#திருவாஞ்சியம் திருநாவுக்கரசர், திருஞான சம்பந்தர், சுந்தரர் ஆகியோரால் பாடல் பெற்ற திருத்தலம், மரண பயத்தை அடியோடு போக்கும் ஸ்ரீவாஞ்சியம் என்னும் திருவாஞ்சியம் ஆகும். ஒரு சமயம் சிவபெருமான், உமையவளுடன் ரிஷப வாகனத்தில் உலகை வலம் வந்தார். அப்போது பல திருத்தலங்களைக் காட்டி அதன்
சிறப்புகளை எடுத்துரைத்தபடி வந்தார் ஈசன். காசி, காஞ்சீபுரம், காளஹஸ்தி என பல திருத்தலங்களை உமையவளுக்கு காட்டிய ஈசன், திருவாஞ்சியத்தின் மகிமையை கூறும்போது, ‘காசியை விட பன்மடங்கு உயர்வான புண்ணிய தலம் இது. இங்குள்ள தீர்த்தமான #குப்தகங்கை கங்கையை விடவும் புனிதமானது. இந்த தலத்தில் ஓர்
இரவு தங்கி இருந்தாலே, கயிலாயத்தில் சிவ கணமாய் இருக்கும் புண்ணியம் கிடைக்கும்’ என்று கூறினார். இதையடுத்து திருவாஞ்சியத்தில் தங்க உமையவள் திருவுளம் கொண்டாள். எனவேதான் இத்தல நாயகிக்கு ‘வாழ வந்த நாயகி’ என்ற பெயர் வந்ததாக தல வரலாறு கூறுகிறது. ஒரு முறை லட்சுமிதேவி, மகாவிஷ்ணுவிடம் கோபம்
கொண்டு பிரிந்து சென்றாள். திருமகள் இல்லாததால், வைகுண்டம் விட்டு பூலோகம் வந்தார் விஷ்ணு. சந்தன மரக்காடுகள் நிறைந்த பகுதியில் சிவலிங்கம் ஒன்றைக் கண்டு அதற்கு பூஜை செய்து வழிபட்டார். இதையடுத்து ஈசன், மகாலட்சுமியை அழைத்து வரச் செய்து மகாவிஷ்ணுவோடு சேர்ந்து வைத்தார். ‘திரு’ என்று
அழைக்கப்படும் திருமகளை, மகாவிஷ்ணு வாஞ்சையால் விரும்பிச் சேர்ந்த இடம் என்பதால் இந்தத் தலம் ‘திருவாஞ்சியம்’என்று பெயர் பெற்றது. கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்திருக்கும் கணவன்-மனைவி இங்கு வந்து இறைவனை வழிபட்டால் ஒற்றுமை பலப்படும் என்பது நம்பிக்கை. காலன் ஒருமுறை தான் உலகிலுள்ள
அனைத்து உயிர்களின் உயிரை எடுக்கும் பணியைச் செய்வதால் மற்றவர்களால் வெறுக்கப் படுவதையும், தமது பணி காரணமாக தமக்கு ஏற்பட்டுள்ள தோஷத்தால் மனஅமைதி இழந்து தவிப்பதையும் திருவாரூர் புற்றிடங்கொண்டாரிம் சென்று முறையிட்டார். சிவபெருமான் காலனை திருவாஞ்சியம் சென்று வழிபடச் சொல்ல, அதன்படி
யமனும் திருவாஞ்சியம் சென்று தவம் மேற்கொண்டார். காலனின் பூஜைகளால் மனமகிழ்ந்து காட்சியருளிய சிவபெருமானிடம் தமது குறைகளை எமன் கூற, அவரும் அருளி, திருவாஞ்சியம் தலத்து க்ஷேத்திர பாலகனாக எமனை நியமித்தார். மேலும் நற்காரியம் ஏதேனும் செய்தவர் மட்டுமே திருவாஞ்சியத்திற்கு வரும்படி பார்த்து
