லிலித் யூத நாட்டுப்புற கதைகளில் வரும் மிகவும் சர்ச்சைக்குரிய பெண். Torah (Jewish bible) வின் படைப்புக் கதையில் லிலித்தின் பெயர் சேர்க்கப்படவில்லை ஆனால் அவள் பல midrashic நூல்களில் (புனித நூல்களுக்கு அர்த்தங்களும் விளக்கங்களும் குடுக்கும் நூல்கள்)
தோன்றுகிறாள். யூத அறிஞர்கள், பெண்ணியவாதிகள் இடையே அவளுடைய அடையாளங்கள், வரலாறு மற்றும் இலக்கியங்கள் விவாதிக்கப்படுகின்றன.
லிலித்துக்கு பல தோற்றக் கதைகள் உள்ளன, ஆனால் மிகவும் பிரபலமானது லிலித் ஆதாமின் முதல் மனைவி என்பது.
கதையின் படி, லிலித் கடவுளால் மண்ணிலிருந்து (ஆதாமை போலவே) உருவாக்கப்படுகிறாள். ஆதாம் லிலித் மேல் ஆதிக்கம் செலுத்த முயன்றதாகவும், அதற்கு லிலித் மறுத்ததாகவும் கதை சொல்கிறது.
மண்ணிலிருந்து இருவரும் சமமாக உருவாக்கப்பட்டதால், அவள் அவனுக்கு கீழே இருக்க வேண்டியதில்லை என்று லிலித் எதிர்ப்பு குரல் குடுத்து இருக்கிறாள். இதற்கு ஆதாம் ஒப்புக்கொள்ளாத நிலையில் லிலித் ஈடன் தோட்டத்தை விட்டு வெளியேறுகிறாள்.
ஆதாம் லிலித் தனக்கு கீழ்ப்படியாமல் வெளியேறியதாக கடவுளிடம் கூறியதும், கடவுள் 3 தேவதைகளை அனுப்பினார், Senoi, Sansenoi, மற்றும் Sammangelof அந்த 3 தேவதைகள் ஒரு குகையில் லிலித்தை குழந்தைகளுடன் கண்டனர், ஆனால் லிலித் மீண்டும் தோட்டத்திற்கு வர மறுத்து விட்டாள்.
தேவதைகள் அவர்கள் சொன்னபடி கேட்டு தோட்டத்திற்கு திரும்பாவிட்டால் தினமும் லிலித்தின் 100 குழந்தைகளை கொன்றுவிடுவோம் என்று சொன்னார்கள். அதற்கு பழிவாங்க தான் லிலித் பெண்கள் வயிற்றில் இருக்கும்போதே அவர்கள் குழந்தைகளை கொல்லுவதாகவும்
அதனால் தான் சில குழந்தைகள் இறந்தே பிறப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் ஆண் குழந்தைகள் பிறந்து 8 நாட்களுக்கு (விருத்தசேதனம் செய்யப்படும் வரை) லிலித்தின் கோபத்திற்கு ஆளாகிறார்கள் மற்றும் பெண் குழந்தைகள் பிறந்து 20 நாட்களுக்கு ஆபத்தில் உள்ளனர் என்றும் கதைகள் சொல்லுகின்றன.
சிறிது நாட்களுக்கு பிறகு, லிலித் மீண்டும் தோட்டத்திற்குத் சென்றாள், ஆனால் ஆதாமுக்கு ஏற்கனவே மற்றொரு துணையான ஏவாள் இருப்பதை பார்த்து அதிர்ந்து போனாள். பழிவாங்குவதற்காக, ஆதாம் தூங்கிக்கொண்டிருந்தபோது லிலித் அவனுடன் உறவு கொண்டு பல குழந்தைகளை பெற்றெடுத்தாள்
அவைதான் demons என்று கூறப்படும் பேய்கள். ஆங்கில பேய் படங்களில் வரும் demons களின் வரலாறு இதுதான்.
