படம் பார்க்க நேரம் கிடைக்கலனாலும் கூட ரெண்டு வகையான படங்கள் பார்க்கிறதை தள்ளி வைக்கிறதே கிடையாது. அவை feel good/Animation படங்கள்தான். ரெண்டுமே பார்த்து முடிக்கிறப்போ full charge ஏத்தின மாதிரி இருக்கும். அழகான ஒரு messgae/motivation கண்டிப்பா இருக்கும்.
HOME, இது வரை பார்த்ததில best feel good movie. "பறவைகளுக்குக் கூடடைதல் என்றால், மனிதர்களுக்கு வீடடைதல்." ராஜூ முருகனின் வட்டியும் முதலும் தொடரில் வந்த எனக்கு ரொம்ப பிடிச்ச ஒரு வசனம். இதை "Thirike (2021)" படத்தை பற்றி எழுதுறப்போ கூட சொல்லி இருந்தேன். முழுக்க முழுக்க வீடுதான் படம்.
அப்பிடியே நம்ம வீட்டோட நிறைய விசயம் emotionally connect ஆகும். கண்கலங்கவும் வைக்கும், அப்பிடியே உங்களை புன்னகைக்கவும் வைக்கும். நிச்சயம் இந்த படம் உங்களுக்குள்ள இருக்கிற nostalgiaவை தட்டி எழுப்பும்.
கதைனு சொல்லி bore அடிக்க விரும்பல. குடும்பத்தோட கண்டிப்பா பாருங்க. #goofymovies
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
நான் செஞ்ச உருப்படியான விஷயம் நான் யாருக்கும் கதை சொல்லலை. கதிருக்கு மட்டும் தெரியும். எடுக்கப் போகும் காட்சியை காலையில் சொல்லுவேன். டயலாக் அதிகம் இருந்தால் முந்தைய நாள் இரவு கொடுப்பேன். க்ளைமேக்ஸ் சொன்னேன். ஜெய் கலங்கிட்டான்.
சுவாதி அங்கிருந்து எழுந்துபோய் அறையில் அழ ஆரம்பித்துவிட்டாள்.
அறையிலிருந்து போன் செய்து ‘அப்ப நான் என்ன முதுகுல குத்துற ஆளா?’ என்று கேட்டு புலம்ப ஆரம்பிச்சிருச்சு. கதாபாத்திரத்தோடு அவர்கள் ஒன்றிப் போயிருந்தது எனக்கு சந்தோஷம் கொடுத்தது.
ரொம்ப நாளைக்கு பிறகு நெகிழ்ச்சியான feel good movie. Down syndromeல பாதிக்கப்பட்ட அண்ணனுக்கும், அவரின் தம்பிக்கும் இடையிலான பாசப்போராட்டம்தான் கதை. ரொம்ப இயல்பான நடிப்பு, வசனங்கள் என்று படம்முடியும் போது ஒரு மன நிறைவைத் தருகிறார்கள்.
எப்போவும் நிறைய positivity இருக்கிற படங்களை பார்க்க பிடிக்கும். Depressionல இருக்கிறப்போ எல்லாம் இந்த மாதிரி படங்களை பார்க்கிறப்போ டக்குன்னு நம்மளை boost பண்ணும். பிடித்த மனிதர்களும், படங்களும்தான் என்னோட happy pills.
படத்துல ஒரு வசனம் வரும், "உன்னால முடியாது என்று சொன்னவங்களுக்கு முன்னால, நீ அதை உன்னால முடியும்னு செய்து காட்டு". எத்தனை சத்தியமான வார்த்தைகள்.
#goofymovies
Incendies (2010/French)
மத்திய கிழக்கு நாடொன்றிலிருந்து புலம்பெயந்து கனடாவில் வசித்துவந்த Nawal இறந்துவிடுகிறார். அவரின் முதலாளியும் குடும்ப நண்பருமான Jean Lebel; Nawal இன் இரட்டை பிள்ளைகளான மகள் Jeanne மற்றும் மகன் Simonஐ அழைத்து பேசுகிறார்.
Nawal தனது உயிலில்,அவரின் கடைசி ஆசைகளை நிறைவேற்ற வேண்டும் என்றும், அது நிறைவேற்றப்படவில்லை எனின் அவர் உடலை முறையாக அடக்கம் செய்யக்கூடாது என எழுதி இருப்பார்.அதன்படி இரட்டையர்கள் அதுவரை அறியாத அவர்களின் தந்தையையும், சகோதரனையும் தேடி தாய் அவர்களுக்கு எழுதிய கடிதத்துடன் செல்கின்றனர்.
மேலே சொன்ன அனைத்தும் படத்தின் ஆரம்ப காட்சிகள்தான். "அதன் பின் அவர்கள் தந்தையையும், சகோதரனையும் கண்டுபிடித்து கடிதத்தை ஒப்படைத்தார்களா?" என்பதுதான் மீதிக்கதை. கடைசி twist உங்களை நிச்சயமாக தலைகீழாக போட்டு தாக்கும்.
#goofymovies
ஒரு இயக்குனர் தன் வாழ்வில் சந்தித்த பத்து பெண்களின் கதைதான் பதினொரு இயக்குனர்கள் இயக்கியுள்ள “X : Past is Present (2014)” படத்தின் கதை.
ஒவ்வொரு பெண்ணின் கதையையும் 10 நபர்கள் எழுதி, இயக்கி இருக்கிறார்கள். ஆக , படம் பல்வேறு நபர்களின் ஒரு கூட்டுப்பார்வை. இப்படி ஒரு விசித்திரமான ஐடியாவிற்கு உரிமையாளர், விமர்சகரும், இயக்குனருமான சுதிஷ் கமாத்.
திரைப்பட திருவிழா ஒன்றில் இயக்குனர் கே என்கிற கிஷனை சந்திக்கிறார் ஒரு பெண். இரவு பத்து மணிக்கு ஆரம்பித்து காலை பத்து மணி வரை அந்தப்பெண்ணுடன் கிஷன் பேசும் உரையாடல் தான் படம். காதல், காமெடி, காமம், ஹாரர், ஃபேன்டசி என சினிமாவின் பல வகைகளை கலந்து எடுக்கப்பட்டு இருக்கிறது X.