தமிழில் அர்ச்சனை நடைமுறையில் உள்ள ஒன்று தான். தமிழில் அர்ச்சனை செய்ய மறுப்பு தெரிவித்ததாக எந்தச் செய்தியும் வந்ததும் இல்லை.
தெலுங்கு, மலையாள மொழிகளில் கூட அர்ச்சனை செய்யலாம்.
2/ இனி அந்த 47 கோயில்களில் வடமொழியில் #அர்ச்சனை தடை செய்யப்பட்டுள்ளதா? அர்ச்சனை செய்ய விரும்பும் பக்தர்கள் இனி தமிழில் மட்டுமே செய்ய முடியுமா? minnambalam.com/politics/2021/…
3/ 1974-ல் கோயில்களில் தமிழில்(மட்டுமே) #அர்ச்சனை செய்யப்பட வேண்டும் என்ற இந்து சமய அறநிலையத் துறையின் சுற்றறிக்கையை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில், அச்சுற்றறிக்கையை அமல்படுத்த இடைக்காலத் தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
4/ பின்னர், நீதிமன்றத்தில், தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், "தமிழில் மட்டுமே அர்ச்சனை செய்யவேண்டும் என்பது அரசின் நோக்கமல்ல. அரசின் கொள்கையை அறநிலையத் துறை அதிகாரிகள் தவறாகப் புரிந்துகொண்டனர்" என்று விளக்கம் அளிக்கப்பட்டது.
5/ #Circa1974 #அறநிலையத்துறை அதிகாரிகளின் சுற்றறிக்கையை ரத்து செய்ய உரிய உத்தரவுகளைப் பிறப்பிக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது என்று உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசின் அட்வகேட் ஜெனரல் கூடுதல் மனு தாக்கல் செய்தார்.
தடை உத்தரவு தொடரும் என்று உச்சநீதி மன்றம் கூறிவிட்டது.
6/ இதைத் தொடர்ந்து,
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எல்.சோந்தி மற்றும் உத்தர பிரதேசம், ஆந்திரம், மஹாராஷ்டிரம், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த பக்தர்கள், தமிழில் மட்டுமே அர்ச்சனை என்ற அறநிலையத் துறை உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். (1974).
7/ பின்னர், #எம்ஜிஆர். தலைமையிலான ஆட்சியில் அறநிலையத் துறை அமைச்சராக இருந்த ஆர்.எம்.வீரப்பன், கோயில்களில் தமிழ் அர்ச்சனையை வலியுறுத்தினார். அவர் ‘‘தமிழில் மட்டுமே அர்ச்சனை செய்யுமாறு அர்ச்சகர்களை அரசு வலியுறுத்த முடியாது. அவ்வாறு கோர பக்தர்களுக்கு உரிமை உண்டு" என்று கூறினார்.
8/மீனாட்சி அம்மன் கோயிலில் 1982 ஜூன் 16-ம் தேதி முதல் தமிழிலேயே அர்ச்சனைகள் செய்யப்படும் என(மீனாட்சி கோயில் #அர்ச்சகர் சங்கமான ஆதிசைவ சிவாச்சாரிய சங்கத்தின் ஒப்புதலோடு) அன்றைய #அறங்காவலர் குழு அறிவித்தது.
சம்ஸ்கிருதத்தில் அர்ச்சனைக்கு தனியான அர்ச்சனை டிக்கெட்டுகளையும் அறிவித்தது.
9/1998-ல் முதல்வராக இருந்த மு.க ‘சம்ஸ்கிருதத்தில் அர்ச்சனை செய்யப்படுவதை நாங்கள் எதிர்க்கவில்லை’ என சட்டமன்றத்திலேயே கூறி,
‘‘தமிழ் வழிபாட்டு மொழியாக இருப்பதற்கு எதிர்ப்புத் தெரிவிப்பவர்களைத்தான் எதிர்க்கிறோம். வேறு மொழிகளில் கடவுளை வழிபடக்கூடாது என நாங்கள் சொல்லவில்லை’’ என்றார்
10/ தமிழில் அர்ச்சனையின் வரலாறு இது. ஆக, இந்த 2021 அரசு அறிவிப்பு, புதிதல்ல. புரட்சியும் அல்ல.
தமிழில் (அல்லது வடமொழியில்) அர்ச்சனைக்கு பெரியளவில் பயிற்சியும் தேவையில்லை. அதொன்றும், சைவத் திருமுறைகள், ஆழ்வார்களின் அருளிச்செயல் போன்றதும் இல்லை. 108 திருநாமங்களை மனனம் செய்யணும்.
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
1/ This shows, even as an MP, you have little idea about OBC quota issue in #AIQ & its history. Read about it before feeling proud about your great achievement.
2/ After indulging in nonsensical acts, #China indulges in usual blabber, "committed to uphold peace", "on border issue, our position is clear & consistent" etc.
The provocation is because India thwarted dragon march by amending #FDI act preventing takeover of Indian entities