறும்புகள் உள்ளே வராது" என்று கூறினார். அதேபோல கோவில் வாசலிலே சர்க்கரையைப் போட்டதும், எறும்புகளெல்லாம் அந்த சர்க்கரையை மொய்த்துவிட்டு அப்படியே திரும்பிப் போய்விட்டன.
"உள்ளே விதவிதமாக பிரசாதங்கள் இருக்கின்றன.ஆனால் இந்த எறும்புகள் வாசலில் இருக்கிற சர்க்கரையை மட்டும் மொய்த்துவிட்டு திரும்பிப் போய்விட்டனவே" என்று எல்லாரும் ஆச்சரியப்பட்டபோது, பரமஹம்சர் சொன்னார்,
இளம் துறவிகள் இரண்டு பேர் பிரயாணம் செய்யும போது, வழியில் ஆற்றைக் கடக்கவேண்டியிருந்தது. ஆற்றில் நிறைய நீர் ஓடிக்கொண்டிருந்தது. அப்போது இளம்பெண் ஒருத்தி துறவிகளை நோக்கி ஓடிவந்தாள். "ஐயா எனது தாயாருக்கு ரொம்பவும் உடல்நிலை சரியில்லாமல் உள்ளது. உயிருக்கு போராடிக்கொண்டிருக்கிறார்.
அக்கரையில் உள்ள எனது வீட்டிற்கு ஆற்றைக்கடந்து எப்படிப் போவது என்று தெரியவில்லை. தண்ணீர் மிக ஆழமாக உள்ளது. தயவுசெய்து என்னை எப்படியாவது அக்கரைக்கு அழைத்துப்போங்கள்" என துறவிகளிடம் அழுதவண்ணம் மன்றாடினாள். அதைக்கேட்டு முகத்தை வேறுபக்கம் திருப்பிக் கொண்டார் ஒரு துறவி.
இன்னொரு துறவி சிறிது நேரம் யோசித்துவிட்டு அந்தப்பெண்ணை அழைத்து, தனது தோளில் உட்கார வைத்து ஆற்றைக்கடந்தார். அக்கரைக்கு வந்ததும் அப்பெண்ணைத் தோளிலிருந்து இறக்கிவிட்டார். அப்பெண் அந்தத் துறவிக்கு நன்றி கூறி அவரை வாழ்த்தி விட்டுச்சென்றாள்.
"என்னால் நிம்மதியாக இருக்க முடியவில்லை"என்றான் ஒரு அரசன், ஞானியிடம். "உன் கடமையை நீ சரியாகச் செய்கிறாயா?"என ஞானி கேட்டார். "என் நாட்டிற்கு அன்னியர் பகை இல்லை. கள்வர் பயம் இல்லை.அதிக வரிகள் விதிப்பதில்லை. முறையாக நீதி செலுத்தப்படுகிறது. நாட்டு மக்கள் மகிழ்ச்சியோடு வாழ்கிறார்கள்.
ஆனால் என் மனத்தில் மட்டும் அமைதி இல்லை.இந்த அரச பதவியில் எனக்கு நிம்மதி கிடைக்கவில்லை"என்றான்.
"அப்படியானால் ஒன்று செய்.உன் நாட்டை என்னிடம் கொடுத்து விடு"என்றார் ஞானி. "எடுத்துக் கொள்ளுங்கள்"என்றான் மன்னன்."நீ என்ன செய்வாய்" என்றார் ஞானி."நான் எங்காவது போய் ஏதாவது வேலை செய்து,
பிழைத்துக் கொள்கிறேன்"என்றான் அரசன்."எங்கோ போய்,தெரியாத வேலையைச் செய்வதை விட,என்னிடமே வேலை செய். உனக்கு தெரிந்தது நாட்டை,ஆட்சி செய்வது. அதையே செய். என் பிரதிநிதியாக மட்டும் நீ நாட்டை ஆண்டு வா. நான் பிறகு வந்து கணக்கு,வழக்குகளை பார்க்கிறேன்."என்றார். சரி என்றான் மன்னன்.
ஒரு ஊரில் விறகு வெட்டுபவன் ஒருவன் வாழ்ந்துவந்தான்.அவனுக்கு கடவுள் மேல் நம்பிக்கை உண்டு. தினமும் காட்டிற்குச் சென்று விறகுவெட்டி,அதைக் கொண்டுபோய் விற்பனை செய்வான். நல்ல வருமானம் வந்தது. அதை வைத்து நிம்மதியாக திருப்தியாக வாழ்க்கை நடத்திவந்தான்.
