தமிழகத்தை பொருத்தவரை Hydrofrac, Hydrocarbon, நிலநடுக்கம் சொற்கள் taboo வாக உள்ளது. நிலநடுக்கம், ரிக்டர் அளவீட்டு முறை, நிலநடுக்க அலைகள், seismic tomography பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
நிலநடுக்கம் என்றாலே முதலில் நினைவுக்கு வருவது Richter scale. Charles Richter, நிலநடுக்கத்தை அளவிடும் magnitude அளவீட்டு முறையை உருவாக்கினார். Richter, நிலநடுக்கத்தால், நிலத்தில் ஏற்படும் அதிர்வை seismograph மூலம் அளர்ந்தார். ImageImage
Richter Scale யை சரியாக புரிந்து கொள்வோம். zero magnitude நிலநடுக்கம், நிலத்தில் ஏற்படுத்தும் அதிகபட்ச நகர்வு (amplitude) 1 micro meter (1/1000 mm). 3 magnitude நிலநடுக்கம், நிலத்தில் ஏற்படுத்தும் நகர்வு 1 mm. 6 magnitude நிலநடுக்கம், நிலத்தில் ஏற்படுத்தும் நகர்வு 1 மீட்டர். Image
Richter Scale யில் உள்ள குறைகளை பார்ப்போம்.
Richter Scale, கலிபோர்னியா அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மட்டுமே பயன்படுத்த முடியும். நிலநடுக்கத்தை ஒரு குறிப்பிட்ட seismograph (Wood Anderson seismograph) யை மட்டும் பயன்படுத்தி அளக்க வேண்டும்.
6 magnitude க்கு மேல் உள்ள நிலநடுக்கத்தை அளவிடுவதில் சிக்கல்கள் (intensity saturation)
Richter Scale, 15 கிமீ வரை, ஆழத்தில் ஏற்படும் நிலநடுக்கத்தை அளவிட முடியும். அதிக ஆழத்தில் ஏற்படும் நிலநடுக்கங்களை அளக்க முடியாது
Richter Scale, பாறையின் உறுதி தன்மையை கணக்கில் கொள்ளவில்லை.
உதாரணமாக, கலிபோர்னியா & வாஷிங்டன் னில் ஏற்பட்ட நிலநடுக்கங்கள் magnitude 6.7 & 6.8 ஒரே அளவாக இருந்தாலும், வாஷிங்டனில் சேதம் குறைவு. வாஷிங்க்டனில் நிலநடுக்கத்தின் ஆழம் (Hypocenter) 48 கிமீ க்கு மேல். கலிபோர்னியாவில் Hypocenter 5-15 கிமீ, ஆழம் குறைவு, எனவே அதிக சேதம். Image
இப்போது யாரும் ஒரிஜினல் ரிக்டர் அளவையை பயன்படுத்துவதில்லை. தற்போது பயன்பாட்டில் இருக்குக்கும் ரிக்டர் பெயரில் உள்ள ஸ்கேலுக்கும், ரிக்டருக்கும் எந்த தொடர்பும் இல்லை.
நிலநடுக்கத்தை seismic moment கொண்டு அளவிடுகிறார்கள். நிலநடுக்கம் போது ஏற்படும் அதிர்வுகளை, அலைகளாக பதிவு செய்து, அலைகளை ஆய்வு செய்து seismic moment யை கணக்கிடுகிறார்கள்.
அப்பளமாக நொறுங்கி இருக்கும் மாருதி காரை வைத்து எவ்வளவு வேகத்தில் விபத்து நடந்திருக்கும் மாதிரி, நிலநடுக்கம் போது எவ்வளவு ஆற்றல் (Energy) வெளியிடப்படுகிறது என்பதை பதிவு செய்யப்படும் அதிர்வலைகளை ஆய்வு செய்து Seismic moment கணக்கிடப்படுகிறது.
