ஐந்தாம் மகிந்தன் என்ற சிங்கள அரசன் இலங்கையை ஆண்டு வந்தான் அவன் சோழர்களுக்கு எதிரிகளான
பாண்டியனுக்கும், சேரனுக்கும்
உதவி செய்து வந்தான்.
எனவே, இலங்கை மீது படையெடுக்க
சோழமன்னன் இராஜராஜசோழன்
முடிவு செய்தார்.
தன் மகன் இராஜேந்திர சோழன் தலைமையில் ஒருபெரிய கப்பல்
படையை அனுப்பி வைத்தார்.
தமிழ்ப்போர் வீரர்களுடன் கப்பல்கள்
இலங்கையை சென்றடைந்தன.
போர்க் கப்பல்களைப் பார்த்து சிங்களர்கள் மிரண்டனர்.
சோழர் படையை எதிர்க்க துணிவின்றி, மன்னன் மகிந்தன் இலங்கையின் இன்னொரு பகுதியான ரோகண நாட்டிற்கு
தப்பி ஓடி விட்டான் சோழர் படை இலங்கையின் வடபகுதியை கைப்பற்றிக்
கொண்டது.
அந்தப்பகுதிக்கு `மும்முடிச் சோழ
மண்டலம்' என்ற பெயர் சூட்டி
தலைநகரமான அனுராதபுரம் அழிக்கப்பட்டது அதற்கு பதிலாக
பொலனறுவா நகரம் புதிய தலைநகரம் ஆக்கப்பட்டது.
அதற்கு `சனநாதமங்கலம்' என்ற
புதிய பெயர் சூட்டப்பட்டது.
சிங்கள மன்னனின் கருவூலத்தில்
இருந்த நகைகள், வைர மாலைகள்,
அரச அணிகலன்கள் முதலியவை கைப்பற்றப்பட்டன.
உடைக்க முடியாத வாள் ஒன்று சோழர் வசமாகியது.
இரண்டாவது படையெடுப்பு ரோகண
நாட்டிற்கு தப்பி ஓடிய மகிந்தன், சும்மா இருக்கவில்லை சோழருக்கு எதிராக
பெரும்படை ஒன்றை திரட்டினான்.
இலங்கையில் சோழர்கள் கைப்பற்றிய பகுதியை மீட்க போர் தொடுத்தான்.
இதுபற்றி சோழ மன்னன்
இராஜேந்திரனுக்குத் தெரிந்தது.
அவர் கி.பி. 1017-ம் ஆண்டில் மீண்டும்
இலங்கை மீது படையெடுத்தார் இரு தரப்புக்கும் இடையே பெரும் போர் நடந்தது.
சோழ படைகளின் தாக்குதலை,
மகிந்தன் படைகளால் சமாளிக்க முடியவில்லை.
போரில் சோழர் படை வென்றது சிங்களர்
படை தோற்றது.
இராஜேந்திரனிடம் தோல்வியுற்ற இலங்கை வேந்தன் மகிந்தன் தப்பியோடினார்.
தப்பியோடிய மகிந்தனை இராஜேந்திரனின் தளபதி ஜயங்கொண்ட மூவேந்தவேளான் என்பவர் தேடிப்பிடித்து கைது செய்து தமிழகம் கொண்டு வந்தார்.
இந்நிகழ்வை இலங்கையில் உள்ள கல்வெட்டு சாசனம் விவரிக்கிறது..
( இலங்கை தமிழ் சாசனங்கள்..பக் 73)
இலங்கையை வெற்றி கொண்டு, பாண்டியனது மணிமுடியையும் இந்திர ஆரத்தையும் மீட்டு தமிழகம் கொண்டு வந்தார்.
இந்நிகழ்வை இலங்கையின் வரலாற்று நூலான மகாவம்சமும் உறுதி செய்கிறது.
"பொருகடல் ஈழத்து அரசர் தம்முடியும்
ஆங்கவர் தேவியர் ஓங்கு எழில் முடியும்
முன் அவர் பக்கல் தென்னவன் வைத்த
சுந்தரமுடியும் இந்திரன் ஆரமும்
தெண்டிரை ஈழமண்டலம் முழுவதும்."
ஈழமண்டலம் முழுவதையும் கைப்பற்றி... இலங்கை வேந்தனின் முடியையும் கைப்பற்றிய இராஜேந்திரன்..
அடுத்த வரிதான் மிக முக்கியமானது..
"தென்னவன் வைத்த சுந்தரமுடியும் இந்திர ஆரமும்."
பாண்டியனது மணிமுடியும், பாண்டியனின் ஆபரணமான இந்திர ஆரத்தையும் இலங்கையில் இருந்து மீட்டான் இராஜேந்திரன்..
இராஜேந்திரசோழன் தமிழ்நாட்டுக்கு திரும்பும்போது, மகிந்தனும் கொண்டு செல்லப்பட்டான்.
கும்பகோணம் அருகே உள்ள கோனேரிராஜபுரம் என்னும் திருநல்லம் என்னும் ஊருக்கு இராஜேந்திரன் வந்திருந்தபோது இராஜேந்தினை இலங்கை வேந்தன் வணங்கியதாக திருநல்லம் கல்வெட்டு பதிவு செய்கிறது..
" இலங்கேஸ்வரன் வந்தடி வணங்க
இனிதங்கியிருந்த கொப்பரகேசரிவன்மரான ஸ்ரீராஜேந்திர
சோழதேவர் "
என்பது கல்வெட்டு செய்தி.