லிலித் பொதுவாக யூத நாட்டுப்புறக் கதைகள் மற்றும் midrashic நூல்கள் ஆகியவற்றில் காணப்பட்டாலும், தோற்றம் சுமேரிய கதைகள் (சுமேரியாவில் லிலிட்டு) ஆகும்.
சுமேரிய கதைகளில் லிலிட்டு ஒரு பெண் பேய் இரவில் ஆண்களுடன் அவர்கள் தூக்கத்தில் உறவு கொள்ளும் பேய். லிலித்தின் முதல் யூதக் கதை Ben Sira வால் சொல்லப்பட்டது. Ben Sira ஒரு கதை சொல்லி அவரது கதைகள் Alphabet of ben Sirach (700 மற்றும் 1000 AD) என்று அழைக்கப்படுகிறது.
Nebuchadnezzar II (பாபிலோனிய பேரரசர்) பென் சிராவின் கதைகள் பற்றி கேள்விப்பட்டு அவரை அரசவைக்கு வரவழைத்தார். அங்கு Nebuchadnezzar II க்கு சுமேரிய கதையான லிலிட்டு வில் ஆதாமையும் இணைத்து Ben Sira சொன்னதுதான் லிலித் கதை.
பெண்ணியவாதிகள் அவளை முதன் முதலில் பெண் உரிமைக்காக குரல் குடுத்தவளாக பார்க்கிறார்கள். அவள் ஆதாமிடம் தன்னை சமமாக நடத்தும்படி கேட்கிறாள் அதற்கு அவன் ஒப்புக்கொள்ளாதபோது விளைவுகளை பற்றி கவலைப்படாமல் அவன் விட்டு செல்கிறாள். ஒரு யூத பெண்ணிய பத்திரிகையின் பெயர் Lilith!
இந்த பத்திரிக்கையின் வெளியீட்டாளர்கள் லிலித்தை சுதந்திரத்தின் சின்னம் என்று சொல்கிறார்கள். இருப்பினும், அவளை இன்னும் ஒரு பேய் என்று நினைப்பவர்கள், Lilith பெயரை பயன்படுத்தும் பெண்ணியவாதிகளை ஆண்களை வெறுப்பவர்கள் என்று முத்திரை குத்துகிறார்கள்.
பெண்ணியவாதிகள் பயன்படுத்தும் எந்த சின்னமும் எப்போதும் சர்ச்சைக்குரியதாக தான் இருக்கிறது. லிலித்தின் கதை உண்மையா இல்லையா என்பது பிரச்சினை அல்ல. லிலித் ஒரு தன்னிச்சையான சுயமான முடிவெடுக்கும் பெண், அவர் மீது திணிக்கப்பட்ட ஒடுக்குமுறை அமைப்பை எதிர்த்து குரல் கொடுக்கிறாள்.
எப்போது எல்லாம் பெண்கள் அடக்குமுறைக்கு எதிராக குரல் கொடுக்கிறார்களோ அப்போது எல்லாம் அவர்களை பேய் என்றோ witch (சூனியக்காரி) என்றோ முத்திரை குத்துவது வழக்கமான ஒன்றாக தான் இருந்து இருக்கிறது.
லிலித் குழந்தைகள் கொல்கிறாள், ஆண்களுடன் தூக்கத்தில் உறவு கொள்கிறாள் என்றெல்லாம் சொன்னாலும், அவள் இன்னும் பெண் விடுதலையின் அடையாளமாகவே பார்க்கப்படுகிறாள். She is open for interpretation & allows women to reinterpret her symbolism & power within tradition. #மதங்கள்புராணங்கள்
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
கடவுள் பூமியிலிருந்து மண்ணை எடுத்து மனிதனை உருவாக்கினார். அவன் மூக்கில் தன் உயிர் மூச்சினை கடவுள் ஊதினார். அதனால் மனிதன் உயிர் பெற்றான்.
இது ஒரு simple concept தான். அந்த காலத்துல மண்ணுல பொம்மை செஞ்சு பார்த்து இருக்காங்க.
