ஒரு நாள் அவன் பாடிக்கொண்டிருந்தான் அவ்வழியே அந்த நாட்டு அரசன் சென்று கொண்டிருந்தான்.
பாட்டு அரசனை கவர்ந்தது.
நீ அருமையாக பாடுகிறாய். உனக்கு ஏதாவது பரிசளிக்க விரும்புகிறேன் என்ன வேண்டும் கேள் என்றான் அரசன்.
மகிழ்ந்து போனான் பார்வையற்றவன்.
அரசே, நீண்ட நாட்களாக எனக்கு ஒரு ஆசை.
அரசராகிய நீங்கள் சாப்பிடும் மதிய உணவை ஒரு நாளாவது நான் சாப்பிட வேண்டும்.
இந்த ஆசையை நிறைவேற்றுவீர்களா? என்று கேட்டான்.
இதென்ன பிரமாதம் நாளையே உன்னுடைய ஆசையை பூர்த்தி செய்கிறேன் மதியம் உணவுடன் சந்திக்கிறேன்,
என்று சொல்லிவிட்டு அரசன் நகர்ந்தான்.
மதிய உணவை அரசன் கொண்டுவருவான். அதைச் திருப்தியாக சாப்பிட வேண்டும்.
அதற்கு வசதியாக, காலையிலிருந்தே எந்த உணவையும் சாப்பிடக்கூடாது அதிக பசியோடு இருந்தால் அதிகமாக சாப்பிடலாம், என்று அவன் மனம் கணக்குப் போட்டது.
அடுத்த நாள் விடிந்தது.
அரசனின் வருகைக்காக காத்திருந்தான்.
வழக்கம் போல் பலர் அவனுக்கு உணவு கொடுக்க முன் வந்தார்கள் அரசன் கொண்டுவரும் உணவு பற்றிய சிந்தனையால் மற்றவர்கள் கொடுத்ததை வாங்க மறுத்துவிட்டான்.
மதியம் மணி இரண்டானது, மூன்றானது அரசன் வரவேயில்லை நேரம் ஓடிக்கொண்டிருந்தது இரவு எட்டு மணியானது.
பிறகு பேசினான்.
சாப்பாட்டுக் கூடையோடு கிளம்பினேன், திடீரென்று தலை சுற்றியது வைத்தியர்கள் என்னை சோதித்துவிட்டு ஓய்வெடுக்குமாறு சொன்னார்கள்.
அதனால், என்னுடைய பாதுகாவலன் மூலமாக உணவை கொடுத்து அனுப்பினேன்.
அதை நீ சாப்பிடவில்லையா? என்றவாறு பக்கத்தில் இருந்த பாதுகாவலனை விசாரித்தான்.
அரசே, இவரிடம் உணவை கொடுத்தேன். ஆனால் இவர் வாங்க மறுத்துவிட்டார். அதனால், அதை திரும்ப எடுத்துச் செல்வதைவிட யாரிடமாவது கொடுத்தால்
உபயோகமாக இருக்குமே என்று நினைத்து பக்கத்தில் அமர்ந்திருந்தவரிடம் கொடுத்துவிட்டு அரண்மனை திரும்பினேன்.
உங்களிடம் விஷயத்தை தெரிவிப்பதற்காக வந்தேன்.
நீங்கள் ஓய்வில் இருந்தீர்கள் அரசியாரிடம் சொல்லிவிட்டு வந்துவிட்டேன் என்றான் பாதுகாவலன்.
தலையில் கைவைத்தபடி அமர்ந்தான் அரசன்.
அப்போது அங்கு நடந்ததை எல்லாம் வேடிக்கை பார்த்து கொண்டிருந்த சாது பேசினார்.
தம்பி,நடந்த விவரங்களை என்னால் யூகிக்க முடிகிறது.
அரசன் சாப்பிடும் உணவை கேட்டாய். தானே நேரில் வந்து கொடுக்கிறேன் என்று சொன்னது அரசனின் பெருந்தன்மை.
ஆனால், அரசன் வந்து நேரில் கொடுத்தால் மட்டுமே அது அரச உணவு என்று நீ நினைத்தாய்.
அதுதான் இவ்வளவு குழப்பங்களுக்கு காரணம்.
இதுவரை நடந்தது மட்டுமே உனக்குத் தெரியும்.
இதற்கு மேலும் பல விஷயங்கள் நடந்துள்ளது என்று சொல்லிவிட்டு அமைதியானார் சாது.
அந்த இடமே அமைதியானது. சாது மீண்டும் பேசத்தொடங்கினார்.
உணவை கொடுத்து அனுப்பிய அரசன் இரண்டாவது பாதுகாவலனை அழைத்தான்.
ஆயிரம் பொற்காசுகளை ஒரு மூட்டையாக கட்டி, மரத்தடியில் அரச உணவை சாப்பிட்டுக் கொண்டிருப்பவனிடம் இந்த மூட்டையை ஒப்படைத்துவிட்டு வா என்று அனுப்பினார்.
இரண்டாவது காவலன் சாப்பிட்டுக் கொண்டிருந்த உனது நண்பனிடம் ஆயிரம் பொற்காசுகளை கொடுத்துவிட்டு நகர்ந்தான்.
அந்த பொற்காசு உனக்காக கொடுக்கப்பட்டது.
குழப்பம் இதோடு தீரவில்லை.
அரசன் மூன்றாவதாக ஒரு காவலனை அழைத்தான்.
அவனிடம் ஒரு குதிரையை கொடுத்து,
மரத்தடியில் பொற்காசு மூட்டையுடன் இருப்பவனிடம் குதிரையை கொடுக்கும் படி அனுப்பினான்.