கொள்ளச் சொல்லியும், இங்கு வழிபட்டுச் செல்லும் பக்தர்களுக்கு மறுபிறப்பு இல்லாமையையும், அமைதியான இறு காலத்தையும் தரச் சொல்லியும் உத்தரவிட்டார். வாஞ்சிநாதசுவாமி யமனை ஊர்தியாகவும் கொண்டுள்ளார். அவருக்கு இருப்பது போன்றே யமனுக்கும் தனித்திருக் கோயில் உண்டு. யமனுக்கு அருகே
சித்திரகுப்தனுக்கும் இடம் அளிக்கப்பட்டுள்ளது. இத்தலத்தில் எமனை வழிபட்ட பின்னரே, சிவபெருமான் தரிசனம் செய்தல் மரபாக உள்ளது. கிரகண சமயங்களில் மற்ற அனைத்து கோயில்களும் நடையடைக்கப் படுவது வழக்கம். ஆனால் வாஞ்சியம் திருக்கோயிலில் விதிவிலக்காக கிரகண சமயத்தில் திறந்து இறைவனுக்கு சிறப்பு
அபிஷேகமும் வழிபாடும் நடத்தப்படுகிறது. இத்தலத்தில் இறப்பவர்களுக்கு எம வேதனை கிடையாது. இத்தலத்தில் எந்த இடத்தில் இறப்பு நிகழ்ந்தாலும் மற்ற தலங்கள் போல் கோவில் மூடப்படுவதில்லை. திருவாஞ்சியம் கோயில் 3.5 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. சிறப்புடன் கட்டடக் கலை அமைந்துள்ளது. ஆலயம் 3
கோபுரங்களையும், 3 விமானங்களையும், 3 பெரிய பிராகாரங்களையும் கொண்டது. இரு பிராகாரங்களைக் கடந்து, கருவறையில் மூலவராகிய காந்தரண்யர் என்றும் அழைக்கப்படுகின்ற சுயம்பு மூர்த்தியை வழிபடலாம். குப்தகங்கை எனும் இவ்வாலயத் திருக்குளம் சுமார் 440 அடி நீளமுள்ளது. இந்தத் தீர்த்தமும் தொன்மைச்
சிறப்புடையது. சந்தன மரத்தை தலமரமாக கொண்ட திருவாஞ்சியம் திருக்கோவில், கிழக்கு பார்த்த ஐந்து நிலை ராஜகோபுரத்துடன் கம்பீரமாக காட்சியளிக்கிறது. இத்தலத்திற்கு வரும் பக்தர்கள் முதலில் குப்த கங்கையில் நீராடி, அருகே உள்ள கங்கைக் கரை விநாயகரை வழிபட வேண்டும். பின்பு தனிச்சன்னிதியில் உள்ள
எமதர்மராஜனை வழிபட்டு, பின்னர் அனுக்கிரக விநாயகர், பாலமுருகனை வழிபட வேண்டும். அதன் பிறகு மூலவரான வாஞ்சிநாத சுவாமியையும், மங்களாம்பிகைகளையும் தரிசனம் செய்ய வேண்டும். தொடர்ந்து 63 நாயன்மார்கள் சன்னிதி, மகாலட்சுமி, மகிஷாசுரமர்த்தினி, வள்ளி-தெய்வானை சமேத முருகப்பெருமான், வெண்ணெய்
விநாயகர், ஜேஷ்டாதேவி, பஞ்சபூத லிங்கங்கள் உள்ளன. இத்தலத்தில் ஒரே கல்லில் செதுக்கப்பட்ட ராகு-கேதுவுக்கு பாலாபிஷேகம் செய்து வழிபட்டால் திருமணத் தடை அகலும். காசியில் வழங்கப்படுவது போல் திருவாஞ்சியத்திலும் காசிக்கயிறு எனும் கருப்புக் கயிறு வழங்கப்படுகிறது. காசியில் பாவமும் புண்ணியமும்