மனிதனும் உயிர் இல்லாமல் போனால் வெறும் பொம்மை மாதிரி தான் இருக்கான். உடலும் விரைத்து விடும். இப்போ உயிருள்ள மனிதனுக்கும் உயிரற்ற மனிதனுக்கும் எளிதில் காணக்கூடிய ஒரு வித்தியாசம் என்ன? மூச்சு. உயிருள்ள மனிதன் மூச்சு விடுகிறான். உயிரற்ற மனிதன் மூச்சு விடுவதில்லை.
அப்போ அந்த காற்று தான் உயிர் அப்படின்றது ஒரு எளிய புரிதல். அந்த கால மனித அறிவுக்கு உண்டான புரிதல். அந்த புரிதல்ல விளைந்த கதை தான் இது.
எப்படி இந்த வெள்ள கதையை கொஞ்சம் பட்டிங் டிங்கரிங் பண்ணி உலகம் முழுக்க சொல்றங்களோ அதே போல தான் இந்த மண்ணில் இருந்து மனிதனை உருவாக்கிய கதையும்
கிரேக்க புராணங்களில் வரும் Narcissus ஒரு வேட்டைக்காரன், நதி கடவுள் Cephissus மற்றும் வனதேவதை Liriope ஆகியோரின் மகன். மிகவும் அழகான Narcissus ஐ, பலர் காதலித்தனர். இருப்பினும், Narcissus எல்லோர் மீதும் வெறுப்பையும் அவமதிப்பையும் மட்டுமே காட்டினான்.
ஒரு நாள், Narcissus காடுகளில் வேட்டையாடுகையில், மலைக்காட்டு தேவதை Echo அவனை பார்த்தாள், உடனடியாக Narcissus மீது echo காதலில் விழுந்தாள். Narcissus எங்கு சென்றாலும் echo அவனுக்கு தெரியாமல் பின்தொடர்ந்து சென்றாள்.
யாரோ தன்னை பின்தொடர்வதை Narcissus உணர்ந்த போது எக்கோ தன்னை Narcissus க்கு வெளிப்படுத்தி Narcissus ஐ காதலிப்பதாக சொல்லி அவனை அணைக்க முயன்றாள். ஆனால், அவன் அவளைத் கீழே தள்ளி, அவளை அவமதித்துவிட்டு சென்றான்.
40 எழுத்தாளர்களால், 3 வெவ்வேறு மொழிகளில், 3 கண்டங்களில், 1600 ஆண்டுகளாக எழுதப்பட்ட 66 கதைகள் கொண்ட Bible ஐ பற்றி முதல் thread.
முதல் கதை ஆதியாகமம். இது யூதர்களின் புனித புத்தகமான Torah விலும், இஸ்லாமியர்களின் புனித புத்தகமான Qur'an னிலும் இடம்பெற்று இருக்கிறது.
இதை எழுதியவர் மோசஸ் (இறை தூதர்) என்று நம்பப்படுகிறது. ஆனால் எழுதப்பட்டு இருக்கும் மொழி நடை மோசஸ் காலத்திற்கு மிகவும் பின்தங்கியது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றார்கள். அதாவது பைபிள் இக்காலத்து ஆங்கிலத்தில் எழுதப்பட்டு இருக்கிறது என்று வைத்து கொண்டால்,
மோசஸ் ஷேக்ஸ்பியர் காலத்தை சேர்ந்தவர்.
கிறிஸ்து பிறந்தது முதலாம் நூற்றாண்டு என்று வைத்து கொண்டும் பைபிளில் ஓவ்வொருவருக்கும் குடுக்கப்பட்டு உள்ள வயதை கொண்டும் கணக்கிட்டால் ஆதியாகமம் புத்தகத்தில் உள்ள சம்பவங்கள் கிமு 4000 ஆண்டில் நடகின்றன.
Disclaimer: மனம் புண்படும் வாய்புள்ளவர்கள் மேற்கொண்டு படிக்க வேண்டாம். 🙏🏻
பைபிள் லயே கொஞ்சம் soft ஆனா ஆளுண்ணு பாத்திங்கன்னா அது நம்ம Isaac தான்.
