இராஜேந்திர சோழன் :- (Thread)

சோழ சாம்ராஜ்ஜியத்தின் முக்கிய அரசர்களுள் ஒருவராக திகழ்ந்தவர் இராஜேந்திர சோழர்.
.
ஆட்சி செய்த 60 ஆண்டுகளில் போரில் தோல்வியே காணாமல் உலகின் கால் பகுதிகளை தன் காலடியில் வைத்திருந்த மாமன்னன் இராஜேந்திர சோழன்,

#ஆடித்திருவாதிரை
#இராஜேந்திரசோழன்
இந்தியாவின் முதல் பேரரசராக இராஜேந்திர சோழர் திகழ்ந்துள்ளார்.

தோல்வி என்றால் என்ன?

என்ற கேள்வி கேட்கும்படி பல போர்களில் வெற்றிகள் வாரிக்குவித்தவர் இராஜேந்திர சோழன்.

இருபது ஆண்டுகள் கடற்போர் புரிந்த மாபெரும் வீர அரசர் இராஜேந்திரா சோழர்.
அறுபது ஆயிரம் யானை படை, ஒரு லட்சம் பேர் கொண்ட காலாற்படையை வங்கக்கடல் கடந்து சென்று மறு கரையில் நிறுத்திய தருணமே அஞ்சி நடுங்கி தேசங்களை ஒப்படைத்தவர்களும் இருந்தனர்.

தனது போர் வீரத்தால் அடிப்பணிய வைத்தும் பல தேசங்களை வெற்றி வாகை சூடி சாதித்தார்.
சாளுக்கியர், ஈழம், கங்கை, பாண்டியர்கள், சேரர்கள் என அந்த காலத்தில் வலிமை மிகுந்து காணப்பட்ட அனைத்து ராஜ்ஜியங்களையும் போர் செய்து வென்ற பெருமைக்கு உரியவர் பேரரசர் இராஜேந்திர சோழன்
மாவீரன் என்றால் அது எங்கள் இராஜேந்திர சோழன் தான்.

தமிழரின் வீரத்தை உலகிற்கு பறைசாட்டியது இராஜேந்திர சோழன் கட்டியமைத்த போர் படையும், கடல் கடந்து அவன் நடத்திய அரசாட்சியும் தான்.

எல்லா அரசர்களும் தங்கள் எல்லையை பாதுகாக்க போர் நடத்தினார்கள்
ராஜேந்திர சோழன் மட்டும் தான் கடல் கடந்து போர் நடத்தினான்.

இந்தியாவின் பல பகுதிகளும், வங்கம், மாலத்தீவு, தாய்லாந்து, ஜப்பான், இலங்கை, இந்தோனேஷியா, கம்போடியா என தெற்கு ஆசியா முழுவதுமே பிடித்து அரசாண்டான் .

இராஜேந்திர சோழனுக்கு ‘கடாரம் கொண்டான்’ என்ற பட்டப்பெயர் உண்டு.
இன்றைய மலேசியாதான் அன்றைய கடாரம்.

அதை வென்றதால் அந்தப்பெயர் வந்தது. உலகில் முதன்முதலில் கப்பல் படை வைத்திருந்தது இராஜேந்திர சோழன் தான்.

இராஜேந்திர சோழன் கடல் கடந்து சோழர் ஆதிக்கத்தை ஏற்படுத்துவதற்கு முன்பாக ஆட்சிப்பொறுப்பேற்ற சில ஆண்டுகளில் சோழப் படைகளுக்கு தலைமையேற்று
தமிழகத்தின் வடபகுதி மீது படையெடுத்தார்.

முதலில் கர்நாடக பகுதியிலிருந்த இரட்டபாடி, வனவாசி, கொள்ளிப்பாக்கை, மானியக்கடகம் ஆகிய பகுதிகளில் இருந்த அரசுகளை வென்று சோழரின் மேலாண்மையை ஏற்க செய்தார்.

ஆந்திர பகுதியின் துங்கபத்திரை-கிருஷ்ணா நதிக்கும் இடைப்பட்ட இடைதுறை நாட்டை கைப்பற்றினார்
சாளுக்கிய படைகளைத் தோற்கடித்து மேலும் முன்னேறிய இராஜேந்திர சோழனின் படைகள் இந்தியாவின் கிழக்கு பகுதியில் இருந்த அரசுகளையும் வெல்லத்திட்டமிட்டன.