சேர்ந்தே வளர்கின்றன. அதனால் நம் பாவங்களுக்கு காசியில் பைரவர் தண்டனை வழங்குகிறார். ஆனால் திருவாஞ்சியத்தில் புண்ணியம் மட்டுமே வளர்கிறது. அதனால் பைரவர் தண்டனை இங்கு இல்லை. இத்தல பைரவர் தண்டத்தைக் கீழே வைத்து விட்டு, தியான நிலையில் யோக பைரவராக மேற்கு நோக்கி எழுந்தருளி இருக்கிறார்.
நாய் வாகனமும் இங்கு இல்லை. இவரை ஆசன பைரவர் என்று அழைக்கிறார்கள். திருவாஞ்சியத்தில் பைரவர் தவமிருந்து பொன் வண்டு வடிவில் ஈசனை வழிபட்டதாக தல புராணம் கூறுகிறது. திருவாஞ்சியத்து இறைவனுடன் சகஜ சக்தியாக விளங்குபவள், அழகு தமிழில் "மருவார்குழலி' என அழைக்கப்படும் பெருமைமிகு அம்பிகையாகவும்
திகழ்கிறாள். துர்க்கை திருவாஞ்சியத்தில் அஷ்ட புஜங்களுடன் மகிஷாசுரமர்த்தினியாக காட்சி அளிக்கிறார். இவருக்கு 108 தாமரை மலர்களால் அர்ச்சித்தால் வேண்டியது கிட்டும் என்பதும், 21வாரம் செவ்வாய்க்கிழமைகளில் மலரிட்டு வழிபடுவோர் எண்ணியது எய்துவதும் சிறப்பாகும். இத் திருத்தலத்தில் பைரவர்
சனீஸ்வர பகவானுக்கு குருவாக விளங்குகிறார். நரம்பு சம்பந்தப்பட்ட எந்த வியாதிகள் இருந்தாலும் நெய்யினால் தயார் செய்யப்பட்ட வடை மாலை சாத்தி அபிஷேகம், அர்ச்சனை செய்து நிவர்த்தி பெறலாம். துவாபரயுகத்தில் தெரியாமல் தவறிழைத்து அசுரனாகி மூன்று யுகம் அரக்கனாக வாழும் தண்டனை பெற்றவன் வீரதனு.
இவ்வசுரன் பராசர முனிவரை வணங்கி வேண்ட, பராசர முனிவர் திருவாஞ்சியம் வந்து புண்ணிய தீர்த்தத்தைத் தெளித்து சாப விமோசனம் தந்தார். துவாபர யுகம் முடிந்து கலியுகம் தொடங்கியதும் சரஸ்வதி நதிக் கரையில் தவமிருந்த ஸர்வா என்ற முனிவருக்கு கலியுகத்தில் தர்மம் அழிந்து விடுமோ என்ற கவலை வருத்தியது.
அப்போது ‘திருவாஞ்சியம்’ என்ற வார்த்தை அசரீரியாக ஒலித்தது. இதையடுத்து முனிவர் திருவாஞ்சியம் கோவிலை நோக்கி ஓடினார். அவரை கலி துரத்திக் கொண்டிருந்தது. இதனால் முனிவர், ‘சிவாய நம திருவாஞ்சியம் அபயம்’ என்று கூறியபடியே சென்றார். பக்தனின் குரல் கேட்டு, வாஞ்சிநாத சுவாமி அங்கு தோன்றி
முனிவரை துரத்தி வந்த கலியை, திருவாஞ்சியத்திற்கு சற்று தொலைவிலேயே தடுத்து நிறுத்தினார். ஈசன், கலியை தடுத்து நிறுத்திய இடம் தற்போது ‘கலிமங்கலம்’ என்று வழங்கப்படுகிறது. கலியுகத்தில் நமக்கு ஏற்படும் சகல தோஷங்களையும், கிரக பீடைகளையும் களையும் திருத்தலம் திருவாஞ்சியம் ஆகும்.
கும்பகோணத்திலிருந்து நன்னிலம் செல்லும் வழியில் அச்சுதமங்கலம் பேருந்து நிறுத்தத்தில் இறங்கினால் அங்கிருந்து 2கிமீ தொலைவில் திருவாஞ்சியம் திருத்தலம் உள்ளது.
அறிவோம் நம் கோவில்கள் பற்றி, இறையருள் பற்றி🙏🏻

