40 எழுத்தாளர்களால், 3 வெவ்வேறு மொழிகளில், 3 கண்டங்களில், 1600 ஆண்டுகளாக எழுதப்பட்ட 66 கதைகள் கொண்ட Bible ஐ பற்றி முதல் thread.
முதல் கதை ஆதியாகமம். இது யூதர்களின் புனித புத்தகமான Torah விலும், இஸ்லாமியர்களின் புனித புத்தகமான Qur'an னிலும் இடம்பெற்று இருக்கிறது.
இதை எழுதியவர் மோசஸ் (இறை தூதர்) என்று நம்பப்படுகிறது. ஆனால் எழுதப்பட்டு இருக்கும் மொழி நடை மோசஸ் காலத்திற்கு மிகவும் பின்தங்கியது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றார்கள். அதாவது பைபிள் இக்காலத்து ஆங்கிலத்தில் எழுதப்பட்டு இருக்கிறது என்று வைத்து கொண்டால்,
மோசஸ் ஷேக்ஸ்பியர் காலத்தை சேர்ந்தவர்.
கிறிஸ்து பிறந்தது முதலாம் நூற்றாண்டு என்று வைத்து கொண்டும் பைபிளில் ஓவ்வொருவருக்கும் குடுக்கப்பட்டு உள்ள வயதை கொண்டும் கணக்கிட்டால் ஆதியாகமம் புத்தகத்தில் உள்ள சம்பவங்கள் கிமு 4000 ஆண்டில் நடகின்றன.
இதே காலகட்டத்தில் உலகில் சுமேரியா மற்றும் எகிப்து நாகரீகம் தழைத்து வளர்ந்து கொண்டு இருந்தது. ஐரோப்பா மற்றும் ஆசியாவில் விவசாயம் பரவிக்கொண்டு இருந்தது. இந்த காலகட்டத்தில் தான் பைபிளில் கடவுள் வானத்தையும் பூமியையும் பொறுமையாக படைத்து கொண்டு இருந்தார்.
ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் படைத்தார். சூரியனை படைக்கவில்லை அப்படியானால் பூமி gravitational orbit இல்லாமல் எப்படி சுற்றி கொண்டு இருந்தது தெரியவில்லை. சரி அது போகட்டும் அதாவது astrophysics advanced subject.
ஆனா சூரியன் இல்லாமலே வெளிச்சம் உண்டாக கடவது என்றார் வெளிச்சம் உண்டாகிவிட்டது. வெளிச்சம் வரணும் அப்படின்னா light source என்று ஒண்ணு இருக்கணுமா இல்லையா? இது ஒண்ணாங் கிளாஸ் பாட புஸ்தகத்துலயே வருது.
அப்புறம் தேவன் வெளிச்சத்திற்கு பகல் இருட்டுக்கு இரவு என்று பெயர் வைத்தார் ஒரு நாள் ஆயிடுச்சாம். சூரியனும் இல்ல பூமி சூரியனை சுற்றி வரவும் இல்லை ஆனா simple ஆ ஓரு நாள் ஆயிடுச்சு.
அடுத்து செடி கொடி மரம் எல்லாம் உருவாகிடுச்சு சூரியன் இல்லாமலேயே.
இப்படியே மூணு நாள் ஓடிப்போச்சு.
எப்படி கணக்கு பண்ணாங்கன்னு தெரியலை. மூணு நாளைக்கு அப்புறம் தான் பொறுமையா பகல் க்கு சூரியன் இரவுக்கு நிலா என்று படைக்கிறார் ஆண்டவர். இது போக நட்சத்திரங்களையும் படைக்கிறார். சூரியனே ஒரு நட்சத்திரம் அப்படின்றது வேற விஷயம். எல்லா நட்சத்திரங்களையும் பூமிக்கு மேலயே வச்சு இருக்கிறார்.
பைபிளில் வரும் விவரிப்புகளை கொண்டு பார்த்தால் பூமி இப்படிதான் இருந்திருக்க வேண்டும்.
நாலு நாள் ஆகுது, பறவைகளை படைக்கிறார். பரிணாம கொள்கை படி பார்த்தா மிருகங்களில் இருந்து தான் பறவைகள் வருகின்றன. ஆனா இங்க மிருகங்களுக்கு முன்னாடியே பறவை வந்தாச்சு.
5வது நாள் ல மிருங்கங்களை படைக்கிறார்.
பின்பு தேவன் 'நமது' (வெளில தெரியறது ஒரு ரூபம் ஆனா உள்ள இருக்கிறது பல ரூபங்கள் அதுனால எங்களை எப்போவுமே நாங்க நாங்க ன்னு சொல்லித்தான் பழக்கம்) சாயலாகவும், நமது ரூபத்தின்படியேயும் மனுஷனை உண்டாக்குவோம் என்று மனிதனை படைக்கிறார்.