இதற்கு இடையில் சோழரின் கடற்படை இலங்கை மீது படையெடுத்து ஐந்தாம் மகிந்தன் என்ற மன்னரை வீழ்ச்சியுற செய்தது.
தனது தந்தை இராஜராஜன் காலத்தில் இலங்கை வீழ்த்தப்பட்டிருப்பினும் ஐந்தாம் மகிந்தன் சோழரின் ஆதிக்கத்திற்கு எதிராகப் படைகளைத் திரட்டியதை அறிந்த இராஜேந்திரன் அம்மன்னனை வீழ்த்த கடற்படையை ஏவினார்.

ஐந்தாம் மகிந்தன் சோழரின் படைகளைக் கண்டு பயந்து காட்டில் ஒளிந்து கொண்டார்.
இராஜேந்திர சோழனின் வட இந்திய படையெடுப்பு மீண்டும் தொடர்ந்தது.

கலிங்க நாட்டை கடந்து ஒட்டர தேசம், கோசல நாடு, தண்டபுக்தி ஆகிய நாடுகளின் அரசுகளை அடிபணியச் செய்தது.

வங்காள நாட்டை ஆட்சி செய்த கோவிந்த சந்தன் என்ற மன்னன் சோழரின் ஆதிக்கத்திற்கு அடிபணிந்தார்.
உத்தர லாடத்தை ஆட்சி செய்த மகிபாலனை வென்று சோழர் படைகள் கங்கையை அடைந்தது.

தோல்வி கண்ட மன்னர்களை கங்கை நீரைக் கொணரச் செய்து அந்நீரினைக் கொண்டு சோழ சாம்ராஜ்ஜியத்தைப் புனிதமடையச் செய்தார் மன்னர் இராஜேந்திரன்.

வட இந்திய படைகளுடன் தாயகம் திரும்பிய இராஜேந்திரனின் படைகளை
கங்கை கொண்ட சோழபுரத்திற்கு அருகில் திரைலோகி என்ற இடத்தில் மக்கள் வெற்றி முழக்கமிட்டு வரவேற்று பெருமை சேர்த்தனர்.

இராஜேந்திர சோழனின் கடல் கடந்து சென்ற கடாரப் படையெடுப்பு 1026-ம் ஆண்டு தொடங்கியது.

ராஜேந்திரன் கடற்படை பல கப்பல்களையும், சிறிய படகுகளையும் கொண்ட பெரும்படையாகும்.
இவரது கடற்படை கிழக்கு கடற்கரையில் பல துறைமுகங்களில் இருந்து செயல்பட்டன.

குறிப்பாக நாகப்பட்டினம் துறைமுகம் முதன்மைக் கடற்கரைத் துறைமுகமாக விளங்கியது.

காவேரிப்பூம்பட்டினம் துறைமுகமும் இம்மன்னனின் காலத்தில் முக்கிய துறைமுகமாகச் செயல்பட்டிருக்க வேண்டும்.
இவரது பட்டப்பெயரான “பூம்புகார்த் தலைவன்” இதனை வெளிப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது.

கேடா அல்லது கடாரத்தை ஆட்சி செய்த சங்கராம விஜயதுங்க வர்மன் ராஜேந்திரனின் கப்பற்படைகளுக்கு முன் அடிபணிந்ததுடன் சோழர்களின் ஆட்சிக்கு உட்பட்ட மன்னராக நட்பு பாராட்டினார்.
ஸ்ரீவிஜயம் (சுமத்ரா), பண்ணை (பானிசுமத்ராவின் கிழக்கு பகுதி), மலையூர் (மலேயா), மாயிருடிங்கம் (மலேயாவின் நடுப்பகுதி), லங்கசோகம், மாப்பாளம் (பர்மா), மேவிளம்பகம், வளைப்பந்துரு (பாலம்பெங்பகுதி), தலைத் தக்கோலம் (தக்கோபா), மாடமாலிங்கம், இலாமுரி தேசம் (சுமத்ராவின் வடக்கு பகுதி),
மாநக்காவரம் (நிக்கோபார்) ஆகிய பகுதிகளை சோழர் கடற்படை கைப்பற்றியது.

ராஜேந்திர சோழன் பல கப்பல்களை கடலில் செலுத்தி மேற்குறிப்பிட்ட அனைத்து நாடுகளிலும் சோழர் ஆதிக்கத்தை நிலைநிறுத்தி அம்மன்னர்களுடன் நட்புறவுடன் நடந்து கொண்டமை அவரது ஆட்சி நிர்வாகத்திறமையை நமக்கு எடுத்துரைக்கின்றது.
கடல் கடந்து வெற்றி பெற்ற நாடுகளில் நேரிடை ஆட்சி செய்வது என்பது இயலாத காரியம் என நன்கறிந்த மன்னர் இராஜேந்திர சோழன்.