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with அன்பெழில்

அன்பெழில் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @anbezhil12

16 Aug
#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள் செங்கல்பட்டிலிருந்து திருக்கழுக்குன்றம் சாலையில் #நென்மேலி என்ற கிராமத்தில் #லக்ஷ்மிநாராயணப்பெருமாள் கோவில் அமைந்துள்ளது. திதி கொடுக்க மறந்தவர்கள், திதி கொடுப்பதே தெரியாமல் இருந்தவர்கள், வாரிசு இல்லாத அல்லது இழந்த பெற்றோர், விபத்து, தற்கொலை காரணமாக அகால ImageImage
மரணமடைந்தவர்களின் வாரிசுகள் என்று யார் இந்த தலத்துக்கு வந்தாலும் அவர்கள் சார்பில் தானே நின்று திதி கொடுக்கிறார் சிரார்த்த சம்ரட்சண பெருமாள். இந்த கிராமத்தின் மத்தியில் சிரார்த்த சம்ரட்சண பெருமாள் எனும் பெயரோடு லட்சுமி நாராயணன் சேவை சாதிக்கிறார். இந்த கிராமத்திற்கு புண்டரீக
நல்லூர், பிண்டம் வைத்த நல்லூர் என்றும் இந்த சன்னதியின் திருக்குளம் அர்க்ய புஷ்கரணி, ஜீயர் குளம் என்றும் #காசி மற்றும் கயாவுக்கு நிகரான க்ஷேத்திரம் என்றும் #சௌலப்யகயா என்றும் வழங்கப்படுகிறது. பித்ரு வேளை பூஜை குதப காலம் என்னும் 12 மணி முதல் 1 மணிக்குள் இந்த கிரியைகளைப் பெருமாள்
Read 9 tweets
15 Aug
சென்னைக்கு அருகே உள்ள பூவிருந்தவல்லியில் அவதரித்த மகான் #திருக்கச்சிநம்பிகள். அவர் காஞ்சி வரதராஜப் பெருமாளுடன் நேரே பேசும் பாக்கியம் பெற்றிருந்தார். ஒருமுறை அவர் வரதராஜப் பெருமாளுக்குச் சாமரம் வீசிக் கொண்டிருந்தார். அப்போது தலைமேல் ஒரு பாத்திரத்தோடு அங்கே வந்த அர்ச்சகர் ImageImage
திருக்கச்சி நம்பிகளிடம், பெருமாளுக்கு நிவேதனம் செய்வதற்காகச் சர்க்கரைப் பொங்கல் கொண்டு வந்திருக்கிறேன். இதைப் பார்த்துக் கொள்ளுங்கள். மடப்பள்ளிக்குச் சென்று புளியோதரையையும் எடுத்து வந்து விடுகிறேன் என்று சொல்லி விட்டு மடப்பள்ளியை நோக்கிச் சென்றார். அப்போது பெருமாள் திருக்கச்சி
நம்பிகளிடம், நம்பி கொஞ்சம் சர்க்கரைப் பொங்கலை எடுத்து எனக்கு ஊட்டி விடு என்றார். பெருமாளின் கட்டளையைச் சிரமேற்கொண்ட நம்பி, பாத்திரத்திலிருந்து சர்க்கரைப் பொங்கலை எடுத்துப் பெருமாளுக்கு ஊட்டினார். பெருமாளும் அமுது செய்தார். ஆஹா! நன்றாக இருக்கிறதே இன்னும் கொஞ்சம் தாருங்கள் என்று
Read 14 tweets
15 Aug
#ஸ்ரீகிருஷ்ணன்கதைகள் எப்பொழுதும் ஸ்ரீ விஷ்ணு நாமமே கூறும் ஒரு குரு தன் சீடர்கள் யாரிடமும்‌ ஒன்றும்‌ கூறாமல்‌ எங்கோ செல்வார்‌. சில ‌ நாள்கள்‌ கழிந்தே திரும்புவார்‌. இது அடிக்கடி நடக்கும் சம்பவம். இதில் சீடர்களுக்குள் சந்தேகம்‌. அவர்‌ என்ன அடிக்கடி சொர்க்கத்திற்கா போய்‌ Image
வருகிறார் என‌ ஒரே விவாதம் சீடர்களுக்குள். ஒரு சீடன் அவரை ‌ஒரு நாள் ‌ரகசியமாகப்‌ பின்தொடர்ந்தான்‌. அப்போது விவசாயியைப்‌ போல வேடமணிந்த குரு, ஒரு காட்டினுள்‌ இருக்கும்‌ ஒரு குடிலினுள்‌ சென்றார்‌. அங்கிருந்த ஒரு முதியவரை குளிப்பாட்டிப்‌ பராமரித்து அளவளாவி, உணவும்‌ சமைத்து வைத்து
விட்டு இரண்டு நாட்கள் கழித்துத்‌ திரும்பினார்‌. குருவுக்கும் முதியவருக்கும் எந்த உறவும் கிடையாது, அன்புடன் அவரை பராமரித்து வந்தார். இதை கண்டு திரும்பி வந்த சீடன் பிற சீடர்கள்‌ கேட்டபோது, அவர்‌ சொர்க்கத்தை விடப்‌ பெரிய இடத்திற்குச்‌ சென்று வந்தார்‌ என்றான்‌. இறந்த பிறகு
Read 5 tweets
15 Aug
இன்று பானு சப்தமி. ஞாயிற்றுக் கிழமை, சப்தமி திதி சேர்ந்த இன்று சூர்ய பகவானை வழிபட மிக உத்தமமான நாள். அகஸ்திய முனிவர் ஸ்ரீராமருக்கு யுத்த களத்தில் உபதேசம் செய்த ஸ்லோகம் ஆதித்ய ஹ்ருதயம். அதை நாமும் கற்றுக் கொண்டு பாராயணம் செய்தால் நமக்கு வாழ்வில் வெற்றி நிச்சயம். ஆதித்ய ஹ்ருதய Image
ஸ்லோகத்தை, ராமருக்கும் இராவணனுக்கும் சண்டை நடக்கும் போதே அகஸ்திய முனிவர் கிடைத்த இடைப்பட்ட காலத்தில் ராமருக்கு உபதேசம் செய்தார். பிறகு அவர் ராமரிடம், ஆசமனம் செய்த பின் மூன்று தடவை ஆதித்ய ஹ்ருதயத்தை ஜபித்து, சூரிய பகவானின் ஆசியைப் பெற்று இராவணனுடன் யுத்தம் செய், நீ வெற்றி பெறுவாய் Image
என்று சொல்கிறார். அதே போல ராமர் செய்து வெற்றி பெற்றார். சூரிய பகவான் ப்ரத்யக்ஷ தெய்வம். அவரை துத்தித்த உடனே நமக்கு அருள காத்து நிற்கிறார். ராம ராவண யுத்தம் என்பது எல்லார் வாழ்விலும் நடைபெற்றுக் கொண்டே உள்ளது. ராமரை வெற்றி பெற வைக்க அதாவது தர்மத்தை வெற்றி பெற வைக்க, ரிஷிகளை
Read 15 tweets
15 Aug
கடன் தொல்லையால் அவதிபடுவோர் ருண விமோசன நரசிம்ம ஸ்தோத்திரத்தை தினமும் காலை மாலை இருவேளையும் சிரத்தையுடன் பாராயணம் செய்தால் கடன் தொல்லையில் இருந்து விடுபடலாம். செவ்வாய்க்கிழமை வரும் பிரதோஷ நாளில் துதிப்பது பலனை விரைவாக தரும்.

