கடவுள் பூமியிலிருந்து மண்ணை எடுத்து மனிதனை உருவாக்கினார். அவன் மூக்கில் தன் உயிர் மூச்சினை கடவுள் ஊதினார். அதனால் மனிதன் உயிர் பெற்றான்.
இது ஒரு simple concept தான். அந்த காலத்துல மண்ணுல பொம்மை செஞ்சு பார்த்து இருக்காங்க.
மனிதனும் உயிர் இல்லாமல் போனால் வெறும் பொம்மை மாதிரி தான் இருக்கான். உடலும் விரைத்து விடும். இப்போ உயிருள்ள மனிதனுக்கும் உயிரற்ற மனிதனுக்கும் எளிதில் காணக்கூடிய ஒரு வித்தியாசம் என்ன? மூச்சு. உயிருள்ள மனிதன் மூச்சு விடுகிறான். உயிரற்ற மனிதன் மூச்சு விடுவதில்லை.
அப்போ அந்த காற்று தான் உயிர் அப்படின்றது ஒரு எளிய புரிதல். அந்த கால மனித அறிவுக்கு உண்டான புரிதல். அந்த புரிதல்ல விளைந்த கதை தான் இது.
எப்படி இந்த வெள்ள கதையை கொஞ்சம் பட்டிங் டிங்கரிங் பண்ணி உலகம் முழுக்க சொல்றங்களோ அதே போல தான் இந்த மண்ணில் இருந்து மனிதனை உருவாக்கிய கதையும்
உலகம் முழுவதும் ஒன்றுதான். சின்ன சின்ன வேறுபாடுகள் மட்டும் தான்.
கிரேக்க கதைகளில் Prometheus மண்ணில் இருந்து மனிதனை உருவாக்குகின்றான், Athena அந்த மண் பொம்மையில் தனது சுவாசத்தை செலுத்தி அதற்கு உயிர் கொண்டு வருகிறாள்.
ஹிந்து மதத்தில் கூட பார்வதி விநாயகரை இப்படிதான் உருவாக்குவது போன்ற ஒரு கதை இருக்கிறது. மாயன்கள் சோளத்தில் இருந்து கடவுள் மனிதனை உருவாக்கினான் என்று நம்பினார்கள். இவர்களின் அன்றைய பிரதான உணவு சோளம்.
இப்படி எல்லாவற்றையும் உருவாக்கிய கடவுள். நுண்ணுயிரிகளை எப்போது உருவாக்கினார் எப்படி உருவாக்கினார் என்று ஒண்ணுமே சொல்லலை.
இது Cistine Chapel கூரையில் Michelangelo வால் வரையப்பட்ட பிரசித்தி பெற்ற சித்திரம் "Creation of Adam"
படைப்பை பற்றி இரண்டு வெவ்வேறு ஆதியாகமக்கணக்குகள் உள்ளன: 1வது, ஆதியாகமம் 1: 1-2: 3, இதில் 6 நாட்களில் முதலில் மிருகங்களை உருவாக்கிவிட்டு இறுதியாக மனிதனை உருவாக்குகிறார் கடவுள்;
இரண்டாவது ஆதியாகமம் 2: 4-25, அதில் படைப்பின் வரிசை வேறுபட்டது: கடவுள் முதலில் மனிதனை உருவாக்குகிறார், பின்னர் விலங்குகளை உருவாக்கி ஆதாமிடம் பெயரிடுவதற்காக கொண்டு வருகிறார். மைக்கேலேஞ்சலோ Creation of Adam என்ற தனது ஓவியத்தின் கருப்பொருளுக்காக இரண்டாவது கதையை எடுத்து இருக்கிறார்.
இந்த ஓவியத்தின் மூலம் அவர் சொல்ல வருவது என்ன என்பதை பற்றி பல்வேறு கருத்துக்கள் இருக்கின்றன.