இப்போதான் ஒரு பெரிய சந்தேக பட்டியலே இருக்கு. அதை அப்புறமா கேக்குறேன்/சொல்றேன்....
அதாவது கடவுள் அவரு சாயல் ல மனிதனை படைத்து இருக்கிறார். எல்லா மதமும் அப்படிதான் சொல்லுது. அதுவும் பெண்ணுக்கு முன் ஆணை படைத்து இருக்கிறார். அப்போ பெண்ணுக்கு முன் தோன்றிய ஆணுக்கு எதற்காக breast nipples? எதற்காக தொப்புள்?
ஏவாளும் விலா எலும்பிலுறுந்து வந்தவள் என்றால் அவளுக்கும் எதற்காக தொப்புள் இருக்கிறது?
தன்னுடைய சாயலில் மனிதனை கடவுள் படைத்தார் என்றால் கடவுளுக்கு பிறப்புறுப்பு reproductory organs எல்லாம் இருக்கிறதா?
நுரையீரல் இருக்கிறதா? வானத்தில் ஏதேனும் தெய்வீக தன்மையுள்ள ஆக்சிசன் இருக்கிறதா?
சிறுகுடல் பெருங்குடல் இருக்கிறதா? வயிறு இருக்கிறதா? Digestive system இருக்கிறதா? கடவுள் என்ன சாப்பிடுவார்?
Excretory system இருக்கிறதா?
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
லிலித் யூத நாட்டுப்புற கதைகளில் வரும் மிகவும் சர்ச்சைக்குரிய பெண். Torah (Jewish bible) வின் படைப்புக் கதையில் லிலித்தின் பெயர் சேர்க்கப்படவில்லை ஆனால் அவள் பல midrashic நூல்களில் (புனித நூல்களுக்கு அர்த்தங்களும் விளக்கங்களும் குடுக்கும் நூல்கள்)
தோன்றுகிறாள். யூத அறிஞர்கள், பெண்ணியவாதிகள் இடையே அவளுடைய அடையாளங்கள், வரலாறு மற்றும் இலக்கியங்கள் விவாதிக்கப்படுகின்றன.
லிலித்துக்கு பல தோற்றக் கதைகள் உள்ளன, ஆனால் மிகவும் பிரபலமானது லிலித் ஆதாமின் முதல் மனைவி என்பது.
கதையின் படி, லிலித் கடவுளால் மண்ணிலிருந்து (ஆதாமை போலவே) உருவாக்கப்படுகிறாள். ஆதாம் லிலித் மேல் ஆதிக்கம் செலுத்த முயன்றதாகவும், அதற்கு லிலித் மறுத்ததாகவும் கதை சொல்கிறது.
கடவுள் பூமியிலிருந்து மண்ணை எடுத்து மனிதனை உருவாக்கினார். அவன் மூக்கில் தன் உயிர் மூச்சினை கடவுள் ஊதினார். அதனால் மனிதன் உயிர் பெற்றான்.
இது ஒரு simple concept தான். அந்த காலத்துல மண்ணுல பொம்மை செஞ்சு பார்த்து இருக்காங்க.
மனிதனும் உயிர் இல்லாமல் போனால் வெறும் பொம்மை மாதிரி தான் இருக்கான். உடலும் விரைத்து விடும். இப்போ உயிருள்ள மனிதனுக்கும் உயிரற்ற மனிதனுக்கும் எளிதில் காணக்கூடிய ஒரு வித்தியாசம் என்ன? மூச்சு. உயிருள்ள மனிதன் மூச்சு விடுகிறான். உயிரற்ற மனிதன் மூச்சு விடுவதில்லை.
அப்போ அந்த காற்று தான் உயிர் அப்படின்றது ஒரு எளிய புரிதல். அந்த கால மனித அறிவுக்கு உண்டான புரிதல். அந்த புரிதல்ல விளைந்த கதை தான் இது.
எப்படி இந்த வெள்ள கதையை கொஞ்சம் பட்டிங் டிங்கரிங் பண்ணி உலகம் முழுக்க சொல்றங்களோ அதே போல தான் இந்த மண்ணில் இருந்து மனிதனை உருவாக்கிய கதையும்
கிரேக்க புராணங்களில் வரும் Narcissus ஒரு வேட்டைக்காரன், நதி கடவுள் Cephissus மற்றும் வனதேவதை Liriope ஆகியோரின் மகன். மிகவும் அழகான Narcissus ஐ, பலர் காதலித்தனர். இருப்பினும், Narcissus எல்லோர் மீதும் வெறுப்பையும் அவமதிப்பையும் மட்டுமே காட்டினான்.
ஒரு நாள், Narcissus காடுகளில் வேட்டையாடுகையில், மலைக்காட்டு தேவதை Echo அவனை பார்த்தாள், உடனடியாக Narcissus மீது echo காதலில் விழுந்தாள். Narcissus எங்கு சென்றாலும் echo அவனுக்கு தெரியாமல் பின்தொடர்ந்து சென்றாள்.