கரந்தை செப்பேடும் இந்நிகழ்வை பதிவு செய்கிறது
" சோழர் படையினால் தோற்கடிக்கப்பட்ட இலங்கை அரசன் இராஜேந்திரனுடைய திருவடியை வணங்கினான்."
( கரந்தைச் செப்பேடு சுலோகம் - 59)
இலங்கை முழுவதும் சோழர் வசமாயிற்று,
சோழ இலங்கேஸ்வரன் என்ற பெயருடன் இராஜேந்திரனின் மகன்களில் ஒருவர் இலங்கையின் ஆட்சி பொறுப்பை ஏற்றார்.
இலங்கையின் பொலனருவா நகரம் அன்று சோழர்காலத்தில் ஜனநாதமங்கலம் என்றழைக்கப்பட்டது.
ஜனநாதன் என்பது இராஜராஜனின் விருதுப் பெயர்..
பொலனருவாவில் இராஜேந்திரச் சோழனால் இரண்டு சிவாலயங்கள் எடுக்கப்பட்டன.
இவற்றில் ஒன்று தன் தாயின் பெயரால் எடுக்கப்பட்ட வானவன்மாதேவி ஈஸ்வரம்.
இக்கோவிலில் உள்ள கல்வெட்டில் இராஜேந்திரனின் மெய்கீர்த்தி வரிகளும் மற்றொரு கல்வெட்டில்
"வானவன் மாதேவி ஈஸ்வரமுடையார்" பெயரும் காணப்படுகிறது.
இக்கோவிலுக்கு அழகிய மணவாளர் என்னும் கல்யாணசுந்தரர் படிமத்தை எடுத்த செய்தியும் உள்ளது.
இக்கோவிலுக்கு அருகிலேயே இராஜேந்திரனால் எடுக்கப்பட்ட மற்றொரு சிவாலயமும் உள்ளது.
சோழ சாம்ராஜ்ஜியத்தின் முக்கிய அரசர்களுள் ஒருவராக திகழ்ந்தவர் இராஜேந்திர சோழர்.
.
ஆட்சி செய்த 60 ஆண்டுகளில் போரில் தோல்வியே காணாமல் உலகின் கால் பகுதிகளை தன் காலடியில் வைத்திருந்த மாமன்னன் இராஜேந்திர சோழன்,
இந்தியாவின் முதல் பேரரசராக இராஜேந்திர சோழர் திகழ்ந்துள்ளார்.
தோல்வி என்றால் என்ன?
என்ற கேள்வி கேட்கும்படி பல போர்களில் வெற்றிகள் வாரிக்குவித்தவர் இராஜேந்திர சோழன்.
இருபது ஆண்டுகள் கடற்போர் புரிந்த மாபெரும் வீர அரசர் இராஜேந்திரா சோழர்.
அறுபது ஆயிரம் யானை படை, ஒரு லட்சம் பேர் கொண்ட காலாற்படையை வங்கக்கடல் கடந்து சென்று மறு கரையில் நிறுத்திய தருணமே அஞ்சி நடுங்கி தேசங்களை ஒப்படைத்தவர்களும் இருந்தனர்.
தனது போர் வீரத்தால் அடிப்பணிய வைத்தும் பல தேசங்களை வெற்றி வாகை சூடி சாதித்தார்.
லிங்கம் அமைக்கப்பட்டிருக்கும் இடமான ஆவுடையைச் சுற்றி பலகை கட்டி அதன் மீது நின்று கொண்டு அர்ச்சர்கள் அபிஷேகம் செய்து வழிபாடு செய்வது கண்கொள்ளாக் காட்சி.
இந்த லிங்கம் ஒரே கல்லால் ஆனது மிகவும் சிறப்பு.
இங்கு உள்ள நந்தியும் மிகவும் பெரிய அளவு கொண்டது.
இது முழுக்க சுண்ணாம்பு கல்லில் செய்யப்பட்டது.
நந்தி லிங்கத்திலிருந்து 200 மீட்டர் தொலைவில் உள்ளது.
தினமும் சூரிய ஒளி இந்த நந்தி மீது பட்டுச் சிதறி அந்த ஒளிக்கதிர்கள் கருவறையில் உள்ள லிங்கத்தின் மீதும் பட்டு பிரதிபலித்து பிரகாசிப்பது மிகவும் அற்புதமான காட்சி.
குழந்தைகளுக்கு சளி, இருமல் ஏற்படும்போது, சிறிதளவு சித்தரத்தையை தூளாக்கி, அரை தேக்கரண்டி தேனில் குழைத்து கொடுக்கவேண்டும். இது எந்த பக்கவிளைவையும் ஏற் படுத்தாது. ஜீரணத்தை தூண்டும்.
கால் டீஸ்பூன் அளவு சித்தரத்தைப் பொடியைத் தேனில் குழைத்து காலை மாலை என மூன்று நாட்கள் சாப்பிட்டால்
கொங்கு நாடு தனி யூனியன் பிரதேசமாக வாய்ப்புள்ளதா?
அதற்கான சட்டம் இருக்கிறதா ?
மத்திய அரசு நினைத்தால் இதை நடத்தி காட்ட முடியுமா ?
மாநில அரசு ஒத்துழைக்காமல் இது
நிறைவேறுமா ?