இந்த ஓவியத்தில், கடவுள் ஒரு வெள்ளை ஆடையால் மூடப்பட்ட ஒரு வயதான வெள்ளை தாடி மனிதராக சித்தரிக்கப்படுகிறார், ஆதாம் முழு நிர்வாணமாக கீழ் இடதுபுறத்தில் இருக்கிறான்.
கடவுள் இறக்கைகள் இல்லாமல் தேவதூதர்களால் தாங்கியபடி இருக்கிறார். கடவுளின் சாயலில் மனிதன் படைக்கப்பட்டான் என்பதை பிரதிபலிக்கும் வகையில் நீட்டப்பட்ட ஆதாமின் இடது கையைத் தொட கடவுளின் வலது கை நீட்டப்பட்டுள்ளது (Mirror image).
1990 ஆம் ஆண்டில், இந்தியானாவின் ஆண்டர்சனில் மருத்துவர் Frank Meshberger , கடவுளின் உருவத்தின் பின்னால் சித்தரிக்கப்பட்ட வடிவம் உடற்கூறியல் ரீதியாக மனித மூளையுடன் பொருந்துகிறது என்று சுட்டிக்காட்டினார்.
ஓவியத்தின் எல்லைகள் முன்பக்க மடல், optic chiasm, மூளை அமைப்பு, பிட்யூட்டரி சுரப்பி மற்றும் major sulci of cerebrum ஆகியவற்றுடன் ஒத்து போகின்றதாக கூறினார்.
அதாவது மனிதனின் மூளை தான் ஆதாம் கதையை படைத்தது என்று அவர் சொல்ல வருகிறார் என்று எடுத்துக்கொள்ளலாமா?
பிரசவத்திற்கு பிறகான கருப்பையில் கடவுள் இருப்பது போலவும், ஆதாம் ஒரு பெண்ணின் உடற்பகுதியில் படுத்துக் கொண்டு இருப்பதை போலவும் இருப்பதாக இத்தாலிய ஆராய்ச்சியாளர்களின் குழு வெளியிட்ட மற்றொரு ஆராய்ச்சி கூறுகிறது.
1. மஞ்சள் அம்பு பிரசவத்திற்குப் பிந்தைய காலத்தில் கருப்பையின் mucosa வின் மடிப்புகளை ஒத்திருக்கிறது. கருப்பை தசையில் பிரசவத்திற்கு பிறகுதான் மடிப்புகள் தோன்றும்
2. நீல அம்பு கருப்பையின் வாயை குறிக்கிறது.
3. ஆதாம் ஒரு பாறையில் ஓய்வெடுப்பதாக இருக்கிறது, அந்த காலத்தில் பாறையில் ஓய்வெடுப்பது என்பது தாய்மையை குறிக்கும் ஒரு சின்னமாக பயன்படுத்தப்பட்டு வந்தது.
4. ஆரஞ்சு அம்பு ஒரு பெண் உடலின் முலைக்காம்பை சித்தரிக்கிறது
5. வெளியில் தொங்கி கொண்டு இருக்கும் பச்சை நிற துணி அப்போதுதான் அறுத்த தொப்புள் கொடியை சுட்டி காட்டுகிறது.
இதன்மூலம் மனிதன் ஒரு பெண்ணின் வயிற்றில் இருந்து தான் வந்தான் என்று மைக்கேலேஞ்சலோ சொல்ல வந்ததாக எடுத்துக்கொள்ளலாமா?
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
லிலித் யூத நாட்டுப்புற கதைகளில் வரும் மிகவும் சர்ச்சைக்குரிய பெண். Torah (Jewish bible) வின் படைப்புக் கதையில் லிலித்தின் பெயர் சேர்க்கப்படவில்லை ஆனால் அவள் பல midrashic நூல்களில் (புனித நூல்களுக்கு அர்த்தங்களும் விளக்கங்களும் குடுக்கும் நூல்கள்)
தோன்றுகிறாள். யூத அறிஞர்கள், பெண்ணியவாதிகள் இடையே அவளுடைய அடையாளங்கள், வரலாறு மற்றும் இலக்கியங்கள் விவாதிக்கப்படுகின்றன.