Isaac Rebekah கல்யாணம் முழுக்க முழுக்க பெற்றோர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு கல்யாணம் தான்.
ஏன் நம்ம ஈசாக் லவ் பண்ணல அப்படினு ஆராய்ச்சி பண்ணேன்.🤔
ஈசாக் ஒரு நல்ல பையன், கீழ்ப்படிதல் மற்றும் பெற்றோருக்கு அடிபணிந்தவர். எந்த அளவுக்கு அடிபணிந்தவர் அப்படின்னா அப்பா உன்னை பலியிட போறேன் என்று சொல்லி கழுத்து மேல கத்தியை வைக்கும்போது கூட அமைதியா இருக்கிற அளவுக்கு அடிபணிந்தவர்.
இல்ல பயம் அப்படினு கூட இருக்கலாம். ஏன்னா இதே அப்பா தான் அண்ணா இஸ்மாயீல் and அவங்க அம்மா Hager அ கொண்டு போய் நடு பாலைவனத்தில் விட்டுவிட்டு வந்தவர்.😦 அதனால் பயமா கூட இருக்கலாம்.
சில version ல Abraham Isaac அ கொன்று விட்டதாகவும் பின் கடவுள் அவனை உயிர்த்தெழ செய்ததாகவும் சொல்றாங்க.
Mel Gibson ஒரு தீவிர யூத வெறுப்பாளர். Winona Ryder ஐ ஒருமுறை இவர் oven dodger (இது ஒரு மோசமான சொல். இரண்டாம் உலகப் போரின் போது நாஜி மரண முகாம்களில் யூத கைதிகள் படுகொலை செய்யப்பட்ட விதத்தை கேலியாக குறிக்கிறது.) என்று அழைத்ததாக புகார் எழும்பியது.
இது மட்டுமல்ல இது போல பல பேர் அவர் மேல் புகார் அளித்து இருக்கின்றனர்.
ஒருமுறை குடிபோதையில் ஒரு காவலரை இது போன்ற வார்த்தைகளில் திட்டியத்திற்கு மன்னிப்பு கேட்டு இருக்கிறார்.
அவருடைய The Passion of the Christ படமும் கூட பல விமர்சனங்களை கொண்டது தான்.
யூதர்களை கோரமான, கொக்கி மூக்குடைய பரிசேயர்களாக சித்தரித்து இருக்கிறார் என்றும், யூத எதிர்ப்பு stereotype கள் ஆழமாக வேரூன்றியுள்ளது என்றும் விமர்சகர்கள் குறிப்பிடுகின்றனர்.
Mel Gibson சிறுவயதில் ஒரு கத்தோலிக்க உயர்நிலைப்பள்ளி மாணவராக இருந்தார், சமையல்காரர் அல்லது ஒரு பத்திரிகையாளராக ஆவதுதான் அவர் சிறுவயது லட்சியங்களாக இருந்தன. Mad Max திரைப்படத்தில் நடிக்கும் முன்னர் நிறைய சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து இருக்கிறார்.
சதுரங்க வேட்டை படத்துல "நாம சொல்ற பொய்ல கொஞ்சம் உண்மையும் கலந்து இருக்கணும் அப்போதான் மக்கள் நம்புவாங்க" அப்படினு ஒரு வசனம் வரும். அது போல இந்த கம்பி கட்டுன கதையிலும் சில உண்மைகள் இருக்கு. அவங்க அப்பா Mel Gibson 12 வயதாக இருந்தபோது தனது குடும்பத்தை நியூயார்க்கில் இருந்து
ஆஸ்திரேலியாவின் சிட்னிக்கு மாற்றினார். Mad Max audition க்கு முந்தைய நாள் இரவு, ஒரு சண்டையில் அவரது முகம் நன்கு அடிபட்டது. பின்னர் அவர் Mad Max audition க்கு காயம்பட்ட, வீங்கிய, முகத்துடன் சென்றார். சிலநாட்களில் பழைய நிலைக்கு அவரது முகம் திரும்பிவிட்டது.