#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள் செங்கல்பட்டிலிருந்து திருக்கழுக்குன்றம் சாலையில் #நென்மேலி என்ற கிராமத்தில் #லக்ஷ்மிநாராயணப்பெருமாள் கோவில் அமைந்துள்ளது. திதி கொடுக்க மறந்தவர்கள், திதி கொடுப்பதே தெரியாமல் இருந்தவர்கள், வாரிசு இல்லாத அல்லது இழந்த பெற்றோர், விபத்து, தற்கொலை காரணமாக அகால
மரணமடைந்தவர்களின் வாரிசுகள் என்று யார் இந்த தலத்துக்கு வந்தாலும் அவர்கள் சார்பில் தானே நின்று திதி கொடுக்கிறார் சிரார்த்த சம்ரட்சண பெருமாள். இந்த கிராமத்தின் மத்தியில் சிரார்த்த சம்ரட்சண பெருமாள் எனும் பெயரோடு லட்சுமி நாராயணன் சேவை சாதிக்கிறார். இந்த கிராமத்திற்கு புண்டரீக
நல்லூர், பிண்டம் வைத்த நல்லூர் என்றும் இந்த சன்னதியின் திருக்குளம் அர்க்ய புஷ்கரணி, ஜீயர் குளம் என்றும் #காசி மற்றும் கயாவுக்கு நிகரான க்ஷேத்திரம் என்றும் #சௌலப்யகயா என்றும் வழங்கப்படுகிறது. பித்ரு வேளை பூஜை குதப காலம் என்னும் 12 மணி முதல் 1 மணிக்குள் இந்த கிரியைகளைப் பெருமாள்
ஆராதனம் ஏற்று விரதமிருந்து செய்கிறாராம். திதி கொடுக்க வேண்டும் என்று விரும்புகிறவர்கள், மஞ்சள், எள், தர்ப்பைப்புல், விரலில் அணிய பவித்ரம், வெற்றிலை பாக்கு, பழம் ஆகியவற்றை பெருமாளிடம் சமர்ப்பித்து, தங்களுடைய பித்ருக்களுக்காக சங்கல்பம் செய்து கொள்ள வேண்டும். பிறகு கோவிலின் பின்
பக்கத்திலுள்ள விஷ்ணு பாதம் எனும் பெருமாளின் திருவடிக்கு அருகில் சாஸ்திரிகள் வழிகாட்ட திதி கொடுப்பவர் தன் முன்னோருக்கு மறுபடியும் ஒரு சங்கல்பம் செய்து கொண்டு சுவாமியிடம் சமர்பிக்க வேண்டும். இவ்வாறு சமர்ப்பிப்பதே சிரார்த்த சம்ரட்சணமாகும். மீண்டும் அவர்கள் பெருமாள் சந்நிதிக்கு வந்து
பெருமாளுக்கு மகா சங்கல்பமும் சகல உபசாரங்களுடன் பூஜையும் நடத்த வேண்டும். இறுதியில் நம் வீட்டில் செய்யும் சம்பிரதாய திவசச் சமையல் போல வெண்பொங்கல், தயிர் சாதம், பிரண்டையுடன் கலந்து எள் துவையல் எல்லாம் செய்யப்பட்டு நைவேத்தியம் செய்யப்படுகின்றன. இதை ஏற்று, நம் முன்னோர்களின் ஆத்மாக்களை
பெருமாள் திருப்திப்படுத்துவதாக ஐதீகம். ஆற்காடு நவாப் காலத்தில் திவானாகப் பணிபுரிந்த ஸ்ரீயாக்ஞ வல்கியரைக் குருவாகக் கொண்ட சுக்ல யஜுர் வேதத்தை சேர்ந்த யக்ஞ நாராயண ஷர்மா சரஸ வாணி தம்பதி இந்தப் பெருமாளின் மீது மாறாத பக்தி கொண்டிருந்தனர். இவர்கள் அரசுக்கு செலுத்த வேண்டிய வரிப் பணத்தை
தெய்வ காரியங்களுக்கு செலவு செய்து விட்டதால், அரச தண்டனையை ஏற்க விரும்பாமல் திருவிடந்தை எனும் திவ்ய தேசத்து திருக்குளத்தில் தங்கள் உயிரை மாய்த்துக் கொண்டனர். தங்கள் ஈமக் கடன்களை செய்ய வாரிசு இல்லையே என மன வருத்தத்துடன் மரணம் அடைந்தார்கள். அவர்களுடைய எண்ணத்தை எம்பெருமாளே
செய்ததாகச் சொல்கிறது இந்தத் தலத்தின் சரிதம்! கயா, காசி, ராமேஸ்வரம் ஆகிய தலங்களில் இல்லாத சிறப்பு சென்னைக்கு மிக அருகில் இந்த தலத்தில் உள்ளது. நாம் இதனை தெரிந்துகொண்டு பயன் பெறுவோம். பித்ருகளை திருப்திப் படுத்தினால் நம் பாவங்கள் தொலையும்.
சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள் சிவாவும் செல்வாவும் நெருங்கிய நண்பர்கள். செல்வா நாத்திகன், வாய் ஜால திறமையுடைவன். சிவா தீவிர கிருஷ்ண பக்தன். செல்வாவுக்கு மேடையில் கடவுள் இல்லை, மதம் இல்லை, வேதமோ புராணமோ எதுவுமேயில்லை என்று பிரசங்கம் செய்வதே வேலை. எல்லா மதத் தலைவர்களும் தங்கள் வயிற்றுப்
பிழைப்புக்காக உண்டாக்கிக் கொண்ட கட்டுக்கதைகள் என்று வாய் ஜால திறமையுடன் சாதுரியமாகப் பிரசங்கித்துக் கொண்டிருப்பான். செல்வாவுடைய பேச்சுத் திறமையைக் கண்டு ஜனங்கள் திரள் திரளாகக் கூடுவார்கள். கடைசியில் கடவுளுமில்லை கத்திரிக்காயுமில்லை, எல்லாம் பித்தலாட்டம் என முடித்து யாராவது கேள்வி
கேட்க வேண்டுமானால் மேடைக்கு வரலாம் என்று அழைப்பான். அப்போது ஒரு முறை நண்பன் சிவா மேடைமீது ஏறினான். தன் கோட்டுப் பாக்கெட்டிலிருந்து ஒரு ஆரஞ்சுப் பழத்தை எடுத்து, தோலை மெதுவாக உரித்தான். நண்பா என்னிடம் கேட்க வேண்டிய கேள்வியை கேட்காமல் பழத்தை உரிக்கிறாயே எனக் கோபம் கொண்டான் செல்வா.
#NEET#நீட் இதற்கு தமிழகத்தில் மட்டும் எதிர்ப்பு ஏன்?
உச்சநீதிமன்றம் நீட் தேர்வை கட்டாயமாக்கியதன் விளைவு: 3 சுற்று கலந்தாய்வுக்கு பிறகும் இந்தியாவில் டீம்டு மருத்துவ பல்கலை கழககங்களில் இன்னும் 5,200 மாணவர் இருக்கைகள் நிரப்ப படாமல் உள்ளன. தமிழகத்தில் மட்டும் 947 இருக்கைகள்
நிரப்ப படவில்லை.
பாலாஜி மருத்துவக்கல்லூரி - 206 காலி. (திமுக முன்னாள் அமைச்சர் ஜகத்ரட்சகனுக்கு சொந்தமானது)
ACS மருத்துவ கல்லூரி - 146 காலி
(முன்னாள் அதிமுக அமைச்சர் AC சண்முகத்திற்கு சொந்தமானது)
மீனாக்ஷி மருத்துவ கல்லூரி - 130.
( கம்பெனி முதலாளி தெரியவில்லை தெரிந்தவர் கூறலாம்)
செட்டிநாடு மருத்துவ கல்லூரி - 127
( செட்டிநாடு சிமெண்ட் கம்பெனி )
SRM மருத்துவ கல்லூரி - 98
(உத்தமர் பச்சைமுத்து புதிய தலைமுறை தொலைக்காட்சி )
ராமச்சந்திரா மருத்துவ கல்லூரி - 76. (எம்ஜிஆர் ஆசிபெற்ற சாராய வியாபாரி உடையார் குடும்பம் )
#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள்#ராதாஷ்டமி
ஆவணி மாதம் சுக்ல பக்ஷ அஷ்டமியன்று மதிய வேளையில் ராதா பிறந்தாள். அதாவது ஆகஸ்ட்-செப்டம்பர் மாதங்களுக்கு நடுவில் வரும் வளர்பிறை எட்டாம் நாள் பிறந்தாள். கிருஷ்ணரின் ஜன்மாஷ்டமியில் இருந்து பதினான்காம் நாள் ராதா பிறந்த ராதாஷ்டமி வருகிறது. இந்நாளை ராதா
பிறந்த ஊரான பர்சானா என்ற இடத்திலும் ப்ரஜ் பூமியின் எல்லா பகுதியிலும் சிறப்பாக மக்கள் கொண்டாடுகிறார்கள். எல்லாம் கோபிகைகளுடன் கிருஷ்ணர் விளையாடினாலும் ராதா அவருக்கு மிகவும் பிரியமானவள் ராதைக்கு சகலமும் கிருஷ்ணன்தான். ராதா என்பதன் பொருள்: ரா என்றால் தருவது, ஒப்புக்கொள்வது. தா
என்றால் விடை பெறுதல், பிடிப்பை தளர்த்துதல். தருவதற்கும், பெறுவதற்கும் விரும்புதல், மனதை ஒருமுகப்படுத்துதல், அதற்காக பாடுபடுதல் என்பதே இவ்விரு எழுத்துக்களும் கூடினால் மிகச்சுவையான விளக்கங்கள் கூறலாம். எப்போது நாம், நான் என்ற பிடிப்பை தளர்த்தி, சத்தியத்தின் மேல் நம் மனதை
#ஶ்ரீகுருஷ்ணன்கதைகள் மன்னன் வீரவர்ம ராஜாவுக்கு பல யானைகள் இருந்தன. அதில் ஒரு யானை மணிகண்டன் மிகவும் பலம் வாய்ந்தது. கீழ்படிந்து நடக்கும் குணமும் விவேகமும் கொண்டது. போர்க்களத்தில் வீரவர்ம ராஜாவுக்கு எப்பொழுதும் வெற்றியைப் பெற்றுக் கொடுத்து திரும்பி வரும். எனவே ராஜாவின் மிகவும்
பிரியமான யானையானது மணிகண்டன். யானைக்கு வயதாகியது. முன்பு போல களத்தில் போர் செய்ய முடியவில்லை. எனவே மன்னர் வீரவர்மன் அதை போர்க்களத்திற்கு அனுப்பவில்லை. ஆனாலும் அவரது அணியின் ஒரு பகுதியாகவே யானை மணிகண்டன் இருந்தது. ஒரு நாள் யானை மணிகண்டன் தண்ணீர் குடிக்க ஏரிக்குச் சென்றபோது
சேற்றில் சிக்கி மூழ்கத் தொடங்கியது. பல முறை முயன்றும் சேற்றில் இருந்து காலை அதனால் வெளியே எடுக்க முடியவில்லை. அதன் அலறல் சத்தத்திலிருந்து யானை சிக்கலில் இருப்பதை மக்கள் அறிந்து கொண்டனர்.