Seismic moment =
1 பாறையின் உறுதி தன்மை (Rock strength, Rigidity Modulus)
2 Fault area
3 Fault displacement எவ்வளவு தூரம் நகர்ந்துள்ளது
இவை அனைத்தையும் நிலநடுக்கம் போது பதிவு செய்யப்படும் அதிர்வலைகளில் இருந்து பெறலாம். அதற்கு Fourier, Euler, Laplace transforms பயன்படுகிறது. ImageImage
ரிக்டர் நிலநடுக்கம் போது நிலத்தில் ஏற்படும் நகர்வை மட்டும் வைத்து நிலநடுக்கத்தை மதிப்பிட்டார். இப்போது நிலநடுக்கத்திற்கு காரணமான fault displacement, fault area & Rock strength மூலம் கணக்கிடப்படுகிறது.
நிலநடுக்கத்தின் போது 4 விதமான அலைகள் (P-Wave, S-Wave, Love Wave & Rayleigh Wave) பரவுகிறது. P-Wave & S-Wave பூமியை ஊடுறுவி பயணம் செய்யும். P wave வேகமாக 6km/sec, S wave வேகம், P wave யில் பாதி அளவு இருக்கும். நிலநடுக்கத்தில் P wave யை முதலில் உணர்வோம், P wave மின்னல் & S wave இடி Image
P wave திட, திரவ பொருட்களில் பயணம் செய்யும். S wave திடப்பொருட்களில் மட்டுமே பயணம் செய்யும் (Rigidity modulus இல்லை). P wave & S wave பயண பாதையை வைத்து பூமியின் outer core திரவ நிலையில் உள்ளது & பூமியின் அககட்டமைப்பை கண்டறிந்தார்கள். Image
P wave ஊடகத்தில் பயணம் செய்யும் போது, ஊடகத்தில் உள்ள துகள்கள் அலையின் திசையில் அதிர்வடையும் & S wave அலையின் திசைக்கு செங்குத்தாக அதிர்வடையும். P & S wave பயணம் செய்யும் ஊடகத்துடன் உறவில் ஈடுபட்டு, அலை மாற்றம் அடைகிறது & அது ஊடகத்தின் பண்பை பொருத்தது (Elastic properties of medium
P & S wave யை ஆய்வு செய்து, அவை பயணம் செய்த ஊடகத்தின் தன்மையை அறியலாம். P & S wave வில் இருந்து rock properties யை பிரித்து எடுப்பதற்கு inversion ன்னு பெயர். பூமியின் அககட்டமைப்பு பற்றி தெரிந்து கொள்வது Seismic Tomography என்று பெயர்.
நிலநடுக்க அலைகள் NMR, CT ஸ்கேன் மாதிரி, நாம் வாழும் நிலத்தின் கீழ் பூமியின் மையம் வரை என்ன உள்ளது, அவை எவ்வாறு மாற்றம் அடைகிறது, அதன் மாற்றங்கள் எவ்வாறு பூமியை பாதிக்கிறது என்பதை அறிய உதவுகிறது. Image
Plate tectonics – பூமி தனது மேற்பகுதியில் நிலப்பகுதிகளை (கண்டங்கள்) தொடர்ந்து உருவாக்குகிறது & உருவாக்கிய நிலப்`பகுதிகளை அழித்து பூமி புதுப்பித்துகொள்கிறது. பழைய கண்டங்கள் பூமிக்குள் (mantle) அழிவதை நாம் Seismic Tomography மூலம் பார்க்கலாம். Image
இயற்கையில் ஏற்படும் நிலநடுக்கங்கள் அனைத்தும் plate boundaries யில் ஏற்படுகிறது. நமக்கு தெரியாதது நிலநடுக்கம் எப்போது ஏற்படும் என்பது. இப்போது நம்மிடம் உள்ள high speed computing and big data மூலம் நிலநடுக்கம் எப்போது ஏற்படும் என்பதையும் விரைவில் கண்டுபிடிப்பார்கள்.