எனவே அம்மன்னர்களை அடிபணியச் செய்து ஆட்சியை அவர்களிடமே ஒப்படைத்தார்.

இவ்வனைத்து வெற்றிகளையும் சேர்த்து கடாரம் கொண்டான் என பட்டம் பெற்றார்.
இப்பெயரை அவர் மதிப்புடன் ஏற்றுக்கொண்டமைக்கு காரணம் தமிழர்கள் முதன் முதலில் வணிகர்களாகவும், பணியாளர்களாகவும் குடியேறிய பகுதி கடாரம் ஆகும்.

இத்துறைமுக நகரம் இன்றைய பினாங்கு நகருக்கு வெகு அருகில் உள்ளது. இப்பகுதியில் தாதுப் பொருள்கள் அதிக அளவில் கிடைக்கின்றன.
தமிழ் இலக்கியங்களில் ஒன்றான பட்டினப்பாலையில் காழகம் என வழங்கப்படும் துறைமுக நகரம் இதுவே ஆகும்.

அக்காலத்தில் தமிழ் வணிகர்களும் இரும்பையும், பொன்னையும் வெட்டி தாதுப்பொருள்களையும், கருவிகளையும் உருவாக்கும் கலையை தமிழர்கள் நன்கு அறிந்து வைத்திருந்தனர்.
காழகத்துப்பொன் உலகெங்கிலும் பேசப்பட்ட காலத்திலேயே தமிழர்கள் கடல்வாணிகம் மேற்கொண்டனர்.

இத்துறைமுகம் மலைகள் சூழ்ந்த பாதுகாப்பு பகுதியில் இருந்த மிகசிறந்த துறைமுகமாக அக்காலத்தில் விளங்கியது.

சீனாவிற்கும்,இந்தியாவிற்கும் இடையில் செல்லும் கப்பல்கள் இத்துறைமுகம் வழியாகவே சென்று வரும்
11-ம் நூற்றாண்டில் இப்பகுதியில் சீன வணிகர்களின் அச்சுறுத்தல்கள் மிகுந்தன.

தமிழ் வணிகர்களுக்கும் இப்பகுதியில் வாழ்ந்த தமிழர்களுக்கும் இதனால் பல இன்னல்கள் நிகழ்ந்தன. ஸ்ரீவிஜயத்தை ஆண்ட அரசர்களும் சீன அரசுகளின் கட்டுப்பாட்டில் இருக்கவேண்டிய நிலை ஏற்பட்டது.
தமிழர்களுக்கு ஏற்பட்ட துயரத்தைப் போக்க பெரும் கப்பற்படையை உருவாக்கி இவ்வரசுகளை அடிபணியச் செய்து தமிழர்களுக்கும், தமிழ் வணிகர்களுக்கும் ஆதரவு நல்கினார்.

உலகத் தமிழரின் வாழ்வு சிறக்க கடற்படையைத் திரட்டி பார் போற்றும் மன்னராக இன்றளவும் விளங்கி வருபவர் இராஜேந்திர சோழன்.

தொடரும்....
முக்கிய தரவுகள்:-
சு.ராஜவேலு, பேராசிரியர் (ஓய்வு), தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்

சோழனின் புகழை பரப்புவோம் . சோழர்களின் புகழை போற்றுவோம்...

#ஆடித்திருவாதிரை
#இராஜேந்திரசோழன்
#SSRThreads

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with SSR 🚩

SSR 🚩 Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @SSR_Sivaraj

4 Aug
இராஜேந்திர சோழன் :- (Thread)

இராஜேந்திர சோழன் சாதனைகளுள் மிகவும் குறிப்பிடத்தக்கது அவரது இலங்கை வெற்றி,

ஏறக்குறைய நூறு ஆண்டுகளுக்கும் மேலாக சோழர்களின் தேடுதலை இராஜேந்திரனே நிறைவு செய்தார் அதிக ஆண்டுகள் இலங்கையை ஆண்ட ஒரே தமிழ் மன்னன் இராஜராஜனே,

#ஆடித்திருவாதிரை
#இராஜேந்திரசோழன் Image
இராஜேந்திர சோழன் இல்லையென்றால் அது சாத்தியமேயில்லை,

தமிழ்நாட்டின் வரலாற்றில் பொற்காலத்தைப் படைத்தவர்கள்
இராஜராஜ சோழனும் அவன் மகன்
இராஜேந்திர சோழனும் ஆவார்கள்.