மணிகண்டன் சேற்றில் சிக்கிய செய்தி ராஜாவை சென்றடைந்தது. ராஜா வீரவர்மன் உட்பட மக்கள் அனைவரும்
#ஸ்ரீகிருஷ்ணன்கதைகள் ரசிக முராரி என்பவர் ஒடிஸாவில் ரோகினி நகர் என்னும் ஊரில் 1590ல் பிறந்தவர். சிறு வயது முதலே பகவான் ஸ்ரீ கிருஷ்ணன் மேல் தீவிர பக்தி கொண்டிருந்த அவர் எப்போதும் கிருஷ்ணன் பெயரையே உச்சரித்துக் கொண்டிருப்பார். அவரது குரு சியாமானந்தர் 1608 ஆம் ஆண்டு ரசிக முராரிக்கு
கிருஷ்ண மந்திரத்தை உபதேசித்து மக்களை நல்வழிப்படுத்தி வரும்படி கேட்டுக் கொண்டார். பின்னர் அங்கேயே மடம் அமைத்துக்கொண்டு பகவத் சேவை செய்து வந்த சியாமானந்தர் 1630 ஆம் ஆண்டு இறைவனடி சேர்ந்தார். அவர் சமாதி ஒடிஸாவின் மயூர்பஞ்ச் மாவட்டத்தில் உள்ளது. அவர் அணிந்த காலணிகளை இன்னும் அங்கு
பாதுகாத்து வருகின்றனர். சியாமானந்தரிடம் கிருஷ்ண மஹா மந்திரத்தை உபதேசம் பெற்ற ரசிக முராரி கோபிபல்லவபூர் என்னும் ஊரில் வாழ்ந்து வந்தார். பானாபூரை ஆண்டு வந்த பைத்தியநாத் பஞ்ச் என்னும் ஒரு அரசனின் அரவணைப்பில் ரசிக முராரி வாழ்ந்துவந்த காலகட்டத்தில், அப்போது ஒடிஸா மாநில பொறுப்பாளராக
#மாசாணிஅம்மன் ஸ்ரீ மாசாணி அம்மன் திருக்கோவில் தல வரலாறு.
பொள்ளாச்சியில் இருந்து 15 கி.மீட்டர் தொலைவில் ஆனைமலையில் மிக பிரமாண்டமாக ஸ்ரீ மாசாணி அம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. ஆனை மலைப்பகுதியை நன்னன் என்ற மன்னன் ஆட்சி செய்து வந்தார். அவரைச் சந்திக்க ஒரு துறவி வந்தார். அவரை
வரவேற்று பல உபசரிப்புகள் செய்த நன்னனின் உபரசரிப்பில் மகிழ்ந்த துறவி அவருக்கு ஓர் மாங்கனியை கொடுத்தார். ‘மன்னா இது அதிசய மாங்கனி இதை எனது குருநாதர் பரிசாக அளித்தார். உன்னால் மகிழ்வுற்ற நான் இந்த மாங்கனியை பரிசளிக்கிறேன், முக்கியமான ஒன்று இதை உண்ட பின் இந்த மாங்களி கொட்டையை ஆற்றில்
விட்டு விடு, இல்லையெனில் இது ஆபத்தாக முடிந்து விடும்’ என்றார். மன்னர் சரி என்று சொல்லி துறவியை வழியனுப்பி விட்டு மாங்கனியை சுவைத்தார். சுவை நன்றாக இருக்கவே அந்த மாங்கொட்டையை துறவி சொன்னதை அலட்சியப்படுத்தி தமது நந்தவனத்தில் ஆற்றோரம் நட்டு பராமரித்து வந்தார். மரம் பெரியதாகி பழம்