-தொடரும் Image

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with மேதகு புரட்சி தலைவி

மேதகு புரட்சி தலைவி Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @moodanmani20

20 May
Corporate Social Responsibility (CSR) நிதி
Under Section 135 of the Companies Act யின் படி Corporate Social Responsibility (CSR) க்கு அரசு/ தனியார் நிறுவனங்கள் அதன் லாபத்தில் இரண்டு சதவீதத்தை அந்த நிறுவனம் செயல்படும் பகுதிகளின் மக்கள்/சூழல் மேம்பாட்டிற்கு செலவு செய்ய வேண்டும்.
CSR நிதியை நிறுவனங்கள் வறுமை ஒழிப்பு, பொது சுகாதாரம், மருத்துவம், மாற்று திறனாளிகள், கிரமப்புறமேம்பாடு, மகளீர் மேம்பாடு, ஸ்வச் பாரத் & கங்கை தூய்மை என்ற திட்டங்களில் செலவு செய்யவேண்டும்.
மோடி அரசின், ஸ்வச் பாரத் திட்டத்திற்கு கண்டிப்பாக 30% CSR நிதியில் இருந்து செலவு செய்ய வேண்டும்
thehindubusinessline.com/companies/30-o…
Read 16 tweets
8 May
Joseph F. Poland (Joe) ஒரு சாதனையாளர். அவர் PhD thesis submit பண்ண எடுத்துக்கொண்ட காலம் 46 ஆண்டுகள். 1935யில் ஜோ Stanford University யில் PhD பதிவு செய்தார் & 1981யில் அவருக்கு PhD award ஆனது; அப்போது அவருக்கு வயது 73.
Stanford University, ஜோ க்கு PhD வழங்கிய பின், PhD க்கான கால அளவை கட்டுப்படுத்த சட்டம் போட்டது. ஜோ அப்படி என்ன ஆராய்ச்சி செய்தார் என பார்ப்போம்.
அமெரிக்கா, கலிபோர்னியா, central valley பகுதியில் நிலம் பூமியில் உள்வாங்க ஆரம்பித்தது (Subsidence). ஜோ க்கு பின் உள்ள கம்பத்தி நிலத்தின் மட்டம் 1925, 1955, 1977 ஆண்டுகளில் இருந்தது குறிப்பிடப்பட்டிருக்கும். 52 ஆண்டுகளி சுமார் 30 அடிகள் Subsidence ஏற்பட்டிருக்கிறது.
Read 16 tweets
1 May
மோடி, PM கேரில் வசூலித்த பணத்தை வைத்து, மெடிக்கல் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
தொழிற்சாலையில் உள்ள ஆக்சிஜனை பக்கெட் & குடத்தில் அள்ளி எடுத்து செல்ல முடியாது.
ஆக்சிஜன் கொண்டு செல்லும் டேங்கர் & மருத்துவமனையில் பயன்பாட்டிற்கு லட்ச கணக்கில் சிலிண்டர்கள் தேவை. ஆக்சிஜன் transportation & பயன்பாடுக்கு தேவையான உள்கட்டமைப்பை மோடி ஏற்படுத்தவில்லை. Medical oxygen, cryogenic distillation முறையில் உற்பத்தி செய்யப்படுகிறது.
Industrial oxygen, zeolite molecular sieve பயன்படுத்தி adsorption முறையில் உற்பத்தி. Adsorption முறையில் உற்பத்தி செய்யப்படும் industrial ஆக்சிஜன் தூய்மையற்றது & அதில் கார்பன் மோனாக்சைடு (CO), கார்பன் டை ஆக்சைடு (CO2) மீதேன் போன்ற வாயுக்கள் இருக்கும்.