பொற்காசு மூட்டையுடன் நின்று கொண்டிருந்த உன் நண்பன் குதிரையை பெற்றுக் கொண்டு நாட்டைவிட்டே போய்விட்டான்.
இப்போது உன்னுடைய நண்பன் செல்வந்தன்.
உன்னுடைய புரிதலில் ஏற்பட்ட சிறிய தவறால்
நீ இன்று பசியோடு இருக்கிறாய்.
இதை விதி என்பதா?
அல்லது வாய்ப்பை சரியாக புரிந்து கொள்ளாமல் கோட்டைவிட்டாய் என்று சொல்வதா?
ஒன்று மட்டும் நிச்சயம், உன்னுடைய வரம் உனக்கு சாபமாகவும், உன் நண்பனுக்கு வரமாகவும் மாறிவிட்டது என்று சொல்லி முடித்தார் சாது.
அமைதியாக இருந்த அரசன் பேசினான்.
கவலைப்படாதே, நாளை உனக்கு உணவு, பொற்காசு, குதிரை எல்லாவற்றையும் மீண்டும் அனுப்பகிறேன் என்று சொல்லிவிட்டு நகர்ந்தான் அரசன்.
அடுத்த நாள், அரசனின் வருகைக்காக காத்திருந்தான் பார்வையற்றவன்.
அரசன் வரவேயில்லை முந்தய இரவே உடல் நிலை சரியில்லாத அரசன் இறந்து போன செய்தி அவனுக்கு எட்டவில்லை.
கதையின் நீதி:-
வாய்ப்பு என்பது எல்லோரிடமும் சொல்லிவிட்டு வந்து கதவை தட்டுவதில்லை. அப்படியே சொல்லிவிட்டு வந்தாலும் அதை மிகச் சரியாக உபயோகப்படுத்திக்கொள்ளும் புத்திசாலித்தனமும் அதிர்ஷ்டமும் நம்மில் எத்தனை பேருக்கு இருக்கிறது என்பது தெரியவில்லை.
வாய்ப்பு கதவைத் தட்டும் போது காதை பொத்திக்கொண்டால், பலன்கள் எப்படி கிடைக்கும்.
அந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொள்ளும் மற்றொருவனிடம் சென்று தஞ்சமடையும்.
குறிப்பு:- (தலைவர் ரசிகர்களும் உபிக்களும் இந்த திரேட் யை படிக்கவேண்டாம்)
வாழைத்தண்டின் முக்கியமான பயன்களை பற்றி இங்கு காண்போம்.
குறைவான விலையில், அதிக மருத்துவ குணங்கள் நிறைந்த காய்கறிகளுள் வாழைத்தண்டும் ஒன்று. வாழைத்தண்டை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால், சிறுநீர்ப்பிரச்சனைகள் விரைவில் குணமாகும்.
வாழைத்தண்டானது உடலின் தங்கி இருக்கும் தேவையற்ற கழிவுகளை வெளியேற்றுகிறது. சிறுநீரக கல் பிரச்சினை உள்ளவர்கள் தினசரி வாழைத்தண்டு ஜூஸ் பருகி வந்தால் சிறுநீரக கல் கரைந்து காணாமல் போகும்.
சிறுநீரக கற்கள் உள்ளவர்கள் வாழைத்தண்டை வாரத்திற்கு மூன்று முறை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.
வாழைத்தண்டில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. எனவே உடல் பருமனால் அவதிப்படுபவர்கள், இரத்தத்தில் கொழுப்புச் சத்து அதிகரித்து இருப்பவர்கள் இதை அடிக்கடி உணவாக எடுத்துக்கொள்ளலாம். நீரிழிவு நோயாளிகள் வாழைத்தண்டை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளலாம்.
அனைத்து சாதி அர்ச்சகர் நியமனம் உச்ச நீதிமன்ற தீர்ப்பின் வழிகாட்டல் படியே நடக்கிறது. ஏற்கனவே இருந்த ஒருவரை நீக்கி அவ்விடத்தில் யாரையும் பணியமர்த்தவில்லை. காலிப் பணியிடங்களில் புதியவர்களை நியமனம் செய்கிறோம்.
சோழ சாம்ராஜ்ஜியத்தின் முக்கிய அரசர்களுள் ஒருவராக திகழ்ந்தவர் இராஜேந்திர சோழர்.
.
ஆட்சி செய்த 60 ஆண்டுகளில் போரில் தோல்வியே காணாமல் உலகின் கால் பகுதிகளை தன் காலடியில் வைத்திருந்த மாமன்னன் இராஜேந்திர சோழன்,
இந்தியாவின் முதல் பேரரசராக இராஜேந்திர சோழர் திகழ்ந்துள்ளார்.
தோல்வி என்றால் என்ன?
என்ற கேள்வி கேட்கும்படி பல போர்களில் வெற்றிகள் வாரிக்குவித்தவர் இராஜேந்திர சோழன்.
இருபது ஆண்டுகள் கடற்போர் புரிந்த மாபெரும் வீர அரசர் இராஜேந்திரா சோழர்.
அறுபது ஆயிரம் யானை படை, ஒரு லட்சம் பேர் கொண்ட காலாற்படையை வங்கக்கடல் கடந்து சென்று மறு கரையில் நிறுத்திய தருணமே அஞ்சி நடுங்கி தேசங்களை ஒப்படைத்தவர்களும் இருந்தனர்.
தனது போர் வீரத்தால் அடிப்பணிய வைத்தும் பல தேசங்களை வெற்றி வாகை சூடி சாதித்தார்.