#ஸ்ரீகிருஷ்ணன்கதைகள்
இறைவன் மேலுள்ள பக்திக்கும், பொறுமைக்கும் உதாரணமாக மூங்கில் செடியைச் சொல்வார்கள். மூங்கிலைப் பயிரிட்டு தண்ணீர் ஊற்றுவர். பருவங்கள் போகும் ஆனால் செடி வளரவே வளராது. ஒரு சிறு அளவு கூட வளராமல் அடம்பிடித்து அப்படியே இருக்கும். முழுசாய் நான்கு வருடங்கள் செடி ImageImage
அப்படியே இருக்கும். செடிக்குத் தண்ணீர் ஊற்றுபவர் பொறுமையுடன் அதை பராமரிக்க வேண்டும். நான்கு ஆண்டுகள் அவருக்கு சிலாகிக்கவோ, கொண்டாடவோ எதுவுமே இருக்காது. ஆனால் அதற்கு அடுத்த பருவத்தில் எல்லோரும் வியக்கும் வண்ணம் அந்த மூங்கில் வளரத் துவங்கும். அதுவும் சட சடவெனும் அசுர வளர்ச்சி! ஒரே
ஆண்டில் அது எட்டிப் பிடிக்கும் உயரம் 80அடிகள். நான்கு ஆண்டு காலமாக அமைதியாக இருந்த செடி, எப்படி ஐந்தாவது ஆண்டில் மட்டும் விஸ்வரூப வளர்ச்சியை எட்டுகிறது?ஆராய்ந்து பார்த்தால் ஆச்சரியம் தரும் ஒரு ரகசியம் இதில் இருப்பதைப் புரிந்து கொள்ளலாம். இயற்கையின் அற்புதம் என்றோ கடவுள் படைப்பின்
மகத்துவம் என்றோ இதை நாம் பெயரிட்டு அழைக்கலாம். முதல் நான்கு ஆண்டுகள் அந்த மூங்கில் வேர்களை பூமியில் நன்றாக இறங்கி மிகச் சிறந்த பிடிமானத்தை உருவாக்கிக் கொள்கிறது. ஐந்தாவது ஆண்டில் நான் எண்பது அடி உயரமாக வளரப் போகிறேன், என்னைத் தாங்கிப் பிடிக்கும் வல்லமை என் வேர்களுக்குத் தேவை என
அது முழு மூச்சாக தன்னைத் தயாரித்துக் கொள்கிறது. அதனால் தான் ஐந்தாவது ஆண்டில் அசுர வளர்ச்சி அடையும் போது அது தடுமாறுவதும் இல்லை, தடம் புரள்வதும் இல்லை! அதே போல் நாம் பகவான் மீது வைக்கும் பக்தியும் மிகவும் ஆழமாக வேறுன்ற வேண்டும். பொறுமை உயரமான வெற்றிகளை உருவாக்குகிறது. பரந்தாமா!
நாங்கள் அவசரப் பட்டு முளைத்து, சடசடவென வீழ்ந்து விடாமல், பக்தி எனும் அடித்தளத்தை வலுவாக்கிக் கொள்ள பொறுமை எனும் குணம் வேண்டும். மூச்சு உள்ளவரை பரந்தாமன் மீது பக்தி பெற முயற்சி செய்வோம். முடியாதது என்று இங்கு ஒன்றும் இல்லை !
சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏾

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with அன்பெழில்

அன்பெழில் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @anbezhil12

15 Aug
#ஸ்ரீகிருஷ்ணன்கதைகள் எப்பொழுதும் ஸ்ரீ விஷ்ணு நாமமே கூறும் ஒரு குரு தன் சீடர்கள் யாரிடமும்‌ ஒன்றும்‌ கூறாமல்‌ எங்கோ செல்வார்‌. சில ‌ நாள்கள்‌ கழிந்தே திரும்புவார்‌. இது அடிக்கடி நடக்கும் சம்பவம். இதில் சீடர்களுக்குள் சந்தேகம்‌. அவர்‌ என்ன அடிக்கடி சொர்க்கத்திற்கா போய்‌ Image
வருகிறார் என‌ ஒரே விவாதம் சீடர்களுக்குள். ஒரு சீடன் அவரை ‌ஒரு நாள் ‌ரகசியமாகப்‌ பின்தொடர்ந்தான்‌. அப்போது விவசாயியைப்‌ போல வேடமணிந்த குரு, ஒரு காட்டினுள்‌ இருக்கும்‌ ஒரு குடிலினுள்‌ சென்றார்‌. அங்கிருந்த ஒரு முதியவரை குளிப்பாட்டிப்‌ பராமரித்து அளவளாவி, உணவும்‌ சமைத்து வைத்து
விட்டு இரண்டு நாட்கள் கழித்துத்‌ திரும்பினார்‌. குருவுக்கும் முதியவருக்கும் எந்த உறவும் கிடையாது, அன்புடன் அவரை பராமரித்து வந்தார். இதை கண்டு திரும்பி வந்த சீடன் பிற சீடர்கள்‌ கேட்டபோது, அவர்‌ சொர்க்கத்தை விடப்‌ பெரிய இடத்திற்குச்‌ சென்று வந்தார்‌ என்றான்‌. இறந்த பிறகு
Read 5 tweets
15 Aug
இன்று பானு சப்தமி. ஞாயிற்றுக் கிழமை, சப்தமி திதி சேர்ந்த இன்று சூர்ய பகவானை வழிபட மிக உத்தமமான நாள். அகஸ்திய முனிவர் ஸ்ரீராமருக்கு யுத்த களத்தில் உபதேசம் செய்த ஸ்லோகம் ஆதித்ய ஹ்ருதயம். அதை நாமும் கற்றுக் கொண்டு பாராயணம் செய்தால் நமக்கு வாழ்வில் வெற்றி நிச்சயம். ஆதித்ய ஹ்ருதய Image
ஸ்லோகத்தை, ராமருக்கும் இராவணனுக்கும் சண்டை நடக்கும் போதே அகஸ்திய முனிவர் கிடைத்த இடைப்பட்ட காலத்தில் ராமருக்கு உபதேசம் செய்தார். பிறகு அவர் ராமரிடம், ஆசமனம் செய்த பின் மூன்று தடவை ஆதித்ய ஹ்ருதயத்தை ஜபித்து, சூரிய பகவானின் ஆசியைப் பெற்று இராவணனுடன் யுத்தம் செய், நீ வெற்றி பெறுவாய் Image
என்று சொல்கிறார். அதே போல ராமர் செய்து வெற்றி பெற்றார். சூரிய பகவான் ப்ரத்யக்ஷ தெய்வம். அவரை துத்தித்த உடனே நமக்கு அருள காத்து நிற்கிறார். ராம ராவண யுத்தம் என்பது எல்லார் வாழ்விலும் நடைபெற்றுக் கொண்டே உள்ளது. ராமரை வெற்றி பெற வைக்க அதாவது தர்மத்தை வெற்றி பெற வைக்க, ரிஷிகளை
Read 15 tweets
15 Aug
கடன் தொல்லையால் அவதிபடுவோர் ருண விமோசன நரசிம்ம ஸ்தோத்திரத்தை தினமும் காலை மாலை இருவேளையும் சிரத்தையுடன் பாராயணம் செய்தால் கடன் தொல்லையில் இருந்து விடுபடலாம். செவ்வாய்க்கிழமை வரும் பிரதோஷ நாளில் துதிப்பது பலனை விரைவாக தரும்.

தேவதா கார்ய ஸித்யர்த்தம் ஸபா ஸ்தம்ப ஸமுத்பவம் Image
ஸ்ரீ நரஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருண முக்தயே

தேவதைகளின் காரியத்தை சாதிப்பதற்காக ஹிரண்யகசிபுவின் சபையில் தூணிலிருந்து வெளிப்பட்டவரும், மஹாவீரருமான ஸ்ரீ லக்ஷ்மி நரஸிம்மரை
கடன்களிலிருந்து விடுபடுவதற்காக வணங்குகிறேன்.

லக்ஷ்ம்யாலிங்கித வாமாங்கம் பக்தாநாம் வர தாயகம்
ஸ்ரீ நரஸிம்ஹம்
மஹாவீரம் நமாமி ருண முக்தயே

மகாலக்ஷ்மியை இடப்பாகத்தில் அணைத்துக் கொண்டு, தன்னை வழிபடும் பக்தர்களுக்கு விரும்பிய வரங்களைத் தருபவரும், மஹாவீரருமான ஸ்ரீ லக்ஷ்மி நரஸிம்மரை கடன்களிலிருந்து விடுபடுவதற்காக வணங்குகிறேன்.