இவர்கள் ஏறத்தாழ இலங்கையை முற்றிலுமாக வென்று, சோழராஜ்ஜியத்தின் ஒரு பகுதியாகவே ஆக்கினார்கள்.
பராந்தகனால் முடியவில்லை..
சுந்தரச் சோழனால் முடியவில்லை..
இராஜராஜனாலும் முடியவில்லை..
இராஜேந்திரன் தான் முடித்து வைத்தார்..

கி.பி.910-ம் ஆண்டு,

முதலாம் பராந்தகச்சோழனுக்கும், இராசசிம்ம பாண்டியனுக்கும் வெள்ளூர் என்னும் இடத்தில் கடும்போர் நடைபெற்றது. போரில் தோல்வியுற்ற பாண்டியன்
Read 23 tweets
29 Jul
கங்கை கொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவில்:- (Thread)

இது 1000 வருட பாரம்பரியம் கொண்ட சிவதலம்.

தமிழ்நாட்டிலேயே மிகவும் பெரிய அளவிலான லிங்கம் இருப்பது இங்கு தான் இங்குள்ள லிங்கம் 13.5 அடி உயரம். 60 அடி சுற்றளவும் கொண்டது.

#நோக்கம்சிவமயம்
#இராஜேந்திரசோழன்
#SSRThreads

Continue>>
லிங்கம் அமைக்கப்பட்டிருக்கும் இடமான ஆவுடையைச் சுற்றி பலகை கட்டி அதன் மீது நின்று கொண்டு அர்ச்சர்கள் அபிஷேகம் செய்து வழிபாடு செய்வது கண்கொள்ளாக் காட்சி.

இந்த லிங்கம் ஒரே கல்லால் ஆனது மிகவும் சிறப்பு.

இங்கு உள்ள நந்தியும் மிகவும் பெரிய அளவு கொண்டது.
இது முழுக்க சுண்ணாம்பு கல்லில் செய்யப்பட்டது.

நந்தி லிங்கத்திலிருந்து 200 மீட்டர் தொலைவில் உள்ளது.

தினமும் சூரிய ஒளி இந்த நந்தி மீது பட்டுச் சிதறி அந்த ஒளிக்கதிர்கள் கருவறையில் உள்ள லிங்கத்தின் மீதும் பட்டு பிரதிபலித்து பிரகாசிப்பது மிகவும் அற்புதமான காட்சி.
Read 21 tweets
16 Jul
இராவணனிடம் லட்சுமணன் கேட்ட அறிவுரை :-

இலங்கையை ஆண்ட மாமன்னர் இராவணன் போரின் இறுதியில் ராமன் செலுத்திய அம்பில் காயம்பட்டு குற்றுயிராய் உயிர் பிரியாமல் இருந்தது

அப்போது ராமர் லட்சுமணனை பார்த்து லட்சுமணா இராவணன் அனைத்துக் கலைகளையும் அறிந்தவன் ராஜதந்திரம் மிக்கவன்.

#SSRThreads
1/n
நமக்கு அவனுடைய அரசியல் அனுபவம் மிகவும் பயனுள்ளதாயிருக்கும்.

நீ அவனிடம் போய் நான் கேட்டதாகக் கூறி அவனுடைய சிறந்த அறிவுரைகளைப் நீ பெற்று வா என்று கட்டளையிட்டு அனுப்பினார்.

அண்ணன் ராமரின் ஆணையை ஏற்று இராவணன் அருகே சென்ற லக்ஷ்மணனிடம் ராவணன் எதுவும் கூறவில்லை.

2/n
சில நிமிடம் ராவணனின் தலை பக்கம் நின்றுவிட்டு திரும்பிய லக்ஷ்மணன், தன்னிடம் ராவணன் எதுவும் கூறவில்லை என்று தெரிவிக்க.

அதற்கு பதிலளித்த ராமர், ஒருவரிடம் நாம் பாடம் கற்கும்போது, கற்பிப்பவரின் தலை பக்கம் நிற்காமல் கால் பக்கமாக நின்று கற்க வேண்டும் என்று அறிவுரை வழங்க,

3/n
Read 10 tweets
15 Jul
சிறுகதை:-

ஒரு ராஜா ஒரு கோவிலில் தன் பிறந்த நாளை முன்னிட்டு அன்னதானம் செய்துகொண்டிருந்தார்.

அப்போது ஒரு பரம ஏழை வந்து வரிசையில் நின்றான்.

அவனை பார்த்த மற்றவர்கள் முகம் சுளித்து ஒதுங்கி நின்றனர்.