லிலித்துக்கு பல தோற்றக் கதைகள் உள்ளன, ஆனால் மிகவும் பிரபலமானது லிலித் ஆதாமின் முதல் மனைவி என்பது.
கதையின் படி, லிலித் கடவுளால் மண்ணிலிருந்து (ஆதாமை போலவே) உருவாக்கப்படுகிறாள். ஆதாம் லிலித் மேல் ஆதிக்கம் செலுத்த முயன்றதாகவும், அதற்கு லிலித் மறுத்ததாகவும் கதை சொல்கிறது.
கிரேக்க புராணங்களில் வரும் Narcissus ஒரு வேட்டைக்காரன், நதி கடவுள் Cephissus மற்றும் வனதேவதை Liriope ஆகியோரின் மகன். மிகவும் அழகான Narcissus ஐ, பலர் காதலித்தனர். இருப்பினும், Narcissus எல்லோர் மீதும் வெறுப்பையும் அவமதிப்பையும் மட்டுமே காட்டினான்.
ஒரு நாள், Narcissus காடுகளில் வேட்டையாடுகையில், மலைக்காட்டு தேவதை Echo அவனை பார்த்தாள், உடனடியாக Narcissus மீது echo காதலில் விழுந்தாள். Narcissus எங்கு சென்றாலும் echo அவனுக்கு தெரியாமல் பின்தொடர்ந்து சென்றாள்.
யாரோ தன்னை பின்தொடர்வதை Narcissus உணர்ந்த போது எக்கோ தன்னை Narcissus க்கு வெளிப்படுத்தி Narcissus ஐ காதலிப்பதாக சொல்லி அவனை அணைக்க முயன்றாள். ஆனால், அவன் அவளைத் கீழே தள்ளி, அவளை அவமதித்துவிட்டு சென்றான்.
40 எழுத்தாளர்களால், 3 வெவ்வேறு மொழிகளில், 3 கண்டங்களில், 1600 ஆண்டுகளாக எழுதப்பட்ட 66 கதைகள் கொண்ட Bible ஐ பற்றி முதல் thread.
முதல் கதை ஆதியாகமம். இது யூதர்களின் புனித புத்தகமான Torah விலும், இஸ்லாமியர்களின் புனித புத்தகமான Qur'an னிலும் இடம்பெற்று இருக்கிறது.
இதை எழுதியவர் மோசஸ் (இறை தூதர்) என்று நம்பப்படுகிறது. ஆனால் எழுதப்பட்டு இருக்கும் மொழி நடை மோசஸ் காலத்திற்கு மிகவும் பின்தங்கியது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றார்கள். அதாவது பைபிள் இக்காலத்து ஆங்கிலத்தில் எழுதப்பட்டு இருக்கிறது என்று வைத்து கொண்டால்,
மோசஸ் ஷேக்ஸ்பியர் காலத்தை சேர்ந்தவர்.
கிறிஸ்து பிறந்தது முதலாம் நூற்றாண்டு என்று வைத்து கொண்டும் பைபிளில் ஓவ்வொருவருக்கும் குடுக்கப்பட்டு உள்ள வயதை கொண்டும் கணக்கிட்டால் ஆதியாகமம் புத்தகத்தில் உள்ள சம்பவங்கள் கிமு 4000 ஆண்டில் நடகின்றன.
Disclaimer: மனம் புண்படும் வாய்புள்ளவர்கள் மேற்கொண்டு படிக்க வேண்டாம். 🙏🏻
பைபிள் லயே கொஞ்சம் soft ஆனா ஆளுண்ணு பாத்திங்கன்னா அது நம்ம Isaac தான்.
Isaac Rebekah கல்யாணம் முழுக்க முழுக்க பெற்றோர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு கல்யாணம் தான்.