Read 5 tweets
30 Apr
கார் வரி
மோடியரசு கார்களின் (Hatch, Sedan, Pseudo SUV, SUV etc.,) மீது ஏகப்பட்ட வரிகள் சுமத்தி எவ்வாறு கார் வாங்குபவர்களையும், கார்களை உற்பத்தி செய்யும் மாநிலங்களை ஏமாற்றுகிறது பற்றிய பதிவு.
கார்களின் மீதுள்ள வரி, அவற்றின் நீளம், Ground clearance, இஞ்சின் அளவு & காரின் விலை (10 லட்சம்) அடிப்படையில் பல்வேறு slab களில் வரிகள் உள்ளன. வரிகள் Ex-Showroom. கார் வாங்கிய பின் சாலையில் ஓட்ட சாலை வரி, காப்பீடு தொகைக்கு தனியாக வரி செலுத்த வேண்டும்.
காரின் Ex-Showroom நிலையில் 2 வரிகள் விதிக்கப்படுகிறது.
1. GST (CGST (மோடி வரி)+SGST (மாநில வரி) 28%
2. Compensation cess up to 22%
Read 25 tweets
28 Apr
Reservoir induced earthquake: அணைகள் கட்டுவதால் தூண்டப்படும் நிலநடுக்கம்
நிலநடுக்கம் ஏற்படாத/ 100 வருடங்களுக்கு ஒரு முறை ரிக்டர் அளவில் 3 & அதற்கு குறைவான அளவு நிலநடுக்கம் ஏற்படும் இடங்களில் (stable area) அணைகள் கட்டுவதால் எவ்வாறு நிலநடுக்கம் எற்படுகிறது பற்றிய பதிவு
Induced earthquake பூமியின் tectonic stress எந்த பங்கும் வகிப்பதில்லை. மனிதனின் செயல்பாட்டால் (Dam) நிலநடுக்கம் ஏற்படுகிறது. அணைகள் கட்டுவதால் நிலநடுக்கம் ஏற்படுவதை பற்றி இணையத்தில் மாடல்/ கார்டூன்/ அனிமேஷன்ஸ் உள்ளது. அவற்றில் உள்ள தவறுகளை அறிவியல் விதிகள் கொண்டு ஆராய்வோம்.
சுற்றுப்புறச்சூழல் ஆர்வலர்கள், அறைகுறை சிவில், Geotechnical engineers யின் favorite model, அணையின் எடை பூமியை அழுத்தி, அதனால் பூமியின் அடியில் உள்ள பாறைகள் நகர்ந்து நிலநடுக்கம் ஏற்படுகிறது. இந்த concept எப்படி அறிவியல் விதிகளுக்கு முரணாக உள்ளது என்பதை பார்போம்.
Read 20 tweets
15 Feb
இந்தியாவில் உள்ள 18 கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகளில் 17 அரசு வசமும், ஒரு ஆலை அம்பானி வசமும் உள்ளன. இந்தியாவின் ஒட்டு மொத்த எண்ணெய் சுத்திகரிப்புத் திறனில் 74 சதவீதம் அரசு நிறுவனங்களிடமும், 26 சதவீதம் அம்பானியிடம் இருக்கிறது.
இந்தியாவில் இருந்து பெட்ரோலியப் பொருட்களை ஏற்றுமதி செய்யும் வர்த்தகத்தில் அம்பானி நிறுவனம்தான் (60%) முன்னணியில் இருக்கிறது. பெட்ரோலியப் பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கு, அரசு அம்பானிக்கு சுங்க வரிச் சலுகைகளை அளித்திருக்கிறது.
நாடாளுமன்ற நிலைக்குழு, சர்வதேசச் சந்தையில் பெட்ரோலியப் பொருட்களுக்கு நல்ல விலை கிடைப்பதால், விற்பனையின் மூலம் கிடைக்கும் இலாபமே போதுமானது; ஏற்றுமதியை ஊக்குவிக்கத் தனியாக வரிச் சலுகைகளை அளிக்க வேண்டியதில்லை என அறிவுறுத்தியது
Read 7 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!

:(