ஒருநாள் அவன் காட்டுக்குச் செல்லும்போது, அங்கே ஒரு நரியைக் கண்டான்.அந்த நரி ஏதோ விபத்தில், தன் இரண்டு முன்னங்கால்களை இழந்துவிட்டது. அது ஒரு மரத்தடியில படுத்திருந்தது. அதை இவன் பார்த்தான்.அப்பொழுது இவன் மனதில் ஒரு சந்தேகம் எழுந்தது.
"இந்த நரிக்கு இரண்டு கால்கள் இல்லை.அப்படி இருக்கும்பொழுது, இது எப்படி வேட்டையாடி தன்னுடைய பசியை போக்கி கொள்ள முடியும்?" என்று யோசிக்க ஆரம்பித்தான்.அப்படி அவன் யோசித்துக் கொண்டிருக்கும்போது,அந்தப் பக்கமாக ஒரு புலி வந்தது.
ஒரு ஊரின் சத்திரத்தில் ஒருநாள் இரவு, ஒரு முனிவரும் அந்நாட்டின் அமைச்சர் ஒருவரும் அடுத்தடுத்த அறைகளில் தங்கி இருந்தனர். இரவு முழுவதும் கூட்டமாக நாய்கள் அந்த விடுதியைச் சுற்றி குரைத்துக் கொண்டே இருந்தன.அமைச்சரால் தூங்கவே முடியவில்லை, அவருக்குக் கோபம் அதிகமானது.
நாய்களோ வெறித்தனமாகக் குரைத்து,இரவின் அமைதியைக் கெடுத்தன. இத்தனைக்கும் மத்தியில் முனிவர் அடுத்த அறையில் நிம்மதியாக உறங்கிக் கொண்டிருந்தார்.அவரை எழுப்பிய அமைச்சர், ”என்ன மனிதர் நீங்கள்?இவ்வளவு சத்தத்துக்கும் மத்தியில் உங்களால் எப்படி உறங்க முடிகிறது?"என்று புலம்பினார்.
அதற்கு முனிவர்,"அமைச்சரே!அந்த நாய்கள், உங்களுக்கு ஆதரவாகவோ அல்லது எதிராகவோ இங்கு கூடவில்லை. நாய்களுக்கு இங்கு ஒரு அமைச்சர் தங்கி இருப்பது தெரியாது. அந்த நாய்களுக்கும் உங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.அவை தங்களுக்கே உரிய குரைக்கும் வேலையைப் பார்க்கின்றன.
ஒருநாள் இரவு நெருங்கும் வேளையில் வயதான பெண்மணி ஒருவர், கார் அருகில் வெகு நேரமாக நிற்பதை ஒருவர் கவனித்தார். ரோட்டில் செல்லும் வாகனங்களை அந்தப் பெண்மணி கைக்காட்டி நிறுத்தப்பார்த்தார். ஆனால் எந்த வாகனமும் நிற்கவில்லை.
அந்த நபர் அருகில் சென்று என்னப் பிரச்சனை என்று அந்த பெண்மணியிடம் கேட்டார்.கார் டயர் பஞ்சர் ஆகிவிட்டது என்றார் அந்த பெண்மணி."என் பெயர் தயாளன்.நீங்கள் காரில் உட்காருங்கள், நான் டயர் மாற்றிக் கொடுக்கிறேன் எனக்கூறி, சிறிது நேரத்தில் மிகவும் கஷ்டப்பட்டு டயரை மாத்தினார்.
அந்தப் பெண்மணி,"உங்கள் உதவிக்கு நான் ஏதாவது பணம் தர வேண்டும்"என்றார்.அதற்கு தயாளன்,"நான் சிறியதாக ஒரு டீக்கடை நடத்தி வருகிறேன். நீங்கள் பணம் எதுவும் தரவேண்டாம்.நீங்கள் கஷ்டப்படும் நேரத்தில் என்னாலான உதவி செய்தேன் அவ்வளவே. அப்படியே நீங்கள் பண உதவி செய்யவேண்டும் என்று எண்ணினால்,