ஆந்த்ரமாலாதரம் சங்க சக்ராப்ஜாயுத தாரிணம்
ஸ்ரீ நரஸிம்ஹம் மஹாவீரம்
Read 11 tweets
14 Aug
#திருவாஞ்சியம் திருநாவுக்கரசர், திருஞான சம்பந்தர், சுந்தரர் ஆகியோரால் பாடல் பெற்ற திருத்தலம், மரண பயத்தை அடியோடு போக்கும் ஸ்ரீவாஞ்சியம் என்னும் திருவாஞ்சியம் ஆகும். ஒரு சமயம் சிவபெருமான், உமையவளுடன் ரிஷப வாகனத்தில் உலகை வலம் வந்தார். அப்போது பல திருத்தலங்களைக் காட்டி அதன் Image
சிறப்புகளை எடுத்துரைத்தபடி வந்தார் ஈசன். காசி, காஞ்சீபுரம், காளஹஸ்தி என பல திருத்தலங்களை உமையவளுக்கு காட்டிய ஈசன், திருவாஞ்சியத்தின் மகிமையை கூறும்போது, ‘காசியை விட பன்மடங்கு உயர்வான புண்ணிய தலம் இது. இங்குள்ள தீர்த்தமான #குப்தகங்கை கங்கையை விடவும் புனிதமானது. இந்த தலத்தில் ஓர்
இரவு தங்கி இருந்தாலே, கயிலாயத்தில் சிவ கணமாய் இருக்கும் புண்ணியம் கிடைக்கும்’ என்று கூறினார். இதையடுத்து திருவாஞ்சியத்தில் தங்க உமையவள் திருவுளம் கொண்டாள். எனவேதான் இத்தல நாயகிக்கு ‘வாழ வந்த நாயகி’ என்ற பெயர் வந்ததாக தல வரலாறு கூறுகிறது. ஒரு முறை லட்சுமிதேவி, மகாவிஷ்ணுவிடம் கோபம்
Read 22 tweets
14 Aug
#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள் ஒரு மீன் பிடிப்பவன் தன் கையில் ஒரு முகம் பார்க்கும் கண்ணாடியுடன் ஒரு குளக்கரையில் நின்று கொண்டிருப்பதை சோனு என்பவன் பார்த்தான். நீ கண்ணாடியை வைத்து என்ன செய்கிறாய் என்று சோனு வினவினான். அவனோ தான் கண்ணாடி கொண்டு மீன் பிடித்துக் கொண்டிருப்பதாகச் சொன்னான். Image
மேலும் இது ஒரு புதிய வழி, இது கொண்டு தான் பெரும் செல்வம் சேர்க்கப் போவதாகவும் கூறினான். அது எப்படி செயல்படுகிறது என்று சோனு கேட்டான். சொல்கிறேன் ஆனால் அதற்கு நீ ஆயிரம் ரூபாய் எனக்கு கொடுக்க வேண்டும் என்றான். சோனுவும் ஆர்வ மிகுதியால் ஆயிரம் ரூபாயை உடனே அவனிடம் கொடுத்தான்.
இப்போது மீன் பிடிப்பவன் சொன்னான், நான் கையிலிருக்கும் கண்ணாடியை மீன்கள் நீரில் ஓடும் பக்கம் திருப்பி வைத்து சூரிய ஒளியின் பிரதிபலிப்பான வெளிச்சம் ஓடும் மீன்களின் மீது படுமாறு செய்வேன். உடனே ஓடும் மீன்கள் குழப்பத்தில் நிற்கும். அப்போது நான் அவற்றை இலகுவாகப் பிடித்து விடுவேன்.
Read 6 tweets
13 Aug
#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள் விபீஷணன் இலங்கையில் இருந்து கடல் தாண்டி ஶ்ரீ ராமனிடம் தஞ்சம் புக வந்திருந்தான். அவன் ஆகாயத்தில் தன் சகாக்கள் இருவருடன் நின்று தரையிறங்க உத்தரவு கேட்டான். இதை ஶ்ரீ ராமரிடம் சென்று சொன்ன சுக்ரீவன் அவன் இராவணனின் உளவாளியாக இருக்கலாம், அவன் எதிரியின் தம்பி, அவனை Image
நம்முடன் சேர்க்கலாகாது என்று கூறினான். பலரும் அதை ஆமோதித்தனர். அப்பொழுது ஶ்ரீஆஞ்சநேயர் எழுந்து கூடி இருந்தோர் முன்பு பணிவுடன் வணங்கியபின் ஶ்ரீராமனைப் பார்த்து பேச ஆரம்பித்தார். ஐயனே! தாங்கள் சகல நீதிகளையும் அறிந்தவர். எதையும் ஆய்ந்து அறியும் திறமை படைத்தவர். எனவே தாங்கள்
எடுக்கும் முடிவே சிறப்பானதாக இருக்கும். இருப்பினும் என்னுடைய தாழ்மையான கருத்தையும் இங்கு கூறுவது என் கடமை. தாங்கள் என்னிடம் அன்பு கொண்டு இருக்கிறீர்கள், அதனாலேயே இதைச் சொல்லுகிறேன். நான் வேறு எந்த விதத்திலும் இதனைச் சொல்ல தகுதியானவன் இல்லை. விபிஷணனை ஆராயவேண்டும் என மற்றவர்கள்
Read 12 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!

:(