ஏன் நம்ம ஈசாக் லவ் பண்ணல அப்படினு ஆராய்ச்சி பண்ணேன்.🤔
ஈசாக் ஒரு நல்ல பையன், கீழ்ப்படிதல் மற்றும் பெற்றோருக்கு அடிபணிந்தவர். எந்த அளவுக்கு அடிபணிந்தவர் அப்படின்னா அப்பா உன்னை பலியிட போறேன் என்று சொல்லி கழுத்து மேல கத்தியை வைக்கும்போது கூட அமைதியா இருக்கிற அளவுக்கு அடிபணிந்தவர்.
இல்ல பயம் அப்படினு கூட இருக்கலாம். ஏன்னா இதே அப்பா தான் அண்ணா இஸ்மாயீல் and அவங்க அம்மா Hager அ கொண்டு போய் நடு பாலைவனத்தில் விட்டுவிட்டு வந்தவர்.😦 அதனால் பயமா கூட இருக்கலாம்.
சில version ல Abraham Isaac அ கொன்று விட்டதாகவும் பின் கடவுள் அவனை உயிர்த்தெழ செய்ததாகவும் சொல்றாங்க.
Mel Gibson ஒரு தீவிர யூத வெறுப்பாளர். Winona Ryder ஐ ஒருமுறை இவர் oven dodger (இது ஒரு மோசமான சொல். இரண்டாம் உலகப் போரின் போது நாஜி மரண முகாம்களில் யூத கைதிகள் படுகொலை செய்யப்பட்ட விதத்தை கேலியாக குறிக்கிறது.) என்று அழைத்ததாக புகார் எழும்பியது.
இது மட்டுமல்ல இது போல பல பேர் அவர் மேல் புகார் அளித்து இருக்கின்றனர்.
ஒருமுறை குடிபோதையில் ஒரு காவலரை இது போன்ற வார்த்தைகளில் திட்டியத்திற்கு மன்னிப்பு கேட்டு இருக்கிறார்.
அவருடைய The Passion of the Christ படமும் கூட பல விமர்சனங்களை கொண்டது தான்.
யூதர்களை கோரமான, கொக்கி மூக்குடைய பரிசேயர்களாக சித்தரித்து இருக்கிறார் என்றும், யூத எதிர்ப்பு stereotype கள் ஆழமாக வேரூன்றியுள்ளது என்றும் விமர்சகர்கள் குறிப்பிடுகின்றனர்.
Mel Gibson சிறுவயதில் ஒரு கத்தோலிக்க உயர்நிலைப்பள்ளி மாணவராக இருந்தார், சமையல்காரர் அல்லது ஒரு பத்திரிகையாளராக ஆவதுதான் அவர் சிறுவயது லட்சியங்களாக இருந்தன. Mad Max திரைப்படத்தில் நடிக்கும் முன்னர் நிறைய சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து இருக்கிறார்.
சதுரங்க வேட்டை படத்துல "நாம சொல்ற பொய்ல கொஞ்சம் உண்மையும் கலந்து இருக்கணும் அப்போதான் மக்கள் நம்புவாங்க" அப்படினு ஒரு வசனம் வரும். அது போல இந்த கம்பி கட்டுன கதையிலும் சில உண்மைகள் இருக்கு. அவங்க அப்பா Mel Gibson 12 வயதாக இருந்தபோது தனது குடும்பத்தை நியூயார்க்கில் இருந்து
ஆஸ்திரேலியாவின் சிட்னிக்கு மாற்றினார். Mad Max audition க்கு முந்தைய நாள் இரவு, ஒரு சண்டையில் அவரது முகம் நன்கு அடிபட்டது. பின்னர் அவர் Mad Max audition க்கு காயம்பட்ட, வீங்கிய, முகத்துடன் சென்றார். சிலநாட்களில் பழைய நிலைக்கு அவரது முகம் திரும்பிவிட்டது.