புதிதாக வீடுகட்டுபவர்கள் கவனத்திற்கு..உங்கள் வீட்டில் உள்ளவர்கள், மற்றும் மின்சார சாதனங்கள் பாதுகாப்பாக இருக்க என்ன செய்யவேண்டும்னு இந்த #திரட்ட பாருங்க..🙏
வீட்டு ஒயரிங் செய்யும் சில முக்கியமான விசியங்கள நீங்க கவனிக்க வேண்டும் என்னனா..? 👇
ஒவ்வொரு ரூம் கனைக்சனை தனி சர்க்யூட்டாக பிரிச்சு அந்த லைனை மெயின் சுச்சு இருக்கும் ஏரியாவுக்கு கொண்டு செல்லனும்..👇
ஏன்னா பெட்ரூம்ல ஓடும் ஒரு பேன் சாட் சர்க்யூட் ஆயிட்டா அந்த சர்க்யூட் #mcb மட்டும் ட்ரிப் ஆகனும்..மத்த ரூம் கனைக்சன் டிஸ்டப் ஆகாது..👇
அடுத்து கிச்சன் லைன்க்கு இன்புட் லைன் 4sqmm ஒயர்ல மெயின் சுச்சுல இருந்து லைன் கொண்டு போகனும் ஏன்னா..? 👇
வெட்கிரைன்டர், மிக்ஸ்சீ,எலக்ட்ரிக் ஸ்டவ், எக்ஜாஸ்ட் பேன்னு அங்க லோடு அதிகமாக இருக்கும்.. 👇
அடுத்து AC எந்த ரூம்ல மாட்லாம்னு ஐடியா இருந்தா அந்த லைன் 4sqmm ஒயர்ல தனி சர்க்யூட்டாக மெயின்ல இருந்து கொண்டு வந்துடனும்..👇
அடுத்து வாசிங் மெசின் சர்க்யூட்ட 2.5sqmm ஒயர்ல தனி சர்க்யூட்டா மெயின்ல இருந்து கொண்டு வந்துடனும்..👇
இதே மாதிரி எல்லா லைனையும் மெயின் இருக்க பக்கம் கொண்டு வந்து தனி தனி சர்க்யூட்டா சிங்கிள் போல் #MCB வழியாக லைன் எடுத்து கொடுக்கனும்.👇
அடுத்து #EB மீட்டரில் இருந்து வரும் லைன் 65A பிஸ்கேரியர்ல கனைட் பண்ணி உங்க லோடுக்கு தகுந்த மாதிரி பீஸ் போட்டு ஆதுல இருந்து மெயின் சுச்சுக்கு போகும் லைன் அந்த மெயின் சுச்சு 63A இருக்கனும்..👇
எதுக்காக 63A யூஸ் பண்ணனும்னா உங்க வீட்ல புல் லோடு கொடுத்தாலும் மெயின் சுச், மீட்டர் கட்டவுட் பீஸ் யூனிட் பல வருடங்களும் ஒன்றும் ஆகாது.👇
அடுத்து மெயின் சுச்ல இருந்து #mcb சர்க்யூட் பாக்ஸ்ல கனைக்சன் செய்யர்க்கு முன்னாடி எர்த் பால்ட் ரிலேவுல சப்ளைய கொடுத்து.👇
உங்க வீட்ல எந்த எடத்துல எர்த் வழியா கரண்ட் லீக் ஆனா உடனே டோட்டல் லைனும் கட்டாகிடும்.. அடுத்து நீங்க ஆன் செய்யர்துக்கும் முன்னாடி எந்த #mcb ட்ரிப் ஆகியிருக்கோ
அந்த ரூம்ல பிரச்சனைனு அந்த லைன விட்டுட்டு எர்த் பால்ட் ரிலேவ ஆன் செய்யலாம்..👇
பால்டான லைன சரியான டெக்னீசியன வச்சு செக் பண்ணி பால்ட் சரி செஞ்சு அந்த லைன ஆன் பண்ணனும்..👇
அடுத்து மிக முக்கியமானது அனைத்து ரூம்களையும் இனைத்து ஒரு காமனான 2sqmm ஒயர் மெயின் பக்கம் கொண்டு வரவேண்டும்..👇
அதுதான் #பாடிஎர்த் அந்த பாடிஎர்த் ஒயரை பூமியில் 2*2 குழி 4அடிக்கு தோண்டி அதில் 3/4" Gi பைபில் 8mm காப்பர் கம்பி பிட் செய்து அந்த பைப் எர்த் குழியில் வைத்து..👇
ஒரு லேயர் கலிமண்,ஒரு லேயர் மணல்,ஒரு லேயர் அடுப்பு கரினு போட்டு புல் செய்து அந்த பைப்பில் காமனாக கொண்டு வந்த அந்த எர்த் ஒயரை கனைக்ட் செய்யனும்..👇
அந்த எர்த் பிட்ல அப்ப அப்ப தண்ணீர் விட்டுட்டா நல்லது.. எர்த் பிட்ல இருந்து எர்த் நல்லமுறைல கிடச்சா உங்க வீட்ல இருக்கவுங்களுக்கு மின்சாரத்தால் ஏற்பாடும் ஆபத்தை 95% தவிர்க்கலாம், மின்சார பொருள்களுக்கு பாதுகாப்பு உறுதி..👇
எர்த் ராடுகள் எமனையும் வெள்ளும்னு Eb ஆப்பீஸ்ல எழுதி போட்டு இருப்பாங்க..😀😀😀
🙏🙏🙏
அடுத்து ஒரு தொழில்சாலைல மின்சாரம் சார்ந்த ஏரியால என்ன மாதிரி பாதுகாப்பு நடவடிக்கை இருக்குனு எழுதுவோம்..😎😎😎