யாரோ தன்னை பின்தொடர்வதை Narcissus உணர்ந்த போது எக்கோ தன்னை Narcissus க்கு வெளிப்படுத்தி Narcissus ஐ காதலிப்பதாக சொல்லி அவனை அணைக்க முயன்றாள். ஆனால், அவன் அவளைத் கீழே தள்ளி, அவளை அவமதித்துவிட்டு சென்றான்.
Disclaimer: மனம் புண்படும் வாய்புள்ளவர்கள் மேற்கொண்டு படிக்க வேண்டாம். 🙏🏻
பைபிள் லயே கொஞ்சம் soft ஆனா ஆளுண்ணு பாத்திங்கன்னா அது நம்ம Isaac தான்.
Isaac Rebekah கல்யாணம் முழுக்க முழுக்க பெற்றோர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு கல்யாணம் தான்.
ஏன் நம்ம ஈசாக் லவ் பண்ணல அப்படினு ஆராய்ச்சி பண்ணேன்.🤔
ஈசாக் ஒரு நல்ல பையன், கீழ்ப்படிதல் மற்றும் பெற்றோருக்கு அடிபணிந்தவர். எந்த அளவுக்கு அடிபணிந்தவர் அப்படின்னா அப்பா உன்னை பலியிட போறேன் என்று சொல்லி கழுத்து மேல கத்தியை வைக்கும்போது கூட அமைதியா இருக்கிற அளவுக்கு அடிபணிந்தவர்.
இல்ல பயம் அப்படினு கூட இருக்கலாம். ஏன்னா இதே அப்பா தான் அண்ணா இஸ்மாயீல் and அவங்க அம்மா Hager அ கொண்டு போய் நடு பாலைவனத்தில் விட்டுவிட்டு வந்தவர்.😦 அதனால் பயமா கூட இருக்கலாம்.
சில version ல Abraham Isaac அ கொன்று விட்டதாகவும் பின் கடவுள் அவனை உயிர்த்தெழ செய்ததாகவும் சொல்றாங்க.
Mel Gibson ஒரு தீவிர யூத வெறுப்பாளர். Winona Ryder ஐ ஒருமுறை இவர் oven dodger (இது ஒரு மோசமான சொல். இரண்டாம் உலகப் போரின் போது நாஜி மரண முகாம்களில் யூத கைதிகள் படுகொலை செய்யப்பட்ட விதத்தை கேலியாக குறிக்கிறது.) என்று அழைத்ததாக புகார் எழும்பியது.
இது மட்டுமல்ல இது போல பல பேர் அவர் மேல் புகார் அளித்து இருக்கின்றனர்.
ஒருமுறை குடிபோதையில் ஒரு காவலரை இது போன்ற வார்த்தைகளில் திட்டியத்திற்கு மன்னிப்பு கேட்டு இருக்கிறார்.
அவருடைய The Passion of the Christ படமும் கூட பல விமர்சனங்களை கொண்டது தான்.
யூதர்களை கோரமான, கொக்கி மூக்குடைய பரிசேயர்களாக சித்தரித்து இருக்கிறார் என்றும், யூத எதிர்ப்பு stereotype கள் ஆழமாக வேரூன்றியுள்ளது என்றும் விமர்சகர்கள் குறிப்பிடுகின்றனர்.
Mel Gibson சிறுவயதில் ஒரு கத்தோலிக்க உயர்நிலைப்பள்ளி மாணவராக இருந்தார், சமையல்காரர் அல்லது ஒரு பத்திரிகையாளராக ஆவதுதான் அவர் சிறுவயது லட்சியங்களாக இருந்தன. Mad Max திரைப்படத்தில் நடிக்கும் முன்னர் நிறைய சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து இருக்கிறார்.
சதுரங்க வேட்டை படத்துல "நாம சொல்ற பொய்ல கொஞ்சம் உண்மையும் கலந்து இருக்கணும் அப்போதான் மக்கள் நம்புவாங்க" அப்படினு ஒரு வசனம் வரும். அது போல இந்த கம்பி கட்டுன கதையிலும் சில உண்மைகள் இருக்கு. அவங்க அப்பா Mel Gibson 12 வயதாக இருந்தபோது தனது குடும்பத்தை நியூயார்க்கில் இருந்து
ஆஸ்திரேலியாவின் சிட்னிக்கு மாற்றினார். Mad Max audition க்கு முந்தைய நாள் இரவு, ஒரு சண்டையில் அவரது முகம் நன்கு அடிபட்டது. பின்னர் அவர் Mad Max audition க்கு காயம்பட்ட, வீங்கிய, முகத்துடன் சென்றார். சிலநாட்களில் பழைய நிலைக்கு அவரது முகம் திரும்பிவிட்டது.