தேவதா கார்ய ஸித்யர்த்தம் ஸபா ஸ்தம்ப ஸமுத்பவம் Image
ஸ்ரீ நரஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருண முக்தயே

தேவதைகளின் காரியத்தை சாதிப்பதற்காக ஹிரண்யகசிபுவின் சபையில் தூணிலிருந்து வெளிப்பட்டவரும், மஹாவீரருமான ஸ்ரீ லக்ஷ்மி நரஸிம்மரை
கடன்களிலிருந்து விடுபடுவதற்காக வணங்குகிறேன்.

லக்ஷ்ம்யாலிங்கித வாமாங்கம் பக்தாநாம் வர தாயகம்
ஸ்ரீ நரஸிம்ஹம்
மஹாவீரம் நமாமி ருண முக்தயே

மகாலக்ஷ்மியை இடப்பாகத்தில் அணைத்துக் கொண்டு, தன்னை வழிபடும் பக்தர்களுக்கு விரும்பிய வரங்களைத் தருபவரும், மஹாவீரருமான ஸ்ரீ லக்ஷ்மி நரஸிம்மரை கடன்களிலிருந்து விடுபடுவதற்காக வணங்குகிறேன்.

ஆந்த்ரமாலாதரம் சங்க சக்ராப்ஜாயுத தாரிணம்
ஸ்ரீ நரஸிம்ஹம் மஹாவீரம்
Read 11 tweets
14 Aug
#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள் ஒரு மீன் பிடிப்பவன் தன் கையில் ஒரு முகம் பார்க்கும் கண்ணாடியுடன் ஒரு குளக்கரையில் நின்று கொண்டிருப்பதை சோனு என்பவன் பார்த்தான். நீ கண்ணாடியை வைத்து என்ன செய்கிறாய் என்று சோனு வினவினான். அவனோ தான் கண்ணாடி கொண்டு மீன் பிடித்துக் கொண்டிருப்பதாகச் சொன்னான்.
மேலும் இது ஒரு புதிய வழி, இது கொண்டு தான் பெரும் செல்வம் சேர்க்கப் போவதாகவும் கூறினான். அது எப்படி செயல்படுகிறது என்று சோனு கேட்டான். சொல்கிறேன் ஆனால் அதற்கு நீ ஆயிரம் ரூபாய் எனக்கு கொடுக்க வேண்டும் என்றான். சோனுவும் ஆர்வ மிகுதியால் ஆயிரம் ரூபாயை உடனே அவனிடம் கொடுத்தான்.
இப்போது மீன் பிடிப்பவன் சொன்னான், நான் கையிலிருக்கும் கண்ணாடியை மீன்கள் நீரில் ஓடும் பக்கம் திருப்பி வைத்து சூரிய ஒளியின் பிரதிபலிப்பான வெளிச்சம் ஓடும் மீன்களின் மீது படுமாறு செய்வேன். உடனே ஓடும் மீன்கள் குழப்பத்தில் நிற்கும். அப்போது நான் அவற்றை இலகுவாகப் பிடித்து விடுவேன்.
Read 6 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!

:(