இதை உணர்ந்த அந்த ஏழை இவர்களுக்குத்தான் நம்மை பிடிக்கவில்லையே,

#SSRThreads
1/n
வரிசையில் நிற்காமல் ஒதுங்கி நின்று எல்லோரும் அன்னதானம் பெற்றபின்பு நாம் வாங்கிக்கொள்வோம் என்று தள்ளி நின்றான்.

நேரம் போய்க்கொண்டே இருந்தது.

இவன் தள்ளி நின்றதால் இவனுக்குப் பின்னால் வந்தவர்கள் எல்லாரும் அன்னதானம் பெற்றார்கள்.

2/n
சிலர் அன்னதானம் பெற்றுக்கொண்டு இவனை ஏளனம் செய்து சிரித்துவிட்டுப் போனார்கள்.

இவன் வாயைத் திறந்து எதுவும் சொல்லவில்லை என்றாலும் மனதிற்குள் ஒரு சோகம்.

எல்லோருக்கும் தரப்படும் அன்னதானம் கூட நமக்கு கிடைக்க எவ்வளவு காத்திருப்பு? எவ்வளவு போராட்டம்?
எவ்வளவு இழிசொல்?

3/n
Read 15 tweets
14 Jul
சிற்றரத்தை:-

நமது தேசத்திலிருந்து ஏற்றுமதியாகி, நமது நாட்டுக்கே திரும்பவும் மேலை மருந்துகளின் வழியே வரும் முக்கியமான மூலிகைகளில் ஒன்றுதான் சித்தரத்தை.

அக்காலத்தில் வீடுகளில் இருக்கும் மூலிகை மருந்துகளில் முக்கிய இடம் சித்தரத்தைக்கு உண்டு.

#மூலிகைஅறிவோம்
Continue>>>>> Image
குழந்தைகளுக்கு சளி, இருமல் ஏற்படும்போது, சிறிதளவு சித்தரத்தையை தூளாக்கி, அரை தேக்கரண்டி தேனில் குழைத்து கொடுக்கவேண்டும். இது எந்த பக்கவிளைவையும் ஏற் படுத்தாது. ஜீரணத்தை தூண்டும்.

கால் டீஸ்பூன் அளவு சித்தரத்தைப் பொடியைத் தேனில் குழைத்து காலை மாலை என மூன்று நாட்கள் சாப்பிட்டால் Image
நுரையீரலில் ஒட்டிக்கொண்டு அகல மறுக்கும் கோழைச் சளியை, இளக்கிக்கொண்டுவந்து வெளியேற்றி, இருமலைப் போக்கும்

சித்தரத்தை சிறந்த மணமூட்டியாக திகழ்வதால் வாயின் துர்நாற்றம் போக்க மவுத் ஃபிரஷ்னர் ஆகப் பயன்படுகிறது, மூலிகை மருந்துகளில் சேர்க்கப்படுகிறது. Image
Read 13 tweets
13 Jul
சங்கியாக எனது முதல் திரேட்:- (Part-1)

தலைப்பு:- கொங்கு நாடு

கொங்கு நாடு தனி யூனியன் பிரதேசமாக வாய்ப்புள்ளதா?
அதற்கான சட்டம் இருக்கிறதா ?
மத்திய அரசு நினைத்தால் இதை நடத்தி காட்ட முடியுமா ?
மாநில அரசு ஒத்துழைக்காமல் இது
நிறைவேறுமா ?

#SSRThreads
Continue>>>>
திருட்டு திமுக ஒன்றிய அரசு என அழைப்பதால் மத்தியஅரசு திமுகவை பயமுறுத்த இப்படி பேசுகிறதா ?

என நிறைய கேள்விகளுக்கு பதிலாகவும் அப்படி கொங்கு நாடு தனியாக பிரிந்தால் எப்படி இருக்கும் என்பதை ஒரு அலசு அலசுவோம் வாருங்கள்,

தமிழகத்தின் மேற்கு மண்டலங்களை ஒருங்கிணைத்து கொங்கு நாடு என
தனி மாநிலமாக உருவாக்க பல ஆண்டுகளாக கோரிக்கை உள்ளது,

கொங்கு நாடு என்பது சங்ககாலம் தொட்டு மருவி வரும் பெயர் .

அது அந்த பகுதியை சேர்ந்த தமிழர்களின் அடையாளம்.

இந்நிலையில் கொங்கு மண்டலம் எனப்படும் தமிழ்நாட்டின் மேற்கு மாவட்டங்களை ஒருங்கிணைத்து
Read 27 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!

:(