பல வருடங்களாக மின் இணைப்புக்காக காத்திருக்கம் விவசாய மக்கள் தொழில்நுட்ப வளர்ச்சியின் புதிய வரவான #சோலார்_பேனல் வழியாக இயங்கும் பம்புசெட்டுகள் தங்களோட விவசாய பணிக்கு பெரிதும் உதவுவதாக உள்ளது. அந்த தொழில்நுட்பத்த பத்தி இந்த #திரட்ல பதிவு செஞ்சிருக்கு..👇
மின் இணைப்புக்காக காத்திருக்க வேண்டியதில்லை..இதனால் பயிருக்கு தடையின்றி சொட்டு நீர் வழியாக பாய்ச்சம் போது தண்ணீர் சிக்கனத்தையும் கடைபிடித்து முடியும்..👇
சோலார் பேனல் உங்கள் தோட்டத்தில் அமைக்கனும்னு நினச்சீஙரகனா இடவசதினு பாத்தீங்கனா 30அடி நீளம்,15அடி அகளம் இடம் வேண்டும்..👇
#சோலார் மின்சாரம் எப்படி உற்பத்தி ஆகிறது என்று தெரியாதவங்க தெரிஞ்சுக்க பார்த்த, வேலைசெய்த அனுபவத்த இங்க #திரட்டாக பதிவு செய்கிறேன்..🙏
இந்த சோலார் பேனல் 6 அடி நீளம்,31/4 அடி அகளம் 370 வாட்ஸ் உள்ள பேனல்..முதல் போட்டோ பேனல் முன்சைடு. இரண்டாவது போட்டோ பேனல் பின்சைடு..👇
இந்த டிவைஸ் ஆப்டிமைசர் இந்த டிலைஸ்சில் இரண்டு பேனல்களை இனைக்க வேண்டும். வெயில் தகுந்தாட்போல பேனலில் இருந்து வரும் DC வோல்டேஜை இந்த ஆப்டீமைசர் சீராக அனுப்பும்.. 👇
1500 அடி ஃபோர் போட்டாலும் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்து ஆடும் இந்த சூழல்ல தண்ணீர நவீன தொழில்நுட்பத்த பயன்படுத்தி சிக்கனமா விவசாயத்துக்கு தண்ணீர பயன்படுத்த ஒரு டிவைஸ் ரெடி செஞ்சுயிருக்கோம் அந்த தொழில்நுட்பத்த #திரட் டாக இங்க பதிவு செஞ்சிருக்கேன்..🙏
உங்க கிணத்துக்கு கம்பரசர் ஏர் வழியாக ஃபோர்ல இருந்து வரும் தண்ணீர ஒரு ஃபுலோ சென்சார் வச்சு திணமும் எத்தன லிட்டர் தண்ணீர் கிணத்துக்கு வருதுனு டேட்டாவ எடுத்து வச்சுக்கூறோம்.. 👇
அதே ஒரு ஃபோர்ல இருந்து தண்ணீர் வராது காத்து மட்டும் வந்துட்டு இருந்தா நாம செட் செய்த நேரத்துக்கு மேல் அந்த கம்பரசர் மோட்டார் ஆப் ஆகிடும்.. (இது பவர் சேவிங் செய்ய) சரி இனி மெயின் மேட்டர்க்கு போவோம்.. 👇
தமிழ்நாடு மின்சார வாரியத்தை மக்களின் ஒத்துழைப்போடு நம்முடைய அரசாங்கம் எப்படி நவீன மயமாக்கலாம் என, 30 ஆண்டுகால மின்துறை சார்ந்து இயங்கும் #Geeyes_Control எனும் நிறுவனத்தை நடத்தி வரும் மின் பொறியாளன் என்கிற முறையில் சில யோசனைகள் இங்கே ஒரு #திரட்டாக பதிவு செய்து இருக்கேன்..👇👇👇
இந்தியாவில் உள்ள மின் வாரியங்களிலேயே நல்லமுறையில், உயரிய பாதுகாப்போடு இருப்பது நமது #தமிழ்நாடு_மின்சார_வாரியம் என்பதை முதலில் நாம் புரிந்து கொள்ள வேண்டும். பெருமையும் கொள்ள வேண்டும்👇
ஆனால் நம்முடைய #தமிழ்நாடு_மின்சார_வாரியம் பல வருடங்களாக நட்டத்தில் தான் இயங்குகிறது. அதற்கான காரணங்கள் என்ன என நாம் தேடும்போது..👇
நல்லமுறைல #BE முடிச்சுட்டு வெளிய வந்து கோவைல லீடிங் டெக்ஸ்டைல் மெசின் கம்பெனில உள்ள கால் வச்சாச்சு வேகமா போயிட்டு இருந்த வாழ்க்கைல திடீர்னு ஒரு பிரச்சனை 3வருசம் பாண்டுல சைன் பண்ண சொன்னாங்க...👇
அப்ப இனி இங்க ஆகாதுனு #ஓசூர்ல இருக்க பிரிமீயர் மில்ஸ் எலக்ட்ரீகல் சூப்பரவைசராக ஜாயிண்ட் செஞ்சு..மெசின் உற்பத்தி செஞ்ச பக்கமும் ஒரு வருசம் இருந்து அதோட மெக்கானீக்கல் நாலேஜ்ம் ஒரு அளவுக்கு தெரிஞ்சுட்டு இங்க வந்தது எலக்ட்ரிக்கல்க்கு நல்ல சாப்போட்டா இருந்துச்சு.👇